Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

38




காலையில் 12 மணிக்கு எழுந்த ப்ரியாவுக்கு இரவு என்ன நடந்தது என்று ஒன்றுமே விளங்கவில்லை.வீட்டிலும் யாருமில்லை.காலையிலேயே அர்விந்த் நிஷாவை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றிருந்தவன் நேற்றே சமையல்கார பாட்டியிடம் இன்று வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியிருந்தான்.இரவு எதுவுமே சாப்பிடாததால் ப்ரியாவுக்கு பசி வயிற்றை கிள்ளியது.என்ன செய்வது எண்ரு புரியாமல் தவித்தவள் ப்ரிட்ஜை திறந்தாள் அதற்குள் ஐஸ் கிறீமும் ஜூசும் இருந்தது.இரண்டுமே அவளின் டயட்டிற்கு ஒத்து வராத சமாச்சாரஙக்ள்.என்ன செய்வது என்று யோசித்தவள் இன்று ஒரு நாள்தானே பரவாயில்லை என்று இரண்டு லீட்டர் ஐஸ் கிறீம் பக்கட்டுடன் டீவி முன் அமர்ந்து விரல் போன போக்கில் ரிமோட்டுடன் சானல்களை மாற்றி விளையாடிக்கொண்டிருந்தாள்.

மதியம் மூன்று மனியாகியும் யாரும் வரவில்லை.மறுபடி அவளுக்கு பசிக்க ஜூஸ் குடித்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று தூங்கியாவள் எழுந்த போது இரவு எட்டு மணி.இன்னும் வீட்டிற்கு யாரும் வரவில்லை என்ற போது அவளுக்கு மனதில் லேசாக பயம் எட்டி பார்த்தது.அர்விந்தின் மொபைலுக்கு கால் பன்னலாமா இல்லையா என்று மனதுக்குள் பட்டி மன்றம் நடத்தி கால் பன்னலாம் என நடுவர் தீர்ப்பளிக்க போனை எடுத்து கால் செய்தவள் அவனின் மொபைல் பெட்றூமில் இருந்து அலறுவதை கேட்க அவன் இங்கேயா இருக்கின்றான் என்று பார்த்தவளுக்கு அவன் மொபைலை வீட்டிலேயே விட்டு போய் இருந்தது தெரிந்தது.

இரவு 10.30 க்கு அர்விந்தும் நிஷாவும் வீடு வர நிஷா நன்றாக தூங்கி இருந்தாள்.அர்விந்த் ப்ரியாவை கொஞ்சமும் ஏறெடுத்து பார்க்காமல் நிஷாவை கட்டிலில் தூங்கவைத்து மெதுவாக அவர்களின் படுக்கை அறை கதவை மூடி விட்டு திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல ஹாலில் உட்கார்ந்து இருக்கும் ப்ரியாவிடம் வந்து சில பேப்பர்சை தூக்கி அவள் முன் வீசி விட்டு கிட்சனுக்குள் சென்றான்.

இரவில் இருந்து என்ன நடக்கின்றது என்று புரியாமல் இருந்த ப்ரியாவுக்கு அவன் வீசிய பேப்பர்ஸை என்ன என்று எடுத்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி.ஆம், அர்விந்த் டைவோர்ஸ் பேப்பரில் சைன் பன்னியிருந்தது மட்டுமில்லாமல் அதை கோட்டிற்கு சப்மிட் செய்த டாகுமெண்ட்சையும் அட்டாச்ட் செய்து இருந்தான்.

கிட்சனில் ஆப்பிளை கத்தியால் வெட்டிக்கொண்டிருந்தவனிடம் ப்ரியா மெதுவாக சென்று

"அர்விந்த் "என்று ஏதோ கூற வாய் எடுக்க

"ப்ரியா.டோண்ட் டாக் எனிதிங்.நீ கேட்டத நான் கொடுத்துட்டேன்.இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"என்று ஆத்திரத்தில் ஆப்பிளுக்கு பதிலாக அவன் கையை வெட்டிக்கொள்ள அவன் கையில் இருந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டிருந்தது .உடனே பதறிய ப்ரியா

"என்ன அர்விந்த்,பார்த்து பன்ன மாட்டிங்களா.இங்க பாருங்க எவ்வளவு இரத்தம் "என்று அவன் அருகில் வரப்போனவளை

"இப்ப நீ கிட்ட வந்த என் கைய நானே அறுத்துக்குவேன்..இல்லல்ல இந்தா கத்திய புடி.அன்னைக்கு உன் கழுத்துல வெச்சி வெட்டிக்க போறேன்னு சொன்னேல.இந்தா இப்போ வெட்டிக்க.இல்லை நானே உன் கழுத்துல வெச்சி கீறிடட்டுமா"என்றவனை ப்ரியா அதிர்ச்சியாகப் பார்த்தாள். "ஏன் அர்விந்த் இன்றைக்கு இப்படி நடக்கின்றான்.எதுமே புரியல்லயே "என்று மனதுக்குள் புலம்பியவளை அவன் அருகில் இழுத்து ....,விட்டான் ஒரு அறை.ப்ரியாவுக்கு என்ன நடகின்றது என்றே புரியவில்லை.அவன் அறைந்ததும் அவள் கண்களில் வலியை விட குழப்பத்தையே அதிகம் கண்டவன் இன்னும் இரண்டு அறை விட அவள் வலது பக்க உதடு கிழிந்து இரத்தம் ஒரு கோடாக ஓடியது.

"ஏண்டி இப்படி பன்ன.எதுக்கு ப்ரியா என்ன இவ்வளவு லவ் பன்ற.எனக்காக உன் காதலையே தூக்கி போட பார்த்தியேடி.ஏண்டி.. சொல்லுடி இல்ல உன்ன அடிச்சே கொன்னுடுவேன்"என்றவனை உதட்டில் வழிந்த இரத்தத்தை துடைத்துக்கொண்டு

"என்ன் அர்விந்த் சொல்ரிங்க"என்றவளுக்கு அவளின் டைரியையும் அவளுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டையும் தூக்கி வீசினான்.அதைப் பார்த்த ப்ரியாவுக்கு எல்லாமே புரிந்தது.அவன் முன் எதுவுமே பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தவள் அர்விந்த் கொடுத்த கத்தியை அவள் வேகமா கழுத்தில் வைக்க போக கத்தியை பறித்து விட்டு மீண்டுமொருமுறை அவளை அறைந்தான்.

கண்களிக் கண்ணீருடன் நின்றுகொண்டிருந்த ப்ரியாவை நோக்கி

"லூசாடி நீ.நீயில்லாம நான் எப்படி ப்ரியா வாழ்வேன்.என் மனசுக்குள்ள நுழைஞ்ச முதல் பொண்ணு நீ டி.நீ இல்லைன்னா நான் என்ன பன்னுவேன்.சரி நிஷாவ நினைச்சு பார்த்தியா.காலம் பூரா அவ அம்மா இல்லாமலே இருக்கனுமா"என்றவனை அவள் அழுது கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

உடனே அவன் கையில் அந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்தவன் "இங்க பாரு மெடிக்கல் ரிப்போர்ட்ல இருக்குரதெல்லாம் அப்படியே நடந்துடாது.அப்படியே நடந்தாலும் உனக்கு இப்படி ஆக நானும் நிஷாவும் தானே காரணம்.அன்னைக்கு நீ நிஷாவ காப்பாத்த போய் உன் வயித்துல அடிபட்டு இன்னைக்கு உனக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பு கம்மி என்றதும் முழுப்பழியையும் உன் மேல போட்டுகிட்டு உன்ன தப்பானவளா காட்ட டிறை பன்னி ...ஏண்டி என்ன பார்த்தா மனிசனா தெரியல்லயா..ஏன் நமக்கு குழந்தைங்க கிடைக்கலன்னா என்ன ..நிஷாவ நீ உன் பொண்ணா பார்த்துக்க மாட்டியா" என்றவன் அவளை அவன் பக்கமா இழுத்து இருக்கி அணைத்துக்கொண்டான்.

ப்ரியாவும் விசும்பிக்கொண்டு "இல்ல அர்விந்த்.உங்களுக்கு குழந்தைங்கன்னா எவ்வளவு விருப்பம்னு எனக்கு தெரியும்.என்கூட நீங்க வாழ்ந்து உங்களுக்கு வாரிசு இல்லாம போறதுல எனக்கு விருப்பமில்ல. அதனாலதான் நான் அப்படில்லாம் பன்னேன்" என்றவளை இதற்கு மேலும் பேச விடக்கூடாது என்று தன் இதழ்களால் அவளின் இதழ்களை சிறை செய்தான்.சில மணித்துளிகள் இருவரும் தன்னிலை மறந்திருக்க உடனே அவனிடமிருந்து விலகியவள் பெஸ்ட் எய்ட் பாக்சை எடுத்து அவனின் வெட்டுப்பட்ட கையில் கட்டுப்போட்டால்.அவள் இந்த நிலமையிலும் தன்னை பற்றியே யோசிக்கின்றாள் என்பதை நினைக்கும் போது அவனுக்கு அவனை என்னி கோபம் வந்தது.இப்படி பட்ட ஒருத்திக்கா நான் தண்டனை கொடுக்க நினைத்தேன் என்று என்னியவன் அவளின் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி

"இங்க பாரு ப்ரியா எங்களால தானே உனக்கு இப்படி ஆகிடிச்சு. என்னைவிட உனக்கு குழந்தைங்கன்னா எவ்வளாவு விருப்பம்னு எனக்கு தெரியும் .சரி போனது போகட்டும் ,எனக்கு நிஷா மட்டும் போதும்.அவள் எனக்கு பிறக்காத"என்ற போது ப்ரியா அவனை நிமிர்ந்து பார்க்க

"நீ நினைக்கிறியாள், ரம்யா எங்கிட்ட அதை மறைச்சிருப்பாள்னு. அவ அன்னைக்கே என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா.இனி நீ ,நான் ,நிஷா இதுதான் நம்ம உலகம்.அதுல இனி யாருக்கும் இடமில்லை.உனக்கு இப்போ நான் ஏன் மைதிலிய கல்யாணம் பன்னேன்னு புரிஞ்சிருக்கும்.அவ பாவம்டா.உலகம்னா என்னன்னே தெரியாம இருந்தவ கௌசிக்கிட்ட ஏமாந்துட்டா.அவ ஏமாந்தது அந்த கடவுளுக்கே பொறுக்காம அவளை அவன் பக்கம் எடுத்துக்கிட்டான்" என்றவனை ப்ரியா

"அர்விந்த், நேத்தைக்கு நீங்க ஆபீஸ் விட்டு வெளில வந்ததுமே தீபக் கால் பன்னி நீங்க மூனு நாள் லீவ் எடுத்திருக்கிறதாவும் ஹாப்பியா எஞ்சாய் பன்ன சொல்லியும் சொன்னாரு.அதான் எப்படியும் நீங்க என்ன தேடி வருவீங்கன்னு தெரியும் .அதனாலதான் நீங்க என்ன வெறுக்கனும்னு முடிவு செஞ்சி அவங்க கௌசிக்கோட ப்ரென்ட்சுனு தெரிஞ்சும் பப்புக்கு போனேன்,ஏன்னா அவந்தான் அவங்கள சேர்த்து விட்டான்னு தெரியும்.எனக்கு என்ன ஆனாலும் கவலையில்லை ,ஆனா நீங்க நான் அப்படி நடகிறத பார்த்து என்ன வெறுத்து ஒதுக்கனும்னுதான் அப்படி பன்னேன்.உள்ள போய் கொஞ்ச நேரத்துல எனக்கு பசி வந்ததும் ஜுஸ் ஆடர் பன்னி குடிச்சதுக்கு அப்புறமா என்ன ஆச்சுனு எனக்கு தெரில.காலைல கண் முழிச்சா வீட்ல இருக்கேன்.அப்போதான் எனக்கு புரிஞ்சது நீங்கதான் என்ன கூட்டி வந்திருப்பீங்கன்னு.அப்பறம் நான் ஏன் உங்கள ஆரம்பத்துல வெறுத்தேன் தெரியுமா...."என்றவளை மீண்டும் தன் இதழ்களால் சிறை செய்தவாறு அவளை தூக்கி அவர்களின் அறைக்குள்ளே சென்று தங்களின் வாழ்க்கையை துவங்க ஆரம்பித்தனர்.

(ஏய் பக்கிங்களா சங்கீதாவோட மரமண்டையும் தத்தியும் இப்பதான் கொஞ்சம் புத்தி வந்து இருக்குதுங்க,இதுல நீங்க வேற . இந்த இடத்த விட்டு எல்லோரும் ஓடிடுங்க)

காலையில் அர்விந்த் நேரத்துடன் எழும்பி வாய் பிளந்து தூங்கிக்கொண்டிருக்கும் தன் காதல் மனைவியை பார்த்தவன் அவளுக்கு நெற்றியில் முத்தமிட அவளோ அவனை இழுத்து தன்னுடன் சேர்துக்கொண்டாள்.

"டேய் புருசா ,பொண்டாட்டி டயர்ட்டா இருப்பாலே என்று இல்லாம என்னடா கொஞ்சிகிட்டு இருக்குற,போடா போய் டீ கொண்டு வா"என்றவளிடம்

"டீ இல்ல க்றீன் டீ தான்.நீங்கதான் ஜிம் ராணியாச்சே.அதுவும் இனிப்பில்லாத க்ரீண்டீ தான்" என்றவனிடம் அவள் உடனே தூக்கத்தில் இருந்து துள்ளி எழுந்தவள்

"டேய்,நான் கண்டிப்பா மெலியனுமாடா"என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்டவளை

"போடி லூசு,இப்பதான் நீ பார்க்க கன்றாவியா இருக்க.எனக்கு என்னோட பழைய ப்ரியா வேனும்,நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது.இன்னும் ஒரு வாரத்துல உன் பழைய டிறஸ்லாம் செட் ஆகுற மாதிரி பன்ற ஓக்கே"என்ற தன் காதல் கணவனிடம்

"அப்போ முதல்ல ஒரு புல் மக் டீ கொண்டு வா,அப்பறமா இரண்டு லீட்டர் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிறீம்,டெய்ரி மில்க் சாக்லேட் அப்படியே ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் எல்லாமே வாங்கி வர.ஓக்கே இந்த ஒரு மாசமா உன்கூட முகம்கொடுத்து பேசாதது கூட பெருசா தோனல்ல.ஆனா இந்த ஐஸ்கிறீமையும் டெய்ரி மில்கையும் ரொம்ப மிஸ் பன்னேன்பா" என கவலையாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தவளை "அடிங்க" என்று அவன் செல்லமாக கையை ஓங்க நிஷா வீறிட்டு அழுதால்.உடனே அவளை தூக்கிய ப்ரியா

"அர்விந்த் நிஷா பசில அழுவுறா.பால் பாட்டிலை எடுத்துக்கொடுங்க"என்றதும் நிஷா பாலை குடித்து விட்டு தன் விளையாட்டை ஆரம்பித்தால்.

இரவு இருவரும் நெடுநேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது ப்ரியா

"நேத்தைக்கு உங்க கிட்ட நான் ஏன் ஆரம்பத்துல இருந்தே உங்கள வெறுத்தேன்னு சொல்ல வந்தத சொல்ல விடல்லயே"என்றவளை இப்பொழுதும் சொல்ல விடாமல் தன் வேலையை தொடரப் பார்த்த அர்விந்தை ப்ரியா தள்ளிவிட அர்விந்தோ

"நீ அந்த காரணத்த சொல்லி உன்மேல எனக்கு காதல் வந்த மாதிரி ஆக வேனாம்டா.அது எனக்கு தெரியாமலேயே போகட்டும்.ஏன்னா அது தெரிஞ்சி எனக்கு ஒன்னும் ஆக போறதில்ல.அது தெரியாமலேயே நான் உன்ன திகட்ட திகட்ட லவ் பன்ன போறேன்.அப்பறம் இன்னொன்னு நிஷாவோட அப்பா நாந்தான் எப்பவுமே.சரியா.அவளுக்கு அவ அம்மா பத்தி சொல்லுவம் ஆனா கௌசிக் பத்தி நாம தவறி கூட சொல்லிட வேனாம்டா.சரி எனக்கு இப்போ ப்ளட் சுகர் லெவல் கம்மியான மாதிரி இருக்கு.கொஞ்சம் இனிப்பா ஏதும் கிடைக்குமா"என்று அவள் உதட்டை பாத்து ஏங்கியவனை லூசு ப்ரியா அவன் என்ன கேட்கின்றான் என்று புரியாமல்

"இருங்க நான் ஏதும் ஸ்வீட்ஸ் கொண்டு வரேன்" என்று எழப்போனவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து

"அடி லூசு.அதான் இன்னைக்கு பூராவும் இரண்டு லீட்டர் ஐஸ்கிறீம் அண்ட் நாலு பார் டெய்ரி மில்க் சாக்லேட்ட தின்னு முடிச்சியே.சோ உன்னை சாப்பிட்டா எனக்கு சுகர் ஏறிடும்"என்று தன் வேலையை ஆரம்பித்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro