22
கௌசிக் டெல்லியிலேயே தங்கிவிட்டான்.தன் தந்தையும் டெல்லி வந்தததால் அடுத்த வாரம் ப்ரியாவின் வீட்டிற்கு அப்பாவுடன் வருவதாக கூறிஅவன் இவர்களை வழி அனுப்பி வைத்தான்.
இருவரும் சென்னை வந்தடைய அவர்களை வானமாதேவி தண்ணீர் தெளித்து வரவேற்றாள்.மழை சோ வென பெய்தது.
இருவரும் அவரவர் வீடு சென்று அடுத்த நாள் ஆபிஸிற்கு சென்றனர்.
அங்கு ஆபிஸ் முழுவதும் எல்லா ஸ்டாபும் இவர்களை வரவேற்றனர்.ப்ராஜக்ட் நல்லபடியாக கிடைத்ததுக்கு கேக் வெட்டி ஒருவர் முகத்தில் மற்றவர் பூசி கொண்டாடினர்.
கடைசியில் ப்ரியா ,கௌசிக்கை சந்தித்ததையும் அவர்களின் கம்பனிக்கே அவுட்சோர்சிங்க் மற்றும் சப் காண்ட்றாக்டை கொடுக்கலாம் என்று கூற மற்ற எவரும் ஆட்சேபனை தெரிவிக்காத போது சங்கீதா மட்டும்
"ஹேய் அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்.முதல்ல இன்னைய நாள நாம எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம்.முதல்ல மூவி பார்க்கலாம்.அன்னைக்கு நீயும் அர்விந்தும் போய்ட்டீங்க.சோ இன்னைக்கு கலக்குறோம் நாளைக்கு ஜெயிக்கிறோம் .ஓக்கே" என்றாள்.
கடைசியில் எல்லோரும் சேர்ந்து என்ன படம் பார்க்கலாம்னு கேட்க அர்விந்த் அலைபாயுதே என்று கூறினான்.அதை மற்றாவர்கள் ஏற்கவில்லை.
கடைசியில் எல்லோருமாக ப்ரேமம் பார்க்கலாம்னு முடிவு செய்து பராஜக்டரில் அந்த படத்தை பார்த்து முடித்தனர்.
"ச்சே கேரளா பொண்ணுங்க இங்க வந்து கலக்கும் போது நம்ம ஊர் பொண்ணு அங்க போயி கலக்குறது சூப்பர்ல.அதுவும் புதுசா துல்கரோட ஒரு மூவி வந்துச்சே கலி.செம்ம நடிப்புப்பா" என்றாள் ப்ரியா.அன்றைய நாள் முழுவதும் சிரிப்பும் கும்மாளமுமாக செல்ல ஒரு காலேஜ் அட்மாஸ்பியரே உருவாகியது.
அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் வேலையிலேயே நேர காலமின்றி எல்லோரும் கழித்தனர்.
ஒரு இடத்துக்கு இண்டீர்யர் டிசைன் செய்ய மொத்தம் 5 படிநிலைகள்.
1. வாடிக்கையாளரிடம் கலந்தாலோசித்தல் (Client Consultancy)
2. திட்ட வடிவமைப்பு (Schematic Design)
3. வடிவமைப்பு மேம்பாடு (Design Development)
4. கட்டுமான ஆவனப்படுத்தல் (Construction Documnetation)
5. கட்டுமான நிர்வாகம் (Construction Administration )
இதில் முதலும் இரண்டவதும் முடிந்துவிட்டாள் 70% வேலை முடிந்த ஒரு உணர்வு ஏற்படும்.அதற்காகவே எல்லோரும் இரவு பகல் என பார்க்காது மிகவும் கடினமாக வேலை செய்தனர்.
4 நாட்களின் பின் சங்கீதா "ஹேய் அர்விந்த் ,உனக்கு தெரியுமா நாளைக்கு ப்ரியாவோட பேர்த்டே.இருந்த பிசில மறந்துடிச்சிடா.என்ன பன்னலாம்" என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு ப்ரியா வர
"நாளைக்கு எங்க வீட்ல ஒரு சின்ன பங்க்சன் இருக்கு .சோ எல்லோரும் நாளைக்கு டின்னர் எங்க வீட்டுக்கு வாரீங்க" என்றாள்.சங்கீதா அர்விந்திடம் மெதுவாக "அவ பேர்த்டேனு சொல்லாம சீக்ரட்டாமாம் போடிங்க" என்று மெதுவாக அர்விந்தின் காதில் சொன்னாள்.அர்விந்த் ஒன்றும் சொல்லாமல் சிரித்துகொண்டான்.
ப்ரியா அறைக்குள் சென்றதும் அர்விந்திடம் சங்கீதா "டேய் இப்போ நீ என்ன பன்ன போற" என்றவளை
அவன் "அவ பேர்த்டே அன்னைக்கு அவகிட்ட என் காதல சொல்ல போறேன்.அவ ஏத்துக்கிட்டாலும் சரி.இல்ல ரிஜக்ட் பன்னாலும் சரி" என்றவனை முறைத்து
"ஒஹ் ரிஜக்ட் பன்றவதான் பார்க்ல உங்க தோல்ல சாஞ்சு அப்படி காதல் வசனங்கள் பேசினாங்களோ"என்றாள்.
ஆம் அன்று அர்விந்த் சங்கீதாவுக்கு கால் பன்னி எல்லா விடயத்தையும் கூறினான் கௌசிக் அவளை தனியாக அழைத்து சென்றதை தவிர.
அடுத்த நாள் எல்லோரும் ப்ரியா வீட்டுக்கு செல்ல அர்விந்தும் சங்கீதாவும் ஒன்றாக வந்து சேர கொஞ்சம் தாமதமாகிவிட்டது.உள்ளே வந்தவர்கள் பரஸ்பரம் சுக நலன்களை விசாரித்து கொண்டிருக்க அர்விந்தோ ப்ரியாவை தேடினான்.
ப்ரியாவோ அடர் பச்சை நிற சாரி அணிந்து மிகவும் அழகாக காணப்பட்டால்.வைத்த கண் வாங்காமல் அவளையே அவன் பார்த்துக்கொண்டிருக்க மெதுவாக அவன் பக்கத்தில் வந்த சங்கீதா "ம்ம்ம்க்க்கும் ..என்னம்மா அழகா இருக்காள்ள.கொஞ்சம் குண்டுதான்....."என்றவளை அவன் முறைக்க
"இல்லல்ல குண்டுலாம் இல்லப்பா.நான் மட்டும் பையனா இருந்திருக்கனும் உனக்கு சான்ஸே கிடைச்சிருக்காதுடி மாப்பிள"என்றவளை பார்த்து புன்னகைத்தான்.
ப்ரியாவின் அப்பா எல்லோரையும் தன் பக்கம் அழைத்து
"இன்னைக்கு ஒரு முக்கியமான நாள்.என் பொண்ணோட பிறந்த நாள்.அதுமட்டுமில்ல அவ ரொம்ப நாளா கல்யானமே வேனாம்னு சொல்லிக்கிட்டு இருந்தா ,ஆனா இப்போ அவளோட கல்யானத்துக்கு பெர்மிசன் தந்துட்டா.ஒரு தகப்பனா நான் என் பொண்ண எப்பவும் அதைச் செய் இதைச் செய் என்று வற்புறுத்தினது இல்லை.அவளுக்கு எப்போ எது பிடிக்குமோ அப்பவே பன்னட்டும்னு விட்டிடுவன்.இப்பதான் இவ கல்யாணத்துக்கு ஒக்கே சொன்னா.எல்லோருக்கும் மாப்பிள்ளை யாரு என்று தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கும்.உங்கள்ள பலருக்கு தெரிஞ்சவருதான்" என்று கூற சங்கீதாவுக்கும் அர்விந்திற்கும் ஆச்சரியம்.சங்கீதா சந்தோசத்தில் அர்விந்த் காதில்
"டேய் உன்னத்தாண்டா கூப்பிட போறாரு,இந்த ஊமைக்கொட்டான் ப்ரியா சர்ப்ரைசா எவ்லோ ப்ளான் பன்னிருக்கா"என்று அவள் கூறி முடிக்க ப்ரியாவின் தந்தை
"லெட்ஸ் இண்ட்றடியூஸ் கௌசிக்.ப்ரியாவோட கிளாஸ்மேட் அண்ட் உங்க பலபேரோட சீனியர்" என்றதும் எல்லோரும் கரகோசம் புரிய அர்விந்த் தானாக தலையை கீழே தொங்க போட்டுக்கொண்டான்.
இவன் இப்படி தலையை கீழே குணிந்துகொண்டதை ப்ரியா குரூரம் கலந்த ஒரு புன்னகையுடன் பார்ப்பதை சங்கீதா கண்டு திடுக்கிட்டாள்.அர்விந்த் உடனே ரெஸ்ட்றூம் சென்றவன் கலங்கியிருந்த கண்ணை துடைத்து முகத்தை கழுவி விட்டு ப்ரியாவிடமும் கௌசிக்கிடமும் வீட்டில் நிஷா அம்மாவுடன் தனியாக இருப்பதால் அவசரமாக வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறிவிட்டு சங்கீதாவிடம் கூட கூறாமல் சென்றுவிட்டான்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro