Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவள் 42

ரிப்போர்ட் வர பாரதிக்கு பயத்தில் கையே நடுங்க ஆரம்பித்தது. மிஸிஸ் ஆதி பயப்படாதீங்க. அவர் அவளுக்கு தைரியம் சொன்னவரே டாக்டர் கதைக்க தொடங்கினார்.

ரிப்போர்ட்டை பார்த்த டாக்டர் சின்ன ப்ரோப்லம் தான். சரி செஞ்சிடலாம். என்று கூற சற்று தைரியம் வந்தது.

சில நேரங்களில் மருந்தை விட வார்த்தை தான் மருந்து.

நான் நினைத்தது சரியா தான் இருக்கு. உங்களுக்கு pcos பிரச்சனை இருக்கு இத பத்தி விரிவா சொல்லப்போனால்

பிசிஓஎஸ் என்பது

பெண்களுக்கு கருப்பையின் இரு பக்கங்களிலும் ஓவரி என்று சொல்லக்கூடிய சினைப்பைகளில் சிறிய, சிறிய நீர்க்கட்டிகள் தோன்றுவது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது.

இது கருவுறும் வயதில் இருக்கக்கூடிய பல பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்னை.PCOD ஓவரியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் Polycystic Ovarian disease என்பதை இப்போது Polycystic Ovarian Syndrome என்று அழைக்கிறார்கள். இது வாழ்வியல் முறை மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்ணின் உடம்பில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு.

இன்சுலின் எதிர்ப்பால் உருவாகும் Polycystic Ovarian Syndrome ஐ Mild, Moderate, Severe என 3 கிரேடுகளாக மருத்துவர்கள் பிரிக்கிறார்கள்.

Mild எனும் கட்டத்தில் - மாதவிலக்கு தொடர்ந்து சரியாக வரும்.. இயல்பாக கருத்தரிப்பு நடக்கும்.. வேறு ஏதாவது பிரச்சனைக்கு ஸ்கேன் செய்யும் போது Polycystic Ovarian Syndrome இருப்பது தெரியும். இந்த நிலையில் ஹார்மோன் மாற்றங்கள் இருக்காது.

Moderate எனும் கட்டத்தில் 45 நாட்களுக்கு முறை மாதவிலக்கு வரும்.. ஹார்மோன் இம்பேலன்ஸ் 20 முதல் 30 சதவீதம் வரைக்கும் இருக்கும்.

Severe எனும் கட்டத்தில் 3 மாதம் ஆனாலும் மாதவிலக்கு வராது. ஹார்மோன் இம்பேலன்ஸ் 50 முதல் 60 சதவீதம் வரை இருக்கும். இப்படி பட்டவர்களுக்கு மாத்திரை போட்டால் மட்டுமே மாதவிலக்கு வரும்.

அதே போல பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் பிசிஓஎஸ் வரும் என்பதில்லை. ஒல்லியாக இருப்பவர்களுக்கும் THIN PCOS குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

PCOS ஆல் ஏற்படும் விளைவுகள் என்ன?

ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிலக்கு முடிந்து 14 முதல் 18 நாளில் கருமுட்டை வெளியே வரும். இது இயற்கை.

ஆனால் PCOS இருக்கும் போது Hyper Insulin பிரச்சனையும் ஏற்படும். நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு இன்சுலின் சுரப்பு சரியாக இருக்க வேண்டும். ஆனால் PCOS இருக்கும் போது Insulin, Estrogen , Androgen அதிக அளவில் சுரக்க தொடங்கும்.

ஆனால் FSH follicle-stimulating hormone / LH Luteinizing Hormone சுரப்பது மாறுபடும் போது முறையற்ற மாதவிலக்கு ஏற்படும்.

சினைப்பை சுவர்கள் மிகவும் தடிமனாகி அதை சுற்றி சின்ன சின்ன Follicules அதாவது நீர்கட்டிகள் தோன்றுவதால் கருமுட்டைகள் வெளிவராது, இதனால் கர்ப்பம் அடைவதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதைத்தான் பிசிஓஎஸ் என்று அழைக்கிறோம்.

PCOS அறிகுறிகள் என்ன?

PCOS பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கு முறையற்றதாக இருக்கும். ஒரு பெண்ணிற்கு மாதவிலக்கு சுழற்சி 28 நாட்களுக்கு முறை இருக்க வேண்டும். சிலருக்கு ஒரு வாரம் கூடக் குறைய இருக்கலாம்.

ஆனால் பிசிஓஎஸ் பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு 45 நாட்களுக்கு முறை, சிலருக்கு 60 நாட்களுக்கு ஒரு முறை, சிலருக்கு 3 மாதங்கள் வரை கூட மாதவிலக்கு வராமல் இருக்கலாம்.

ஆனால் சில பெண்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு வந்துவிடும்.

சிலருக்கு மாதவிலக்கு வரும் போது உதிரப்போக்கு 10 நாள் முதல் 1 மாதம் வரை கூட நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

எடை அதிகரிப்பு,தேவையற்ற இடங்களில் அதிக அளவில் முடி வளர்தல், கழுத்தில் கருப்பு நிறம் படர்தல் , முகத்தில் அதிக அளவில் பருக்கள் இருக்கும்.ஏன் PCOS வருகிறது?

இன்று கருவுறும் வயதில் உள்ள 5 பெண்களில் 2 பெண்களுக்கு PCOS பிரச்சனை இருக்கிறது. 18 வயதுகளில் உள்ள பெண்களை எடுத்துக் கொண்டால் 5 பேரில் ஒருவருக்கு இந்த பிரச்னை இருக்கிறது.

நம் உணவுமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்... அதாவது Balanced Diet ஆக உணவை எடுத்துக் கொள்ளாதது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தொடர்ச்சியாக carbonated Drinks அதிக அளவில் உட்கொள்வது, ஜங்க் உணவுகள் அதிகம் சாப்பிடுவது, உணவுக்கு ஏற்ற உடலுழைப்பு இல்லாதது பெரும்பான்மையான காரணங்களாக இருந்தாலும்

மரபணு காரணமாகவும் PCOS பாதிப்பு ஏற்படுகிறது.

இளம் வயதில் PCOS பாதிப்பு ஏற்பட்டால் 40 வயதிற்கு பிறகு டயாபடீஸ் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

PCOS இருந்தால் கருவுற முடியாதா? இதற்கு தீர்வு என்ன?

முதலில் நம்முடைய வாழ்க்கை மற்றும் உணவு முறைகளில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு தினமும் உற்பயிற்சிகளை செய்ய தொடங்க வேண்டும்.

யோகா, நடைபயிற்சி, போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இரவு அதிக நேரம் கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும்

நல்ல உணவு முறையும் மருத்துவரின் சிகிச்சையும் இந்த பிரச்சனையை சரிசெய்து கருவுறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.எனவே கருத்தரிப்பதில் பிரச்சினை இல்லை.

தொடரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #lovestory