21
பார்க்கை வந்தடையும் வரை அர்விந்தின் மனமோ ஒரு நிலையில் இல்லாமல் தடுமாறிக்கொன்டிருந்தது.தன்னை வேட்டையாட கையில் ஆயுதங்களுடன் மனிதர்களை கண்டால் எப்படி புள்ளி மான் துடிக்குமோ அதே நிலையிலேயே அர்விந்தின் மனநிலையும் இருந்தது.
கௌசிக் ப்ரியாவிடம் என்ன கூறியுருப்பான்,சும்மா ஊர் சுத்தி பார்க்க மட்டும் அவளை அழைத்து சென்றானா.இல்லை அவனின் காதலை ப்ரியாவிடம் கூறி இருப்பானா.. ப்ரியா அதுக்கு என்ன சொல்லியுருப்பாள் என்று யோசித்து யோசித்தே அவன் மன்டை காய்ந்த்து.ஒரு வேலை ப்ரியா அவனின் காதலை ஏற்றிருந்தால்...இதை என்னும் போதே அர்விந்திற்கு அவனை அறியாமளேயே கண்களில் கண்ணீர் வழிந்த்து.கண்களில் கண்ணீருடன் இருக்கும் இவனை டாக்சி டிரைவர் வித்தியாசமாக பார்க்க அர்விந்த் கண்ணீரை துடைத்தவன் ஜபனீஸ் பார்க்கை வந்தடைந்தான்.
உள்ளே நுழைந்தவனுக்கு பார்க்கின் அழகை பார்க்க மனம் வராமல் அவன் கண்கள் ப்ரியாவையே தேடியது.ப்ரியாவோ பார்க்கை சுற்றிப்பார்க்க வந்திருந்த ஏதோ ஒரு ஸ்கூலின் பிள்ளைகளுடன் சிரித்த முகத்தோடு விளையாடிக்கொன்டிருந்தாள்.
ப்ரியாவை கண்ட அவனது விழிகள் இமை மூட மறந்த்தது. அர்விந்த் ஒன்றும் கண்ட பெண்களை எல்லாம் காதல் செய்ய நினைக்கும் ஒரு கேரக்டர் கிடையாது.ப்ரியா அவனின் மனதில் எப்படி உள் நுழைந்தால் என்று இன்று வரை அவனுக்கு ஒரு விடைதெரியாத புதிராகவே உள்ளது.டெல்லியில் இப்போது குளிர் காலம் என்பதால் அந்த குளிருக்கு பேபி பிங்க் நிறத்திற்கு அவள் கன்னம் கன்னாபின்னாவென்று சிவந்திருக்க அவன் மனமோ இவ்வளவு நேரமும் கவலையில் தத்தளித்ததை மறந்து தன் காதலியின் அழகை ரசிக்க தொடங்கியது.
ஆம் அர்விந்த் இப்போது முழுமையாக ப்ரியாவை காதலிக்க தொடங்கி விட்டான்.ஏன் அவள் ஒரு வேலை கௌசிக்கின் காதலுக்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும் யாருக்கும் தெரியாமல் தன் காதலை ஒரு தலை ராகமாகவே வைத்திருக்க அந்த ஒரு சில நொடிகளில் முடிவு செய்துவிட்டான்.
அர்விந்தின் மூளைக்குள்
"ஓ காதலின் அவஸ்தை
எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஓ அமிலம் அருந்திவிட்டேன்"
இந்த பாடல் வரிகள் ஓட அவனை ..கண்டு கொண்ட ப்ரியா
"ஹேய் அர்விந்த் என்ன இங்கயே நின்னுட்டிங்க "என்று கேட்க அவன் சுய நினைவுக்கு வந்தான்.
"அர்விந்த் இந்த பார்க் எவ்வளவு அழகா இருக்கில்ல.இங்க எல்லாமே இருக்கு,பெரிய பெரிய மரம்,சின்ன பசங்க விளையாட கிட்ஸ் ப்ளேயிங் ஏரியா ,அழகான பறவைங்க அப்புறமா இங்க பாரேன் ...பளைட்டெல்லாம் வெச்சிருக்கானுங்க.பேமிலியா வந்து எஞ்சாய் பன்ன சூப்பர் இடம்.ஒரு நளைக்கு அம்மாவையும் நிஷாவையும் சேர்த்து கூட்டி வந்து இங்க டைம் ஸ்பென்ட் பன்னனும் "என்று தன்னிலை மறந்து அந்த பார்க்கின் அழகில் லயித்திருந்த பரியாவின் கடைசி வார்த்தை, அவன் மூச்சே நின்று விடும் அளவுக்கு சந்தோசதை ஏற்படுத்தியது.
அப்போ ப்ரியா என்னையும்,நிஷாவையும் அவள் குடும்பமாக பார்க்கிறாள்.அப்படின்னா.....ஹைய்ய்யோ என்று அவன் மணம் கூக்குரல் இட்டது.
இவர்கள் இருவரும் வெகு நேரம் எதுவும் பேசிக்கொள்ளாமல் விளையாடும் பறவைகளை ரசித்துகொன்டிருக்க சூரியன் அஸ்த்தமனமாக தொடங்கியது.அந்த இடத்தின் குளிர் இன்னும் அதிகமாக ப்ரியாவுக்கு உடல் நடுங்க தொடங்கியது.அவளின் உடள் நடுங்குவதை கண்ட அர்விந்த் உடனே தான் அணிந்திருந்த ஜாக்கட்டை கழட்டி அவளுக்கு போர்த்தி விட்டான்.அவளும் எதுவும் கூறாமல் இருந்தவள் இப்போது அர்விந்திற்கு நெருக்கமாக அமர்ந்து அவன் தோலில் பட்டும் படாமலும் சாய்ந்து
"வாழ்க்கை பூரா சாய்ந்திருக்க இப்படி ஒரு தோல் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்ல .ஹ்ம்ம் மைதிலி கொடுத்து வெச்சவ "என்றவளை பார்த்தவனுக்கு ப்ரியாவும் தன்னை காதலிக்க தொடங்கிவிட்டால் என்று புரிந்தது.என்ன இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை.
இருவரும் பர்க்கை விட்டு டாக்சியில் ஏற அது ஒரு தமிழரின் டாக்சி என்பதால் வண்டியில்
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்
கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பொய் பூட்டு போனது
வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே
இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்
இன்றேனே நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே
பாடல் செல்ல இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொன்டனர்.ஹோட்டலை அடையும் வரை எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.
ரூமிற்கு வந்த அர்விந்திற்கோ நிலைகொள்ளவில்லை.யாரிடமாவது இதை சொல்ல வேண்டும் என்று மனது சொல்ல ஆனால் புத்தியோ கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி கூறியது.ஏனென்றால் இன்னும் ப்ரியா தன் காதலை வாய்விட்டு கூறாததால்.புத்தியா மனதா என்ற போட்டியில் கடைசியில் மனது வெற்றிகொள்ள சங்கீதாவுக்கு போனை எடுத்து டயல் செய்ய தொடங்கினான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro