Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவள் 27


காலமும் வேகமாய் சுழல ஆதியினது வாழ்க்கையும் மிக மிக இனிமையாய்  நகரந்தது.

//////////////////////////////////

என் செல்லமில்ல கொஞ்சம் சாப்பிடுமா...
கண்ணா நீ சாப்பிட்டா அம்மா ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பேன்டா...என மாடியில் குழந்தையை சாப்பிட வைக்க முயன்று கொண்டிருந்தாள் ரோஹினி.

ஆனால் குழந்தையோ எங்கே உன்னால் முடிந்தால் சாப்பிட வை என வீடு முழுக்க ஓடித் திரிந்து கண்ணாமூச்சியாடியது.

வெளியே ஆடைகளை உலற விட்டு  வந்த பாரதி  இதனை இரசித்துப் பார்த்தாள். தான் உணவு கொடுத்தால் குழந்தை உணவை உற்கொள்ளும் என்ற நம்பிக்கையில். ரோஹினி  தாயேன்  நா ஊட்டினா நம்ம அனு பாப்பா சமத்தா சாப்பிடுவா என கூறியபடி சாப்பாட்டை  வாங்க கையை நீட்டினாள்.

ஆர்வமாக கை நீட்டிய பாரதியை ஏளனமாகப் பார்த்தவள். ஓஹ்  உங்களுக்கு ப் பத்துக் குழந்தை வளர்த்த அனுபவமா என ஏளனமாக சிரித்தாள்.

எங்கண்ணா தான் உங்கள கட்டிகிட்டு கஷ்டப்படுறான். உங்களுக்கு பிடிச்ச சனி என் பொண்ணுக்கும் பிடிக்கனுமா? வந்துட்டா என் குழந்தைய வளர்க்க. குழந்தைக்கு ஊட்டுறன் என்று சொல்லி என்னையும் என் குழந்தையையும் பிரிக்க ப்ளேன்.பண்ணுரியா?

"இந்த ரோஹினி கிட்ட அது நடக்காது அண்ணி."

உங்க மாயக் கண்ணீர  நம்பி. என் அண்ணா என் கூட பேசாமக்ஷ இருக்கான். மாயக்காரி. என்ன மாயம்  செய்தாளோ... எனக்கூற பாரதி முற்றிலும் உடைந்து போனாள்.

தான் இதற்கு மேல் இருந்தால் கட்டுப்படுத்திய கண்ணீர் வெளியே வந்து விடுமோ எனப் பயந்த பாரதி. சரி ரோஹினி  நீயே ஊட்டு என்ற படி  மாடியிலிருந்து கீழ் இறங்கினாள்.

மாடியில் இருந்த லதா  இதனை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் தான்  வெளியே வந்தால் பாரதி இன்னும் கஷ்டப்படுவளே என மறைந்திருந்தார்.

பாரதி கீழே இறங்கிய மறுகணம்  ரோஹினியின் அருகே வந்த லதா.என்னடி உன் நாக்குல என்ன  விஷம். என்னமா  பேசுற.  பாவம் ஈ ,எறும்புக்குக் கூட  துரோகம்  நினைக்காதவ அவ. நீ எல்லாம் ஒரு பொண்ணா? சீ... உன்ன சுமந்து பெத்ததுக்கு விஷத்த குடிச்சி  செத்திருக்கலாம்.

ஊர்ல இருக்கிறவங்க தான்  அவ மனச கஷ்டப்படுத்துறாங்கன்னா. நீயும் போதாததற்கு கஷ்டப்படுத்துரியா?உனக்கு  யாருட குணம் இருக்கோ தெரியல.

நீ சிவாவ வரச் சொல்லி. உன் வீட்டுக்கு கிளம்பு. அது தான் உனக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது "நல்லது என்பதகல் அழுத்தத்தை கூட்டி"என்ற படி மாடியில் இருந்து இறங்கினார்.

ரோஹினி மனதால்" என் அண்ணாக்காக தான் மா. நான் அண்ணிக்கிட்ட அப்படி நடந்துகிட்டேன்." என நினைத்தாள்.

மாடியில் இருந்து  ரூமிற்கு  வந்து அழுது கொண்டிருந்த பாரதி. ஆதி பாத்ரூமில் இருந்து வரும் சத்தம் கேட்டு  அவசர அவசரமாக தன்னை சமன் படுத்திக் கொண்டவாரு இதழில் போலிப் புன்னகையை தவழவிட்டாள்.

ஏய்  பேபி எங்கடா நீ போன. என பின்னால் இருந்த படி அணைத்தான் ஆதி.

பாரதி.ஏன்மா... முகம் டல்லா இருக்கு என்று கேட்க.

இல்லங்க. அது... அது வந்து

ம்... சொல்லு

இல்லங்க லைட்டா தலைவலி அது தான் என பொய் கூற

அவன் பாரதியை பற்றி  முழுமையாக அறிந்தவன். அவள் பொய் கூறுகிறாள் என அறியாமல் போவனா? என்ன.

ஆதியின்  "கண்கள் கோபத்தில் சிவக்க,பொய்...பொய்... பொய் சொல்ற என கூறி. பாரதி மீது காட்ட முடியாத கோபத்தை. ஓங்கி சுவற்றில் கையை குத்தி. சுவற்றிற்கு காட்டினான்.

பயந்த பாரதி இல்லங்க. ரோஹினி மாடில என இழுக்க.

அதான் சொல்ல வந்துட்டியே சொல்லு. இல்லங்க  நம்ம ரோஹினி  பொண்ணு  அனு  இருக்காலே. அவ சாப்பிடாம  அடம் பிடிச்சா அத நா.. என இழுக்க.

சட்டென  பாரதியை தன் புறம்  திருப்பிய ஆதி.

ஓ... அவ சாப்மாடு வேணாம்னு சொல்லவும். மேடம் ஊட்டிவிடப் பாத்தீங்களா?

அவள்  நாக்குல தான் தேள் கொடுக்கு இருக்கே. நல்லா திட்டி இருப்பா...

ஏன் மா பாரதி. நீ வீணா இவழுங்களுக்கு உதவ போயி உன்ன வருத்திக்கிற. அவ அப்படி பேசின தால தானே நீ டல்லா இருக்க என கேட்க. அவள் பதில் பேசாது தரையை பார்த்த படி இருந்தாள்.எனினும் அவள் கண்ணில் இருந்து  கண்ணீர் வடிந்த படி இருக்க. ஆதி அவளது முகத்தை உயர்த்தி கண்ணீரை துடைத்து. அவளை இருக  அனைத்துக் கொண்டு

இங்க பாரு பாரதி.நமக்கு கல்யாணமாகி நாளு வருஷமாகியும் குழந்த இல்லங்கிறது உண்ம தான்.ஆனால் நமக்கு இன்னும் "நிறைய காலமும் இருக்கு. வயசும் இருக்கு".இந்த விஷயத்துக்கு மத்தவங்க யாரும் உன்ன கஷ்டப்படுத்துறத நா விரும்பலமா...

நான் எங்க இருந்தாலும். என் கவனம் முழுக்க உன் மேல தான் இருக்கும். அதனால என் கிட்ட இருந்து எதயும் மறைக்க நினைக்காத. நீ மறைச்சாலும்  எனக்கு அது வெளியால தெரிய வரும்.

நீ மனசுகுள்ள எதையும்  பூட்டி  வச்சி கஷ்டப்படாதமா.. எல்லா விஷயத்தயும் என் கிட்ட கொட்டிடு. அப்ப தான் உன் மனசு தெளிவா இருக்கும்.அதையும் மீறி உன்ற யாரவது கஷ்டப்படுத்தினால் நான் மனிஷனாகவே இருக்க மாட்டேன்.என கூறி தன் நெஞ்சில் பாரதி கையை எடுத்து வைத்துக் கொண்டான்.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #lovestory