அவள் -34
நர்ஸ் பயந்து போய் ஆதியின் முகத்தைப் பார்க்க. அவன் பிரம்மை பிடித்தவன் சுவரையே வெறித்த வண்ணம் இருந்தான்.
திடீரென சொல்லுங்க சிஸ்டர். என் வைப்க்கு என்னாச்சி. அவளுக்கு எதுவும் ஆகாதுல. அவள் என் கிட்டயே பத்திரமாக வந்துடுவால்ல. எதுக்கு சிஸ்டர் அமைதியா இருக்கீங்க சொல்லுங்க.... சிஸ்டர் சொல்லுங்க... என தொப்பென கீழே விழுந்து அழுபவனை என்ன செய்வது என தெரியாமல் ஹாஸ்பிட்டலில் இருந்த அனைவரும் பரிதாபமாக பார்த்தனர்.
அங்கு இருந்த முதியவர் ஒருவர். உன் பொண்டாட்டி உன்ன விட்டு எங்கயும் போக மாட்டா.என்று கூற.
நர்ஸ் அருகில் வந்து ஆமா ஸார். உங்க வைப்க்கு ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு. அவங்களுக்கு எதுவுமாகாது. டோன்ட் வொரி. கவலைய விட்டுட்டு கடவுள் கிட்ட வேண்டிக்குங்க. என்று கூறிய படி இருக்க.
ராஜ்,லதா,வம்சி, கோவை பாட்டி என அனைவரும் ஓடி வந்தனர்.
லதா ஆதி இருந்த நிலையை பார்த்து ஆடிப்போனார்.
டேய் ஆதி இது என்னப்பா கோலம். என்னடா நடந்தது என்று அவன் அருகில் சென்று கேட்க.
லதாக்கே ஆதியின் நிலையை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.
லதா ஆதியின் தலையை தடவி. நீ கும்பிடுற உன்ன கை விடமாட்டாருபா. என்று ஆறுதல் சொல்ல.
வம்சி ஆதியை நெருங்கி. அண்ணா ப்ளீஸ் அழாதண்ணா.... உன்ன நாங்க இப்புடி பார்த்ததே இல்ல.
வாழ்கைல என்ன ப்ரொப்ளம் வந்தாலும் தைரியாமா முகம் கொடுக்கனும்னு நீ தான் அடிக்கடி சொல்லுவியேணா என்று கூற.
வம்சி என்னால முடியலடா.... அவ என் கண்ணு முன்னாடியே லொறில அடிபட்டுட்டா... டேய் அவ என்ன தனியா தவிக்க விட்டுட்டு போக மாட்டா தானே.
இல்லண்ணா அண்ணிக்கு எதுவும் ஆகாது என சிறுபிள்ளைக்கு சொல்வது போல் வம்சி சொன்னான்.
வம்சி அவள் ஒரு வேளை என்ன விட்டு என்று பேசிக் கொண்டிருந்தவனை வம்சி தடுத்து விட்டு
வேண்டாம்ணா....
அண்ணிக்கு அபசகுணமா கதைக்குறது பிடிக்காதல.என்று வம்சி கேட்ட வண்ணமிருக்க.
அவ்விடம் வந்த நர்ஸ். உங்க பையன் பின் தலை அடிபட்டு காயமா இருக்கு. அதுக்கு கட்டு போட விடமாட்டேன்ங்கிறாருமா... என்று கூற ராஜ் பதறியடித்து ஆதியின் அருகே வர.
ஆதியோ எனக்கு எதுவும் தேவையில்லை. எனக்கு ஏதாவது செய்யனும்னு நினைச்சா.என் பாரதிய குணப்படுத்தி தாங்க என கையெடுத்து கும்பிட்டான்.
ராஜ் ஆதியிடம் இங்க பாரு ஆதி இப்ப நீ கட்டு போடலைனா ப்ளட் வந்துட்டே இருக்கும்.ப்ளட் அதிகமா லாஸ் ஆனா நீ மயக்கமாகிடுவ. அந்த நேரம் பார்த்து பாரதி கண் முழிச்சு நீ எங்கனு கேட்டா நாங்க என்னடா சொல்றது.
பாரதி இருக்குற கண்டிஷன்ல ஷாக் ஆகுற மாதரி எதுவும் சொல்லக் கூடாது.அதனால உனக்காக இல்லன்னாலும் பாரதிக்காகவாவது கட்டு போடுப்பா...என்று கூற கட்டுபோட சம்மதித்தான்.
கட்டுபோட்டு சிறிது நேரத்தில் கவியும் சரளாவும் வர.
மாமா அக்காக்கு என்னாச்சி என்று பதறிய படி ஓடியவளை பார்த்த சரளா; மெதுவாக போடி. உன் அக்கா என்னமோ உலகத்தை விட்டு போய்ட்டா மாதிரி ஓடுற. உன் வயித்துல என் மகனோட வாரிசு இருக்கு. அத ஞாபகம் வெச்சிக்கோ.
கவி சரளாவை முறைத்து விட்டு " சீ இவங்க கார்க்கோட அம்மாவானே சந்தேகமா இருக்கு. என மனதால் நினைத்து விட்டு.
சரளாவை பார்த்து இப்போ பேசினது மட்டு மாமா காதுல கேட்டு இருக்கனும் இந்த உலகத்தவிட்டு போறது நீங்களாக தான் இருப்பீங்க.
சரளா நின்ற இடத்திலிருந்து கதைத்தது ஆதிக்கு நன்றாக கேட்காவிட்டாலும் ஓரளவு கேட்டது. ஆனால் அவனிற்கு இப்போது பாரதியின் நலனே முதன்மைபட்டது அதனால் அமைதியாக இருந்தான்.
ஆதியின் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாய் கழிந்தது. டாக்டர்ஸ் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்க.யாரும் எதுவும் கூற முன்வரவில்லை.
சிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர். மிஸ்டர் ஆதி உங்க வைப்க்கு ஓ பாசிடிவ் ப்ளட் தேவைப்படுது. துரதிஷ்டவசமா அந்த ப்ளட் குரூப்.ப்ளட் பேங்கில் கேட்டும் இல்ல என்டுட்டாங்க. நாங்க முழு முயற்சியா தேடுறோம். நீங்களும் தேடி பாருங்க என்று கூறி உள்ளே சென்றார்.
சரளாவை தவிர அனைவரும் போனில் ஒவ்வொருவரிடமாக விசாரிக்க மகிழ்ச்சிகரமான எந்த தகவழும் கிடைக்கவில்லை.
கார்த்திக்கின் மூலம் (கார்த்திக் கவியின் கணவன்) விடயமறிந்த கார்த்தியின் தங்கை ப்ரியா. சரளாவுக்கு போன் செய்தாள். அம்மா பாரதி அக்காவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சாமே. இப்போ எப்படி இருக்காங்க... என்று கேட்க.
ம்க்கும்... அந்த மகாராசி இன்னும் உயிரோட தான் இருக்கா. ராசி கேட்டவ.
அவளுக்கு ஓ பாசிட்டிவ் இரத்தம் தேவைப்படுதாம். அந்த சிருக்கி நேரத்தபாரு ப்ளட் பேங்கிலயே அந்த இரத்தம் இல்லயாம். பொய் என்றா பாரு அவளுக்கு இரத்தம் கிடைக்காம அவள் போக வேண்டிய இடத்துக்கு போய் சேர போறா என சந்தோஷமாய் சொன்னாள் அந்த கல்நெஞ்சக்காரி
மறுமுனையில் ப்ரியா.
அம்மா பாவம்மா பாரதி அக்கா. உங்களோடதும் ஓ பாசிடிவ் தானே உங்க இரத்தத்துல கொஞ்சம் கொடுத்து ஒரு உயிர காப்பாத்தேன்மா... பாவம்மா உயிருக்காக போராடிட்டு இருக்கா... என்று கூற.
சரளா ஏய் வாய மூடுடி. எனக்கு அட்வைஸ் பண்ணவந்துட்டா... அந்த ராசி கெட்டவளுக்கு நா லீட்டர். லீட்டரா இரத்தம் கொடுக்கனுமா? அந்த ராசி கேட்டவள் இந்த உலகத்துல இருந்து என்னத்த சாதிக்க போறா? அவ போய் சேர்ந்துட்டா எல்லாருக்கும் நிம்மதி.
இதோ இங்க பாரு ப்ரியா... எனக்கும் அதே ப்ளட் குருப்னு யார்டயாவது சொன்ன தொலைச்சிடுவேன்.உன் அம்மாவோட மறுமுகத்தை நீ பார்க்க வேண்டிவரும். என்று கூறி போனை கட் செய்தார்
தொடரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro