அவள் 37
டாக்டர் அவனது நிலையை உணர்ந்தவராக சிரித்தவாரே அவ்விடம் விட்டு நகர்ந்தார். உள்ளே நுழைந்த ஆதி. பாரதி உள்ள நிலையை கண்டதும் நோறுங்கிப் போனான். எப்போதும் ஓடிக்கொண்டும். சிரித்த வண்ணம் குறும்பாக அவள் செய்யும் சேட்டையும் அவனுக்கு நினைவு வர, பாரதி பல மெஷின்களின் கட்டுப்பாட்டில் தன்னையே அறியாமல் இருப்பவளை பார்த்து ஆதியின் கண்கள் தானாக வழிந்தது. பாரதி அருகில் சென்று இருக்கையில் இருந்து சோர்வாக வாடிப்போய் இருந்தவள் முகத்தில் இருந்த முடியை அகற்றி மென்மையாக முத்தமொன்றை நெற்றியில் பதித்தான்.
ஆதி பாரதியை பார்த்து உனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுனு தானே நான். நம்ம வீட்டுக்கு போக அழைத்தேன். நீ அங்க இருந்தா உனக்கு ஏதாவது ஆகிடுமோ என்கிற பயத்துல தானே நான் உன்ன நம்ம வீட்டுக்கு அழைச்சேன். நீ நல்லா இருக்கனும்னு என்று நா நினைத்தது தப்பா பாரதி.... என்று மெதுவாக அவள் காதருகே கதைக்க ஆரம்பித்தவன் ஆவேசத்தில் பேசிக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என் உயிர எடுக்காம என்ன கொண்ணுடியே பாரதி, நீ இல்லாம நான் எப்படி வாழுரது. இதுக்காகவா உன்ன காதலிச்சி, உனக்கே தெரியாம கல்யாணம் வர கூட்டி வந்தேன். என்று பாரதி கையை பிடித்த படி பேசிக் கொண்டிருக்க. பாரதி உடலில் சிறு அதிர்வு தென்பட்டது.
ஆதியின் கண்ணீர் பாரதியினிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்திருக்க.
ஆதி பாரதியை பார்த்து பாரதி... பாரதி என்ன பாரு பாரதி.... என்ன பாரு டி... என கதைப்பவனது வார்த்தை பாரதியின் காதில் விழுந்து கண்ணால் கண்ணீர் வடிந்தது.
பாரதியின் கண்ணீரை துடைத்து விட்டவன் ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வர. டாக்டர் பரிசோதித்து விட்டடு இனி பயப்பட தேவை இல்லை.
சாதாரண வேர்ட் இட்டுகு மாற்றி விடலாம் என்று கூறச் சென்றார்.
மெதுவாக கண் விழித்த பாரதி எழுந்து அமரப்போக. என்னடி செய்ர பேசாம படுத்து ரெஸ்ட் எடு என்று ஆதி அதட்டவும் ஆதியிர் குடும்பத்தினர் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.
ரோஹினி பாரதியை பார்க்க தவமாய் தவித்துக் கொண்டிருந்தாள்.
எனவே உள்ளே வந்த உடனே அண்ணி என்ன மன்னிச்சிடுங்க. ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க என்று கெஞ்ச. பாரதி எழுந்து அமர தடுமார ஆதி அவளை கை தாங்கலாக பிடித்து மெதுவாக சாய்ந்தவாறு அமர வைத்தான்.
என்ன ரோஹினி நீ.... தப்பு பண்ணினா தானே மன்னிக்கனும். நீ என்ன தப்பு பண்ணின.நீ தானே ஒரே சொல்லுவ. நான் உனக்கு அண்ணி இல்ல. அக்கானு.
தங்கை,அக்கா கூட சண்ட போடுறது சகஜம். இதுக்கு போய் யாராவது மன்னிப்பு கேட்பாங்களா?. மன்னிப்ப அது இதுனு என்னயும் கஷ்டபடுத்திகிட்டு, நீயும் கஷ்டபட்டுகிட்டு. என்று தன்மையாக எடுத்துக் கூறினாள்.
ரோஹினியினது மாற்றம் சிவா உற்பட அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
லதா பாரதியை நெருங்கி எப்படிமா இருக்க என்று கேட்க பாரதியின் கண்கள் கலங்கியது. அதைக் கண்ட. லதா என்னம்மா... உடம்புக்கு எதாவது செய்யுதா என்று கேட்க. இல்லை என தலை அசைத்தவள். அம்மா ஞாபகம் வந்துடுச்சி அதான் மற்றபடி வேறு ஒன்னும் இல்ல என்று கூற.
ஆதி அவளையே பார்த்துக் கொண்டிருந்தானே ஒழிய அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.அவன் அறியாக பாரதியா? என்ன.
அத்த நா... நான் உங்க மடில படுத்துக்கவா. ஒரே அம்மா ஞாபகமா இருக்கு என்று கேட்க.
என்னமா எதுக்கு இவ்வளோ தயக்கம். இதுக்கு எல்லாமா அனுமதி கேட்பாங்க என்று அமர்ந்து அவளது தலையை வருடி விட மருந்தின் வீரியம் காரணமாகவோ,உடல் அசதி காரணமாகவோ கண்ணயர்ந்தாள்.
தொடரும் ......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro