24
ரம்யாவின் காரில் ஏறிய அர்விந்திற்கு அவளிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
"அர்விந்த், டேய் உன் மேலயும் மைதிலி மேலயும் செம கடுப்புல இருந்தேன். எனக்கு ப்ரியா அன்னைக்கு கால் பன்னி பேசும் போதுதான சொன்னா, மைதிலிக்கு இப்படி ஆச்சுன்னு.உனக்கு என்ன நடந்தது என்று சொல்லனும்னு தோனினா சொல்லு.நான் உன்ன போர்ஸ் பன்னல"
என்றவளை அர்விந்த் உடனே "இல்ல ரம்யா,இந்த விசயம் மைதிலிக்கும் எனக்கும் அப்புறம் யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைச்சிருந்தேன்.ஆனா அந்த நேரத்துல இருந்த டென்சன்ல உங்கிட்ட கூட சொல்ல முடியாத நிலமை.சொல்ல கூடாது என்றெல்லாம் இல்ல.ஆனா சொல்லி புரியவைக்க நேரம் போதாம இருந்திச்சி."
என்று அர்விந்த் ப்ளாச்ஷ்பேக்கை ஆரம்பித்தா.(ரொம்ப நாளா எல்லோரும் கேட்ட கேள்வி அர்விந்த் ஏன் மைதிலிய லவ் பன்னல ,முதன் முதல்ல ப்ரியாவையா லவ் பன்னான்.அப்போ அவன் வைப் மைதிலிய லவ் பன்னலயா ?என்ற கேள்விகளுக்கு பதில் இப்போது).
அர்விந்த் 3 மாதம் இன்டஸ்ட்ரியல் ட்ரைனிங் சென்று ஊர் திரும்பிய வேளை ,பஸ் ஸ்டான்டில் மைதிலியை காண்பான் என்று சிறிதும் என்னவில்லை.தன் ஆருயிர் தோழி தன்னை ரிசீவ் செய்ய வந்துள்ளால் என்பதை என்னும் போது அவனுக்கு மெய் சிலிர்த்து.ஏனென்றால் அது இரவு 1 மணி.
பேக்கை தோலில் மாட்டிக்கொன்டு "ஹேய் மைது என்னடி இந்த நேரத்தில இங்க வந்த.அதான் காலைலயே பார்த்திருக்கலாமேடி" என்றவன் அவள் கையிலும் ஒரு பேக் இருப்பதை பார்த்து ஏதோ சரியில்லை என்று உனர்ந்தவன் " என்னடி கைல பேக்.எங்கேயும் ஊருக்கு போறியா"என்று சந்தேகத்துடன் கேட்டான்.
"இல்ல அர்விந்த் நான் ஊர விட்டேன் போறன்.ஏனென்று கேட்காத.எங்கே என்றும் கேட்காத.நான் திரும்பி இங்க வரப்போறதில்ல."என்றவளின் கன்னத்தில் அவன் கை பதிந்திருந்தது.
"ஊரை விட்டு போற அளவுக்கு உனக்கு என்னடி நடந்துச்சு.ஏன் எவன்கிட்டயும் ஏமாந்து வயித்துல பிள்ளையோட இருக்கிறியா. பேசுடி இப்டி பேசாம இருந்தா என்ன அர்த்தம்" என்றவனை
"ஆமா இப்போ நான் ப்ரெக்னன்டாதான் இருக்கேன்.போதுமா .ஒருத்தன நம்பி ஏமாந்துட்டேன்" என்று ஹிஸ்ட்டீரியா வந்தவளை போல் கத்தினால்.மேலும் தொடர்ந்தவள்," சாரி ஏமாந்துட்டேன்னு அவன் மேல மட்டும் பழிய போட விரும்பல்ல.நீ போய் ஒரு மாசத்துலயே ஒருத்தன காதலிச்சேன்.ரம்யாக்கு கூட தெரியாது.ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல தப்பு நடந்திடுச்சி, அவன் அப்பா அம்மாட்ட பேசிட்டு வரேன்னு யூ எஸ் போனவன் கிட்ட இருந்து ஒரு மாசமா எந்த கான்டாக்டும் இல்ல.என்ன இக்னோர் பன்றானா இல்ல அவனுக்கு ஏதும் ஆயிடிச்சான்னு கூட தெரியல.இனிமே அவனே வந்து கல்யானம் பன்ன கேட்டாலும் கல்யானம் பன்ற நிலமைல நான் இப்போ இல்ல. இப்போ என்னை என்ன செய்ய சொல்ர.இந்த ஊர்ல இருந்து கெட்டுப்போனவ, ஊர் மேய்ஞ்சவ என்ட பேர கேட்டுக்கிட்டு வாழ சொல்ரியாடா."
என்று அழுதவளை இதயம் முழுவதும் வலியுடன அவளை தேற்ற "ஹேய் மைதிலி ப்ளீஸ் அழாத.சரி வா .நாம அந்த ரெஸ்டூரன்ட் போய் பேசலாம்"என்றான்.
ரெஸ்டூரன்டை அடைந்தவர்கள் "சரிம்மா இப்ப ஏன் நீ அவனா வந்து உன்ன கல்யானம் பன்ன கேட்டாலும் முடியாது என்று சொல்லுற" என்றவனை கண்கலங்க
"அது,,போன வாராம் நான் டாக்டர்கிட்ட ப்ரெக்னன்சி கன்பார்ம் பன்னேன்.அப்போதுதான் எனக்கு இன்னொரு விசயம் தெரிய வந்துச்சு.எனக்கு வூம்ப் கேன்சர்.அதுவும் புல்லா ஸ்ப்ரெட் ஆகிட்டு.ரிமூவ் பன்னாக்கூட எந்த பிரயோசனமும் இல்ல என்று சொல்லிட்டாங்க.நான் இன்னும் மிஞ்சி போனா 10 மாசமோ இல்ல 1 வருசமோ அவ்ளோதான் .மைதிலி சாப்டர் ஓவர்." என்றவளை இடி விழுந்தவன் போல பார்த்தான்.
"என்ன மைதிலி சொல்ர.எனக்கு ஒன்னுமே புரியல.உனக்கு வூம்ப் கேன்சரா.எப்படி ,நாம ஏதும் வேற டாக்டர கன்சல்ட் பன்னலாம்"அர்விந்த்
"இல்லை அர்விந்த் டிரீட்மண்ட்ல எந்த ஒரு பிரயோசனமும் இல்ல என்று சொல்லிட்டாங்க.கீமோ தெரபி பன்னி அதனால என் குழந்தைக்கு ஏதும் ஆகுறத விட என் குழந்தைய ஒழுங்கா பெற்றெடுக்கப்போரன் ,நான் என் குழந்தைய பெற்றெடுக்கும் வரையாச்சும் உயிரோட இருக்கனும்.ஒரு ரென்டு மூனு குழந்தை இல்லாத வசதியான பெமிலய பார்த்து வெச்சிருக்கேன். அவங்ககிட்ட என்னோட நிலமைய சொல்லி அவங்களுக்கு கொடுக்கலாம்னு இருக்கேன்.ஆனா இங்க இல்ல.வெளியூர்ல.இங்க நான் இருந்தா நம்ம எல்லோருக்குமே கெட்ட பேரு வரும் .அதுவும் கண்டிப்பா உனக்கு வரும்.என் நிலமைக்கு நீயும் காரணமா இருக்குமோன்னு சந்தேகப்படுவாங்க.இப்பவே நம்மல பத்தி ஜாடை மாடையா பேசுறாங்க. நான் அவன உண்மையா காதலிச்சண்டா அர்விந்த் ஆனா..." என்றவளை
இறுகிய முகத்துடன் "ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்.இப்போ நான் சொல்ரதுக்கு நீ ஒக்கே சொல்லித்தான் ஆகனும் " என்றவனை
லேசான விசும்பலுடன் "என்ன "என்றாள்.
"உன்னை நான் கல்யானம் பன்னிக்கப் போறன்.உனக்கு விருப்பம் இருக்கா இல்லையா என்கிறது எல்லாம் எனக்கு பிரச்சினை இல்ல.இப்போ நீ இதுக்கு சம்மதிகல்ல அப்புறம் நான் மனிசனாவே இருக்க மாட்டன்.இப்ப நீ என்கூட என்வீட்டுக்கு வார.நாளைக்கே நமக்கு கல்யானம்.அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன்.உனக்கிருக்குறது உன் பெரியம்மா மட்டும்தானே அவங்க கிட்ட எங்கம்மா பேசுவாங்க சரி.இப்ப நீ கிளம்பு போலாம்" என்றவனை
"இல்ல அர்விந்த் ,நான் என்ன சொல்ரேன்னா.."என்றவளை அர்விந்த் விட்டான் ஒரு அறை.
"வாய மூடிக்கிட்டு கிளம்பு .என்ன கொலைகாரனா மாத்தாத.இனிமே எல்லாமே நான் மட்டும்தான்.சரியா.இனிமே எவனும் நமக்கு இடைல வர முடியாது." என்றவனை மறுத்து பேச பயந்து விழிகளில் கண்ணீருடன் "சரி "என்றாள்.
வீடு வந்ததும் அர்விந்தின் அம்மா அவர்கள் இருவரையும் வித்தியாசமாக பார்த்தார், உடனே அவன் ,
"அம்மா பார்த்தீங்களா உங்க மருமகளை.என்ன எவ்லோ காதலிச்சு இருந்தா 3 மாசம் என்ன பார்க்காம இருந்திட்டோம்னு உடனே பேக்க எடுத்துட்டு என்ன பார்க்க நான் போன ஊருக்கே கிளம்பி வந்திருப்பா.இனியும் இவள காக்க வைக்க வேனாம்மா.இவ பெரியம்மாகிட்ட பேசுங்க நாளான்னிக்கும் கல்யானத்த வெச்சிக்கலாம். அவங்க ஒன்னும் எதிர்ப்பு சொல்லமாட்டாங்க.அடுத்த நாள் நாம் வெளிநாடு போறோம்.டிரைனிங் போன இடத்துல எனக்கு ஜாப் ஆபர் ஒன்னு அப்ரோட்ல கிடைச்சிருக்கு,நீங்க இரெண்டு பேரும் உங்க பாஸ்போர்ட்ட எடுத்து வைங்க"என்று ரூம் சென்றான்.
அர்விந்தின் அம்மாக்கோ சந்தோசம்.ஏனென்றால் மைதிலி ஒவ்வொரு முறையும் வீடு வரும் போது இவள் தன் வீட்டுக்கு மருமகளாக வரமாட்டாளா என்று ஏங்குவார்.ஆனால் அர்விந்தோ அவள் எனக்கு ப்ரென்ட் மட்டும்தான் மத்தபடி எதுவும் கிடையாது என்று கூறுவான்.ஆனால் இன்று அவனே அவளை தன் மருமகள் என்று கூற மெய்சிலிர்த்து போனார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro