Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் 43

43
அந்த டான்ஸ் அகாடமி ல இருந்த எல்லோருடைய கண்களையும் எங்கும் நகர விடாமல் கட்டி போட்டு இருந்து அந்த மஞ்சள் பைங்கிளியின் நடன அசைவுகள் .( வாங்க நமலும் அது யாருனு போய் பார்க்கலாம்.அட திருப்பி இருக்கவும் முகம் தெரியல இருங்க சுத்தி போய் பார்க்கலாம்....அதுக்கு அவசியமே இல்லாமல் அந்த நங்கை திரும்ப நீங்க நினைச்சு சரி தான் அது சாட்சாத் நம்ம நிவியே தான்.)

 எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
புடிச்ச அப்புறம் காதலிக்கணும்
முத்தம் குடுத்து காலம்பூராம்
அணைச்சிக்கணும் என் ஆசை அவள...

நிவி போன் விடாமல் தன் இருப்பை உணர்த்தி விட்டு முடியாமல் தன் மூச்சை விட்டது.  .ஹே நிவி your phone is ringing . நிவி ப்ரெண்ட் சொல்லவும் கதக் அடி முடித்த  நிவி  போனை எடுத்து பார்க்க அஜய்யிடம் இருந்து வந்த தவறிய அழைப்புகள் இருக்கவும் அஜேய்க்கு  திரும்பி கால் செய்தால் .

ஹலோ ...நிவி சொன்ன உடனே...

உனக்கு கொஞ்சம் மாச்சும் அறிவு இருக்க எத்தன முறை கால் பண்ணி இருக்கேன் ஒரு முறை கூட அட்டெண்ட் பண்ண முடியாம அப்படி என்ன  கிழிச்சிட்ட இருந்த.அஜய் பொரியவும்.... சீனியர் குல்... குல்... ஏன் இவளோ டென்ஷன் நான் என்ன சின்ன பிள்ளையா தொலைஞ்சு போக.... ஆமா ஆமா நீ சின்ன பிள்ளை எல்லாம் ஒண்ணும் இல்ல...நீ இந்த ஊரையே தொலைசிட்டு தான் மரு வேலையே பார்ப்ப.சரி அதை விடு நீ எப்போ வருவ....

Oh சாரி சீனியர் இன்னும் ஒரு 15 மின்ஸ் வந்துறுவென் உங்க கார் ah அந்த காஃபி ஷாப் பக்கத்துல நிறுத்தி விட்டு போங்க நான் வந்துறேன்...நிவி சொல்லவும்
இல்ல நான் வெயிட் பண்ணுறேன் நீ வா....அஜய் மறுக்கிறான்.

(ஐயோ இந்த அஜு லூசு வேற நிலைமை புரியாமல் பேசுது...)நிவி புலம்ப...

இப்போ ஏதாவது சொன்னிய ....நிவி....

eeeee ...இல்ல சீனியர்...

Oh.... சரி சிக்கரம் வா....அஜய் சொல்லிவிட்டு phone கட் செய்கிறான்.கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணி பார்த்த அஜய் மீண்டும் நிவிக்கு கால் செய்ய....ஹலோ இன்னும் எவ்ளோ நேரம் நிவி வெயிட் பண்ண....

Oh... சாரி சாரி சீனியர் , நீங்க உள்ள போய் ஒரு காஃபி ஆர்டர் பண்ணி சாப்பிடு இருங்க .... நீங்க சாப்பிடு முடிக்கும் முன்னாடி நான் வந்துரேன்.

What....

No சீனியர் .... நீங்க போங்க நான் வந்துறேண் pls....நிவி அஜெயின முக அசைவுகளை மறைந்து நின்னு கவனிசிட்டு பேசுகிறாள்....

சரி இன்னும் பத்து நிமிடம் தான் இருப்பேன் நீ வரல நான் கிளம்பி போயருவென்....அஜய் பேசிவிட்டு உள்ளே போகிறான்.

டேய் மெக்கானிக் நீ என்ன பண்ணுற இந்த பென்டிரைவ் ல இருக்க விஷயம் அந்த கார் ஸ்டார்ட் ஆனதும் play ஆகனும் இல்ல ....

என்ன நிவி ....என் வொர்க் பத்தி தெரியும் ல  நீ போய் உன் அளு கூட காஃபி குடி நீ சொன்ன பிளானை நான் அருமையா எக்ஸிக்யூட் பண்ணுறேன்.

மவனே இப்படி பேசி ஏதாவது சொதப்பி வை உனக்கு இருக்கு .சொல்லிவிட்டு அஜெய்யை பார்க்க போகிறாள் நிவி.

ஹாய் சீனியர்....

ஹாய் நிவி...
நிவி வந்த கொஞ்ச நேரத்துல அஜய் ஆர்டர் பண்ணிய காஃபி வரவும் அஜய்யும் நிவியும் அமைதியா பார்த்து கொண்டே இருக்க நிவி தான் அந்த மௌனத்தை களைத்தால் .சீனியர் இப்படி காஃபி முஞ்சியை பார்த்துகிட்டு இருந்த அது ஆரி போய்ரும் காஃபி குடிங்க ஒரு கப் எடுத்து நிட்டவும் அதை அமைதியா வாங்கி கொண்டு யோசினையாய் நிவியை பார்க்க அவளோ அந்த காஃபியை மிடறு மிடராய் ருசித்து அருந்தவும் அவளை ரசனையாய் ரசித்தான் அவன்.அவன் ரசனை பார்வை அவளை துளைக்க கூச்சம் தாங்காமல் அவனை பார்க்கவும் அவன் பார்வையை தாழ்த்தி காஃபியை பருகினான்.காஃபி தீர்ந்தும் கூட அங்கு உள்ள மௌனம் தீராமல் இருக்க அதை முதலில் கலைத்தது அஜய் தான்.
சொல்ல நிவி என்ன பேசணும் வர சொன்ன...

ஹான்....அ....து ......ஒண்ணும் இல்ல... அப்போ நிவி போன் msg ஒலிக்க அதில் சக்சஸ் வரவும் ....சந்தோசம் ஆன நிவி ஏதோ சொல்ல வர அது புரியாமல் அஜய் மன்னிப்பு கேட்கவும் இப்போ குழம்புவது நிவியின் முறை ஆனது.

நிவி என்னை மன்னிச்சிடு அஜய் நிவி கையை பிடித்து சொல்லவும் அதிர்ச்சி கலந்த ஆச்சிரியத்தோட  அவனை பார்க்கிறாள். மேலும் அவனே தொடர்கிறான்."நிவி நான் இப்போ சொல்ல போறது உன்னை ரெம்ப கஷ்ட படுத்தும் ஆனால் நான் இதை இப்போ சொல்லாமல் விட்டா குற்றணர்ச்சி என்னை கொன்னுறும் சொல்லும்போதே தொண்டை அடைக்க பக்கத்தில் இருந்த தண்ணீர் குடிச்சுதன்னை சீர்ப்படுத்தி கொண்டு மீண்டும் பேசுகிறான்.
"நான் உன்கிட்ட புரோபோஸ் பண்ணும் போது உன்னை உண்மையா லவ் பண்ணலை ஆக்ச்சுவலி நான் ஸ்ரீயை பழிவாங்கதான் உன்னை லவ் பண்ணுற மாறி நடிச்சேன்" அஜய் சொன்ன மறுநொடி நிவிக்கு அதிர்ச்சியில் பேச்சற்று அமர்ந்து இருக்க, அவனே தொடர்ந்தான்.
"நிவி உனக்கு தெரியுமா தெரியாத எனக்கு தெரியல நான் முதல உங்க அண்ணி ஸ்ரீயை லவ் பண்ணுனேன் .அது காதல் கூட இல்ல இப்போ தான் நான் ரியல்லைஸ் பண்ணினேன்,ஸ்ரீ என்னை என் அம்மா மாறி பார்த்துகவும் அவளை என்கூட கடைசிவரையும் இருக்கனும் நினைத்து அவளை என்னை கல்யாணம் பண்னிக்க சொல்லி நிறையா டார்ச்சர் கொடுத்தேன். என் டார்ச்சர் தாங்க முடியாமா அவளும் அதுக்கு ஒத்துகிட்டா அவங்க அக்கா கல்யாணம் முடிந்ததும் அவங்க வீட்டுல பேசுறேன் சொல்லிட்டுதான் ஊருக்கு போனால் ஆனால் திரும்பிவரும்போது திருமதி. உதய்கிருஷ்ணன் வந்தாள்.எனக்கு அது எவ்ளோ பெரிய ஏமாற்றம் கொடுத்துநு உனக்கு தெரியாது நிவி. நான் அப்போ ரொம்ப உடைந்து போட்டேன் எனக்கு எனக்கு ஸ்ரீயை பழிவாங்கணும் வெறிதான் இருந்துச்சு. அப்போ தான் எனக்கு உன்னை பத்தி தெரிந்தது, உன்னை வச்சதான் அவளை பழிவாங்க திட்டம் போட்டோம். அதுனால தான் உன்னை லவ் பண்ணுரேன் சொன்னேன்.இப்போ தான் எனக்கு புரிந்தது என்னோட சுயநலத்துக்காக உன் லைஃப் ஸ்பாய்ல் பண்ணுறேன் தோணுச்சு அதான் இப்போ உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்லி நீ கொடுக்குற தண்டனையை ஏத்துகிறேன் தயவு செஞ்சு என்னை மன்னிச்சிரு தான் சொல்ல வேண்டியது அவளோ தான் என்பது போல் அஜய் அமைதியாக இருக்க.நிவியோ அஜய் சொன்னது ஏதும் ஏர்த்துகொள்ள முடியாமல் சிலை போல் அமர்ந்து இருக்க. அஜய்  தான் தன்னொட பழிவாங்கும் உணர்ச்சியில் நிவியோடா உணர்ச்சிகளை கொன்று விட்டு என்னோதொடு தலை குனிந்து இருக்கிறான்.

அஜய்யின் குற்ற உணர்ச்சி புரிந்து போல தன்னை மனதை சமம் செய்துகொண்ட நிவி சிரித்த முகத்துடன் "பரவலா விடுங்க சீனியர் இப்போதவது  இதை சொன்னீங்கலே . நான் கூட இதை  தான் உங்க கிட்ட சொல்லணும் வந்தேன் .உங்களுக்கும் எனக்கும் லவ் எல்லாம் செட் ஆகாது  அண்ட் என்னோட ட்ரீம்க்கு லவ் மேரேஜ் எல்லாம் செட் ஆகாது சிரித்த முகத்துடன் சொல்ல நினைத்தும்  குரல் கலங்கி  இருந்தது சமாளித்து கொண்டு சரி சீனியர் டைம் ஆச்சு நான் கிளம்புறேன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு போகிறாள்....இவை அனைத்தும் அஜய் ஒரு கனத்த மனதுடன் பார்த்து கொண்டே நிற்கிறான்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நிவி என்ன தான் தைரியமாக பேசிவிட்டு வந்தாலும்.அவள் இந்த கொஞ்ச நாளில் அஜய்யின் மீது அளவற்ற நேசம் கொண்டுவிட்டால்,அதனை இன்று அவனிடம் சொல்லிவிடும் எண்ணத்தில் தான் அஜய்யை டான்ஸ் அகாடமிக்கு வர சொன்னதே ஆனால் இங்கு அவள் நினத்த்து நேர்மாறாக எல்லாம் நடக்க அவள் மனம் உடைந்து தான் உண்மை.ஏமாற்றமே இன்று வரை சந்த்திராத வாழ்வில் தன் முதல் காதலே தோல்வி என்பது நிவிக்கு பெரிய அடி தான், மனம் முழுக்க சஞ்சலம் இருந்தாள் அஜய்க்கு தான் மனதை வெளிப்படுத்த செய்து வைத்த சர்ப்ரைஸ் பிளான் பற்றி நிவி மறந்தே போய்யிருந்தாள்.

  அதேநேரம் நிவியின் கண்ணீர் தடம் கண்டு கலங்கிபோய் இருந்த அஜய் வீட்டுக்கு செல்ல மனம் இல்லமல் காரை மருதமலை செல்லும் சாலையில் செலுத்த, ஸ்டார்ட் செய்கிறான்."ஸ்டாரட் செஞ்சதும் அந்த பென்டிரைவ் ல இருந்து மெல்லிய புல்லாங்குழல் இசை அந்த இடம் முழுவதும் பரவ அந்த இசையின் பிடியில் அஜெய்யின் மனம் லயித்து காரை செலுத்திகொண்டு கொண்டிருக்கிறான்,"ஹாய் அஜு..."திடீர்னு நிவியின் குரல் கேட்கவும் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான் அஜய் கார்க்குள் சுத்தி சுத்திபார்க்கவும் நிவியின் குரல் மறுபடியும் கேட்டது.

"அஜூ... நிறுத்து அஜு... சுத்தி சுத்தி பார்த்த உன் கழுத்து தான் வலிக்கும்.
நான் அங்க எல்லாம் இருக்க மாட்டேன்.நிவியின் குரல் எங்கு இருந்து வருகிறது என்று அஜய் தேட...

மண்டு அஜு...இன்னும் மா என் குரல் எங்க இருந்து வருது கண்டுபிடிக்கவில்லை சொல்லிட்டு நிவி சிரிக்கவும் அஜய் பார்வை அந்த  music system மேல் பதிந்தது அதில் இருந்த பென்டிரைவ் புதுசா இருக்கவும் அதை எடுக்க போக....

ஹான்...ஹான்...நோ அஜூ அதை எடுத்த நான் பேசுறது எப்டி கேட்ப நிவியின் குரல் சொல்லவும் அமைதியா அந்த music system பார்த்து கொண்டு இருந்தான் அஜய்.

ம்ம்... இப்டி தான் குட் பாய் ய இருக்கணும் .நீ என் மேல கோவமா இருப்பணு எனக்கு தெரியும் அஜு.என்ன டா இவ பேசணும் வா கூப்பிட்டு ஒன்னும் பேசாமல் வந்துட்டா நீ செம கோவதுல இருப்ப எனக்கு தெரியும் நான் என்ன பண்ணட்டும் செல்லம் உன்னை பார்த்தும் எனக்கு பேச்சேவரவில்லை... அதான் என் மனசுல இருக்கிறது எல்லாம் இந்த பென்டிரைவ் ல சொல்லி இருக்கேன் நிவி வாய்ஸ் சொல்லிவிட்டு ஆஃப் ஆகவும் இதை எல்லாம் முகத்தில் ஒரு மெண்ணகையுடன் கேட்டு கொண்டு இருந்த அஜய் பதரி க்கொண்டு music systemmai மறுபடியும் on செய்ய போக ஏய் எருமை சீனியர் இப்போ தானே என் மனசுல இருபது எல்லாம் சொல்ல போறேன் சொன்னே. அதுக்குள்ள ஆஃப் பண்ண வர போ பொய் உன் இடதுல உக்கரணும் நிவி அதட்டவும் அஜய் பழைய படி அமர்ந்து விட்டான்.

அஜூ உனக்கு தெரியுமா தெரியலையா எனக்கு தெரியல ஆனால் 1st day உன் மேல காஃபி கொட்டிடு நீ என்னை திட்டுன பாரு அப்போவே நீ என்னை சலன படுத்திட்ட போல ,   இல்லனா நான் ஏன்? வினெய் அண்ணா கிட்ட உன்னை பத்தி யேன் எதும் சொல்ல...நீ திட்டுனதே நினைச்சிட்டு இருந்தேன் நிவி சொல்லவும் அன்னிக்கு நிவியை திட்டிவிட்டு அவள் நினைவில் தூங்கியது அஜய்க்கும் நினைவு வந்தது . அப்ரோம் எங்க அண்ணிகிட்ட என்னை போட்டு கொடுறப்ப வந்தது போட்டு கொடுக்காமல் போனது .அந்த பசங்க என்னை கிண்டல் பண்ணும் பொது நீ வந்து தட்டி கேட்டு என்னை திட்டுணது எல்லாம் உன்னை நோக்கி என்னை இளுதுகிட்டு வந்துருச்சு ,ஆனால் நானே எதிர் பார்க்காத விஷயம் நான் ஷிவானி கூட சேர்ந்து வொர்க் பண்ணினது தான். அப்போ அப்போ நீ என்னை சண்டகொழி கூப்பிடுறது இது எல்லாம் நான் ரொம்ப like பண்ணுனேன் அஜு, பட் எனக்கே ஷாக்கிங் கொடுத்தது உன்னோட புரோப்போசல் தான்....எவ்ளோ தைரியம் செல்லம் உனக்கு என் கைய பிடிச்சு ரிங் வேற போட்டு விடுற எங்க அம்மா எவ்ளோ கேள்வி கேட்டாங்க தெரியுமா... ஃபிராடு அஜு.

அப்ரம்  நீ என் அண்ணிய லவ் pannuren சுத்துணது எனக்கு தெரியும் அஜூ. பிரன்ட்ஸ் சொன்னங்க

இது பத்தி நீ என்கிட்ட சொல்லனு நினச்சு ஃபீல் பண்ணாத அஜு அது உனக்கு லவ் இல்லனு நினைக்கிறேன் இல்லனா இவளோ சிக்கரமா இன்னொரு பொண்ணை உன் மனசு ஏத்துகாது.சோ என்ன செய்ற சிக்கரம் எங்க v2ல வந்து பொண்ணு கேட்டு என்னை உன்கூட கூட்டி போ அஜூ  அதுக்காக நான் வெயிட்டிங் அஜு பேபி லவ் யூ.... உம்மாஅஅஅஅஅஅஅஅ ........நிவி தான் புரோப்போசலை முடிக்க அந்த பென்டிரைவ் ல இருந்து மறுபடியும் புல்லாங்குழல் இசை அந்த காரை நிறைக்க ஆரம்பிக்குது.

நிவியின் பேச்சை கேட்ட அஜய் சிலையாகி போனான்.கார் ஜன்னல் கதவை யாரோ தட்டவும் நினைவு வந்து கதவை திறந்தான் . ட்ராஃபிக் போலீஸ் அவனை கீழே இறங்க சொல்லவும் இறங்கியவன் ஒரு நிமிடம் ஆடிதான் போனான்.மருதமலை ரோட் ட்ராஃபிக் ஆ இருக்கவும் என்ன என்று பார்க்க ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் இவனை திட்டி கொண்டு இருந்தார்.

நிவியின் காதல் ஜெயிக்குமா?

நிவியின் காதல் தெரிந்த பிறகு அஜய் என்ன முடிவு எடுப்பான்?

Next ud la solluren....

Tata take care bye

Thanks for your votes...

🌟🌟 Apdiye intha button press pannitu ponga frnds

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro