அவள் 29
ஆதி ஆபிஸிற்கு சென்ற பின் வழமையான வேலைகளை பாரதி தொடங்க.
லதா பாரதியின் அருகில் சென்று அம்மா பாரதி.ரோஹினி சொன்னது எதையும் மனசுல வச்சிசாதமா...
அவள் என் மாமியார் கூட சேர்ந்துட்டு இப்படி நடந்துக்குரா. அவள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்மா என இரண்டு கைகளையும் சேர்த்து வணங்க.
பதறிய பாரதி. ஐயோ என்ன அத்த. நீங்க வேற அவ சின்னப் பொண்ணு. தெரியாம பேசுறா. இத யாரு சீரியசா எடுத்துப் பாங்க.
ஆனால் நீங்க செய்றது தான் கஷ்டமா இருக்கு.மன்னிப்பு அது இதுனு கேட்டு என்ன கஷ்டப்படுத்துறீங்க.
லதா கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டு பாரதியின் நெற்றியில் முத்தமிட.
இதனைக் கண்ட வம்சி. தொண்டையை சொறுமிக் கொண்டே அய்யோ..... கடவுளே.....
இவங்க அலப்பற தாங்க முடியலயே என கேலி செய்ய.
பாரதியும் லதாவும் சிரித்துக் கொண்டே.
ஆமாடா நானும் என் பொண்ணும் வேண்டியத செய்வோம்.அதில உனக்கு பொறாமையா? என லதா கேட்க.
என்னது.... பொறாமையா..... எனக்கா.... இந்த வம்சி கிரிஷ்ணாக்கா....
ஹும் இது உங்க பொண்ணா? என் ஆதினா மனைவி. உங்க மருமக.
நீங்க இப்படிலாம் தாங்கு தாங்குனு தாங்க கூடாதுமா? எத்தன நாடகம் பார்க்குற. அதுல ஒன்னுல சரி உன்ன போல மாமியார் இருப்பாங்களா?
அப்பதான் மா உங்க லைப் ரொம்ப கலை கட்டும் என்று கூற.
டேய் வம்சி. இவ என் தம்பி பொண்ணு. அதனால பார்த்தா பாசம் மட்டும் தான் வரும்.
நீ கல்யாணம் பண்ணின பிறகு நான் யாருனு சரியா காட்டிடுறன் சரியா? அப்போ என் லைப் ரொம்ப ரொம்ப கலை கட்டும்ல.
என்னது....
எனக்கு வரப்போறவலுக்கு நீங்க வில்லியா?
அம்மா என்ன விட்டுடுங்மா... நான் இதுக்கு வரல என ஓடிட. நிலமை சீராகி வீடு பழைய படி கலகலப்பானது.
அதே நேரம் பாரதிக்கு கோல் வர. ஆன்ஸர் செய்ய மறுமுனையில் கவி சொன்ன செய்தி கேட்டு குதூகலமானாள்.
அத்த... அத்த என ஓடி வந்து சமயலறையில் இருந்த ஸ்வீட்டை எடுத்து லதாவின் வாயில் போட்ட படி. அத்த நம்ம கவி அம்மாவாக போறாலாம். என சந்தோஷத்தில் குதிக்க.
லதாவோ மனதால் (இவளுக்கும் ஒரு குழந்தைய கொடுத்திடு கடவுளே. என மனமுறுக வேண்டிக் கொண்டார். இவளுக்கும் ஒரு குழந்த இருந்தா எவ்வளோ சந்தோஷப்படுவாள். ஏன் தான் கடவுள் இவ்வளோ சோதிக்கிறாங்களோ என்றார். இனி தான் சோதனையே ஆரம்பம் என்பதை அறியாமல்)
ஆதிக்கு போன் செய்து. என்னங்க கவி அம்மாவாக போறாலாம். கார்த்திக் வேற ஊருல இல்ல. அம்மா, அப்பா, அஜய், தேவா வேற நாட்டுல இல்ல. நான் மட்டும் தான் இருக்கேன். நான் போறேன் என போனை வைக்கச் சென்றவளை ஆதியின் குரல் தடுத்தது.
சரி நீ போய்வா... பதறம போ. வம்சி வீட்டுல தானே இருக்கான். அவன் கூட போ...
அது என்ன. நான் போறேன், நான் போறேன்... என்ன பேச்சு இது. நான் போய் வாரேன்னு சொல்லு என செல்லமாக கோபித்துக் கொண்டான்.
ஸாரி பேபி. நான் போய் வாரேன் என சிறு பிள்ளை போல கதைக்க. சரி திவி பாத்து போய்வாமா என்றபடி வைத்தான்.
கவிதா வீட்டுக்கு சென்ற பாரதி. ஆது பிடிக்குமா? இது பிடிக்குமா? கேட்டுக் கேட்ட பார்த்துக் கொண்டாள். எல்லாம் சில நாட்களே....
கவி தாயாகப் போதவதை கேட்ட கார்திக்கின் அம்மா( கவியின் அத்தை)பாரதி கவியை பார்த்துக் கொள்வதனை அறிந்து ஊரில் இருந்து வந்து விட்டார்.
பாரதியிடம் நீ குழந்து இல்லாதவல் என பட்டும்படாமலும் கூறி விட்டார்.ஆனால் அப்பாவி பாரதிக்கு தான் புரியாமல் போனது.
ஆதி பாரதிவீட்டிற்கு செல்லாமல் தன் வீட்டில் இருக்க. பாரதி இல்லாமல் அவன் சோகமாக இருப்பதை பார்த்த லதா ஆதியை கவி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
ஆதி சொல்லாமல் ஸப்ரைஸாக பாரதி வீட்டிற்கு காலையிலே வர. பாரதி தூங்கிக் கொண்டிருப்பதாக கவி சொல்ல.
ம்... இங்க வந்த பின்னால சரியான கும்பகர்னியாகி விட்டாள் போல என நினைத்து சிரித்து விட்டு.கவி நான் வந்தத உங்க அக்காகிட்ட சொல்லாத. நான் வெளிய உட்கார்ந்து இருக்கன்.
மாமா உங்களுக்குக் காபி கொண்டு வரவா?
இல்ல வேணாமா... நீ ரெஸ்ட் எடு என்ற படி வெளியே சென்றான்.
பாரதியின் தூக்கத்தை ஜன்னல் வழியாக ஊடுருவிய சூரிய ஒளி கலைக்க. மெதுவாக கண்களைக் கசக்கிக் கொண்டு மெதுவாக இமைகளைத் திறந்தாள்.உறக்கம் களைந்த போதும் வெளியே செல்ல மனம் வராமல் படுத்திருந்த படி.
ஆதி உன்ன பார்த்து இன்றோடு பத்து நாள் ஆகிடுச்சி. உனக்கு என் நினைப்பே இல்லையா? என்ன வந்து பார்க்கவே இல்ல. போன் மட்டும் பேசுற என தனியே பேசியபடி எழுந்து. முகம் கழுவி விட்டு பல்கனியின் வழியே பார்க்க. இது அவர் தானா? கண்களை கசக்கி திரும்பப் பார்த்தாள்.
ஆதி தான் எய தெரிய பாரதியிற்கு கொள்ளை ஆனந்தம்.அதன் வெளிப்பாடாக கண்களில் கண்ணீர் பெருகியது.கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்து விட்டு மாடியிலிருந்து வேகமாக இறங்க.
எதிரே வந்த கவியின் அத்த சரளா. பாத்து டீ... புள்ளதாச்சி பொண்ணு முன்ன வந்திடப் போறா.. கடைசில அவளும் உன்ன போல மலடி என்டு பேர் எடுக்கவா? என்று கூறி திரும்பிப் பார்க்க.
பாரதியோ இது எதையும் கேட்காமல் ஓடி இருந்தாள்.(ஆதி மட்டும் கேட்டு இருக்கனும்)
ஆதி வீட்டின் முன்னால் இருந்த தோட்டத்தில் நின்றிருக்க. பாரதி தன்னால் முடிந்தளவு வேகமாக சென்று அவன் இருந்த இடத்தை அடைந்து.
"ஆதி"
அவன் கேட்க துடித்த குரல் மிக அருகில் கேட்கவும் வேகமாக அவள் புறம் திரும்ப.
கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தவளை பார்த்த. ஆதியின் மனம் வேகமாக துடித்தது.
அவளும் தன்னை போலவே ரொம்ப மிஸ் செய்து இருக்கிறாள். என எண்ணும் போது. இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.
பாரதியை இன்னும் ஒரு நிமிடம் கூட வருத்தப்படக் கூடாது என எண்ணி, கையை விரிக்க. ஓடி வந்து தஞ்சமடைந்தாள்.
பாரதி அவன் அணைப்பில் உலகம் மறந்திருக்க.
வீட்டுக்கு வாங்கனு சொல்லமாட்டியா பேபி? என்று கேட்க.
நிலமை உணர்ந்தவள். உள்ள வாங்க என்று முன்னே சொல்ல எத்தனிக்க.
ஆதி அவளை நிறுத்தி கரம் பற்றி அழைத்துச் சென்றான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro