Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவள் 38

பதினைந்து நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ்  செய்து அழைத்துச் செல்ல ஆதி மற்றும் வம்சி மட்டுமே வந்தனர்.
பாரதிஏன் நீங்க இரண்டு பேரும் மட்டும் வந்துருக்கீங்க என்று கேட்பாள் என அறிந்த வம்சி.

அண்ணி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு அதனால வாய மூடிட்டு வரனும் என்று உத்தரவிட பாரதி வாயை மூடிக் கொண்டாள்.

பாரதி என்ன சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்று எண்ணிய படி செல்ல. கொஞ்சம் தூரம் சென்று வம்சி கறுப்புநிறப் பட்டியால் பாரதியின் கண்களைக் கட்டினான்.

வம்சி என்ன பன்னுற எனக்கு  எதுவுமே விளங்க மாட்டேங்குது என்று சிறுபிள்ளை போல் கூற ஆதி வாய் விட்டே சிரிக்க.

என்ன அண்ணி கண்ண கட்டுறது ஒன்னுமே விளங்காம இருக்கத்தானே, எல்லாம் விளங்க யாராவது கண்ண கட்டுவாங்கலா? என்று கூற பாரதி வாயை மூடி அமைதியானாள்.

ஆதி வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு பாரதியை வீட்டின் கதவு முன் நிறுத்தி கண்ணில் இருந்த துணியை அகற்றிவிட்டு ஆதியும் வம்சியும் மறைந்து நின்றார்கள்.

பாரதி கண்ணில் இருந்த கட்டு அப்புறப்படுத்தவும் மெதுவாக கண்ணை திறந்த பாரதிக்கு எதுவும் விளங்கவில்லை. கண்கள் இரண்டும் இருட்டாக இருக்க திரும்ப கண்ணைக் கசக்கி விட்டு திறக்க ஆதியின் வீட்டுக் கதவின் முன் நின்றிருந்தாள்.

ஆனால் கதவு மூடப்பட்டிருக்க ஆதி, வம்சி இருவரையும் காணவில்லை. உள்ளுர பயம் வந்தாலும் மெதுவாக கதவை திறக்க கதவு திறந்து கொண்டது.

வீடு முழுவதும் கும்மிருட்டாக இருக்க மெது மெதுவாக லைட்டின் ஸ்விட்ஷை நெருங்கும் போது கதவு மூடிக்கொண்டது.

பாரதியின் இதயம் டக் என்று நின்றது. இதயத்துடிப்பு  அதிகரிக்க யாராவது இருக்கீங்கலா....
ப்ளீஸ் பேசுங்க... பயமா இருக்கு  என்று அழுகுரலில் பேசியும் பதில் ஏதும் இல்லை.

பாரதி  நடுங்கிய கையுடன் லைட்டை ஒன் செய்ய வீட்டில் இருந்த அனைவரும் பிறந்தநாள் வாழ்த்தைக் கூற பாரதி பயம்,சந்தோஷம் என்ற இரண்டும் ஒருசேர வர அழுதே விட்டாள்.

பாரதியின் முன்னால் அழகிய வேலைப்பாடுடன் கூடிய இதய வடிவ  கேக் ஒன்றில் ஹேபி பர்த் டே மை ஏஞ்சல் என எழுதியிருக்க,

கேக்கை கட் பண்ண சென்றவள் ஆதியைக் காணாது  ஒரு நிமிடம் திகைக்க. அடுத்த புறத்திலிருந்து வந்த ஆதி. ஹேயி பர்த் டே மை பேபி என ஸ்ப்ரே பண்ணினான்.

பாரதி கேக்கை கட் பண்ணி அனைவருக்கும் கொடுத்து விட்டு. மகாவிடம் வந்து கட்டி பிடித்து எப்பமா...வந்தீங்க என்று கேட்க. காலைல தான்மா வந்தோம்.

அஜயும் மாப்பிள்ளையும் சேரந்து உன்ன சர்ப்ரைஸ் பண்ணும்ணு சொல்லி என்ன ஹாஸ்பிடல் வர விடலமா...

அதான் உன்ன பார்க்க வரல என்றார் மகா சோகமாக.

பாரதி அதைக் கேட்டு புன்னகைத்து விட்டு அதுக்கு விட்டு அதுக்கு என்னமா... அது தான் நான்  இப்போ வந்துட்டேனே.

ஆதியிடம் சென்று கட்டிப்பிடித்து  ரொம்ப ரொம்ப தேங்ஸ் என்று கண் கலங்கக் கூறினாள்.

நாட்கள் நகர பாரதி வீட்டினரும் அடிக்கடி வந்து பாரதியிடம் நலம் விசாரித்துவிட்டுச் சென்றனர். பாரதி ஆதியிடம்  அவள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சொல்லவுமில்லை ஆதி அழைத்துச் சொல்லவுமில்லை.

பாரதிக்கு கவி போனில் பேசி சுகம் விசாரித்தாலே தவிர  ரேரடியாக வந்து பார்க்கவுமில்லை. பாரதியை அழைக்கவுமில்லை.

பாரதி அஜய்,தேவா  வந்த  பொழுது ஏன் கவி வரல என்று கேட்க.

அக்கா கவி இந்த மாதிரியான நேரத்துலவெளியில் அடிக்கடி அழையக் கூடாதுனு  சரளா அத்தை ஸ்ட்ரிக்டா  சொல்லிட்டாங்க. நாங்க நம்ம வீட்டுக்கு வந்த பிரகாவது அத்த அவங்க வீட்டுக்கு போவாங்கனு பார்த்தா  கவியோட வளைகாப்பு முடிஞ்ச பிறகு தான் போவாங்கலாம். என்று சொல்லி சலித்துக் கொண்டான் அஜய்.

பாரதிக்கு வீட்டில் ஏதோ சரியில்லை என்று விளங்க அத்துடன் அந்த கதையை நிருத்தினாள்.

அஜய் அவன் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் அம்மா எத்தனை நாளுக்கு தான் அக்காவ இங்க வரவிடாம தடுத்து வைக்கப் போறீங்க...

பாவம் மா அக்கா....

இல்லடா பாரதி  இங்க வரதுல எனக்கோ இல்ல  உன் அப்பா கவி, தேவா யாருக்கும் பிரச்சினை இல்ல.

ஆனா கவியோட அத்த. பாரதி வீட்டுக்டு வந்த பிறகு ஏதாவது ஏடாகூடமா பேசினா என்றால் எனக்கு தாங்குற சக்தி இல்லப்பா...

பாவம் பா பாரதி... அவள் மனசளவுல குழந்தை மாதிரி, யாருக்கும் எந்த கொடுதலும் நினைக்காதவப்பா...

சரளா ஏதாவது பேசினா மாப்பிள்ளை கேட்டுட்டு சும்மா இருக்கமாட்டாறு. பிரச்சினையாகிடும் பா. அதான் கொஞ்ச நாளைக்கு  பாரதி  அவங்க வீட்டுலேயே இருக்கட்டும்னு  மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டன்.என்று சொல்லி மகா கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

நாட்களும் இனிதாக நகர கவியின் வளைகாப்பும்  வர பாரதியிற்கும் ஆதி வீட்டினருக்கும் கவியின் கணவர் அழைப்புவித்திருக்க. சரளா வஞ்சமாக தனது திட்டத்தை செயற்படுத்த ஆயத்தமாகினார்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #lovestory