1
சூரியன் தன் வருகையை ஐன்னல் இடையில் தெரிவிக்க...சூரிய கதிர்கள் விழிமேல் விழ தன் இரு விழிகளையும் திறந்தாள்...
கைகளை மேலோங்கியபடி சோம்பலை முரித்தவளின் அருகில் இருந்த கைபேசி தன் போக்கில் அலறியது (alarm).... அதனை துண்டித்தவாறு தன் குளியல் அறை நோக்கி சென்றாள்...
பத்து நிமிட குளியலை முடித்துவிட்டு தலை வாரியவாறு கடிகாரத்தை பார்க்க ஏழு மணியாக பத்து நிமிடமே இருக்க...வேகமாய் ஹாலை நோக்கி ஓடினாள்...
"ஏன் இன்னகி லேட்?"என்ற தாயாரிடம்...சிறு புன்னகையை வீசிவிட்டு...சமையல் அறையில் இருந்த மூன்று கப் காபியை எடுத்துக்கொண்டு படிக்கட்டை நோக்கி சென்றாள்...
"நீ இப்படி இவங்கள பழக்கப்படுத்தினா காலை உணவைக்கூட கட்டிலுக்கு எடுத்து வா சொல்லுவாங்க..." என்றார் ராணி பாட்டி...
"விடுங்க அத்த எடுத்துட்டு போறவ அவளே சும்மா இருக்க... சின்ன வயசுலேந்து அவளும் பழகிட்டா... அவங்களும் இவ போகலனா பத்து மணி ஆனாலும் படுக்கைய விட்டு எழ மாட்டாங்க.."என்று கூறிவிட்டு சமையல் அறை நோக்கி சென்றவர் மேலும் "நேரம் ஆகுது" என்றார்....
தன் தாயாரின் குரல் காதுகளில் விழ குடுகுடுவென மாடிக்கு ஓடினாள்..
முதல் கதவைத் தட்டத்தொடங்கினாள் எப்பொழுதும் போல சத்தம் இல்லாததால்... கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.. கதாநாயகனின் தூக்கம் களையாதவாறு அருகில் சென்று மேசைமீது காப்பிக்கொண்டு வந்த தட்டை வைத்துவிட்டு... அறையை நோட்டம்யிட்டாள்..
தேடியது கிடைத்துவிட அதனை எடுத்துக்கொண்டு அவன் செவியின் அருகில் சென்றாள்...
தன் மலர் போன்ற இதழை அதன்மேல் வைத்து ஊத... அதுவும் தன் போக்கில் அலறியது... விசில் சத்ததில் திடுக்கிட்டவன்...
"அதித்தி!!!!!..." என்று, பேயை பார்த்து குழந்தை அலறுவதைபோல அலறினான்...
"ஹாஹா!! குட் மார்நிங் ஆதி!!!" என்று சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தாள்...
"குட் மார்நிங் டி எருமை"என்றான் ஆதி...
"நீ தான் டா எருமை..."என்று அவனுக்கு சமமாய் பதில் அளித்தாள்..
"நா எருமைனா நீயுனும் அதா" என்றான்...
"சரிதான் போடா"... என்றாள்...
"ஏ நான் உன்னவிட ஒரு வருஷம் பெரியவன் டி!"...என்றான் படுக்கையைவிட்டு எழந்தவாறு...
"அதுக்கு என்ன பன்ன சொல்ற?!"என்றாள் நக்களாய்...
பல் துலக்கிவிட்டு வெளியே வந்தவன் "கொஞ்சம் மரியாதையா கூப்பிடு டி"...என்றான்....
"மரியாதையாவா சரி அண்ணானு கூப்பிடவா?.."என்றாள் காபியை கையில் கொடுத்தவாறு..
"ஏ அடிங்க நான் என்ன உனக்கு அண்ணனா???" என்றான் விளையாட்டாய் கைஓங்கியபடி....
"ஹாஹா!! சரி வேற எப்படி கூப்பிடுறது?!?"என்று கேட்டாள் ஒன்றும் தெறியாத சிறு பிள்ளைபோல்....
"நான் உனக்கு அத்த பையன் தான சோ அத்தான் சொல்லு..."என்றான் மேலும் அவளை வம்பிழுப்பது போல்..
கதவை நோக்கி நகர்ந்தவள்.... அதன் அருகில் நின்றுகொண்டு
"அத்த பையன அத்தானும் சொல்லலாம்....டா போட்டும் கூப்பிடலாம்.... அதுதான் சொல்லனும் னு ஒன்னும் சட்டம் இல்ல....சோ நான்...டா தான் சொல்லுவ... போடா!!" என்று கூறிவிட்டு கதவை வேகமாய் சாத்திவிட்டாள்...
நடந்ததை நினைத்து சிரித்தவாரே தன் சகோதரன் ஆகாஷ் அறையை நோக்கி நகர்ந்தாள் அதித்தி...
அதித்தி தன் கல்லூரி படிப்பை முடித்திறுந்தாலும்...
சிறு பிள்ளையில் இருந்து இன்றுவரை...
அவளின் குறும்புகளை அனைவரும் ரசித்துக்கொண்டு தான் வருகிறார்கள்.. ஆதியும் தன் பங்கிற்க்கு அவளிடம் தன் குரும்பைக் காட்டிகொண்டு தான் இருக்கிறான்...
அதித்தி தன் அண்ணனின் அறை கதவை தட்ட...
உள்ளேயிருந்து "வாங்க!!" என்று குறள் கேட்க...
உள்ளே நுழைந்தாள் அதித்தி...
"குட் மார்நிங் அண்ணா!!!" என்றாள் உள்ளே நுழைந்தவாறு...
"குட் மார்நிங் குட்டிமா"என்று குளியல் அறையிலிருந்து வெளியே வந்தவாறு தன் தங்கையை வரவேற்றான்...
"இந்தா அண்ணா காபி!" என்றாள்...
"தேங்க்ஸ் டா...என்ன பன்னிங்க மேடம் இன்னக்கி மார்நிங் இவ்வோ ஹாப்பியா இருக்கிங்க?!"என்றான் அவள் முகத்தில் இருக்கும் புன்னகையை பார்த்து...
"அதுவா அண்ணா..." என்று அவள் செய்த குரும்பை கூற...
"ஹாஹா!!! மச்சான் காது என்ன ஆச்சோ!!!..."என்றான் ஆகாஷ்...
"பெருசா எதுவும் ஆகாது அண்ணா!!!"என்று வாய் கூறினாலும் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது...
"ஏ என்ன ஆச்சு?!" என்றான்....
"ஒன்னும் இல்ல அண்ணா"என்று கூறிவிட்டு காளியான காபி கப்பை அவனிடம் இருந்து வாங்கினாள்...
"நீ இந்த சின்ன விஷியத்துக்குலாம் பீல் பண்றதபாத்தா... ஆர் யூ இன் லவ் வித் ஆதி?!!.."என்றான் அவள் சிந்தனையை மாற்ற...
"அண்ணா!!!..நீ எனக்கு அண்ணன் மாறி யா பேசுற?!" என்றாள் அவனை லேசாய் அடித்தவாறு..
"ஆஆஆ...சும்மா தான் கேட்ட அத்த பையன் தான லவ் பன்றியோனு நெனச்சிக்கேட்ட.."என்றான் அவள் அடித்த அடி வலித்ததுபோல்...
"இல்லை... அப்படி லவ் பண்ணா கண்டிப்பா சொல்ற" என்றாள்...
"சரி என் ஆளுக்கு காபி குடுத்தியா?!"என்றான்...
"மதிப்பிற்க்குறிய ஆதியின் சகோதரியும் என் வருங்கால அண்ணியுமான மிஸ்சஸ்.ஆகாஷ்க்கு இன்னும் காபி குடுக்கல சோ நீயே குடுத்துடு"என்றாள்...
"ஏன் மா நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா?!..."என்றான் ஆகாஷ்...
"ஏன் அண்ணா இப்பிடி இருக்க எப்ப தான் வீட்ல உங்க லவ் பத்தி சொல்றதா ஐடியா?!...நாவேன பேசவா..?!"என்றாள்....
"வேண்டாம்...நேரம் வரும்போது நானே சொல்ற"என்றான்... "இப்படி சொல்லி சொல்லியே மூணு வருஷம் முடிந்திருச்சு... " என்றாள் அதித்தி அவன்மீது சிறிது கோபத்துடன்..
"நல்லா கேளு அதித்தி..."என்ற குரல் அவர்களை கதவை நோக்கி திரும்பச்செய்தது...
"என்னையும் சொல்லவிடமாற்றான் அவனும் சொல்லமாற்றான்.." என்றாள் மிஸ்சஸ்.ஆகாஷ்...
"ஏய் நீ என்ன என் தங்கச்சிய ஏத்திவிடுறியா?!... ரெண்டுபேரும் ஒன்னா சேந்துட்டிங்கல போச்சு..."என்றான் தன் தங்கையின் திட்டிலிருந்து தப்பிக்க வழி அறியாமல்...
"அவ உனக்கு தங்கச்சி மட்டும் இல்ல.. என்னோட ப்ரெண்ட்.... அது மட்டும் இல்லாம... என் அருமை சகோதரன் ஆதி கல்யாணம் பண்ணிக்கபோறவ.... இல்ல அதித்தி??!.."என்றாள் அவளிடம் 'ஆம்' என்ற பதிலை எதிர்ப்பாத்து..
"இல்ல.. உன் ப்ரெண்ட் மட்டும் தான்.. நான் யாரையும் லவ்ப்பன்னல அப்படியே பண்ணாக்கண்டிபா சொல்ற.... நீங்க இப்படி பேசுனா அப்பறம் நான் அவன்ட பேசமாட்டேன் சொல்லிட்ட..."என்றாள் அதித்தி எங்கு நாம் அவனை காதலித்துவிடுவோமோ என்ற பயத்தில்....
"சரி விடு அதித்தி... விளையாட்டுக்கு தான சொன்னோம்...இனிமே அப்படி சொல்லமாட்டோம்..."என்ற ஆகாஷிடம் 'ம்ம்ம்' என்ற பதிலோடு நிருத்திக்கொண்டாள்...
"ஆமா நீ ஏன் இங்க வந்த அனு?!"என்றான்...
"ஏன் வரக்கூடாதா?!..."என்றாள் அதித்திக்கொடுத்த காபியை குடித்துவிட்டு....
"ஏய் லூசு அதுக்கு இல்ல... காலைலயே வந்து இருக்கியே அதான்...?" என்றான் ஆகாஷ்...
"அதுவா அப்பாவோட அக்கா பொன்னு இங்க வரா... அதான் உன்னபோய் பஸ் ஸ்டாப்ல ரிசீவ்ப்பண்ணிட்டு வரசொன்னாங்க..." என்றாள் அனு....
"அந்த புள்ளைய ஒன் டைம்
தா பாத்துயிருக்க... போடி நா போல.. ஆதிய போ சொல்லு" என்றான் ஆகாஷ்...
"ஆதி போகவேண்டாம்... அனுக்கு அத்த பொன்னுனா உனக்கு தங்கச்சி தான்.... தங்கச்சிய தான ரிசீவ்ப்பன்னபோற போ... போய்டு வா..." என்றாள் அதித்தி....
"எனக்கு தங்கச்சினா ஆதிக்கு மொறப்பொன்னு தான.... அப்போ அவன போ சொல்லு..."என்றான் ஆகாஷ்....
"மொறப்பொன்னுனால தான் அவன் போகவேண்டானு சொல்ற...."என்றாள் அதித்தி....
"நீதான் அவன லவ்ப்பன்னல அப்பறம் என்னடி...?!"என்றாள் அனு நக்களாய்...
"அது....."என்றவள் என்ன கூறுவது என்று தெரியாமல்...சிறிது நொடியில் தன் அண்ணனை நோக்கி... "அண்ணா நான் சொன்ன கேப்பியா...மாட்டியா?" என்றாள் அதித்தி....
"இப்போ என்ன பஸ் ஸ்டாப் போனும் அவ்ளோதான?."என்றான் தன் தங்கையின் கேள்விக்கு பதிலாய்...
"வாவ்! தேங்க்ஸ் அண்ணா..."என்று கூறிவிட்டு அறையைவிட்டு வெளியேறினாள்....
ஆகாஷ் வெளியே செல்வதைக்கண்ட ஆதி...
அவன் முன் சென்று "டேய் என்னடா... சொன்னது என்ன ஆச்சு... இப்ப எங்க கிளம்பிட்ட?!"என்றான் ஆதி....
"நீ சொன்னது எல்லாம் பக்காவா பண்ணியாச்சு..." என்றான் ஆகாஷ்...
"ரிசல்ட்?!!!"என்றான் ஆர்வத்தோடு....
"டேய்! ரிசல்ட் உடனேவராது டா... ஆனா இனிமே அப்படி பேசுனா நான் ஆதிட்ட பேசமாட்டனு சொல்லிட்டா டா மச்சான்!" என்றான் ஆகாஷ்....
"என்னடா இப்படி சொல்லிட்ட... அப்போ என் லவ்?!!!!... அவ என்ன லவ் பண்றாலானு தெரியாம நான் போய் என் லவ் சொல்லி... பேசாம போய்ட்டானா... அப்பறம் இருக்குறதும் போய்டும்டா..." என்றான் தன் காதலை வெளிப்படுத்த வழித்தெறியாமல்....
"டேய் மச்சான் ஒன்னு சொல்ல மறந்துட்ட...உன் அத்த பொன்ன ரிசீவ்ப்பன்ன உன்னப்போ சொன்னப்ப... 'ஆதிப் போகவேண்டாம்... உனக்கு தங்கச்சி தானவேனும் நீ போய்ட்டுவானு சொல்லிட்டா'... அங்க தான்டா போறேன் இப்போ..."என்றான் ஆகாஷ்...
'பார்ர்ரா... இப்படி வரளா அவ....' என்று மனதிற்க்குள் என்னியவன் "சரிடா மச்சான்... நீ போய் அவள ரிசீவ்ப்பண்ணிட்டு வா... இனிமே தான் உனக்கு வேலையே இருக்கு.." என்றான் அவன் தோளைத்தட்டியவாறு....
"ஏதோ பெருசா ப்ளான்ப்பன்ற.... பாத்துடா...நான் அவளுக்கு அண்ணன்..." என்றான் வண்டியில் ஏறி அமர்ந்தவாறு.... "அதலாம் எங்களுக்கும் தெரியும் போடா..." என்றான் அவன் வண்டியை விளையாட்டாய் உதைத்தவாறு....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro