13
போகும் வழியெங்கும் ரேனு எதுவுமே சுரேஷிடம் பேசவில்லை.அவளின் வீட்டை அடைந்ததும் சுரேஷிற்கு சிறியதொரு ஆச்சரியம்.ரேனுவின் வீடு ஒரு சிறிய பங்களா போல இருந்தது.வீட்டில் இரண்டு கார்கள் வேறு நின்றுகொண்டிருந்தது.ரேனு நல்ல வசதியான வீட்டு பெண்ணாக இருந்தும் ஏன் ரிசப்சனிஸ்ட்டாக ப்ரியாவின் ஆபீசில் வேலை செய்கிறாள் என்று யோசித்தவனை ரேனு "உள்ள வாங்க சுரேஷ்.ஒரு கப் காபி சாப்டு போங்க" என்றாள்.
"இல்ல ரேனு அங்க சங்கீதா வெயிட் பன்னுவா.நான் இன்னொரு நாளைக்கு வருகிறேன்" என்று கூறி ஹாஸ்பிடல் நோக்கி பயனமானான் சுரேஷ்.
வீட்டிற்குள் வந்த ரேனு நேரடியாக அப்பாவிடம் சென்று "அப்பா நான் தனியா பிஸ்னஸ் பன்னலாம்னு இருக்கன்.லைக் கிண்டர்கார்டன். சைல்ட் கெயார் மாதிரி" என்றாள்.
பார்ட்டிக்கு சென்று திரும்பியவள் உடை கூட மாற்றாமல் தனியா தொழில் தொடங்க போவதாக கூறியவளை அவளின் தந்தை பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக "எப்போமா ஸ்டார்ட் பன்னனும் சொல்லு.பன்னிடலாம்.ஸ்டாப் எல்லாம் எப்டி நீயே பார்த்துக்குறியா இல்லன்னா எனக்கு தெரிஞ்ச ரெக்ரூட்மண்ட் கம்பனி இருக்கு அவங்க கிட்ட சொல்வமா "என்றார்.அவள் பதில் ஏதும் கூறாமல் அறைக்குள் சென்று விட்டால்.
ரேனுவின் இந்த நடவடிக்கை வாசகர்களுக்கு புதிதாக இருந்தாலும் அவளின் தந்தைக்கு பழக்கமான ஒன்று .அவள் எப்போதும் முடிவொன்றை எடுத்தால் அது எந்த நேரமானாலும் சரி, எந்த நிலையில் இருந்தாலும் சரி அவளின் தந்தையிடம் கூறிவிட்டுதான் மற்றவேலை பார்ப்பாள்.கொஞ்சம் பிடிவாதக்காரி. அவளின் தந்தைக்கே இரண்டு கிரனைட் கம்பனிகள் இருக்க அவளோ ப்ரியாவின் கம்பனியில் ரிசப்னிஸ்ட்டாகத்தான் வேலை செய்வேன் என்று அடம்பிடித்து சேர்ந்துகொண்டால்.அவளின் என்னம் உலகிலேயே மிகவும் கஷ்டமான வேலை ரிசப்சனிஸ்ட் வேலை என்பது.ஏனென்றால் அவர்கள்தான் எப்போதும் எந்த நிலையிலும் முகம் சுளிக்காமல் வேலை செய்ய வேண்டும்.அந்த சவாலை எதிர்கொள்ள விரும்பியே அவள் அந்த ஜாப்பில் சேர்ந்தாள்.அவளின் தந்தை அவளை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை.காரணம் அவள் சிறு வயதில் இருந்தே எது செய்தாலும் தவறு ஏதும் நிகழாமல் சரியாக திட்டமிட்டு செய்யக்கூடியவள் என்பதாள்.
நாம் ரேனுவை பற்றிய அறிமுகம் பார்க்கும் நேரத்தில் அங்கு ஹாஸ்பிட்டலில் ப்ரியா நித்திரா தேவியின் ஆளுகைக்குள் சரணடைந்து இருந்தாள்.அவள் நெஞ்சிலேயே நிஷாவும் தூங்கிவிட்டாள்.இருவரும் தூங்குவதை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்த அர்விந்திடம் சங்கீதா,
"ச்ச்சே நான் இப்டி ஆகும்னு கொஞ்சம் கூட நினைக்கல்லடா.ப்ரியாவை இப்டி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றாள்.
"எல்லாம் விதி சங்கீதா.நம்ம கைல என்ன இருக்கு.ஆன அங்க நிஷாவ பாரு எவ்லோ ரிலாக்ஸ்ட்டா தூங்குரா.அவ இப்படி அன்கம்பர்டப்ளா தூங்கவே மாட்டா.ஆனா ப்ரியா கூட எப்டி கம்பர்டப்லா இருக்கா.இதுக்கு அவ இன்னைகுத்தான் அவள பார்த்தா.ஆனா ஏதோ பல நாள் பழகினமாதிரி தூங்குரா பாரு "என்று இதழில் புன்னகை விரிய கூறினான்.
"இல்ல அர்விந்த்.அவளுக்கு அம்மா இல்லாத குறை இப்பதான் விளங்குது.நீ கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பன்னிக்கனும்.ஏன்னா உனக்கு வேண்டாம்னாலும் நிஷாவுக்கு அம்மா கண்டிப்பா வேனும்" என்று கூறிய சங்கீதாவை கேள்வியோடு ஏறிட்டவன்
"என்ன சொல்ர சங்கீதா .என் வாழ்க்கைல இனி நிஷா மட்டும்தான்.இன்னொன்னு நான் இன்னொருத்திய நிஷாக்காக முடிச்சாலும் அவ நிஷாவ அம்மா மாதிரி பார்த்துக்குவான்னு எப்படி சொல்ரது.நான் இப்போ விடோவர் .எனக்கு யாரு பொண்ணு கொடுக்க போறா.என் பொண்ணுக்கு சித்தி கொடுமை எல்லாம வேனாம்" என்றான்.ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் உள்ளத்தில் இருந்து வந்தவை அல்ல என்று சங்கீதாவுக்கு தெரியும்.
"அர்விந்த் உன்ன ,மைதிலிய,நிஷாவ தெரிஞ்ச ஒருத்தின்னா எந்த பிரச்சினையும் இல்ல தானே"
"அப்டி யாரு வரப்போறா." என்று கேள்வியாக பார்த்தவனை
"எல்லாம் யாரு.இவ தான் "என்று ப்ரியாவை காட்டினாள் சங்கீதா.அர்விந்தோ
"வேனாம் சங்கீதா இந்த விளையாட்டு.நான் ஒரு செகண்ட் ஹேண்ட்.அவ என்னை கல்யானம் முடிச்சி இரண்டாம் தார என்ற பெயர் வேணாம்" என்றவனை
"லூசாடா நீ.எனக்கு நல்லா தெரியும்.நீ அவள விரும்புறன்னு.அவளுக்கும் உன்மேல விருப்பம் இருக்குன்னு இன்னைக்கு பார்ட்டில நல்லாவே தெரிஞ்சது.நீ அவள பார்த்து பாடினதும் அதுக்கு அவ வெட்கப்பட்டு அசடு வழிஞ்சதும் எல்லாம் பார்த்துக்கிட்டுதான் இருந்தேன்.இப்ப பாரு,நிஷாவ யார்கிட்டயும் கொடுக்க மாட்டேன்னு எவ்லோ அடம் பிடிச்சா.இதுல இருந்து விளங்கல்ல அவ நிஷா மேல எவ்லோ அன்பா இருக்கான்னு.சரி உனக்கு கஷ்டம்னா........உனக்கு இதுல கஷ்டம் இருக்காதுன்னு தெரியும் சோ நான் பேசுறேன் அவகிட்ட" என்றாள்.
"இல்ல நீ இதுல இன்வால்வ் ஆக வேனாம்.எனக்கு அவ மேல ஒரு பிடிப்பு வந்தது என்னமோ உண்மைதான்.நான் கொஞ்சம் யோசிக்கனும்.இது மூனு பேரு பற்றிய விசயம்.நான் யோசிச்சு எதுவா இருந்தாலும் ப்ரியா கிட்ட பேசுறேன்,தயவு செஞ்சு அதுவரைக்கும் நீ கொஞ்சம் அமைதியா இரு ப்ளீஸ்"என்றால்.
உடனே சங்கீதா குறும்புடன் "மாப்பு உனக்கு மூனு மாசம் டைம் தாரேன்,நீ அவகிட்ட பேசுற.இல்ல அதுக்கு பிறகு நடக்குறதுக்கு நான் பொறுப்பில்ல." என்றவளை
"சரிடி சரி"என்று புன்னகையுடன் கூறி நிஷாவை ப்ரியாவிடம் இருந்து விளக்கி தனியாக தூங்கவைத்தான்.அன்றைய இரவு அர்விந்தும்,சங்கீதாவும் ஹாஸ்பிடல்லயே தங்க சுரேஷ் வீடு சென்று சங்கீதாவின் நைட் டிறஸ் ஒன்றை எடுத்து வந்து .சங்கீதாவிடம் கொடுத்தான். அவள் ப்ரியாவின் இரத்தக்கறை பட்ட சாரியை நீக்கி விட்டு மாற்றுடைய அணிவித்து ப்ரியாவுடன் அவள் அறைக்குள் தூங்க அர்விந்தோ ரிசப்சனில் கண்மூடி அமந்திருந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro