அண்ணா - 3
தாயில்லை என்றழுததில்லை
தமயனே தாயாகிப்போக, அவனன்பில்
தத்தளித்துக் கொண்டிருந்தேன்...
சமைத்ததை எடுத்து உண்ணவும் தெரிந்ததில்லை..
சட்டையில் பட்டன்போடவும் அறிந்ததில்லை...
உணவூட்டி பள்ளிக்கு தயார் செய்தனுப்பியதும் அவனே...
என் தம்பி படிப்பிலும், சண்டையிலும் முதலென்று
தோளில் தூக்கி சுற்றியதும் அவனே..
ஒருகணத்தில் வாழ்வே மாறிப்போகலாம், என்பதை
ஒருகணத்தில் உணர்த்திப் போனவனும் அவனே...
யாரிடமும் அடிமையாக விரும்பாதது என்னியல்பு..
அன்பால் யாரிடமாவது அடிமையாக வேண்டும் என்பதே மனித இயல்பு....
தேவதையே பெண்ணாகி தாயாகிட
அவளிடம் அடிமையாகி சேயானேன்...
ஆனால் எனது ஏக்கம் தாயன்பைவிட தமயனுக்காகவே...
பெண்ணாகிய இனியவளுக்கு ஆணின் அணுகுமுறை தெறியவில்லை...
பாலையில் பெய்யும் பெருமழையாக..
இறந்தவனே வேறுருவில் என்னுடன் பேச ...
இறைவனையும் நம்பச்சொல்லுதடி என் மனம்..
- - - - -
Ethu ennoda frst try ashikmo bro kaga 😄😍...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro