அவள் -28
பாரதி ஆதியின் மீது சாய்ந்து சாரிங்க. நா இனி இப்படி பண்ண மாட்டேன் ப்ராமிஸ்.
ஓகே மை ஸ்வீட் ஹாட் என்று கூறி, கன்னத்தில் முத்தமிட்டு ரோஹினி எங்க. என்று கேட்க. பதறினாள் பாரதி.
எதுக்காக ரோஹினிய தேடுறீங்க.ப்ளீஸ்க இத இத்தோட விட்டுடிங்க. வீட்டுல இருக்குற அத்த, மாமா,வம்சி எல்லாருக்கும் தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. அது மட்டுமில்லாம ரோஹினிய திட்ட வேறு செய்வாங்க. அவ என்ன இன்னும் வெறுத்துடுவா என கண்கலங்க கூற.
சரி நா எதுவும் பேசல. போதுமா?
ஹூம் சரி.
நான் ஆபீஸ் கிளம்பனும். நீ டிபன் ரெடி பண்ணுமா என பாரதியுடன் கதைத்த படி வெளியே வர.
சிவா வந்திருப்பதைக் கண்டான்.(ரோஹினியின் கணவன்) மச்சான் எப்படா வந்த.
இப்ப தான்டா என கூற. ஆதி சிவாவின் அருகில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்க.
ரோஹினி கையில் துணிப் பையுடன் வந்து அண்ணா... நான் போய் வரேன். என்னங்க அண்ணகிட்ட சொல்லிட்டு வாங்க போகலாம். என்றவளது முகத்துயும் பார்க்காமலே போ... திரும்ப வந்துடாதே என்றான் சத்தமாக.
அண்ணா..... என்றாள் ரோஹினி அதிர்ச்சியாக.
உன் விஷம் தடவின நாக்க வச்சிகிட்டு அண்ணானு இந்த வீட்டு பக்கம் வந்துடாத, நல்ல மனுஷியா நல்ல குணத்தோட. முக்கியமா எங்க வீட்டுல யாரையும் கஷ்டப்படுத்தாம இருக்குரதா இருந்தா வா... இல்ல எனக்கு நீ கூடப்பிறந்தவ என்டுரதயே மறந்திடு. நீயும் ஒரு பொண்ணு தானே.
மச்சான் எப்ப வேணாலும் நீ தனியா வா.
உனக்காக எங்க வீட்டு கதவு எப்பவும் திறந்திருக்கும் என்ற படி வேகமாக ஆபீஸை நோக்கி கிளம்பினான்.
ஆதி கிளம்பிய மறுபுறம் முன்னே வந்த லதா.
சரி சிவா வந்தாச்சில கிளம்பு என்று கூற வேகமாக சென்று குழந்தையுடன் சென்று கானில் ஏறிக் கொண்டாள்.
சிவா வந்து காரில் ஏற. ரோஹினி அழுத படியே இருந்தாலும்.
சிவாவோ அசையவே இல்லை. அவன் பாட்டில் சீரான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருக்க.
ரோஹினியின் பொறுமை எல்லாம் பறக்க. முழுக் கோபமும் கணவனின் பக்கம் திரும்பியது.
கட்டின மனைவி அழுவுறாளே! ஏன் அழுவுறனு கேட்டீங்களா? இல்ல ஆறுதலாச்சும் சொன்னீங்களா?
உங்கயெல்லாம் நல்லவர் என்று நம்பி கட்டி தந்த எங்க அப்பாவ செருப்பால அடிக்கனும்.
கட்டியவரும் சரியில்ல. கூடப்பிறந்தவனும் சரியில்ல. என்று ஆதியின் மீதிருந்த கோபத்தை கணவன் மீது காட்ட.
சிவாவோ" நான் ஏன் ஆறுதல் சொல்லனும், நீ ஏன் அழுவுற என்று காரணம் தெரியாவிட்டா தானே ஏன்னு கேட்டு ஆறுதல் சொல்லனும், என்றான் கோபமாக.
என்ன தெரியும் உங்களுக்கு, அண்ணா ஏன் அப்படி பேசினார்னு உங்களுக்கு தெரியுமா? என மூக்கை உறிஞ்சியபடி ரோஹினி கேட்க.
உன் அண்ணா என்ன உன்ன போல லூசா?.. சும்மா இருக்கிறவலுக்கு ஏச?
பாரதிய பற்றி தேவ இல்லாம பேசி இருப்ப. இல்ல அவங்களுக்கு ஏதாச்சும் செஞ்சி இருப்ப.
அதனால தான் உன் அண்ணா உன்ன அங்க வர வேணாம்னு சொல்லி இருப்பான். என்று கூறிய கணவனை அதிர்ச்சியாக பார்த்தாள் ரோஹினி.
நீங்க எப்படி, அப்டி சொல்லுறீங்க என திக்கி திணரிக் கேட்டாள்.
இதுல என்ன பெரிதா தெரிய வேண்டி இருக்கு? அவன் உனக்கு ஏதாவது குறை வச்சானா? நல்ல அண்ணானாக தானே நடந்தான்.கல்யாணத்துல கூட முழுப் பொறுப்பையும் கூட அவனே எடுத்துச் செய்தான். உன் வளகாப்ப கூட நல்லா தானே செய்தான்?
ஒரு மச்சானா... விட அவன் என் நல்ல பிரண்டா ஆதிய பற்றி எனக்கு நல்லா தெரியும்.
நீ அப்படிப்பட்டவன் மனைவிய குத்திக் குத்தி பேசினால். யார் தான் பொறுமையா இருப்பான்.
அவன் ஒரு நல்ல அண்ணன் என்றது எவ்வளவு உண்மையோ அதே அளவு"நல்ல ஒரு கணவன்". எந்த நல்ல கணவனும் மனைவிய திட்ட்றத கேட்டுட்டு இருக்க மாட்டாங்க.
உனக்கு வாய் சரியில்ல. அதனால உனக்கு இது தேவை தான். ஆனால் ஆதிட நட்ப இழக்க நான் தயாராக இல்ல.
இனியும் நீ திருந்தல என்றால்
ஆதி சொன்ன மாதிரி நான் மட்டும் அங்கு போய் வருவேன்.
உன் பிறந்த வீட்ட இத்தோட மறந்திடு. உன்ன கட்டிகிட்ட பாவத்துக்கு. உன்னோட சேர்ந்த நானும் கூனிக் குறுகி நிற்க முடியாது. என்றான் சிவா கடுமையான குரலில்.
திகைப்போடு திரும்பிப் பார்த்த ரோஹினி. அவனது கடுமையான முகத்தை கண்டு வாயே திறக்கவில்லை.
சிவாவும் பேச்சு கொடுக்கவில்லை.
இனியாவது அவளா திருந்த வேண்டும் என மனதால் பிரார்த்தித்துக் கொண்டான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro