அண்ணா - 2
ஊரின் எதிர்பார்ப்பு பெருமை,
உறவின் எதிர்பார்ப்பு சீர்வரிசை.
ஆசிரியரின் எதிர்பார்ப்பு முதல் மதிப்பெண்,
அண்ணனின் எதிர்பார்ப்பு எதிர்கால தேவை.
காதலனின் எதிர்பார்ப்பு காதல்,
கணவனின் எதிர்பார்ப்பு வாரிசு.
தோழியின் எதிர்பார்ப்பு நட்பு,
தம்பியின் எதிர்பார்ப்பு தாயின் மறுவடிவம் .
பெற்றோரின் எதிர்பார்ப்பு இறுதிசடங்கு,
பிள்ளையின் எதிர்பார்ப்பு தாய்ப்பாசம்.
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என் வாழ்வில் ,
எதிர்பாராமல் எதிர்பார்ப்பின்றி கிடைத்த உறவு நீ !
முகமூடி மனிதர்கள் மத்தியில், உண்மையான ,
முழு முகத்தைக் காட்டியவன் நீ !
உன் மகள் உன்னை 'வாப்பா' என்று அழைக்கலாம் ,
உன்னை ' அப்பா ' என்று அழைப்பவள் நான் மட்டுமே !
தோழியாக கரம்பற்றி நடந்திட ஆசை !
தங்கையாக சண்டையிட ஆசை !
மகளாக மடியில் உறங்கிட ஆசை !
கடவுளின் விளையாட்டால் இவை நிகழ வாய்ப்பின்றி போக,,
சிறிய என் ஆசைகளும் பேராசையாகிப் போனது....
- - - - -
Enda update ashianna kaga ashikmo mattum than.. ethu kavithaiyaa enanu therila pa ana enamo thonuchu athan eluthirukka.. romba romba thanks ashianna.. thanks sollamatta but sollama irukka mudila thittatha k 😄....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro