Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

39

திடீரென்று வீட்டிற்கு ரம்யா வர குழந்தையுடன் விளையாடிகொண்டிருந்த ப்ரியாவை வந்ததும் எதுவுமே பேசாமல் ஓங்கி ஒரு அறை விட்டால்.வந்ததும் வராததுமாக ரம்யா இப்படி நடந்துகொண்டதை கண்ட அர்விந்திற்கு கோவம் வர

"ஏய் என்னடி.எதுக்கு இப்போ நீ அவள அடிச்ச"என்றதும்

ரம்யா " நீ என்ன அவளுக்கு சப்போர்ட்டா " என்று அவனுக்கும் கை ஓங்க இப்போது ப்ரியாவின் கை ரம்யாவின் கன்னத்தில் பதிந்திருந்தது. தன்னை இத்தனை வருட காலங்களில் ஒரு சொல் கூட கோவமாக பேசாத தன் அக்கா அவளை அடித்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

"இதுக்கு அப்புறம் நீ அவரு மேல கைய வெச்ச. என்னை கொலைகாரியாத்தான் பார்க்க வேண்டி இருகும்" என்றவளை முறைத்த ரம்யா
அவள் கையில் இருந்த கூரியரை அர்விந்திடம் கொடுத்தபோதுதான் ப்ரியா கவனித்தவள் "அடச்சே.இத நாம எப்படி மறந்தோம்.இப்போ நல்லா மாட்டிக்கிட்டோம்னு" மனதுக்குல் நினைத்தாள்.

அந்த கூரியரை எடுத்து அதற்குள் இருந்த லெட்டரை படித்த அர்விந்தின் கண்கள் கோபத்தை வெளியிடுவதற்கு பதிலாக கண்ணீரையே தாரை தாரையாக வழிந்தோட செய்தது.

அந்தக்கடிததில்

"அன்புள்ள ரம்யாவுக்கு உன் அக்கா எழுதுவது,

உங்கிட்ட இவ்ளோ நாளைல எப்போமே நான் அக்காவா நடந்ததில்ல.ஏன்னா நான் எப்போமே முடிவுகள அவசரப்பட்டு எடுத்துட்டு ரொம்ப பிடிவாதமா இருப்பேன்.ஆனா நீ எனக்கு எதிர்மாறா செய்யிர எல்லாத்தையுமே கரக்டா செய்வ.உண்மைல நீ அக்காவாவும் நான் தங்கச்சியாவும் பிறந்திருந்தா என்னோட லைப் இப்படி ஆகியிருக்காது.என் லைப்லயே நான் ஒழுங்க டிசிசன் எடுத்து செஞ்ச வேலைன்னா அது பிசினஸ் மட்டும்தான்.அதுவும் சங்கீதா,ரேனுவோட உதவியினால.

நீ இந்த கடிதம் படிக்கும் போது நான் உயிரோட இருக்க மாட்டேன்.மைதிலிய சீரழிச்சவன நான் பழிவாங்கி இருப்பேன்.ஆனா என்ன அத பார்க்க நாந்தான் இருக்க மாட்டேன்.பரவாயில்ல நீங்க சரி அத கண்ணால கண்டு சந்தோச படுங்க.நான் செத்ததும் என்னோட உடல கண்டிப்பா போஸ்ட் மோர்டம் பன்னுங்க.அதுல பல பெரிய உண்மைகள் வெளிவரும்.அப்போ கௌசிக்கால தப்பிக்கவே முடியாது.நான் அதுக்கு ஏத்த மாதிரி எல்லாமே பன்னிட்டேன்.அவன் என்ன சீரழிக்கனும்னே அவனோட சில ப்ரெண்ட்ஸ நான் போற ஜிம்ல சேர்த்து விட்டிருக்கான்,ஆனா அவனுக்கு தெரியல.நான் அவங்க கூட பழகுறது அவன பழி வாங்க எண்று.அவன் எனக்கு எப்போ என்ன பன்னுவான்னு தெரியாது.ஆனா கண்டிப்பா என்ன சீரழிப்பான்னு மட்டும் நல்லா தெரியும்.அது மட்டும் நடந்துச்சின்னா என்ன விட இந்த உலகத்துல சந்தோசப்படக்கூடிய ஆளு வேற யாருமில்ல.அப்படி நடந்தாத்தான் அவனுக்கு தண்டனை கிடைக்க சரியான ஆதாரம் கிடைக்கும்.

ரம்யா ,அர்விந்த் உனக்கு நண்பன் மட்டும்தான்.ஆனா எனக்கு உயிர்டி.எப்போ நான் அவன உன்கூட வீட்டுல வெச்சி கண்டேனோ அன்னைக்கே காதலிக்க தொடங்கிட்டேன்.ஏன்னு காரணம்லாம் தெரியாதுடா.கண்டதும் காதலாக கூட இருக்கலாம்.இந்த ஜென்மத்துல எனக்கு அவன் கூட வாழ குடுப்பினை இல்ல.அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நான் நீயா பிறக்கனும்டி.அட்லீஸ்ட் அவனோட நட்பாவது கிடைக்கும்.

நான் சூசைட் பன்னிகிட்டதும் நீ அவருக்கு இன்னொரு கல்யானம் பன்னி வைக்கனும்.இது உன் குழந்தை மேல சத்தியம்.என்ன பத்தி எதுமே நீ சொல்லாத.இன்னொன்னு இந்த லெட்டர நீ படிச்சிட்டு அப்படியே கிழிச்சிடு.இதுகூட இன்னொரு லெட்டர் போலீஸ் கமிசனருக்கு இருக்கு.அத அவங்க கிட்ட கொடுத்திடு.அப்போதான் அந்த கௌசிக்க அரஸ்ட் பன்ன வசதியா இருக்கும்.

ரம்யா ,அர்விந்த்கு குழந்தைங்கன்னா உயிர்னு தெரியும்.அன்னைக்கு மாடிப்படில இருந்து விழுந்ததுல எனக்கு தாயாக கூடிய பாக்கியம் 20% கூட இல்லன்னு ரிப்போர்ட் வந்திருக்கு.சோ நான் தண்டமா அவருக்கு பாரமா இருப்பதை விட அவரோட உயிர்த்தோழியோட வாழ்க்கைய ஏமாத்தினவனுக்கு தண்டனையாச்சும் கொடுத்தோம் என்கிற சந்தோசமாவது இருக்கும் எனக்கு.நான் இருந்தப்போதான் யாருமே சந்தோசமா இருக்கல.என் சாவுல சரி ஏதும் நல்லது நடக்கட்டும்.இதை நான் ஏன் இன்னைக்கு எழுதுறேன்னா ..எனக்கு கௌசிக்கால ஏதும் ஆகிடுச்சின்னா என்னால மனசுல உள்ளத சரியா எழுத முடியாம போயிடும்.அதான் இப்பவே இத எழுதுறேன்.ஆனா கண்டிப்பா உனக்கு 10 நாள் கழிச்சு இது கிடைக்கிற மாதிரிதான் கூரியர் பன்ன போறேன்.

பொண்ணுங்களுக்கு ஆசைப்படுறது எல்லாமே கிடைக்கிறதில்ல.கற்பனையாவே வாழ்ந்துடுவாங்க.என் வாழ்க்கையும் காற்றோடு கரையும் கற்பனையாவே முடிய போகுது.

இப்படி உங்கள் யாருக்குமே சந்தோசத்தை தராத

**மலடி ப்ரியா**

இந்த கடிதத்தை படிததும் அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.ப்ரியா அமைதியாக நிற்க அவன் அவளை அனைத்து அவள் முகமெங்கும் முத்தமிடத்துவங்கினான்.சில நாழிகைக்கு பின்னரே அங்கு ரம்யா நிற்பதை இருவரும் உனர வெட்கப்பட்டுகொண்டு இருக்க ரம்யாவோ

"கடைசில எப்படியோ ஒன்னாகிட்டீங்க.இங்க பாருக்கா,உனக்கு குழந்தைங்க இல்லைன்னா என்ன.அதான் நிஷா இருகாலே"என்று ஒரு லெக்சர் எடுக்க வந்த ரம்யாவை அர்விந்த்

"ரம்யா நாங்க இதெல்லாம் ஆல்ரெடி பேசியாச்சு.சோ நீ கொஞ்சம் மூடிகிட்டு கிழம்பு.எங்களுக்கு வேலை இருக்கு " என்றான். அவளும் புரிந்து கொண்டு

"பாருடா,எலியும் பூனையும் ஒன்னாகிட்டு வீட்டுக்கு வந்த பல்லிய துரத்திச்சாம்.சரிப்பா.நான் போயிடுறேன்.ஆனா ப்ரியா எனக்கு ஒரு ப்ராமிஸ் பன்னு .இனிமே நீ இப்படி ஏதும் முட்டாள்தனமா பன்ன மாட்டேன்னு"என்றவளை

"சரிடி,நான் இனிமே இப்படிலாம் பன்ன மாட்டேன்.ப்ராமிஸ் போதுமா "என்றவளை ரம்யா நிஷாவை தூக்கி வந்து ப்ரியாவின் கையை நிஷாவின் தலைமீது வைத்து

"இப்போ சொல்லு"என்றாள்.

ப்ரியாவும் சளைக்காமல் புன்னகையுடன் "என் செல்ல நிஷாகுட்டி மேல சத்தியமா நான் இனி இப்படி ஏதும் பன்ன மாட்டேன்.போதுமா "என்றாள்

ரம்யா திருப்தி அடைந்தவளாக "நான் நிஷாவ கூட்டிகிட்டு வெளில போறேன்.நீங்க ரெண்டு போரும் கொஞ்சம் தனியா மனசு விட்டு பேசுங்க "என்று கூறிவிட்டு அர்விந்தின் வீட்டுச்சாவியை எடுத்தவள் விறு விறு வென்று இவர்களின் பதிலுக்கு கூட நிற்காமல் இருவரையும் உள்ளே வைத்து வெளிக்கதவை பூட்டி மாயமாக மறைந்தாள்.

அவள் சென்றதும் அர்விந்த் "டார்லிங்க்.பாத்தியா என் மச்சினிச்சிய.நமக்காக எவ்வளவு யோசிக்குறா.சோ அவ வர்ரதுக்குள்ள நாம ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடலாமா" என்று அவளை பூப்போல தூக்கி சொர்க்கத்துக்கு செல்ல தயாராகினான்..........

சில நாட்களின் பின்,

"டேய் அர்விந்த்" என்ற ப்ரியாவை பார்த்த அர்விந்த்

"ஏண்டி ,முன்னெல்லாம் வாங்க,போங்க ,இருங்க என்று மூச்சுக்கு முன்னூறு தடவ ங்க போட்டு பேசிட்டு இப்ப டேய் அர்விந்தா"என்றவனை

"ஆமாடா அப்படித்தாண்டா கூப்பிடுவேண்டா..டால்டா,என்னடா பன்னுவேடா.டடடாடாடா..டால்டா"என்றவளை

"இருடி வரேன் என் குண்டாட்டி "என்று அவன் துரத்த வீட்டை சுற்றி ஓடிக்கொண்டிருந்தவளுக்கு அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிய நின்றவள் உடனே திரும்பி அவனை முறைத்தாள்.அவள் நின்றதும் அவனுக்கு ஏதோ தான் மாட்டிக்கொண்டதாக உணர அவளோ

"டேய் நான் குண்டா இருக்கேனு குத்திக்காட்டுரியா.ஏண்டா,நான் அன்னைக்கு உங்கிட்ட கேட்டுதானே ஜிம் போறத நிறுத்தினேன்.நீ கூட நான் ஒல்லியா இருந்தா நல்லா இருக்காதுனு சொல்லிட்டு இப்போ எவள பார்த்துட்டு இப்படி என்ன குண்டாட்டினு சொல்ர"என்றாள் கொஞ்சம் கவலையாக.

அவளை இன்னும் கடுப்பேத்த என்னியவன் "ஹேய் நைட் பார்த்தோம்ல மூவி ,அந்த எக்ஸ்மேன் சீரிஸ்ல வருவாலே சோபி டேர்னர்..யம்மாடி என்ன அழகு என்ன அழகு.அதுவும் கேம் ஆப் த்றோன்ஸ்ல செம்ம க்யூட்டா இருப்பா"என்றவனை

"டேய் நாயே, பொண்டாட்டிகிட்டயே இன்னொருத்திய பத்தி பேசுறியாடா..சரி உங்க அலீஸியா விக்காண்டர் அப்புறம் அந்த மத்தவ யாரு Fault in our star ஹீரோயின் ....ஓஹ் செய்லீன் வூட்லி அவங்கள்ளாம் என்ன ஆனாங்க சேர்.உங்க பேவரைட் லிஸ்ட்ல இப்போ இல்லயா"என்று முறைத்தாள்

இன்னும் கொஞ்சம் ப்ரியாவை ஓட்ட நினைத்தவன் "செல்லமே ,உனக்கு ஞாபகம் இருக்கா.அந்த மூவி நீ எப்படி யாரு கூட பார்த்தேன்னு.ஹஹா.உனக்கெல்லாம் அவந்தாண்டி சரி"என்றவனை ப்ரியா ஒரு மாதிரியாக பார்த்தாள். தான் விளையாட்டாக கூறியது அவளின் மனதை புன்படுத்தி இருக்கும் என்பதை அறிந்தவன்

"ஹேய் ப்ரியாம்மா, நான் ஏதோ விளையாட்டுக்கு சொல்ல வந்தது ..சாரிடா..நான் அத நினைச்சு சொல்லலமா"என்றவனை எப்போதும் அர்விந்த் அவளை பேச விடாமல் செய்யும் செயலை இப்போது அவள் செய்தாள்.இவன் ஏதோ கூற அவளை விட்டு விலக என்னியவனை உடும்பென பிடித்துக்கொண்டாள்.

சில நாழிகைக்களுக்கு பின் அர்விந்தின் கை வளைவுக்குள் இருந்த ப்ரியா

"ஏங்க.ஏன் அன்னைக்கு ஒல்லியா இருந்தா என்னை உங்களுக்கு பிடிக்கல என்று சொன்னீங்க" ப்ரியா

"ஹஹா,இது இப்போ கேட்குற சந்தேகமாடி.சரி சொல்ரேன் கேட்டுக்க.இப்போ பாரு என் கைக்குள்ள எவ்வளவு அழகா ஒரு டெடி பெயார் மாதிரி இருக்குற.அன்னைகு உன்ன முதல் முதலா கிஸ் பன்னி ரூமுக்கு தூக்கி போனேன்ல .அப்போ ஒரு விசயத்த ரியலைஸ் பன்னேன்"என்றவனை ப்ரியா

"என்ன"என்ற கேட்டாள்

அதற்கு அவன் "உன்னை முதல் தடவை சங்கீதா வீட்டு பார்ட்டில வைச்சு தூக்கும் போது இருந்த ஒரு சுகம் அன்னைக்கு நீ ஒல்லியா எழும்பும் தோலுமா இருந்த போது வரல்லடி.உன்னை தூக்கி பெட்றூம் கொண்டு போறதுக்குள்ள நாலு வாட்டி ஒன் எழும்பு என்ன குத்திடிச்சி.இப்படியே டெய்லி குத்தினா நான் என்ன ஆகிறது .அதான் உனக்கு ஐஸ்கிறீமும் ,சாக்லேட்டுமா கொடுத்து உன்னை குண்டாக்கலாம்னு சும்மா ஒரு ப்ளான் போட்டேன்.அது வேர்க் அவுட் ஆயிடுச்சு"என்று சிரித்தவனை

"ஓஹ் அப்போ என்னை தூக்கும் போது உங்களுக்கு எழும்பு குத்தினதாலதான் நீங்க என்னை குண்டாக சொன்னீங்க அப்படியா"என்று கோவமாக முறைத்தாள்.

"அடி லூசு.எனக்கு எப்பவுமே பொண்ணுங்க பார்க்க மகாலக்‌ஷ்மியா இருக்கனும்.இந்த சோப்பு விளம்பர பொண்ணுங்க இருக்குறது போல தொடப்பக்கட்ட மாதிரி இருந்தா எனக்கு வாந்திதான் வரும்.அதுதான்டி உண்மையான ரீசன்.ஒரு விசயம் சொல்லவா ப்ரியா..பொண்ணு அழகா அம்சமா இருந்தா பார்த்து ரசிக்கலாம்.அதுக்காகவெல்லாம் அவ கூட வாழ முடியாது.வாழ்க்கைக்கு என்ன தெரியுமா முக்கியம் காதல் .அது வெளித்தோற்றத்துல கிடைக்காதுடா .காதல் சிலருக்கு வெளித்தோற்றத்த பார்த்து வரும் ஆனா பலருக்கு அது தான் காதலிக்கிறவங்க செய்யும் சின்ன சின்ன விசயங்கள்ள வரும். ஒரு சின்ன எக்சாம்பிள் சொல்ரதுன்னா ,அன்னைக்கு சங்கீதா வீட்டுக்கு போகும் போது நான் வாங்கி வந்த இரண்டு ஐஸ்கிறீமையும் சாப்பிட்டு முடிச்சிட்டு மறுபடியும் வாங்கி வர சொன்னியே சின்ன குழந்தை மாதிரி ,அப்பவே நான் அவுட்.வெளிப்படையா சொல்லனும்னா அன்னைக்கு நீ எங்க வீட்டுக்குள்ள வந்து அம்மா கூட பேசினப்போ ஒரு ஈர்ப்பு வந்திச்சி.அந்த ஈர்ப்பு நீ சின்ன குழந்தை மாதிரி நடதுக்கிறத பார்க்கும் போது அப்படியே காதலா மாறிடுச்சிடா.வாழக்கைக்கு காதல் மட்டும்தான்டா வேனும். அது மட்டும்தான் வேனும்.ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று சொல்ரது எவ்வளவு உண்மை தெரியுமா.அந்த ஆசையும் மோகமும் தீரும் போது காதல் இல்லை என்றால் அந்த வாழ்க்கையே வேஸ்ட்டி" என்றவனை அவள் இறுக்கி அணைத்துக்கொண்டு

"உன்னை நான் புருசனா அடைய கொடுத்து வெச்சிருக்கனும்டா"என்றாள்

ஆனால் அர்விந்தோ "அடி லூசு,நானாச்சும் உன்னை வெளிப்படையா காதலிச்சேன்.நீ என்னை காதலிச்சுட்டு நான் ஏதோ தப்பு செய்தேன்னு எனக்கு தண்டனை தர்ரதா நினைச்சுக்கிட்டு உன் வாழ்க்கைய அழிச்சிக்க பாத்தியேடி.அதுலயும் உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குறது கஷ்டம்னு தெரிஞ்சப்புறம் என் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைச்சி நீ பன்ன விசயங்கள் இருக்கே.அன்னைக்கு உன்ன அந்த கௌசிக் சீரழிச்சிருந்தான்னா என்ன ஆகிருக்கும் ப்ரியா" என்றவனை அவள் ஒரு புன்னகையுடன்

"என்ன நான் செத்திருப்பேன் ,அவன் ஜெயில்ல களி தின்னிருப்பான்,அத நீங்க கெடுத்துட்டீங்க"என்று போலியாக சலித்துக்கொண்டவளை அர்விந்த் மனதுக்குள்

"என்ன மாதிரி பெண் இவள்.இவளோட வாழ்க்கையை பத்தி கொஞ்சம் கூட நினைக்காம மத்தவங்களுக்காகவே வாழனும்னு நினைக்கிறாலே "என்று நினைத்தவனை ப்ரியா

"நான் உங்கள ஆரம்பத்துல வெறுத்ததுக்கு என்ன ரீசன்னு என்ன சொல்ல விடவே மாட்டேங்குறீங்கலே "என்றவளை அவன்

"இங்க பாருடா,நீ ஏதோ ஒரு வெலிட் ரீசனுக்காகத்தான் என்னை வெறுத்திருக்கேன்னு நல்லா புரியுது.அது எனக்கு தெரிய வேனாம் ப்ரியா.ஏன்னா அது தெரிஞ்சு உன்மேல எனக்கு காதல் வர வேனாம்.இப்போ இருக்குற என்னோட காதல் ரீசன்லாம் இல்லாம அன்பால வந்ததுடா.சோ ப்ளீஸ் இனிமே அந்த பேச்சு வேனாமே "என்று ப்ரியாவிடம் கூறியவன்

"ஓக்கே ப்ரேக் டைம் முடிஞ்சது .அடுத்த இன்னிங்ஸ ஸ்டார்ட் பன்னலாமா"என்றவனை வெட்கம் கலந்த ஒரு மோகனப்புன்ன்கையை சிந்தினால் நம் அர்விந்தின் நாயகி ப்ரியா.

இவர்களின் டெஸ்ட் மேட்ச் ஆரம்பிக்கும் போது நிஷா தூக்கத்தில் அழத்துவங்க ப்ரியா தன்னை ஆக்கிரமிக்க வந்த அர்விந்தை தள்ளிவிட்டு நிஷாவை தூக்கிகொண்டு அவளுக்கு பால் கொடுக்க கிட்சன் சென்றாள்.இங்கு அர்விந்தோ சத்தமிட்டு

"ஏண்டி இங்க புருசன் பசியோட இருக்கிறேன்,நீ என்ன கவனிக்காம அவளயா தூக்கிட்டு போற .இரு உன்ன அப்புறமா கவனிச்சுக்கிறேன் "என்றவனை

"இப்போ உங்க இன்னிங்க்ஸ் ப்ரேக்க கொஞ்சம் எக்ஸ்டண்ட் பன்னீங்கன்னா ,இன்னும் இரண்டு இன்னிங்க்ஸ் எக்ஸ்ட்றாவா தருவேன்..எப்படி வசதி "என்று கண் அடித்த ப்ரியாவை

'உத்தரவு மகாராணியாரே "என்றவன் 'நிஷா மேல எவ்வளவு பாசமா இருக்கா.மைதிலி நீ இல்லாத குறைய ப்ரியா போக்கிடுவாடா.நீ நிம்மதியா இரு' என்று மைதிலியுடன் கற்பனையில் பேசினான்.

நிஷா தூங்கியதும் தன் காதல் கணவனிடம் வந்தவள் அவன் தூங்குகிறான் என நினைத்து "நான் எவ்வளவு ஒரு பெரிய தப்பு செய்ய பார்த்தேன் அர்விந்த்.நான் இல்லாம போனா நீங்க சந்தோசமா இருப்பீங்கன்னு நினைச்சன்.ஆனா அது எவ்வளவு பெரிய தவறு" என்று மெதுவாக புலம்பியவளை சட்டென்று இழுத்து தன் மேல போட்டுக்கொண்டவன்

"அடியே என் குண்டாட்டி, உன்ன நான் எவ்வளவு காதலிச்சேனோ அதைவிட அதிகமா நீ என்ன காதலிச்சி இருக்கேடி. உன்ன என் வாழ்க்கைல நான் அடையாம போய் இருந்தா எவ்வளவு பெரிய துர்ப்பாக்கியசாலி.ஏன் ப்ரியா நீ உன் வாழ்கைய பத்தியே யோசிக்கமாட்டியாடி" என்று கேட்டவனை

"ஏன் உங்களுக்கு மைதிலிய ரொம்ப பிடிக்கும்.நான் சொல்லட்டா..அவ உங்க உயிர்த்தோழி.அவளுக்காக உங்க வாழ்க்கையையே நீங்க தியாகம் பன்னலயா.ஆனா நான் உங்கள காதலிச்சேன் அர்விந்த்.உயிருக்கு உயிரா காதலிச்சேன்.உங்க உயிர்த்தோழிக்காக நீங்க செஞ்ச தியாகத்த விட நான் உங்களுக்காக செஞ்சது எதுவுமே பெருசில்லப்பா.சொல்லப்போனா நான் என்னோட சுயநலத்துக்காககத்தானே எல்லாமே பன்னேன்.ஆனா நீங்க எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம உங்க தோழியோட பேரு கெட்டு போயிடக்கூடாதுன்னு நீங்க செஞ்சது இருக்கே..."என்றவளின் உதட்டில் தன் விரலை வைத்து

"ஏன் ப்ரியா.இப்ப கூட நீ பன்ன விசயங்கள சின்னதாகாட்டி என்ன பெரிய தியாகியா காட்ட பார்க்குறியே.அப்படியே இருந்தாலும் அன்னைக்கு உன்னை கௌசிக் கூட்டி போய் ஏதும் ஆகியிருந்தா.இப்ப நினைக்கும் போது கூட மனசு வலிக்குதுடா.உன்ன அவன் நாசம் பன்னியிருந்தா நீ சூசைட் பன்னிருப்பேன்னு சொன்னியே..அதுவும் மைதிலிக்கு அவன் பன்ன துரோகத்துக்கு தண்டனையா அவன மாட்டிவிட்டுட்டு..இப்படிலாம் யாரு செய்வா ப்ரியா.மைதிலி உனக்கு பெருசா பழக்கமில்லைன்னு எனக்கு தெரியும்.ஆனா அவ என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் என்றதாலதானே இதெல்லாம் பன்னே.உன்ன மாதிரி ஒரு பொண்ணு யாருக்கும் ப்ரெண்டா கிடைச்சாலே பெரிய பாக்கியம்டா.ஆனா நீ என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் ஒன்னா இருக்கப் போற.இத விட எனக்கு வேற என்னடா வேனும். I feel like my life is completed" என்று உணர்ச்சி வசப்பட்டவனை அவள் இழுத்து

"என்ன சார்..செகண்ட் இன்னிங்க்ஸ் வேனாமா.."என்று கண்சிமிட்டினால்.தன் நாயகியின் அழைப்பை ஏற்றவன் இருவரும் கைகோர்த்து மிக நீண்ட தூரம் பயணிக்க ஆயத்தமாகினர்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro