Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவள் 30

இரண்டு நாட்கள் கடந்து பாரதி ஜூஸ்ஸூடன் கவியின் அறையை நோக்கி சொல்லும் போது. ஏய் நில்லு டீ. என்ற கோபமான அழைப்பில்  திரும்பிப் பார்த்தாள் பாரதி. அங்கே சரளா கோபத்துடன் கண்கள் சிவக்க நின்றிருந்த விதம் பாரதிக்கு உள்ளுர குளிர் விட்டாலும்  வெளியே  தைரியமாக நின்றிருக்க.

பாரதி கையில் இருந்த ஜூஸை பரித்த வேலைக்கார பெண்ணிடம் கொடுத்த. என்ன அத்த என வாய் திறக்க, சரளாவின் சுட்டெரிக்கும் பார்வையால்  வாயை மூடி மெளனமானாள்.

சரளா வேலைக்கார பெண்ணிடம் கவிக்கு ஜூஸை கொடுக்குமாறு பணித்து விட்டு.

நீ வாடி என பாரதியின் கையை பிடித்து தர, தரவென இழுத்துக் கொண்டு  அவரது அறைக்கு இழுத்துச் சென்றார்.

பாரதியை இழுத்து வந்து ஒரே பிடியில் விட்டதால், பாரதி சரளாவின் கட்டிலில் விழுந்தாள்.

சரளா பாரதியை பார்த்து உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? என்னோட மருமக இப்பதான் உண்டாகி இருக்கா... அது உனக்கு பிடிக்கல்லையா?

ஐயோ அத்த நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க. நான் கவிக்கு ஜூஸ் கொடுக்கத்தான் போனேன்.

சரளா  முறைத்த படி அந்தக் கருமத்தை தான்  நானும்  சொல்லுறன். நான் குத்து கல்லாட்டம் இருக்குறப்போ. நீ எதுக்கு இது எல்லாம் பண்ணுற.

குழந்த பாக்கியம் இல்லாத நீ இதெல்லாம் செய்யலாமா? உன் தலைக்குல் மூலைனு ஒன்னு இருக்கு தானே. எதுவுமே தெரியாம பண்ணுறிய்யா? இல்ல எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கிரியா? உனக்கெல்லாம்  எங்கே குழந்தை பிறக்கப் போகுது.

கவிக்கோ இல்ல அவ வயித்துல வளர்ர குழந்தைக்கோ ஏதாச்சும் ஆகட்டும். அதுக்கு அப்புறமா  உன்னக்கு  நான் யாருனு காட்டுறேன்.

ப்ளீஸ் அத்த இப்படி எல்லாம் பேசாதீங்க. மனசாட்சியே இல்லாம நீங்க கதைக்கிரீங்க. நீங்களும் ஒரு பெண்ணு தானே. கவி என்னோட கூடப் பிறந்தவ. அவளுக்கு நான் கெடுதல் நினைப்பேனா? என்னோட வலிய புரிஞ்சிக்காம  இப்படி வாய்க்கு வந்த படி பேசுரீங்க. இது உங்களுக்கே தப்பா தெரியலயா?

போதும் டீ உன் நடிப்பு. என்னம்மா நடிக்கிற. என் மருமகளுக்கு  காபி கொடுக்குறேன், பால் கொடுக்குறேன், பழம் கொடுக்குறேனு கண்டதையும் கொடுக்குற.

பாவி... சொந்த தங்கச்சினு  பார்க்காம கண்டதையும் கொடுக்குற. அதன் மூலமா கர்பத்தை கலைக்க அலைறியே நீ எல்லாம் நல்லா இருப்பியா?

உன்னால யாருக்கும் நிம்மயில்ல. எல்லோருடைய  சந்தோஷத்தையும் கெடுக்கப் பொறந்தவள் தான் நீ.

அதனால தான் உன்  தம்பி. உன் அம்மா, அப்பா, அவன்  மனைவி   எல்லாம் வெளிநாட்டுக்கு போயிட்டாங்க.என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசய படி.

போடீ வெளியே என்று பாரதியை வெளியே தள்ளி. கதவை தாழிட்டார்.

பாரதி கண்ணில் இருந்து கண்ணீர் கொட்ட வேகமாக தனது அறைக்குச் சென்று  கதவை தாழிட்டு கட்டிலில் விழுந்து தேம்பித் தேம்பி அழுதாள்.

சீ  எவ்வளவு கேவலமாக பேசிவிட்டார். நான் கவி கர்பமாக இருக்கிறத தெரிஞ்சி எவ்வளோ சந்தோஷப்பட்டன்.

எனக்கு கிடைக்காத  குழந்தை வரம் கவிக்கு கிடைச்சதுன்னு சந்தோஷப்பட்டன். இப்படி  பேசிட்டாங்களே என குலுங்கிக் குலுங்கி  அழுதாள்.

அவங்க சொன்னது போல  ஆதியும் குழந்தைக்காக  ஏங்குறானா? எது என் கிட்ட சொல்ல முடியாம மறைக்கிறானா? என எண்ணி மறு மூச்சு அழுதாள்.

"உனக்கெல்லாம்  எங்கே குழந்த பிறக்கப் போகுதுனு" கேட்ட  வார்த்தை  மீண்டும் மீண்டும் நினைவு வர. ரெஞ்சை ஏதோ அழுத்தியது போன்ற உணர்வு. ஆனாலும் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டிருந்தது.

மாலை நேரமாகியும் பாரதி அறையை விட்டு வெளியே வரவில்லை.

கவி  அக்காவிற்கு ஏதாவது உடம்பு சரியில்லையோ என நினைத்து. பாரதியை தொந்தரவு செய்யாமல் இருந்தாள்.

பாரதியோ  அம்மா, அப்பா, அஜய் , தேவா எல்லாம் அஜயோட படிப்புக்காக தானே வெளிநாட்டுக்கு போனாங்க. ஆனா அத்த இப்படி சொல்லுராங்க. என்று நினைத்த படி அஜக்கு அழைத்து பேச.

அக்கா எப்படி இருக்கீங்க. மாமா,கவி எல்லாரும் நல்லா இருக்காங்கலா?

என்னோட கோர்ஸ் இன்னும் மூனு மாசத்துல முடியுது. கவியோட வளைகாப்புக்கு முன்னால நாங்க வந்திடுவோம். அக்கா என்ன இருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வேறு எங்கயும் சரி வராது. என்று கூற அஜய் படிக்கவே சென்றான் என்பது உறுதியாக. மேலதிக விசாரணைகளோடு போனை வைத்தாள்.

கதவு தட , தட என்று தட்டப்படும் சத்தம் கேட்டு சுய உணர்வு பெற்றவள். ஒரு வேளை சரளா அத்த இங்கயும் வந்துட்டாங்களோ... என பயந்து , பயந்து மெதுவாக கதவை திறந்தாள்

தொடரும்....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #lovestory