அவள்-40
காலமும் உருண்டோட கவியும் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள். ஆனால் விடிந்ததில் இருந்து பாரதியின் மனம் படபடப்பாக இருந்தது.
ஆதியும் விடிந்ததிலிருந்து பாரதியை கவனித்துக் கொண்டிருந்தான். கதிரையில் அமர்ந்தபடி யோசனை, கட்டிலில் அமர்ந்தபடி யோசனை அங்கும் இங்கும் இருந்து யோசித்துக் கொண்டிருக்க.
ஆதி பாரதியிடம் சென்று உடம்பு சரியில்லையா? என விசாரித்து நெற்றியைத் தொட்டுப் பார்க்க காய்ச்சலும் இல்லை. என்ன என்று கேட்டும் ஒன்றுமில்லை என சாதித்து விட்டாள்.நேரம் செல்ல.
ஆதியிடம் சென்று என்னங்க நாம கட்டாயம் தேவாவுடை வளைகாப்புக்கு போய்த்தான் ஆகணுமா? என்று கேட்க.
ஓ மேடம் இவ்வளவு நேரம் இதத்தான் யோசிச்சுட்டு இருந்தீங்களா? அஜய் உன்னை கட்டாயப் அழைச்சிகிட்டு வர சொன்னான். அது மட்டும் இல்லாம நேத்து உன்னோட வந்து தங்க சொன்னான். நான் தான் ஆபீஸ்ல வேலை அதிகம். நாளைக்கு பாரதியோட வந்திடுறேன் என்றேன்.
நீ இப்ப போக வர மாட்டியா? என்று கேட்க இல்லங்க கவியோடு வளைகாப்பு என்று தொடங்கி அவளை முறைத்துவிட்டு. பேசாம போ போய் இந்த சாரிய ட்ரஸ் பண்ணிட்டு வா என சாரி ஒன்றை பரிசளித்தான் ஆதி.அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் பாரதி சாரியுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
இங்குகோ டேய் அஜய் எந்திரிடா.... இன்னைக்கு எனக்கு வளைகாப்பு டா. அதுகூட புரியாம மாமியார் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை மாதிரி தூங்குற.
என்ன தேவா.... என் செல்ல குட்டி இல்ல இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே.... தேவாவோ கண்கலங்க. எனக்குத்தான் யாரும் இல்ல என்ன தேடி யாரும் வரப் போவதுமில்லை. ஆனா நீங்க அப்படி இல்ல. உங்க குடும்பத்தில் இருந்து எல்லாரும் வந்துடுவாங்க. அஜய் எழுந்தமர்ந்து நீ யாரும் இல்லாதவளா? அழுத்தமாக கேட்க. தேவா பயத்துடன் இல்லை என தலையாட்டினாள்.
அவளது பயந்து முகத்தைக் கண்டு இந்த பேச்சை மாற்றும் பொருட்டு. நேத்து நைட் முழுக்க மாமியும், மருமகளும் சேர்ந்து அதைச் செய்.
இதைச் செய் என்று உயிரை வாங்கின இப்ப திரும்பவும் வேலை செய்யணுமா? என்று சலித்துக் கொள்ள.
அதுக்குத்தான் நான் வளைகாப்பு சிம்பிளா செய்தா போதும் என்றேன். இல்ல என் பையனுக்கு எல்லா கிராண்ட் ஆ தான் செய்வேன் என்று நீங்கள்தான் அடம்பிடிச்சிங்க. இப்ப கை வலிக்குது கால் வலிக்குது என்றால் என்ன அர்த்தம். அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் எழுந்து குளியலறை நுழைந்தான்.
அஜய்யும் குளித்து முடித்து சற்று நேரத்தில் பட்டுவேட்டி அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் வந்து நிற்க. ஆதியும்,பாரதியும் ஒரு படையுடன் வந்தார்கள்.
அனு பாரதியை கெட்டியாக பிடித்துக் கொண்டு. விழி விரிய பார்த்துக் கொண்டு இருந்தாள். பாரதியின் கையில் இருந்த அனுவைத் தூக்க. அஜய் கையை கொண்டு செல்ல அனு அழத் துவங்கினாள்.
அஜய் என்னடா செய்ற நீ. குந்தைய ஏன் இப்படி போட்டு பயமுறுத்துற. அஜய் அனுவைப் பார்த்து போடி போ. நாளைக்கு பாரு என் பையன விட்டு உன்ன அடிக்கவிடல்லை என் பேரு அஜய் இல்ல.
என்று முறைத்துக்கொண்டு பாசாங்கு செய்ய.
அஜய் நீ வேற அவளை பெத்த அப்பா நான் தூக்கினாலே அழுவுறா. ஆதி, பாரதி, ரோஹினி கிட்ட மட்டும்தான் சேருரா... என சோக கீதம் வாசிக்க எல்லோரும் சிரித்து விட்டனர்.
தேவாவிற்கு ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு வைக்க ஆசை என்பதால் அஜய் 9ஆவது மாசத்திலேயே வளைகாப்பு வைத்துவிட்டான்.
நலங்கு வைக்கும் நேரம் யாரு முதல்ல நலங்கு வைப்பது என்று கேட்க. தேவா அஜய்யை பார்க்க. அவள் சரி என்பது போல தலையசைத்தான். அஜய் அக்கா நீ முதல்ல நலங்குவை. பாரதி வைக்கத் தயங்கினாலும், என்னக்கா நீ... என பாரதியின் கையை பிடித்துக்கொண்டு இழுத்து சென்று தேவாவிடம் விட முதலில் பாரதி நலங்கு வைத்தாள். அதன்பிறகு அஜய் மற்றும் முழுக் குடும்பமும் கலந்து தேவாவை குழந்தையும் ஆசிர்வதித்தனர்.
வளைகாப்பு நல்லபடியாக முடிய. மாலையில் பல நாட்களுக்குப் பிறகு அனைவரும் ஒன்றாக பேசிக் கொண்டும் .சிரித்துக் கொண்டும் இருந்தனர். தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லதா மனது கலங்கியது. ரோகிணி மடியில் அனுவையும், கவியின் கையில் மாயாவும். தேவா மேடிட்ட வயிறுடன் இருக்க பாரதியின் மடியில் சிறிய தலையணை வைத்தபடி அமர்ந்து இருந்தாள்.
கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்த பாரதியைப் பார்த்து. லதா, "கடவுளே இவளுக்கு ஒரு வாரிசை கொடுத்ததுடு" நாங்க அவ மனசு நோகும்படி பேச மாட்டோம். ஆனால் மற்றவர்கள்... அவர்களின் பேச்சிலிருந்து நீதான் பாரதியை காப்பாற்ற வேண்டும் என கடவுளிடம் மனமுருக வேண்டிக் கொண்டார்.
பாரதியும் மஹாவும் கோவிலுக்கு செல்வதாக செல்ல. ஆதி மனதில் பூட்டி வைத்திருந்ததை வெளியே போட்டுடைத்தான். அனைவரும் முன் வாசலில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருக்க. கோவை பாட்டியின் அருகில் சென்று. பாட்டி என சத்தமாக அழைக்க. அனைவரும் கதைப்பதை நிறுத்திவிட்டு ஆதியைப் பார்த்தனர்.
ஏன் சரளா அத்தைகிட்ட அப்படிச் பேசினீங்க. என்று கண்கள் சிவக்க கோபமாக கேட்க. கோவை பாட்டி என்னடா... நான் என்ன பேசினேன். என்று கேட்க. ஆதி பல்லைக் கடித்தான். சரளா என்ற பெயரைக் கேட்டதும் என்ன நடந்திருக்கும். என்று ஆர்வமாக பார்த்தான் சிவா. சிவாவிற்கு அவனது அம்மாவின் குணம் தெரிந்து இருந்ததால் அவன் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஓ... அதுவா... எனக்கு மருமணம் செய்து வைக்கப் போறீங்க என்று சொன்னீங்க. என்று கேட்க கோவை பாட்டி முற்றிலும் அடங்கிப் போக. லதா ரோகிணிஅதிர்ச்சியாய் பாட்டியைப் பார்த்தனர்.
இல்லப்பா சரளா ஒரே உனக்கு பாரதியை விட்டு விட்டு வேறு திருமணம் செய்ய சொல்லுறா...நானும் பலமுறை சொல்லிப் பார்த்தேன். பாரதி மட்டும் தான் பேரனோட மனைவின்னு. புரிஞ்சுக்கவே இல்ல அதனாலதான் நானும் அப்படி பேசினேன்.
பாட்டி நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை பாரதி கேட்டுட்டா. ஆனால் பாரதி காணல்ல நானும் நீங்கள் பேசுவதை கேட்டுட்டு இருந்தேன்னு.
பாரதி நீங்க பேசினது கேட்டுட்டு அழுதுகிட்டே ரூமுக்குபோயிட்டா.. நான் கேட்கவும் கண்ணுல தூசி விழுந்துட்டுனு சமாளித்தாள். பாவம் பாட்டி பாரதி. ஏன் இந்த மாதிரி பண்றீங்க. என்ற ஆதங்கமாய் ஆரம்பித்தவன் ஆத்திரமாய் முடிந்த்தான்.
ஆதி...பாரதிய தவிர வேறு யாரும் உனக்கு பொருந்த மாட்டாங்க. பாரதி மட்டும்தான் என் பேரனோட மனைவி. பாட்டி பேசியதை கேட்டு ராஜ் , பரத்தை பார்த்து கண்களால் நன்றி தெரிவித்தார்.
பாரதியும் மஹாவும் கோயிலில் இருந்து வரவும் பேச்சை மாற்றினார். அன்று இரவு அனைவரும் நிம்மதியாக உறங்க. ஒருத்தன் மட்டும் தூக்கத்தை தொலைத்தான். தன்னுடைய நெஞ்சில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் பாரதியின் நெற்றியில் முத்தமிட்டு ஏன் பாரதி எல்லோருமு உன்ன பரிதாபமாக பார்க்கிறாங்க. கல்யாணமாகி அஞ்சு வருஷமாகிறது என்பது உண்மை தான். குழந்தை உருவாகாமல் இருந்தால் அதற்கு நீயோ நானோ என்ன செய்ய முடியும்.
எல்லோரும் உன்னை பரிதாபமா பார்க்கிறது எனக்கு பிடிக்கல பாரதி. வெளியில் இருப்பவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. வீட்டில் இருப்பவர்களே உன்னை பரிதாபமா பார்க்கும் போது எனக்கு வலிக்கிறது பாரதி. எனக்கே இந்த அளவுக்கு வலிக்கும்போது பெண்ணாக இருந்துகொண்டு எப்படி இதையெல்லாம் நீ சமாளிக்கிறாராய் பாரதி.
எத்தனை பேர் உன்னிடம் வந்து கேட்டார்களோ?வலியை மறைத்து என்னிடம் சமாளித்தாயோ!! என்னிடம் சொன்னாள் வருந்துவேன், கோபப்படுவேன், என்று எத்தனை விஷயங்களை உன்னுள் புதைத்து வைத்துக் கொண்டு இருக்கிறாயோ!!
இதற்கு நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் பாரதி. அதற்கு நீ ஒப்புக் கொள்வாயா என்று தெரியவில்லை. ஆனால் நான் என் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்ற தீர்க்கமான முடிவுடன் கண்ணயர்ந்தான் ஆதி.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro