அவள் 24
மாலையில் புடவை எடுக்கச் சென்ற போது பாரதியின் கண்கள் கணவனாக வரப்போகின்ற க்ரிஷைத் தேடி கடையின் அடிக்கடி வெளியே பார்ப்பதும் உள்ளே பார்ப்பதுமாக இருக்க.
இதனை அவதானித்த ரோஹினி, கவியையும் கூட்டு சேர்த்துக் கொண்டு
அண்ணி என்ன யோசன பலமா இருக்கு?
இல்லயே ரோஹினி நா... நான் நேர்மலா தான் இருக்கன்.
இல்லயே அண்ணி. நீங்க யாரயோ வலை விரிச்சி தேடுறது போல இருக்கு.
ஏன்.அண்ணி என் உத்தம அண்ணாவ தேடுரீங்களா? என கேட்டு ரோஹினியும் கவியும் ஹைபை போட்டு சிரித்த வண்ணம்.
அண்ணி அவன் தான் பெரிய இவனாட்டம் உங்கள மணமேடைல தான் பார்ப்பேன் என்டு இருக்கானே அண்ணி என்று பாரதியின் மனக் கோட்டையை உடைத்து விட்டாள்.
கடையில் இருந்த புடவையை பார்த்த பாரதிக்கு தலை கால் புரியவில்லை. எல்லாம் அழகாக இருந்தது.லதாவும், மகாவும் கடையையே புறட்டிப் போட்டனர். அப்பொழுது கடையின் பணியாளர் ஒருவர் லதாவின் அருகே வந்து.
இங்க பாரதி என்றது யாரு? நீங்களா என பாரதியை கை காட்டி கேட்க ஆமா?
நீங்க? "இத உங்க புருஷன் செலக்ட் பண்ணினாறு."என்னது புருஷனா? என பாரதி அதிர்ந்ததை விட ரோஹினி, கவி கோரசாக புருஷனா? என.வாய் மேல் கை வைக்க.
இல்ல மேடம் புருஷனா வரப்போறவங்கனு சொல்ல வேண்டியத கொஞ்சம் மாத்தி சொல்லிட்டன்.
அது என ரோஹினி ஒரு லுக்கு விட்டாள்.
சரி இவ தான் பாரதினு யாரு உனக்கு சொன்னாங்க என லதா கேட்க.
இல்ல நீங்க எல்லாம் இவங்களுக்கு புடவை வச்சி பார்க்கிறத வச்சி தெரிஞ்சிகிட்டேன்.
லதாவை கை காட்டி. இந்த மேடம் கூட வார பாரதி என்ற பொண்ணுக்கு கொடுக்க சொன்னாங்க.
நீங்க வரதுக்கு கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் கிரிஷ் சார் வந்து இந்த சாரிய செலக்ட் பண்ணிட்டு போனாறுமா.. என்று கூறி பையை பாரதி கையில் திணித்தான்.
ஆனா அம்மா உங்களுக்கு பிடிச்சி இருந்தா மட்டும் இத வாங்கிக்கச் சொன்னாறு. பிடிக்கலன்னா பரவாயில்ல. பிடிச்சத வாங்கிக்கச் சொல்ல சொன்னாறு என கூற பாரதியின்.மனமோ என் க்ரிஷ்ஷிற்கு பிடித்தது. எனக்குப் பிடிக்காம போகுமா என நினைத்துக் கொண்டது.
கையில் இருந்த பையை திறந்து பார்க்க. அதில் இருந்த சாரியை கையில் எடுத்துப் பார்க்க. இளம்சிவப்பு நிறத்தில் பெறுமதியான அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய. அழகான சாரி. பாரதிக்கு என்றே வடிவமைக்கப் பட்டதைப் போன்று இருக்க. பாரதிக்கு பார்த்துமே பிடித்து விட்டது.
லதா மனதால் பொண்டாட்டியா வரப் போறவள பார்க்காமலே இவ்வளவு செய்றானே. என் மருமகள பார்த்தா சொக்கிப் போகப் போறான். என எண்ணிக் கொண்டார். (யார் யாரக் கண்டு அதிர்ச்சியாகப் போறாங்கனு நாமலும் பார்ப்போம்.)
நாட்களும் இனிதே நகர...
பாரதி கை முழுவதும் மருதாணி இட்டு மணப் பெண்ணுக்குரிய வெட்கத்துடன் நண்பிகளின் சின்னச் சின்ன சீண்டல்களுடன் தயாராகி செதுக்கி வைத்த சிலை போல தயாராகி நின்றாள்.
பாரதியைக் கண்ட மகா. திருஷ்டி கழித்து விட்டு. இவ்வளவு நாளும் உன் அழக எங்க கிட்ட இருந்தே மறச்சி வச்சிட்ட இல்ல...என கூறி சிரித்துவிட்டு கண் கலங்க பாரதியை ஆரத் தழுவிக் கொண்டார்.(பெண்ணப் பெத்த எல்லா பெற்றாரும் ஒரே நேரத்துல சந்தோஷமாகவும் அதே போல பிரியிர கவலைல வாடும் தருணங்கள்ல இதுவும் ஒன்று!)
பின் நிலமையை சகஜமாக்கும் பொருட்டு மகா பாரதி காதில் ஏதேதோ அறிவுரை கூற சலித்துக் கொண்ட பாரதி. அம்மா நான் யாரு மா.. திவ்ய பாரதி என கூறி தாயை சமாதானப்படுத்தினாள்.
ஐயர் மந்திரம் சொல்லிய படி மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ என சத்தமிட. மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு வாரதாகக் கூறி இளம்பட்டாளம் சொய்யாத கூத்தை எல்லாம் செய்து ஒரு வாராக மாப்பிள்ளையை அழைத்து வந்தனர்.மணமகன் வந்த பிறகும் ஐய்யார் சிறிது நேரம் மந்திரம் கூற.
ஐய்யரே! மந்திரத்த குறைச்சி சொன்னிங்கன்னா நாம ஒன்னும் காச குறைச்சி குடுக்க மாட்டோம் என கூறி அவசரப்படுத்த.ஐய்யார் முகத்தை உற்றுப் பார்க்க க்ரிஷ் கம்முன்னு மந்திரத்த சொல்ல.
நல்ல நேரம் நெருங்க ஐய்யர் பொண்ண அழைச்சிட்டு வாங்கோ....என்று கூற பவியும்,திவியும் பாரதியின் கை பிடித்து அழைத்து வர. பாரதி இது நாள் வரை அறியாக உணர்வு எல்லாம் வந்து பாரதியை பாடாய்ப் படுத்தியது.
திவியும் பவியும் மணமகனைக் கண்டு அதிர்ச்சியடைய. பாரதியோ எதுவும் அறியாதவளாக தலை குனிந்த படி அடிமேல் அடி வைத்தாள்.
திவி பாரதியை நெருங்கி. நல்லா நடிச்ச உன் ஆளு பெயர் என்ன சொல்லு க்ரிஷ்ஷா?... ஆமா உன் ஆளு முழுப் பெயர சொல்லு?என கூற க்ரிஷ்ணா என பாரதி கூற.
முழுப் பெயர் இதா பாரதி என பவி கேட்க. இல்ல முன்ன இன்னுமொரு பெயர் இருக்குது.
நான் சின்ன வயசுல இருந்தே க்ரிஷ்னு சொல்லுறதால முழுள் பெயர் தெரியல.
இப்ப போய் வீட்டுல கேட்கவும் முடியல என அப்பாவியாய் கூற பவிக்கும் ,திவிக்கும் எங்காவது முட்டிக் கொள்ளளாம் போல இருந்தது.
சரி அப்போ க்ரிஷ் யாருனு உனக்கு உண்மையா தெரியாதுல. என மீண்டும் கேட்க.
நான் சின்ன வயசுக்கு அப்புறமா நான் இன்னும் கண்டது இல்ல என கூற. சரி இப்ப உன் ஆசைக் கணவனாக வரபாபோகிறவற முத முறை மெதுவாக பாரு.எனக் கூற வெட்கத்துடன் மெல்ல தலை தூக்கிப் பார்க்க.
ஆண்களுக்கே உரிய கம்பீரத்துடன் மணமகனாக ஆதி வீற்றிருக்க. பாரதிக்கு ஒரு கணம் மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது.
"இவனா.... "என வாய்விட்டே கூற பவியும் திவியும் கோரசாக அவனே தான் என்று சிரித்த வண்ணம் இப்ப சொல்லு பாரதி உன் புருஷன் பெயர் என கூற. "ஆதி கிருஷ்ணா" என மெல்ல முணுமுணுத்தாள்.
பாரதி தன்னையே பார்ப்பதை உணர்ந்த ஆதி. ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்க. பாரதி தலைகுனிந்த படி வந்து ஆதி அருகில் அமர்ந்தாள்.
கடந்த கால நினைவுகள் முற்றும்
ஒரு மாதிரியா blash back முடிச்சிட்டன். 😀😀
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro