அவள்22
பெண் பார்க்க வந்த இடத்தில் லதா,மகா,பரத்,ராஜ் என அனைவரும் பல வருடக் கதை பேச.
வம்சிக்கும், ரோஹினிக்கும் எங்காவது சென்று முட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
வம்சியும்,ரோஹினியும் கண்களால் பேசிக் கொள்ள இதனை அவதானித்த பரத். மகா நோக்கி பாரதிய அழைச்சிட்டு வர சொல்லுமா. என கூற கவி.....
அக்காவ கூட்டிட்டு வா....
பாரதி நீல நிற லெஹங்காவில் மிதமான மேகப் பில் தேவதை போல காட்சி அழிக்க.
இந்த தருணத்தை கிருஷ்ஷின் அத்தை பையன் ரவி படம் பிடித்து. மாப்பிள்ளைக்கு அனுப்பிவிட்டான்.
ரோஹினிக்கு பாரதியை கண்டதுமே பிடித்துப் போக. வம்சியோ அண்ணி நா தான் உங்க கொளுந்தனார் என வழிய சென்று அறிமுகம் செய்து அவனது விருப்பத்தை தெரிவிக்க.
ஏனையோருக்கும் பெண் பிடித்துப் போக தட்டை மாற்றி இனிதே நிச்சயமும் நடை பெற்றது.
ஜோசியரே! திருமணத்திற்கு நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்க.என ராஜ் கூற.
ஜோசியரோ கிரிஷ்ஷின் நண்பன்,அத்தை பையன் ரகுவை பார்க்க.
ரகுவோ என்ன? என்று புருவமுயர்த்தி கேட்க. இல்லை என தலை அசைத்தவாரு.
ஐயா, இன்னும் சரியா பதினைந்து நாள்ல நல்ல நாள் வருது. இத விட்டா இவங்க ஜோதக படி இரண்டு வருஷத்துக்கு இத மாதரி நல்ல அற்புதமான நாள் வராது.
அதையும் மீறி கல்யாணம் நடந்தா....
நடந்தா...என்ன
நடந்தா வீட்டுல இருக்கிற வயசானவங்கட ஆயுசு தான்.... என இழுக்க.
ரோஹினியும், வம்சியும் பாட்டி முகத்தை பார்க்க.சட்டென முறைத்தார் ராஜின் அம்மா.
இல்ல. இன்னும் பதினைந்து நாள்ளயே வச்சிக்கலாம் என பரத்தும், ராஜும் ஒரு சேர கூற இருவரும் சிரித்தவாரே அந்த திகதியிலேயே திருமணம் என நிச்சயிக்கப்பட்டது.
பாரதியை அழைத்து லதா அருகில் அமர்த்திக் கொள்ள. பாரதியினது பேச்சு, சிரிப்பு , சிறுபிள்ளைத் தனமான சண்டை, வெட்கம் என அனைவரையும் கவர்ந்து கொண்டாள்.
ரகுவோ கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிரிஷ் இற்கு அழைத்து.
மச்சான்.... சக்ஸஸ்டா...
இன்னும் 15 நாள் தான் என்று கூற.
கிரிஷ்ஷோ அவளது புகைப்படத்திலே முத்தம் வைத்தான்.(பாவம் மாப்பிளை மேடையில் தானாம் பெண் பார்ப்பாராம், மக்கு பாரதி ஏமாந்துட்டா) அதன் பிறகு ரகு பேசியது கேட்டால் தானே. அவன் பேசி பேசி பார்த்து பயன்.இல்லாமல் போகவே. போனை கட் செய்தான்.இந்த லவ் பன்னுறவங்க கூட சேரவே கூடாது என்டுரது இதுக்குத்தான் அடிக்கடி ப்ரீஸ் ஆகுறானுங்க.என் தலையெழுத்து இவன் கூட சேர்ந்துட்டு இருக்க வேண்டி இருக்கு என புலம்பியபடி உள் நுழைந்தான்.
வழக்கமாக மணமகன்,மணமகள் நம்பரை மாற்றுவது இயல்பு. ஆனால் இங்கு தான் மணமகன் பெண்ணையே பார்க்கவில்லையே! நம்பரை எப்படி மாற்ற.
ஆனால் இங்கு மாறி நடந்தது.லதா பாரதியின் போன் நம்பரை எடுத்துக் கொண்டார்.
மாப்பிள்ளை வீட்டார் வீடு நோக்கி திரும்பும் போது ராஜின் தாய். பொண்ணு பார்க்க லட்சணமா தான் இருக்கா, நல்ல குணமும் கூட என்று அவரது விருப்பத்தை இவ்வாறு தெரிவிக்க. ரோஹினியை நோண்டி விட்டுச் சிரித்தான் வம்சி.
தொரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro