அவள்- 33
தன் கணவருடன் கிளம்பியவளின் முகம் முழுவதும் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது. காரில் தனக்கருகில் இருந்து சைட் அடிக்கும் ஆதியை கண்டும் காணாததும் போல இருந்தாள் பாரதி.
பாரதி பார்த்த வண்ணம் வர. கார் ஹோட்டலின் முன் நின்றது.
ஆதி பாரதியை பார்த்து என்ன முழிக்கிற.பசிக்கல?என்றவனை பார்த்து சிரித்தவள். காரை விட்டு இறங்கியவள் ஹோட்டலிற்குள் சென்றாள்.
அவர்களுக்குத் தேவையான உணவை ஓடர் செய்து விட்டு, என்னங்க; என்ன ஸ்பெஷல்.
இல்ல பாரதி உன் கூட கொஞ்சம் கதைக்கனும். என்று மெதுவாக சொல்ல.
என்னங்க. என்ன விஷயம் சொல்லுங்க.
இல்ல பாரதி நாம.
நாம என்று மேலும் கேட்க.
பாரதி நாம நம்மவீட்டுக்கே போய்டலாமா? என்று தான் கேட்க வேண்டியதை வேகமாய் கேட்டு முடித்தான்.
எதுக்குங்க. இவ்வளோ அவசரப்படுறீங்க. அம்மா ஊர்ல இருந்து வந்தும் நம்ம வீட்டுக்குப் போகலாமே என்று கூற.
இல்ல பாரதி நாம இன்னைக்கே போகலாமே என்று கூற.
பாரதிக்கு என்றும் இல்லாதவாறு கோபம் வர.
புரிஞ்சிக்கோ பாரதி. கவியோட அத்தை பற்றி எனக்கு ஏதும் தெரியாதுனு நினைச்சியா? எனக்கு எல்லாம் தெரியும். அவங்க என்ன எல்லாம் உனக்கு சொன்னாங்கனு எனக்குத் தெரியும் என ஆதி கூற,
சரி அவங்க உண்மையைத் தானே சொன்னாங்க...
நான்... நான் குழந்த பெத்துக்க முடியாதவ தானே என்று கூறி முடியும் முன் பாரதியின் கன்னம் சுர் என எரிந்தது.
லூசாடி நீ. என்ன பேச்சு பேசுரனு தெரிஞ்சு தான் பேசுறியா? கொஞ்சம் கூட யோசிச்சி பேச மாட்டியா? என்று சத்தமிட.
ஹோட்டலில் அனைவரும் அவர்களையே திரும்பிப் பார்க்க பாரதிக்கு அவமானமாக இருந்தது.
வேகமாக எழுந்தவள் வெளியே செல்ல.
ஏய் பாரதி நில்லு என்று அதீத கோபத்தில் அதிகாரத் தொனியில் கத்த.
பாரதியோ அழுது கொண்டே வெளியே செல்ல.
ஆதியோ இயலாமையுடன். ப்ளீஸ் பாரதி நான் சொல்லுறத பொறுமையா கேளுடி. நில்லு பாரதி . நில்லு ப்ளீஸ் மா என கெஞ்சிய வண்ணம் பின்ன செல்ல.
பாரதியோ எதையும் காது கொடுத்து கேட்காமல் ஹோட்டலை விட்டு வெளியேறி வேகமாக சாலையை கடந்தாள்.
ஆதி அவளை பின் தொடர்ந்து வர வேகமாக வந்த சைக்கிளைக் காணாது. பாதை மாற முற்பட்ட போது.
பாரதீ..... என்ற தன்னவனது அழைப்பில் திரும்ப.
ஆதி சைக்களில் மோதி கீழே விழுந்து. அருகே இருந்த கல்லில் தலை இலேசாகப்பட்டது.
ஆதி என்ற படி பாரதி சாலையை வேகமாக கடக்க.
வேகமாக வந்த லொறி ஒன்றில் மோதி தூக்கி வீசப்பட்டாள்.
ஆதிக்கு என்ன நடந்தது என்று விளங்கிக்கொள்ளவே ஓரிரு நிமிடம் எடுத்து.
ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு ஆதி ஓட்டமும் நடையுமாக வந்து பாரதியை இரத்த வெள்ளத்திலிருந்து அள்ளி எடுத்து நெஞ்சோடு இறுக்கி அனைக்கவும்.
பாரதியின் இதயத்துடுப்பு கேட்கவும் பாதையிலிருந்து உதவிக்கு வந்த காரில் ஏற்றிக் கொண்டு ஹாஸ்பிட்டலை நோக்கி விரைந்தான்.
ஹாஸ்பிடலை அடைந்தவன். சத்தமாக டாக்டரை அழைத்து. அவளை பரிசோதிக்க சொல்ல.
அவளை பரிசோதித்த டாக்டர் பாரதியை வேகமாக icu விற்குள் எடுத்தார்.
டாக்டர்ஸ் அவசர, அவசரமாக இயங்கிக் கொண்டிருக்க.
வெளியே இருந்த ஆதியோ நொருங்கிப் போய் இருந்தான்.
அந்த நேரம் பார்த்து வம்சி கோல் செய்து
டேய் அண்ணா நல்லா இருக்கியா?
என்று கேட்டதும் கோவி அழுதான்.
அண்ணா!
என்ன நடந்தது. சொல்லுணா
ஆதி நடந்தவற்றை திக்கி திணரி கூறி முடிக்க. வம்சி போனை கட் செய்து இருந்தான்.
ஆதி தனது ஆடைகளை பார்க்க தன்னவளின் இரத்தம் அவனது ஆடை பூராகவும் இருக்க.
அதனை தொட்டுப் பார்க்க. அதன் தாக்கம் அவனது உயிர் வரை சென்று தீண்டியது.
சிறிது நேரத்தில் டாக்டர் வெளியே வர.
ஆதி ஓடிச் சென்று. டாக்டர் பாரதிக்கு ஆபத்து ஏதும் இல்லையே என்று கேட்க.
ஸார் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. தலைல பலமா அடிபட்டு இருக்கு.
அதனால ப்ளட் நிறை லாஸ்ட் ஆகி இருக்கு. அவங்க இன்னும் அபாய கட்டத்த தாண்டல. ஒரு சர்ஜரி பண்ணும். எது சொல்றதா இருந்தாலும் 24 மணி நேரம் கண்காணித்து தான் சொல்லனும். கடவுள்கிட்ட வேண்டிகோங்க. நம்பிக்கை வைங்க என்று கூறியவர் நர்சிடம் சென்று ஆதியின் காட்டி ஏதோ சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
ஆதிக்கு உலகமே இருண்டது. கால்கள் நடுங்க. தடுமாறி அருகில் இருந்த கதிரையில் தொப் என விழுந்தான்.
அதே நேரம் நர்ஸ் அருகில் வந்து. சார் உங்க தலைல இருந்து ப்ளட் வருது. என்ற படி அவனது தலைக்கு மருந்திட முற்பட.
நர்ஸின் கையை பட்டென தட்டி விட்டான்.
என்ன சார் செய்ரீங்க. ப்ளட் வேற வந்துட்டு இருக்கு. காயத்துக்கு மருந்து போடலைனா ப்ளட் லாஸ் ஆகிடும் சார்.
என் பாரதி எப்படி இருக்கா? என எதிர் கேள்வி கேட்டான்.
ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருக்கு. கொஞ்சம் பொறுமையாக இருங்க சார்.
நர்ஸ் தன்மையாக கதைத்தபடி நெருங்கி மருந்திட முற்பட.
எனக்கு இது வேணாம். ஐ வோன்ட் மை வைப் என்று ஹாஸ்பிட்டலே அதிர கத்தினான்.
பாரதிக்கு என்ன நடக்கும்......?
தொடரும்......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro