Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் 39

39
ஒரு வாரம் கடந்த நிலையில்  அஜயக்கு உடல்நிலை கொஞ்சம் தேர...ஸ்ரீ கூட பேசணும் அவளுக்கு போன் டிரை பண்ணுன எங்கேஜ் டோன் மட்டுமே கேட்க.....ஒரு வேளை எனக்கு உடம்பு முடியலனு ஸ்ரீ க்கு தெரியல போல ... அதான் என்னை பார்க்க வரல....அவ வரலான என்ன நாம போய் பார்ப்போம் ....சொல்லிட்டு அஜய் கிளம்பி  காலேஜ் வருகிறான்.அன்று தான் செமினார் அட்டென் செய்ய ஸ்ரீயும் சுஜாவும் மட்டும் கோவை மாநகரை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.

ஏன் ஸ்ரீ இந்த செமினார் அபியும் நீயும் போறத இருந்துச்சு அப்புரம் அவள் ஏன் வரல சுஜா கேள்வி கணை தொடுக்க.... பின்னால் போகும் மரங்களை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்த ஸ்ரீ....இவள் கேள்வியில் தன்னிலை அடைய....அது ஒன்னும் இல்ல சுஜா அவ அண்ணாக்கு வருஷ சாமி கும்பிடவேண்டும் அவ சித்தப்பா கூட்டி போய்ட்டார் அதான் நெக்ஸ்ட் லெவல் ல இருக்க உன்னை கூட இந்த செமினார் அட்டெண்ட் பண்ண சொன்னாங்க hod  மேம்.

ஹ்ம்ம் சரி டி... இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்.....இன்னும் கொஞ்ச நேரத்துல போய்விடலாம்.ஸ்ரீ பதில் சொல்லிவிட்டு மறுபடியும் அவளை கடந்து சென்ற மரங்கள் மேல் கண் பதித்தாள்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஸ்ரீயை வழக்கமான இடங்களில்  தேடிய அஜய் அங்கே ஸ்ரீ இல்லாமல் போகவும் நேர கிளாஸ்க்கு  வர அபியும் ஸ்ரீ யும் வாரமல் சோகமா இருந்த ரீமாவை பார்த்தும் உற்சாகமான அஜய் ரிமாவை நோக்கி போக ரிமாவின் சோகமான முகம் கொஞ்சம் கலக்கம் கொடுத்தலும் அதை காட்டி கொள்ளாமல். ஹாய் ரீ....என்ன நீ மட்டும் இருக்க ஸ்ரீ வரல என்று அஜய் கேட்க....சோக கடலில் முழ்கிய ரீமா வந்தது யார் என்று பார்க்காமல் "அதன் ஏன்பா கேக்குற....இவங்க ரெண்டு பேரும் செமினார் போன நான் ஜாலி யா ஊரு சுத்தலம்னு பிளான் போட்ட இவலுங்க ரெண்டு பேரும் என் பிளான் ல ஒரு லோட் மண்ணு அள்ளி கொட்டிடாங்க...ரீமா புலம்பி கொண்டு அஜய் முகத்தை பார்க்க....அவள் புலம்பல் நின்று கோவம் கொண்டு...அஜய்யை முறைத்துவிட்டு வெளியே செல்ல....அஜய் தான் ரீமாவின் செய்யலுக்கு அர்த்தம் புரியாமல் அவளை அழைத்து கொண்டே பின் சென்றான் .

ஹே.... ரீ....இப்போ எதுக்கு கோவம் முகத்தை திருப்பிக்கொண்டு போற....நீ போறதுன கூட போ...ஆனால் ஸ்ரீ எங்கனு மட்டும் சொல்லிட்டு போணு அஜய் கத்த....கோவமா திரும்பிய ரீமா....ஏன் அவ போன எடத்துலையும் அவமான படனுமா ரீமாவும் பதிலுக்கு கத்த....இதில் இன்னும் குழம்பி போன அஜய் ரீமா கையை பிடித்து நிறுத்தி....ஸ்ரீ எங்க யாருகிட்ட அவமான பட்ட....தெளிவா சொல்லுன்னு அடக்க பட்ட கோவத்துல கேட்ட....அவன் பேச்சில் உள்ள கோவம் ரீமா உணர்த்தலும் அவனால் தான் ஸ்ரீ அவன் அப்பாவிடம் அவமான பட்ட நியபகம் வர....அவன் கையை உதறி விட்டு....எது கேக்கணும் நினைச்சாலும் போய் உங்க அப்பாவை கேளு....சொல்லிட்டு ரீமா விடுவிடு என்று செல்கிறாள்.

அஜய்க்கு என்ன நடத்து என்று புரியாமல் குழப்துடன் வீட்டுக்கு வருகிறது...அவன் சோர்ந்து போய் வருவதை கண்ட ஷிவானி அவனுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு என்ன ஆச்சு அண்ணா ....ஏன் இப்படி சோர்ந்து போய் வந்து இருக்க அதுக்கு தான் இன்னும் கொஞ்ச நாள் சென்று காலேஜ் போலாம் சொன்னேன்...நீ தான் போறேன் தாண்டுடிட்டு இருந்த இப்போ பாரு எவ்ளோ சோர்ந்து போய் வந்து இருக்கனு ஷிவானி அங்கலத்து கொள்ள....இவன் இன்னும் குழப்ப மனநிலை இருக்க....அதற்கு அவனுக்கு காபி எடுத்துகிட்டு வள்ளி வரவும் அதை எடுத்து அஜய்க்கு கொடுத்தல் ஷிவானி....

வேன்னம் ஷிவமா..... நான் கொஞ்சம் நேரம் உன் மடில படுத்துக்கட்டும....இது என்ன அண்ணா கேள்வி படுத்துக்கோ.....அஜய் அவள் மடியில் படுத்து கொண்டு ஏன் ஷிவா நான் உடம்பு முடியாமல் இருக்கும் போது என்னை பார்க்க யாரும் வந்தங்களா....

ஹ்ம்ம் ........உன் ப்ரெண்ட்ஸ் அந்த 2 எருமையும் தானே வந்துச்சு....நீ கூட 3 மணி நேரம் கடலை வருத்தியே....ஹ்ம்ம் ஆமா....அவங்க இல்லாமல் வேற யாரும் வரலையா....
ஷிவானி அஜய் தலையை கோதி கொண்டே....என்ன பிரச்சனை அண்ணா....எதுக்கு நீ இது எல்லாம் கேக்குற.....அஜய்யும் ஸ்ரீ யை பார்த்தில் இருந்து காலை ரீ அவனிடம் நடந்து கொண்ட முறையும் சொல்லிவிட்டு ஷிவானி முகத்தை நோக்க....அதில் யோசனை ரேகை படர்ந்து இருக்க....என்ன ஷிவா என்ன யோசிக்கிற.....இல்ல அண்ணா அன்னிக்கு வள்ளி அக்கா என்கிட்ட உன்னை பார்க்க யாரோ ஒரு பொண்ணு வந்துதாங்க அப்புரம் ஏதும் சொல்லாம அப்பா வர்றது குள்ள போய்ட்டாங்க அப்டின்னு சொன்னாங்க.... அதான் அந்த பொன்ன இருக்குமான்னு யோசிக்குறேன்.....ஷிவா....அது கண்டிப்பா ஸ்ரீ தான்.... எனக்கு தெரியும்....எனக்கு கூட ஸ்ரீ பேசுன மறி எல்லாம் கேட்டுச்சு....அஜய் பதட்டமா சொல்லுகிறான்....

உஷ்.....அண்ணா எதுக்கு இவளோ பதட்டம்....சிசிடிவி புடேஜ் பார்த்த அன்னிக்கு வந்து யாருனு தெரிய போகுது வா முதல அதை போய் செக் பண்ணிவிட்டு என்ன பண்ணலாம் யோசிக்கலாம் சொல்லி விட்டு ஷிவானி லேப்டாப் எடுத்து வந்து ஸ்ரீ வந்த தேதியை பார்க்க ....அங்கே ஸ்ரீ வந்து வள்ளி இடம் பேசிவிட்டு அஜய் ரூம்க்கு போறேன் நு வெளியே நின்றது டாக்டர் வந்து மறுபடியும் கிழே வந்தது வள்ளி ஃபோனில் பேசியது அப்புறம் ஸ்ரீ பேசியது....ஸ்ரீ அழுது கொண்டே விட்டை விட்டு சென்றது என்ற காட்சிகள் திரையில் ஒளிர....அதை பார்த்த அஜய் ஒரு பக்கம் சந்தோஷமாக மறுபக்கம் குழப்பமாக shivaniyai பார்க்க....அவள் அஜையை பார்த்து விட்டு அண்ணா இன்னிக்கு அந்த பொண்ணு உன்கிட்ட சொன்னது ஸ்ரீ உன்னை கண்டாக்ட் பண்ணாம இருக்க அந்த போன் கால் தான் காரணம்....ஸ்ரீக்கு மனசு சங்கட படுர மாறி நம்ம வீட்டுல  தான் ஏதோ நடந்து இருக்கு....அதை முதல கண்டு பிடிக்ககணும்...இருங்க வள்ளியை அக்காவை கேட்போம் ....

வள்ளி அக்கா....வள்ளி அக்கா....இங்க கொஞ்சம் வாங்களேன்...

சொல்லு பாப்பா....

அக்கா அண்ணாக்கு உடம்பு முடியாத போது அண்ணாவை பார்க்க ஒரு பொண்ணு வந்துச்ச....

ஆமா பாப்பா....ஒரு பொண்ணும் வந்துச்சு நாம தம்பி கூட படிக்கிற பொண்ணுன்னு சொல்லுச்சு....அப்புரம் பெரிய ஐய்யா  போன் பேசும் போது நான் தான் அந்த பொண்ணு வந்ததை பத்தி சொன்னேன் ஐய்யா தான் அந்த பொண்ணு கிட்ட குடுக்க சொன்னாரு நான் போன் கொடுத்துட்டு அந்த பொண்ணுக்கு குடிக்க டீ எடுக்க போனேன் வந்து பார்த்த அந்த பொண்ணை கண்ணோம்...அப்புரம் ஐய்யா வரவும் நான் அதை மறந்து போய்ட்டேன்.வள்ளி அன்று நடத்தை கொர்வைய சொல்லி முடித்தாள்.

சரி அக்கா நீங்க போங்க நான் பார்துகுறேன் சொல்லிட்டு ஷிவானி வள்ளியை அனுப்பி வைத்தால்.சோ அண்ணா
அப்பா ஏதோ ஸ்ரீ மனசு புண்படும் படி சொல்லி இருக்காரு அதான் அவன் ரொம்ப ஹார்ட் ஆகி உன்னை அவாய்ட் பண்ணுற....இப்போ அப்பா தான் என்ன நடந்துச்சு சொல்லணும்.....வா போய் அப்பாவை பார்க்கலாம்.

அப்பா .....ரொம்ப பிஸியா அப்பா....

வாங்க டா ஏன் அங்கேயே நிக்குறிங்க.பிசி எல்லாம் இல்ல டா கொஞ்சம் அக்கவுண்ட் பார்க்கணும்....அப்புரம் பார்த்துகுறேன்...அண்ணனும் தங்கையும் வந்து இருகிங்க என்ன பிரச்சினை....

....

என்கிட்ட ஏதோ கேட்க வந்துட்டு இப்படி அமைதியா இருந்த என்ன அர்த்தம்.....அஜய் அப்பா அஜெய்யை பார்த்து கேட்கிறார்.

அப்பா எனக்கு ஒரு உண்மை தெரியணும்.... எனக்கு உடம்பு சரி இல்லாத போது என்னை பார்க்க என் ப்ரெண்ட் ஸ்ரீ கிட்ட என்ன சொன்னீங்க....அஜய் சந்தேகமா தான் கேள்வியை முன்வைக்க.... ஒரு நிமிஷம் பதட்ட பட்டலும் மறு நிமிடம் தன்னை சீர்செய்து கொண்டு யாரு அஜய் ஸ்ரீ உன்னை பார்க்க 2பசங்க தானே வந்தாங்க....இப்போ நீ என்னமோ புதுசா ஒரு பொண்ணு பெரை சொல்லுற அஜய் அப்பா கேள்வியை அவன் பக்கம் திருப்ப...அவன் என்னோட கிளாஸ் மேட் நீ அவ கிட்ட ஏதோ பேசி இருக்கீங்க அதான் அவ என்னை அவோய்டு பண்ணுற....சொல்லுங்க என்ன சொன்னிங்க அஜய் கத்தவும்....அண்ணா அண்ணா....பொறுமையா இரு....எதுக்கு யாரோ ஒரு பொண்ணுகாக  இப்போ எதுக்கு நம்ம அப்பா மேல கோவத்தை காட்டுற என்று ஷிவானி அவள் அப்பாவிற்கு பரிந்து பேசுகிறாள்.

ஹான் அப்படி கேளு மா ஷிவா....அவ எவ்ளோ பெரிய கைகாரி தெரியுமா ஷிவா அந்த  பொண்ணு பணத்துக்காக நம்ம அஜய்யை மயக்க பாக்குற இதை எப்படி ஷிவா நான் சும்மா விட முடியும்.  அதான் அந்த பொண்ணை நம்ம அஜய் விட்டு விலகி இருக்க சொன்னேன் அவளோ தான் டா...இதுக்கு போய் இந்த பையன் என்னையே கேள்வி கேட்கிறன் .உண்மையை சொல்லுரோம் புரியாமல் எல்லாத்தையும் அஜய் அப்பா சொல்ல அஜயும் ஷிவானியும் தன் அப்பா வா இப்படி நூ நம்பமுடியாமல் அவரை பார்த்து அஜய் பேச ஆரம்பிக்கிறான்.

அப்பா நீங்க நினைக்கிற மாறி ஸ்ரீ இல்ல அப்பா....அவ ரொம்ப நல்ல பொண்ணு பா......யாரோ ஏதோ சொன்னாங்க நு இப்படியா அந்த பொண்ணு மனசை இப்படியா காய படுதுவிங்க.நீங்க என்ன சொன்னீங்க கூட அவ என்கிட்ட சொல்ல அப்பா.ஆனால் நீங்க அவள என்னை மயக்க பாக்குற கைக்காரி சொல்லுறீங்க   உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர் பார்க்களை இப்போ சொல்லுறேன் நல்ல கேட்டுகொங்க ஆமா ஸ்ரீ என்னை மயக்கிட்ட தான் அது அவள் அன்பினால் மட்டும் தான்  நான் யார் பையன் என் ஃபேமிலி background  பத்தி ஏதும் அவளுக்கு தெரியாது அப்பா....ஆனால் நீங்க அவளை என்ன என்னமோ பேசிட்டிங்க அஜய் வெறுத்து போய் சொல்ல....

ஷிவானி அவன் தோளில் கையைப் வைத்து ஆறுதல் சொல்ல முனைய. அஜய் அப்பா அவன் தோளில் கை போட்டு கொண்டு.நீ அப்பா மேல கோவமா இருக்க இருந்தாலும் நான் சொல்லுறதை கேட்டு உன் முடிவை சொல்லு."அஜய் நான் முதல உங்க காலேஜ் ல சொன்ன போதும் கூட நம்பல பா. எனக்கு என் பையனை பத்தி தெரியும் நம்பிக்கையா இருந்தேன்.அப்புரம் உன் அக்கவுண்ட் ல இருந்து அடிக்கடி withdrawal  பண்ணுறத போன வாரம் நாம மனேஜர் கூட சொல்லிட்டு இருந்தார் .சரி உன்கிட்ட பேசிட்டு முடிவு பண்ணலாம்  யோசிச்சேன் அதுக்குள்ள இந்த பாரின் டீல்  வரவும் டீல் முடிச்சிட்டு வந்து பேசலாம் நினைச்சா உனக்கு காய்ச்சல் உன்னை பார்க்க ஒரு பொண்ணு வந்து இருக்குனு நம்ம வள்ளி சொன்ன.ஏற்கனவே அம்மாவை இழதிட்டு நீ படுற வேதனை எனக்கு தெரியும் இந்த பொண்ணு ஒரு வேளை மோசமான பொண்ண இருந்த அந்த ஏமாற்றததை உன்னால தாங்கிக்க முடியாது அதுக்கு தகுந்தாற் போல அந்த பொண்ணும் நீ மென்டல ஸ்ட்ரெஸ் அஹ் ஃபீல் பண்ணுற அப்டின்னு சொல்லுது. அதான் அந்த பொண்ணுக்கு உன் மேல உண்மையான காதல் இருக்க  இல்ல பணத்துக்காக உன் கிட்ட பழகுரள ஒரு சந்தேகம் இருந்துச்சு அதான் அப்படி பேசினேன். பரவால்லை அந்த பொண்ணு நான் சொன்ன வார்த்தையை மதிச்சு உன்கிட்ட பேசல ஏன் என்னை பத்தி கூட ஏதும் சொல்ல....அது மட்டும் இல்லாமல் நீயும் அந்த பொண்ணு மேல வைச்ச காதல் புரிகிறது. நான் பேசுனதுக்கு என் மருமகள் கிட்ட மன்னிப்பு வேற கேட்கணும் போய் இந்த வீட்டு மகாலட்சுமியை கூட்டிட்டு வா.அஜய் அப்பா தான் செயளுக்கு நியாயம் சொல்லி அஜய் காதலுக்கு சம்மதம் சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அஜய் தான் காதலை ஸ்ரீ இடம் சொல்லுவான....

ஒளி ஒளிரும்.....

Thanks for Ur votes and comments...

Ungaluku pidicha apdiye intah🌟button press pannitu ponga  frnds.....

Good night sweet dreams....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro