அவள் 21
மறுநாள் காலை முதல் பாரதியின் இல்லம் பரபரப்பானது.
கண்களை கசக்கிய படி பத்து மணிக்கு எழுந்து வந்த பாரதியை பார்த்து சிரித்த வண்ணமே எழுந்துட்டியா பாரதி இந்தா காபி என கையில் கொடுக்க.
பாரதி கண்களை கசக்கி தனது தாயை பார்த்தாள்.
இதுவே வேறு நாள் என்றாள். என்னடி பெண் புள்ள தானே நீ. நேரத்த பாரு.எல்லாம் உன் அப்பன சொல்லனும். புள்ளயா வளர்க்குறாரு. அவர் கண்டிக்கிறதும் இல்ல. அடுத்தவர கண்டிக்க விடுறதும் இல்லனு புழம்பலை ஆரம்பித்து விடுவார்.
பாரதிக்கே சிரிப்பாக இருந்தது. தாயின் மாற்றத்தை பார்த்து. எவ்வளோ சந்தோஷமாக இருக்குறாங்க. கடவுளே இது நிலைச்சிருக்கனும்.
நேரம் செல்ல மாலையில்
பாரதி ப்ளூ கலர் லெஹங்காவில் ஜொலித்தாள். பாரதியைக் கண்ட மகா சொக்கித்தான் போனார். நீல நிற லெஹங்கா அவளுக்கு கச்சிதமாய் பொருந்தியிருந்தது. முன்னால் சில முடிகளை சுருள் போன்று சுறுட்டி விட்டிருந்தனர். அழகுக்கலை நிபுணர்கள்.அழவான மேகப் என ஜொலித்தவளை மகா திருஷ்டி கழித்தார்.
அங்கு மாப்பிள்ளை கிருஷ் குடும்ப ஜோசியரை மிரட்டிக் கொண்டிருந்தான்.
ஜோசியரே !
என்னப்பா சொல்லு. அருகுல எப்ப நல்ல நாள் வருது?
எதுக்குப்பா நல்ல நாள் கேட்குற?ஐயா புது பிஸினஸ் ஏதாவது ஆரம்பிக்கிறாரா?
"ஆ.....கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு. போதுமா?"
சின்னய்யா...! அம்மா நேத்து தான் உங்க கல்யாணத்துக்கு ஜோசியம் பாத்தாங்க.
சரியா பத்து பொருத்தமும் பொருந்தி இருக்கு.
"நா பாத்த பொண்ணு. எனக்கு பொருந்தாம இப்பாளா?" ( என்னடா? நீ புதுசா கத சொல்லுற)
என்னய்யா நீங்க சொல்லுரீங்க!
டேய் இவன் சரி வர மாட்டான் டா...
"இவன பேசாம போட்டுடு".
என்ன சின்னய்யா சொல்லுரீங்க.
வேற என்ன செய்ய சொல்லுரீங்க.
நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டேன்.
இப்போ நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.
சரி சின்னய்யா..
ஐயா....
ஹும்...
சரியா இன்னும் பதினைந்து நாள்ள சுப முகுர்த்ததம் இருக்குது சின்னய்யா...
சரி இன்னக்கி நிச்சயதார்த்தத்துக்கு உங்கள வரச் சொல்லி இருக்காங்க தானே?
ஆமா ஐயா...
அப்போ நா சொல்லுரத சொல்லுங்க.
என்னப்பா...
நிச்சியம் நேரத்துக்கு எங்க அப்பா எப்ப சுப முகுர்த்தம் இருக்குனு கேட்டா...
நீங்க சரியா இன்னும் பதினைந்து நாள்ள இருக்குனு சொல்லனும்.
அதுமட்டுமில்ல. "இந்த முகுர்த்தத விட்டா இன்னும் மூனு வருஷத்துக்கு கல்யாணம் நடக்க கூடாதுனும் அப்படி நடந்த வீட்டுல இருக்குற வயசானவங்களுக்கு அது கெட்ட காலம்னும் சொல்லனும். புரிஞ்சுதா?"
ஆமா சின்னய்யா.
சின்னய்யா.
சொல்லுங்க.
இல்ல. உங்க வீட்டுல பார்த்த திருமணம் தானே அது. அவங்களே நேரம் பாத்து செஞ்சிடுவாங்க தானே.
செஞ்சிடுவாங்க. என் அவசரம் அவங்களுக்கு எங்க தெரிய போகுது.
ஜோசியர் சிரித்து விட்டார். சரி சின்னய்யா நா நீங்க சொன்னத செய்திடுறன். நல்ல விஷயம் என்டுறதால ஒப்பு கொள்ளுறேன்.
சரி ஜோசியரே நாங்க கிளம்புறோம்.
சரி சின்னய்யா.
டேய்
என்னடா.
இல்ல நீ ஏன் வீட்டுல இருக்கிற வயசானவங்களுக்கு கெட்ட காலம்னு சொல்ல சொன்ன.
ஆஆ.. அதுவா.. என் அப்பன பெத்தது இருக்குதே அது என்னோட அதிகப்படியா இரக்கம்னு செய்ற தொல்ல அப்பா... அப்பா...
டேய் உன் அப்பத்தாவயா சொல்லுற?
வேற யார அதத்தான்.
அது உசுருக்கு சரியான பயம். அதனால தான் வயசானவக்களுக்கு கெட்ட காலம்னு இழுத்துட்டன். இனி நேரா பதினைந்து நாள்ள கல்யாணம் தான்.
பாரதி நேரமாகிடுச்சி வா போகலாம். என மகா அழைக்க. பாரதியின் கண்கள் கலங்கியது.
பாரிதியின் கலங்கிய.கண்களை கண்ட அஜய் அக்கா உன் மேகப் எல்லாம் சுத்த வேஸ்ட்கா.
என கூற அழுகையை கஷ்டப்பட்டு நிறுத்தவும். அக்கா நீ எதுக்கு அழுகுற மாமாவ நா பாத்திருக்கேன். ரொம்ப நல்லவர்.என்ன மாதிரி ஹன்சம்மா இருக்காரு.
டேய் புளுகு மூட்ட நீ ஹேன்சம்மா இருக்கியா? சீவின பென்சில் மாதிரி இருக்க என கவி சீண்டினாள்.
உனக்கு பொறாம டி. என் ஜிம் பாடிய பாத்து.
எனக்கு உன்ன பாத்து ஒரு ஆமையும் இல்ல.
ஐயோ நீங்க இரண்டு பேரும் சும்மா இருக்கிறீங்கலா...
கவி அக்காவ கொஞ்சத்துல கீழ அழைச்சிட்டு வா...என கூறிய படி பகா கீழே இறங்கினார்.
அஜய் நீ அக்காவ மிஸ் பண்ண மாட்டியாடா...
அக்கா இங்க பாரு நீ இதே போல நம்ம கூட இருக்க முடியாது. அக்கா நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் சின்னப் பையன் இல்ல. காலேஜ் பஸ்ட் இயர். நீ நினைக்குற மாதிரி குழந்த இல்ல. நல்லா வளர்ந்துட்டன்.
ஓ...அப்ப.உனக்கு கல்யாணம் கட்டி வச்சா போயிடுச்சி.என பாரதி கூற. சூப்பர் அக்கா..
பாரதியார்.கூட எட்டு வயசில கல்யாணம் பண்ணிகிட்டாராம். என அஜய் கூற.
ஆ... அப்படியா அக்கா இவன் ஆசைய பாருக்கா... என அஜயை கவி பிடித்து கொடுக்க. பாரதி தலையில் கொட்டினாள்.
படிச்சி உருப்படுற வழிய பாரு... பொண்ணு கேட்குதாம். பொண்ணு. நீ கைல மாட்டின தோல உரிச்சிடுவன் ராஸ்கல். என கூறிபடி துரத்த.
"ஐயோ அக்கா நான் ஜோக்கு சொன்னேன். என்ன.விட்டுடு தாயே. உங்கள மேய்க்கிறதே பெரிய பாடு.இதுல உங்க கூட்டத்துக்கு இன்னும் ஒன்றா..." என கூறிய படி.ஓடியே விட்டான்.
பாரதியின் மனதில் இருந்த பாரம் இறங்கியது போல் இருந்தது.மனது ஒரு நிலையில் இருந்தது. பாரதியின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கண்ட அஜய் நிம்மதிப் பெரு மூச்சு விட்டான்.
அங்கே மாப்பிள்ளை வீட்டில்
வம்சி, ரோஹினி நீங்க இரண்டு பேரும் வர்ரீங்கலா?
இல்ல நாங்க போய் வரட்டுமா... என லதா சத்தமிட
இதோ.... வந்துட்டேன் மா என ரோஹினி சத்தமிட்டாள்.
ராஜ் லதாவை அழைத்து ஏன் பதட்ட படுற.
ஏங்க புரிஞ்சி தான் பேசுரீங்கலா?
நாங்க போறது நிச்சயம் பண்ண. நேரத்துக்கு போயிடனும்.
அது மட்டும் இல்லாம நான் அவசர படுத்தினா தான் வம்சி, ரோஹினி இரண்டு பேரும் கீழ வருவாங்க.
ஏன்ங்க நீங்க வாங்க. அத்த நீங்களும் வாங்க. செந்த காரகங்க எல்லாரும் காத்திட்டு இருப்பாங்க. அவங்க இரண்டு பேரும் வீட்டுலயே இருக்கட்டும். நாங்க போகலாம் என கூற வம்சியும் ரோஹினியும் ஒருவாராக வந்து சேர்ந்தை. பாரதி இல்லத்திற்கு புறப்பட்டனர்.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro