3
அர்விந்த் அந்த ஆபீஸ் விட்டு வெளியே செல்வதை எதேர்ச்சையாக பார்த்த சங்கீதா உடனே ப்ரியாவின் அறைக்குள் சென்றால்.
"ஹேய் ரியா,என்னடி அர்விந்த் வந்துட்டு போறான்.என்ன உன்ன பார்க்க வந்தானா?ஆனா அவன் ஏதோ இண்டர்வியூக்கு வந்த மாதிரில்ல தெரியுது.அவன் எப்ப அப்ராட் இருந்து வந்தான்?மைதிலி எப்டி இருக்காலாம்? " என்று கேள்விகளை அடுக்கியவலை ப்ரியா கைகளாலயே வாயை மூடு என்று சைகை செய்துவிட்டு
"தேவை இல்லாத பத்தி எல்லாம் இப்ப பேசாதா,அவன் எனக்கு பி ஏ வா இங்க ஜாயின் பன்ன வந்திருக்கான்.செலக்டும் ஆகிட்டான்.சோ யு கோ அண்ட் டூ யுவர் வேர்க.இப் யூ டோண்ட் ,கோ டு ஹோம் அண்ட் எஞ்சாய் வித் யுவர் குட்டீஸ் " என்று சீரியசாக ஆரம்பித்து சாதாரனமாக முடித்தால்.
"என்னது பி ஏ வா..? " என்று கேட்க வாய் எடுத்தவளை போ என்று கதவை நோக்கி ப்ரியா சைகை செய்தால்.
ஏதோ ஒன்று சரி இல்லை என்று எண்ணிய சங்கீதா உடனே தன் இருக்கைக்கு வந்தவள் ஹெச் ஆர் லீசாவுக்கு இண்டர்காமில் அழைத்தாள்.
"ஹேய் லீசு குட்டி இப்ப நம்ம கம்பனிக்கு ஒருத்தர் இண்டர்வியூக்கு வந்தாரே அர்விந்த்னு அவரோட காண்டக்ட் நம்பர் குடுடி"
"ஹேய் சங்கி என்னோட வேலைக்கே நீ உலை வெச்சிடுவ போல,என்னடி நடக்குது இங்க.மேம் அவர பத்தி எந்த டீடைலும் யாருக்கும் கொடுக்க வேணாம் என்றாங்க.நீ என்னடான்னா அவரு போய் 2 நிமிசம் கூட ஆகல்ல.அதுக்குள்ள அவரு நம்பர் கேட்குற. Whats going on here?" என்றாள்.
"ஹே உன் வேலைக்கு நான் கியாரண்டி ,முதல்ல அவரு நம்பர கொடு.அவரு எங்க காலேஜ் ஜூனியர்தான்."
"சரி குடுக்குறேன் ஆனா என்ன மட்டும் போட்டு குடுத்துடாத தாயே" என்று லீசா நம்பரை கொடுத்தாள்.
நம்பரை பெற்றவள்
'அவனுக்கு எப்படி கால் பண்ணி கதைப்பது.நம்மலதான் அவனுக்கு பெரிதாக தெரியாதே.ரம்யாவின் தோழன்.ரியாவை தெரிந்திருக்க வாய்ப்புண்டு. நம்மை அவன் எப்படி ஞாபகம் வைத்திருப்பான்.ஆனா என்ன பயபுள்ள இப்பவும் செம ஸ்மார்ட்டாதான் இருக்கான்.என்ன கொஞ்சம் தாடி வெச்சிருக்கான்.இந்த மக்குச்சாமி ரியா மட்டும் அன்னைக்கு என்னை குழப்பாம இருந்திருந்தா நம்மலே அவன கரக்ட் பண்ணிருக்கலாம்.என்ன ஒரு வருசம்தானே நம்மளவிட சோட்டா பாய்'என்று மனதுக்குள் நினைத்தாள்.
'ஆனா ரியா சொன்னது எதுவுமே நடக்கலயே,அவன் அவனோட ப்ரெண்ட் மைதிலியாதானே கல்யாணம் பண்ணிக்கிட்டான்.அதோட அவன் அம்மாவும் அவளும் அவனோட ஏதோ அப்ரோட் போயிட்டாங்க.
மைதிலி எப்டி இருக்கான்னு முதல்ல கேட்கனும்'
என்று தன் போனை எடுத்தவள் அர்விந்துக்கு டயல் செய்ய ஆரம்பித்தால்.
அப்படி ரியா என்னதான் சங்கீதாவிடம் கூறியுருப்பால்.......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro