மருதாணி😍
அடிப்பெண்ணே😍😍மருதாணி,,
சிறுவயதில் இருந்தே நீ என் தோழி கொட்டாப்பாக்குடன் உன்னைவைத்து அம்மியில் அரைக்கும்😁😁போது, உன்னை கையில் வைக்கப்போகிறேன் என்று என்மனம் குத்தாட்டம் போடும்💃💃💃.
நான் வளர்ந்ததைப் போல் நாகரீகமும் வளர்ந்து உன் வடிவத்தை 'கோன்'ஆக மாற்றி விதவிதமான கோலங்களாக என்கையில் வந்தாயடி😍.
என் சந்தோச தருனங்களும், விடுமுறை நாட்களும் நீ இன்றி கழிந்ததே இல்லை😊😊.
உன்மேல் வீசும் வாசத்தை எங்கிருந்துதான் வாங்கினாயோ?? அனைத்து பெண்களையும் அதற்கு அடிமையாக்கவா வாங்கினாய்??
நானும் உனக்கு அடிமையடி😊.
உன்னை கைகளில் இட்டு, நீ சிவக்க ஆவலாய் சர்க்கரை நீரை தேய்ப்பேன். சிவந்த கைகளை அனைவரிடமும் காட்டி காட்டி மகிழ்வேன்😁, ஆனால் நீ அழியும்போது என் கையையே நான் வெறுத்தேன்👿.
ஒப்புக்கொள்கிரேன் நீ என்னைவீட கூச்சம் கொன்டவள் என்று.. என்னவன் என்கைகளில் உன்னை இடும்போது, என்முகம் சிவந்ததைவிட நீயே வழக்கத்திற்கு அதிகமாக சிவந்தாய்.
உன்மேல் சிறு கோவம் தான்👿👿எனக்கு👿,,,,,
நான் சிரமப்பட்டு என் முகத்தில்🙈🙈 மறைக்க நினைக்கும் என்நாணத்தை அனைவருக்கும் என் கை சிவப்பின் மூலம் திரையிட்டு காட்டிவிட்டாயே என்று!!!!!!!
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
மருதாணியை விரும்பும் அனைத்து மருதாணிப்பெண்களுக்கும் சமர்ப்பணம்.
நன்றி!
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Ethu oru ponnu maruthani kitta pesura feel aa base panni ezhuthunathu Ella girlsum epditha feel pandringala???😁😁 Maruthaninaa avla pudikkumaa ellarukku 😍?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro