என் அவள்
Episode:2
Falsh back
ஆதி பழைய நினைவுக்குல் நுழைந்தான்.(ஆதி தான் நம்ம ஹீரோ. இப்ப நம்ம பாரதி கழுத்துல தாலி கட்டிய புதுமாப்பிள்ளை😂😂)
ஆதி மற்றும் பாரதி ஒரே கல்லூரி. ஒரே வகுப்புத் தோழர்கள்.பாரதிக்கு எது சரியோ அது ஆதிக்கு தவறு. அதே போல் ஆதிக்கு எது சரியோ அது பாரதிக்கு தவறாகவே தெரியும்.
இவ்வாரே நாட்கள் நகர கல்லூரிச் சுற்றுலாவும் வந்தது.சுற்றுலா சென்று இன்பமாக கழித்தவர்கள்.இறுதி இரண்டு நாட்களையும் பிரயோசனமான முறையில் கழிக்க எண்ணி. கிராமம் ஒன்றிற்குச் சென்று. அவர்களுக்கு கல்வி பற்றிய விளிப்பூட்டல்கள் மற்றும் கிராமத்தை சுத்தம் செய்தல். போன்ற பல்வேறு நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்டனர்.
கிராமத்திற்கு வந்தவர்கள் கிராமத்தலைவரின் உதவியோடு ஆண்களுக்கு ஒரு வீட்டையும் , பெண்களுக்கு ஒரு வீட்டையும் ஆதி தலைமையில் ஏற்பாடு பண்ணினார்கள்.
அதே ஊரிலே ஆதியினுடைய தாத்தாவும் ,பாட்டியும் இருந்ததால் வந்து அனைவருடனும் கதைத்துவிட்டு சென்றனர்.
இரவாகவும் சாப்பிட்டு விட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களை அவசரமாக தூங்குமாறும். காலையில் வேலை அதிகம் இருப்பதாகவும் கூறி கட்டளை இட்டான்.
பாரதி பெண்களுக்கு ஏற்பாடு செய்த வீட்டின் மாடியில் காற்று வாங்கிக் கொண்டு தனிமையில் நின்றாள்.
இதனைக் காணாத ஆதி நண்பர்கள் தூங்கிய பின் மெது மெதுவாக அடி வைத்து வீட்டை விட்டு வெளியேறி தாத்தா வீட்டுக்கு சென்று தூங்கி விட்டு அதிகாலையிலேயே வந்தான்.
வழக்கமாக கல்லூரிக்கே தாமதமாக வருபவன். வழக்கமான தனது கட்டில் இல்லாததால் தூக்கம் செல்லாமல் அதிகாலையிலேயே எழுந்து வந்து நண்பர்களை எழுப்பத் தொடங்கினான்.
அடேய் என்னடா காலங்காத்தால எழிந்திரிச்சி எங்களையும் எழுப்புற. நீ அதிகாலைல எழுந்துருக்க. இன்று சூரியன் மேற்குல தான் உதிக்க போகுது. ஆனா சந்தோஷப்படுற நிலைமைல நான் இல்லடா.சரியான டயடா இருக்கன். நீ சும்மா போய் கம்முன்னு இரி. என்று சொன்னான் பாஸ்கர்.
ஆதி சத்தமாக அவசரமாக எழும்புங்க. எழும்பாதவங்களுக்கு தண்ணீர் அபிஷேகம். என்று கூறிக் கொண்டே. தண்ணீரை வாலியில் நிறைக்கத் தொடங்கினான்.
ஒருவாராக அனைவரும் தயாராகி கோயிலை சுத்தம் செய்யப் புறப்பட்டனர். அனைவருக்கும் வேலை பிரித்துக் கொடுக்கப்பட்டது.
ஆதி கூரையை சுத்தம் செய்வதாக கூறி. பாரதி சுத்தம் செய்துகொண்டிருந்த இடத்திலேயே கயிரைக்கட்டிக் கொண்டு கூரையிலும் கயிற்றை கட்டிக் கொண்டு கூரையில் உள்ள கயிற்றை பிடித்து மலை ஏறுபவனைப் போல் ஏறும் போது......
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro