அவள்-43
காலையில் லதாவும் ராஜும் பாட்டியும் ஊருக்கு புறப்பட்டன
பாரதி கொஞ்சம் நாட்களாக அதிக சோர்வாக இருப்பதாக ஆதி உணர்ந்தான்.
மனதில் என்னவோ யோசனை தோன்ற தனது கற்பனை நினைத்து தன்னையே கொண்டான்.
வீண் கற்பனையை வளர்த்துக் கொள்ள தேவையில்லை என்று ஆபீஸ் கிளம்பினான்.
வீட்டில் இருந்த பாரதிக்கு உடல் ஏதோ செய்வது போல் இருக்க. ரோகினி... ரோகினி என்று அழைத்தவளது கண்கள் இரண்டும் இருட்டியது.
பாரதியின் சத்தத்தை கேட்டு வந்த ரோகினி பாரதி கீழே விழப் போகிறாள். என்பதனை உணர்ந்து கை தாங்கலாக பிடித்தாள்.
அண்ணி அண்ணி என்ன ஆச்சு. பேசிப் பார்த்து சிறு அசைவும் இல்லை.ரோகினிக்கு உதறல் எடுக்க.
வம்சி.... வம்சி... என்று
அழைக்க அவன் வீட்டில் இருக்கவில்லை. இவ்வளவு நேரமா வீட்டில் தான் இருந்தான். சரி அண்ணாக்கு போன் பண்ணலாம். என்று போன் பண்ணினாள்.
ஆபீசுக்கு சென்று வேலையில் மும்முரமாக இருந்தவனுக்கு ரோகிணி கால் எடுக்க.
ஹலோ சொல்லு ரோகினி என்று கூற
ரோகினி பதட்டமாக அண்ணா... கொஞ்சம் அவசரமாக வீட்டுக்கு வாரியா... எப்படி போனை துண்டித்தாள்.
என்னமோ ஏதோ என்று பயந்த ஆதி ஓட்டமும் நடையுமாக ஆபீஸை விட்டு வெளியே வந்து. வீட்டுக்கு வந்து சேர. பாரதி மயக்கமாக இருந்தாள்.
ஆதிக்கு அவளது விபத்து நேரம் ஞாபகத்துக்கு வந்தது. அதனால் ஏதும் மயக்கம் ஏற்பட்டு இருக்குமோ என்று பயந்து. கை தாங்கலாகதூக்கிக் கொண்டு சென்று காரில் ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போகும் போது நில்லு அண்ணா நானும் வரேன் என்றபடி ரோகினி ஓடி வர.
நீ குழந்தையோட வீட்டில் இரு நான் போய் பார்த்துட்டு வரேன்.
ரோகினி பயந்து ஊருக்கு சென்று கொண்டிருந்த லதாவிற்கு கோல் செய்து விடயத்தை தெரிவிக்க. அவர்கள் பயணத்தை இடையில் விட்டு விட்டு. ராஜ் பரத்திற்கு விடயத்தை தெரிவிக்க அனைவரும் ஆதி வீட்டிற்கு படையெடுத்தனர்.
பாரதியை பரிசோதித்த டாக்டர் கங்கிராஜுலேசன் ஆதி. நீங்க அப்பாவாக போறீங்க என்று கூற. ஆதிக்கு ஆச்சரியத்தில்
கண்கள் விரிந்தது.
ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் இந்த ஒரு வார்த்தையை கேட்கத்தான் நானும் பாரதியும் இந்த வருஷமா துடியா துடிச்சோம்.
அது உங்கள ஃபர்ஸ்ட் டைம் நான் மீட் பண்ண போதே விளங்கிட்டேன். ஆதி... இனிதான் உங்க வைபை கவனமா பாத்துக்கணும் என்று கூறி. பாரதியை, ஆதியும் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வந்த பாரதி முகம் குங்குமமாய் சிவக்க.ஆதியின் முகமெல்லாம் பல்லாய் உள்ளே நுழைந்தான்.
வீட்டில் அனைவரும் இருக்க பாரதி வெட்கத்துடன் தலை குனிந்தாள்.
ஆதி கவியின் குழந்தையை தூக்கி சுற்றிய வண்ணம். உனக்கு கூடிய சீக்கிரம். தம்பி பாப்பாவோ தங்கச்சி, பாப்பாவோ வரப் போறாங்க என்று கூற
மகாவின் கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.
லதா அவசரமாக சமையல் அறைக்குச் சென்று பாயாசம் தயாரித்து வந்து பாரதிக்கு ஊட்டி விட்டார்.
அனைவரும் பாரதிக்கு பாயாசம் ஊட்ட போதும் போதும் என்றே வாங்கிக்கொண்டாள்.
பாரதிக்கு இரட்டை குழந்தைகள் என்று தெரிந்ததில்
மொத்த குடும்பமும் பாரதியை தாங்கத் தாங்கென தாங்கினார்
மகாவையும் வரவைத்து வீட்டில் வைத்துக் கொண்டதால் லதாவும் மகாவும் பாரதிக்கு வேண்டிய மாதிரி பாய்க்கு ருசியான உணவை சமைத்து போட.கோதைப்பாட்டியும் மருந்து மூலிகைகளை செய்து கொடுத்தார்.
பாரதிக்கு ஏழு மாதம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. ஆதியின் பாச வலையில் சிக்கி மீள முடியாது தவித்தாள்.
பாரதி அடிக்கடி ஆதி போன்ற ஒரு நல்ல கணவன் கிடைத்ததற்காக பிரார்த்தித்தாள்.
......................................................
ஆதி அவனது அறைக்கு வெளியே நின்று கொண்டு எனது மனைவியை பார்க்க விடுங்க...... என்ன உள்ள விடுங்க......என்று கத்திக் கொண்டிருக்க.
சிவாவும் வம்சியும் சேர்ந்து டேய் அசிங்கப்படாமல் வாடா.... இங்க மானம் பறக்குது என்று கூற.
ஆதி திரும்பி சிவாவையும், வம்சியைம் பார்த்து வாயை மூடும்படி செய்கை செய்ய சிவாவும் வம்சியும் தலையில் அடித்துக் கொண்டனர்.
சரி உள்ள வா.... என்று கதவை திறந்து விட்ட லதா வெளியே செல்ல. பாரதி ஜன்னலின் திரைச்சீலின் பின்னால் ஒளிந்து கொண்டாள் பழைய நினைவில்.
எனினும் பாரதியின் மேடிட்ட வயிறு அவளை காட்டிக் கொடுத்தது. ஆதி சிரித்த வண்ணமே பாரதியை பின்னால் இருந்த அனைத்தான்.
பாரதியின் அழகை கண்டவன் மயங்கி நின்றான். பாரதியின் கையைப் பிடித்து வளைகாப்பிற்கு அழைத்து வந்து அமர வைத்தான்.
ஆதி பாரதியை பார்த்துக் கொண்டிருக்க. வம்சி காதில் வழியுது துடைச்சுக்கோ என்று கூற.முறைத்து விட்டு அவனது வேலையை செவ்வனே தொடர்ந்தான்.
நலங்கு முதலில் வைப்பது யார் என்று கேட்க. பாரதியின் கண்கள் ஆதியை தேடியது. ஆதி வந்து முதலில் நலங்கு வைத்து மனைவியும் குழந்தையும் ஆசீர்வதித்தான்.
தொடரும்......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro