அவள் 23
மறுநாள் ஆபிஸ் வந்த பாரதி பவி சுகன்யா இருவரிடமும் நடந்ததை நடந்ததை மூச்சி விடாமல் சொல்லி முடித்தாள் இருவரும் ஆறுதல் சொல்லுவார்கள் என எதிர்பார்க்க. அவர்களோ தாண்டவம் ஆடினர்.
ஏன்டி எல்லா விஷயத்தையும் போன்ல பேசுவ தானே.ஏன் இத சொன்னா என்ன? நா வந்து உனக்கு பதில் நிற்பேன் என பயந்தியா? என பவி கேட்க பாரதி அழுதே விட்டாள்.
'ஏய் என்னடி ஏன் அழுவற' அழு மூஞ்சி பாரதி சொல்லிட்டு அழு.
நா க்ரிஷ் அ காணவே இல்ல.
என்னது.......... க்ரிஷ் அ காணவே இல்லயா.
ஏன் சுகன் இவ வெக்கத்துல மாப்பிள்ளைய பார்க்காம இருந்துட்டாவோ...
இல்ல திவி க்ரிஷ் வரவே இல்ல. வரவே இல்லயா.... என இருவரும் கோரசாக கேட்க.
அப்பாவியாக பாரதி தலையாட்டி. அவங்க மணமேடை ல தான் என்ன பார்ப்பாங்கலாம். இன்னும் சரியா பதினான்கு நாள்ல கல்யாணம். நான் இன்னும் இரண்டு இல்ல மூனு நாள் தான் ஆபீஸ் வருவேன். என அழுங்காமல் குழுங்காமல் இடியை இறக்கி. சோகமாக பாரதி இருந்த சமயம் அந்த வழியாக ஆதி வந்தான்.
ஆதி பாரதி கதைத்துக் கொண்டிருந்ததை பார்த்து. இது ஆபீஸ் இங்கு வேலை மட்டும் தான் பார்க்கனும். 'வேலை மட்டும் தான்' என மீண்டும் அழுத்தமாக கூறி பாரதி நீ என் கெபின்கு வா. என்ன படி உள்ளே செல்ல.
பாரதிக்கு ஐயோ என்றிருந்தது. ஆதியின் கெபினிற்கு சென்று ஆதி வாயை திறக்கும் முன்பே ஸாரி ஆதி என்றாள்.
ஆதி அவளை முறைத்துப் பார்க்க. ஸாரி சேர் தவறி பெயர் சொல்லிட்டன். நான் உங்க டிரைவர் வண்டிய ஓட்டினது தெரியாம உங்கள அடிச்சிட்டன். என்று சொல்ல ஆதிக்கு சட்டென்று கோபம் வந்தது. கோபத்தை முயன்று கட்டுப்படுத்தியவாறு. உனக்கு ஒரு ஸாரி கேட்க இவ்வளோ நாள் ஆயிடுச்சில்ல என பல்லை கடித்துக் கொண்டு கேட்டான்.
அது சரி நீ சரியான ஈகோ பிடித்த கழுத உன் வாயில இருந்து எங்க ஸாரி வரப் போகுது.என்று கூறி விட்டு பைலை பார்க்கத் தொடங்க.
பாரதி மெல்ல. ஸார் எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கு என கூற. படக்கென தலை நிமிர்ந்து பார்த்தான். அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்பதை அவனே அறிவான்.
பாரதியே தொடர்ந்து.இன்னும் இரண்டு நாள்ள எனக்கு ஒரு இருபது நாள் லீவு வேணும் என்று சொல்லி முடிக்கவில்லை. ஆதி சிரித்துக் கொண்டு இது உங்க அப்பன்ட கம்பனியா? முதல் நாள் நாளைக்கு லீவுனு சொல்லிட்டு கடிதம் கூட தராம போற.' இப்போ இருபது நாள் லீவு வேணுமா?' என இடுக்காக கேட்டு.
வேணும்னா கல்யாணத்துக்கு முன் இரண்டு நாள். கல்யாணத்துக்கு பின் இரண்டு நாள் என மொத்தம் ஐந்து நாள் லீவு தரேன். என்று சொல்ல. பாரதிக்கு வந்ததே கோபம்.
உன் வேலைய நீயே வச்சிக்கோ....
எனக் கூறி விருட்டென வெளியேறி. பவி,சுகன்னிடம் கல்யாணத்யிற்கு முன்னாடியே வந்துடனும் என கூறி ஆபீஸில் இருந்து ஆபீஸில் இருந்து வெளியேறினாள்.
ஆபீஸில் இருந்து வெளியே வந்த பாரதி வேகமாக ஸ்கூட்டியை நெறுங்க. அவளின் போன் ரிங் ஆனது.
அதனை எடுத்துப் பார்க்க. புதிய நம்பராக இருக்கு கட் பண்ணுவோமா? ஒரு வேள க்ரிஷ் ஆ இருக்குமோ? என யோசித்து விட்டு பேசித்தான் பார்ப்போமே என போனை ஆன்ஸ்வர் செய்ய,
மறுமுனையில் எப்படி இருக்க பாரதி என்று பெண் குரல் கேட்க. பாரதிக்கு புஸ் என்றானது.
மெவாக நீங்க யாரு?.... என பாரதி கேட்க
என்னம்மா அதுக்க்குள்ள இந்த அத்தைய மறந்துட்டியா?நான் தான் லதா.என கூற.
ஸாரி அத்தை போன்ல உங்க வாய்ஸ் விளங்கல்ல. என ஒரு வித சோர்வுடன் சொல்ல.
பாரதி என்னமா வாய்ஸ் ஒரு மாதினி இருக்க. எரன்ன சரி பிரச்சினையாமா?
இல்லத்த நான் கொஞ்சம் மூட் அவுட்டா இருந்தன் அதனாலயா இருக்கும். ஸாரி அத்தை உண்மையா உங்க வாய்ஸ் எனக்கு விளங்கல்ல.
எதுக்குமா மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு.நா என் பொண்ண தப்பாலாம் நினைப்பனா? நீ மனச போட்டு குழப்பிக்காதமா? நீ ஆபீஸ் ல தானே இருக்க? அங்க மூட் அவுட் ஆகுற அளவுக்கு என்னமா நடந்தது?
பாரதி நடந்த அனைத்தயும் சொல்ல. சரிமா? நீ நல்ல முடிவாக தான் எடுத்திருக்க. உன் போஸ் மட்டும் என் கைல மாட்டினான். கைமா தான். அவ்வளோ திமிர் பிடிச்சவன் போல இருக்கான்.
விடுமா இத. உங்க கல்யாணத்துக்கு அப்புறம் என் பையன் ட சொல்லி இவன ஒரு கை பாத்துடலாம். உனக்கு நீ படிச்ச படிப்புக்கு வேலை செய்யனும்னா நம்ம கம்பனிலயே வேலைக்கு சேர்ந்துக்க. 'உனக்கு விருப்பம் இருந்தா மட்டும்'
என் பையன் உன்ன மகாரணி மாதிரி பாத்துக்குவானு எனக்கு தெரியும் மா. அதே போல எனக்கும் என் மருமக வேலைக்கு போகனும்னு எந்ந ஆசையும் இல்ல.
ஆனா நீயும் எனக்கு பொண்ணு தான். உன் கயவு லட்சியம் எதையும் நீ இந்த கல்யாணத்தால விட்டுடோமேனு பின்னால வருந்தக் கூடாதுனு தான் நான் இப்போவே சொல்வேன்.
சரி நான் போன் பண்ணின விஷயத்தையே மறந்துட்டன். ஈவினிங் கல்யாணப் புடவை வாங்க போக தயாரா இரும்மா... என கூறி போனைத் துண்டித்தார்.
பாரதி மனதில் இருந்த கோபமெல்லாம் மாயமாக மறைந்து இருந்தது.மனம் முழுவதும் சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது. க்ரிஷ்ஷ இன்னக்காலும் பார்க்கலாமா? என யோசித்த படி வீட்டை நோக்கிப் பறந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro