அவள் 25
பாரதி வீட்டினர் பாரதியை ஆதி வீட்டில் விட்டுச் செல்ல பாரதியின் கண்கள் குளமாகின.
இரவுப் பொழுது வரை ரோஹினியின் அறையில் இருந்த பாரதி. இரவானதும் அவளை அலங்கரிக்கத் தொடங்க பயம் தொற்றிக் கொண்டது. ஆதியின் அறைக்கு பால் சொம்புடன் தயங்கிய படி உள்ளே செல்ல.
பாரதிக்காக காத்துக் கொண்டிருந்த ஆதியோ சிரித்த முகமாக அவளை அவனது அருகில் அமருமாறு சைகை செய்ய. அவனது அருகே தயங்கித் தயங்கி அமர்ந்தவள். ஆதியை பார்த்து "என்ன... பழிவாங்குறதுக்காகவா கல்யாணம் கட்டினீங்க."என்று அழாத குறையாக கேட்க.
இல்ல பாரதி. நான் உன் கூட வாழ்றதுக்காக தான் கல்யாணம் கட்டினன். நீ உன் தப்ப உணர்ந்து மன்னிப்பு கேட்டியோ அப்போவே உன்ன மன்னிச்சிட்டன். உண்மைய சொல்லனும்னா எனக்கு உன் மேல கோபம் இல்ல. சின்ன வருத்தம் தான். என் மேலயும் கோபம் தான். காலேஜ்ல உன்ன முதல் முதலா பார்த்தப்பவே நான் முடிவு பண்ணிட்டன். கல்யாணம் ஒன்று நடந்தா அது உன் கூட மட்டும் தான்னு. என்ன செய்ய. காலேஜ் லாஸ்ட் நாள் ப்ரபோஸ் பண்ணலாம்னு இருந்தன். பட் அதுகுள்ள என்ன என்னமோ நடந்துட்டு.
அதுக்கு அப்புறம் நீ என் ஆபீஸ்க்கு வந்து அடிச்சிட்டு போன பிறகு. நான் டிடெக்டிவ் ஏஜன்ட் மூலமா உன் விபரத்த திரட்டினன்.
அப்போ தான் தெரிஞ்சிது நீ பரத் மாமா பொண்ணு என்று. சின்ன வயசுல கூட ரொம்ப கோபப்படுவியே. என் கூட வேற யாராச்சும் விளையாடினா,வேற பொண்ணுங்க கூட கதைச்சா... அந்த மாதிரியே இன்னும் இருக்கனு உன்ன மன்னிச்சிட்டன்.
அம்மா ,அப்பா வேற பரய் மாமாவ தேடிட்டு இருந்ததால என் ப்ரண்ட் ராம் அ நான் அம்மா அப்பாக்கு அறிமுகப்படுத்தி, அவங்க பரத் மாமாவ பற்றி தேட சொன்ன பிறகு ராம் தேடின மாதிரி நடிச்சி உன் அப்பாவோட டீடெல்ஸ் உடன் உன் டீடெல்ஸ், போடோவும் கிடைக்கிற மாதரி செட்அப் செய்தேன்.
அம்மா உன் போட்டோவ பார்த்ததும் இவ தான் என் மருமகனு சொன்னானு ராம் சொன்னப்போ எவ்வளவு சந்தோஷமா இருந்திச்சி தெரியுமா?
நான் கூட உன் டீடெல்ஸ் வைக்கும் போது கூட அம்மா இவ்வளவு சீக்கிறமா உன்ன பிடிக்கும்னு சொல்லுவாங்கனு எதிர் பார்க்கல்ல.
அம்மாவே மாமா கூட பேச. மாமாவும் சம்மதம் சொல்ல. அதன் பிறகு அம்மா என் கிட்ட விருப்பம் கேட்கவும். சொல்ல முடியாத சந்தோஷத்தில் இருந்தன். அதனால நான் லவ் பண்ணின விஷயத்த மறச்சிட்டன்.
நா அம்மாவோட உன்ன பொண்ணு பார்க்க வந்தா நீ. நான் பழிவாங்கத்தான் இதுக்கு சம்மதம் சொன்னன் என்று நினைச்சி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டியோனு தான். நான் உன்ன மணமேடைலயே பார்த்துக்குறன் என்டு சொன்னன்.
பிறகு தான் தெரிஞ்சிது நீயும் என் போட்டோவ பார்க்கலனு.அப்போ தான் நிம்மதியா பீல் பண்ணினன்.
நீ ஆபீல்ஸ வந்து இருபது நாள் லீவு கேட்கவும் கோபம் கோபமா வந்ததது. நீ தான் அந்த ஆபீஸ்கே முதலாளி. ஆனால் நீ. திரும்பவும் கல்யாணத்துக்கு பிறகும் வேலைக்கு வரப்போறியேனு தான் கோபம்.நான் கல்யாணத்துக்கு முன்ன இரண்டு நாள் பின்ன இரண்டை நாள். கல்யாண நாள் என ஐந்து நாள் லீவு என்று சொன்னா நீ வேலைய விட்டுடுவனு நினைச்சன். அது அப்படியே நடந்துட்டு.
இந்த கல்யாணம் முழுக்க முழுக்க என் தனி இஷ்டப்படி நடந்தது. ஏதாவது தப்பா அல்லது உன் மனசு நோகுற படி செஞ்சிருந்தா மன்னிச்சிக்க.
ஆதி நீ காலேஜ்ல ஆதியா வந்து என்ன லவ் பண்ணுறனு சொல்லி இருந்தாலும் நான் எக்சப்ட் பண்ணி இருக்க மாட்டன்.
நா சின்ன வயசுல இருந்தே கிரிஷ் மேல தான் பிரியமா இருந்தன். நடுவுல இரண்டு குடும்பமும் பிரிஞ்சிடுச்சி.
நான் காலேஜ் முடிச்ச அப்புறம் எப்படியாச்சும் உங்கல தேடனும் நினைச்சி வீடடுல ப்ரண்ட் வீட்டுக்கு போறதா சொல்லிட்டு ஊருக்கு போனால் நீங்க எல்லாரும் ஊர விட்டு சென்னை வந்துட்டீங்கனு தெரிஞ்சுது.
சென்னைல தேடினன். பட் தனி ஆளா என்னால தேட முடியல.
ஆமா இப்போ இப்படியே பேசி பேசியே நேரத்த வீணாக்க போரீயா? ரதி
ரதியா...
ஆமா நீ என் ரதி தான். அடுத்தவங்களுக்கு பாரதியா இருந்துக்க. நா உனக்கு கிரிஷ் நீ ஏன் ரதி.
ஏன்டி பேசி பேசியே இருக்க போரியா?
ஆமா... நாம எப்போ பேசிட்டு இருந்தோம்.இப்பயாச்சும் பேசிட்டு இருக்கலாம்.
நீ என் வைப் தானே. காலம் முழுக்க பேசிட்டே இருக்கலாம். என ஒரு மார்க்கமாக பார்க்க.
ஆமா... கிரிஷ் என் டிரஸ்லாம் எங்க என்று கேட்க.
கபட் ஐ காட்டினான்.
பாரதி சென்று கபட் ஐ திறக்க முற்பட ஆதி அவசரமாக எழுந்து இரு.... இரு... என அருகில் வர பாரதிக்கு சந்தேகம் வந்து கபட் ஐ அவசரமாக திறந்தாள்.
கபட்டில் வைன் போத்தல்கள் சீராக அடுக்க வைத்திருந்ததை பார்த்து பாரதியின் கண்கள் அகல விரிந்தது.
அதனை பார்த்து விட்டு டேய் பரதேசி. நீ சண்ட கோழினு மட்டும் தான் நினைச்சிட்டு இருந்தன். நீ தண்ணி லோரினு இப்ப தான் தெரியும். குடிகார நாயி என வாயிக்கு வந்த சொல்லால் புகழ்ந்தாள்(புது மாப்பிள்ளைக்கு யாரும் இது போல புகழமாட்டாகோ..😂😂)
பாரதி இல்லமா... இல்ல. நான் தண்ணிலாம் போட மாட்டன்.இது என் ப்ரன்ஸ்க்கு வாங்கினது. நேத்து ராத்திரி பெசுலர் பார்டி வைக்க இருந்தன். அப்பாவால ப்லேன் சொதப்பல் அதனால வைக்க முடியல அது தான் மா..
நம்பலாமா....?
சத்தியமா இது தான்மா உண்ம.
ஹூம்...
சரி அங்கிட்டாகுங்க என்று சாரி ஒன்றை எடுத்தவள்.
கிரிஷ்....
ஹூம்.....
கிரிஷ்....
என்னமா?
அது... நீங்க... கொஞ்சம் வெளிய போறீங்கலா?
ஏன்.....
இல்ல... ட்ரஸ் சேன்ஜ் பன்னத்தான்.
ஏன் இங்க மாத்தினா என்னவாம் என அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க. பாரதியின் முகம் ரோஜாவாய் ப சிவந்தது.
ரூமை சுற்றி நோட்டமிட்டவள் கண்ணில் பாத்ரூம் பட அங்கு ட்ரஸ் மாற்றி வந்து ஆதியை பார்த்த வண்ணம் நின்றிருக்க.
ஆதி அவளை பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்க.
தூக்கம் வருது...
சரி தூங்கு...
ஆதி சொன்னது தான் தாமதம் அவள் கட்டிலில் மறு பக்கம் ஏறி தூங்கி விட்டாள். இல்லை இல்லை தூங்குவது போல் பாசாங்கு செய்தாள்.
ஆதி விளக்கை அணைத்துவிட்டு.நைட் லாம்ப் போட்டவன்."கண்ண இறுக்கி மூடிட்டு நானும் தூங்குறன் என்று சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க."பாரதி உன் அனுமதி இல்லாம எதுவும் நடக்காது. ரிலாக்ஸா தூங்குடா. என்று கூறியவன். பாரதியின் தலையை முத்தமிட்டு
அவளை பார்த்து சிரித்து விட்டு. மறு புறம் திரும்பிப் படுத்து உறங்கியும் விட்டான்.
பாரதிக்கு தான் தூக்கம் வெகு தூரம் சென்றிருந்தது. கட்டிலில் தூக்கம் வராமல் சுழன்றவள் பின் ஆதி தூங்கியதை உறுதி செய்து விட்டு அவனின் ஒரு கையை மட்டும் கட்டிப் பிடித்தவளாய் உறங்கினாள்.
தொடரும்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro