அவள்-39
அனு நீ என் செல்லமில்ல. அமைதியாக இருடா...என சிவா குழந்தையுடன் புலம்பிக் கொண்டிருக்க.
ஆதி மேலே இருந்து சிவாவையும் அனுவையும் பார்த்து சிரித்தபடி கீழிறங்கி வந்து அனு என்று கதைத்தது தான் தாமதம் குழந்தை சிரித்துக் கொண்டே அவனிடம் தாவியது.
சிவா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு குழந்தையிடம் என்னப் பார்த்தா உனக்கு வில்லன் மாதிரி தெரியுதா உனக்கு என்று கேட்க.
ஆதி சிரித்துக் கொண்டே சிவாவின் முதுகில் ஒரு குத்து வைத்த படி சின்னக் குழந்யைங்க சின்ன வயசுல இப்படித்தான் இருப்பாங்க. கொஞ்சம் விளங்குற வயசு வந்ததும் அவங்களுக்கே புரிஞ்சிடும்.என்று கூற.
டேய் மச்சான் உனக்கு சொன்னா புரியாது. நீயும் அப்பாவாகி உன் குழந்தை உன்ன தவிர மற்ற எல்லார் கூடயும் இருக்குறப்ப என் கஷ்டம் உனக்கு புரியும் என்று கூற.
ஆதி ஒன்றும் கதைக்காது சிரித்துக் கொண்டே அவ்விடம் விட்டு செல்ல. தான் கூறியதின் கருத்தை உணர்ந்த சிவா நாக்கை கடித்துக் கொண்டான்.
கவியின் வளைகாப்பிற்கு கார்த்திக் வந்து கவியுடனே இருந்தாலும் கவியின் முகம் கலையிலந்தே இருந்தது.
கார்த்தி என்னமா எதாவது உடம்புக்கு முடியலயா? இல்ல வேறு ஏதாவது பிரச்சினையா என்று கேட்டும். எதுவும் இல்லை அடிறடித்துச் சொல்லி விட்டாள்.
ஒருவாராக ஆதி, பாரதி,ரோஹினி,சிவா,வம்சி,லதா,ராஜ், கோவை பாட்டி என எல்லோரும் தயாராகி கவியினது வளைகாப்பிற்கு செல்ல.ஆதியின் மனமோ ஏதோ பதட்டமாகவே இருந்தது.
கவியின் வளைகாப்பிற்கான ஏற்பாடு அதிரடியாக நடந்து கொண்டிருந்தது. பெண்கள் படை படையாக வீட்டுக்கு வந்த வண்ணமிருக்க.
கவி வாடிய முகத்துடனே அமர்ந்து வாயிலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாரதி ஆதியோடு உள் நுழைவதைக் கண்டதும் கவி சிரித்துக் கொண்டே எழுந்து பாரதியை நோக்கி ஓடிச் செல்ல.
பாரதி மெதுவா... மெதுவா என்று பதறவும் கவி மெதுவாக நடந்து வந்து பாரதியின் அருகே வர.
என்ன கவி இன்னும் கவி இன்னும் குழந்தை மாதிரி ஓடிக்கிட்டு. நீயே இப்போ அம்மாவாகப் போற. கொஞ்சம் பொறுப்பா நடந்து கோ என்று கூறிக் கவியின் கரம் பற்றி அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தினாள் பாரதி.
வளைகாப்பு நல்ல படியாக நடந்து கொண்டிருக்க அனைவரும் மஞ்சள் தடவி குங்குமம் இட்டு காப்பு அணிவித்து ஆசிர்வதித்தனர் தாயையும் சேயையும். பாரதியும் ஒரு புறமாக இருந்து இதை கவனித்துக் கொண்டிருந்தாள்.
ஆதி பாரதியின் அருகில் சென்று பாரதி நீயும் வளையல் போடேன் என்று கூற,
சும்மா இருங்க. வீண் வம்பு வேணாம். என்று ஆதியின் வாயை அடைக்க.
கவியோ பாரதி பார்த்து அக்கா வா. என்று கூற இல்ல கவி நான் லேட் ஆ வரேன் என்று கூற.
ப்ளீஸ் கா வாயேன் என்று கொஞ்ச பாரதிக்கு கவி கொஞ்சுவது பிடிக்காவிட்டாலும் ஆனாலும் தயங்க.
ஆதியும் நிலமை புரியாமல் பாரதி நீ போ என்று வேறு சத்தமாக கூற.
பாரதியும் குனிந்து மஞ்சள் எடுத்து கவிக்கு தடவ கையை கொண்டு செல்லும் போதே.
ஏய் நிறுத்து என்று சரளா சபை என்று பாராமல் சத்தமிட்டவாறு பாரதியை நெருங்கி.
உனக்கு அறிவே இல்லையா? ச்ச என்ன படைப்போ...
வெட்கம், மானம் எதுவுமே இல்லையா? என்ன ஜென்மமோ ஒரு தடவ சொன்ன புரியாதா?
அபசகுணம் பிடிச்ச உன் கையால அவளுக்கு நலங்கு வெக்க போற. நீ தான் குழந்த பெற தகுதி இல்லாதவாச்சே.
உனக்கு தனியா சொல்லித்தரனுமா? உன்ன மாதிரி ஆட்கள் இந்த மாதிரியான பங்ஷன்ல கலந்துட்டா ஒரு ஓரமாக நின்னு பாத்தோமா... சாப்பிட்டோமா... கிளம்பினோமானு இருக்கனும்னு. என்று நடுமேடையில் பேச.
பாரதிக்கு அனைவரும் அவளை ஏளனமாய் பார்ப்பது போல் அவமானமாய் உணர்ந்தாள்.
ஆதி ஆவேசமாய் சரளாவை நெருங்க.ஆதியின் கையை பிடுத்து ஆதியை கட்டுப்படுத்தி விட்டு.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அழுது கொண்டே வீட்டிலிருந்து வெளியே ஓடினாள்.
அவ்வளவு தான் கவி ஆக்ரோஷமாக எழுந்து விட்டாள். கழுத்தில் இருந்த மலர் மாலையை பித்து வீசி விட்டு.போதும் அத்த போதும்.இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க. உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கா அத நினைவு வச்சிட்டு பேசுங்க.
சும்மா அபசகுணம் அது இதுனு பேசுறீங்க. கடவுள் எனக்கு குழந்தைக்கும் என்ன விதிச்சிருக்கோ அது நடந்தே தீரும். அத யாரலயும் நிருத்த முடியாது. அக்கா மனசு சுத்தமானது. அப்படியே பார்த்தா அக்கா இல்ல அபசகுணம் பிடிச்சவ. நீங்க தான். உங்க மனசு முழுக்க பொறாமையும், வஞ்சகமும் தான் நிறைஞ்சு இருக்கு என்று கூறியவாறு விறு விறு என்று மாடிக்கு ஏறி தடார் என்று கதவை அறைந்து சாற்றினாள்.
ஆதிக்கோ கோபத்தின் அளவை சொல்லவே வேண்டாம் உடம்பு முழுக்கு நடுங்க ஒரு வார்த்தை கூட வாயால் பேச முடியாத நிலமையில் இருந்து ஒருவாராய் மீண்டவனாய்.
சரளா அருகில் சென்று என் பொண்டாட்டிக்கு மட்டும் ஏதாவது ஆகிச்சி. அது தான் உன்னோட கடைசி நிமிஷம் என்று வெளியேற, அவனோடு சேர்ந்து அவனது குடும்பமும் வெளியேறியது.
ஆதியோ காரில் ஏறி தன்னை தானே திட்டிக் கொண்டான்.பாரதி அவ்வளவு வேண்டாம் வீண்வம்பு என்று சொல்லியும் நான் தானே போகச் சொன்னேன். எனக்கு மனசல்லாம் ஒரு மாதிரி இருக்கே அப்போ அவளுக்கு எப்படி இருக்கும். எல்லாம் என்னால் தான் என்று தவறு முழுவதையும் தன் மேல் போட்ட படி. வீட்டுக்குத் தான் போய் இருப்பா என்று விரைவாக காரை செலுத்தினான்.
அறை முழுவதும் பொருட்கள் அங்கும் இங்கும் சிதறி கிடக்க. பாரதியோ தலைமுடி எல்லாம் களைந்து அழுதழுது முகம் வீங்கி கண்கள் இரண்டும் சிவந்திருந்தது.
பாரதி அவ்வாறு இருப்பதைக் கண்ட ஆதி ஆடிப்போய் நின்றான்.
பாரதியை ஒரே எட்டில் நெருங்கி. பாரதி ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுமா நான் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல.
நான் எல்லோரும் நலங்கு வைக்குறக நீ ஆசையா பார்த்திருந்தத கண்டுட்டு தான் உனக்கு நலங்கு வைக்க சொன்னேன். என்ன மன்னிச்சிடுமா...
என்னங்க நீங்க என்ன விட்டுடுங்க, விட்டுங்கனா....
நா அபசகுணம் பிடிச்சவள்,ராசி இல்லாதவ அதனால டிவோஸ் தந்துட்டு வேற ஒரு என்று சொல்லும் போதே பாரதியின் கன்னம் தீயாய் எறிந்தது. இதுக்குப் பிறகு இப்படி ஏடா கூடமாக பேசினா தொலச்சிடுவேன். என்று கூறி இருக அனைத்துக் கொண்டான்.
அவள் வருவாள்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro