Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவள் 20

திவி எல்லாம் அந்த ஆதியால வந்தது தான். என ஆதியை சந்தித்தது. முதல் நடந்தது அனைத்தையும்  கூறி முடித்தாள்.


பாரதி நீ  ஆதிய லவ் பன்றியா?

என்ன திவி அப்படி கேட்டுட்ட.

நான் ஆதிய லவ் பன்னல.ஜஸ்ட் பிரண்டா? தான் இருந்தன்.

ஆமா.... ஆமா.... நம்பிட்டன். நீ என்ன ஏமாத்துறியா?  இல்ல உன்னயே ஏமாத்திகிறியா?

திவி. ப்ளீஸ் சும்மா அத இத பேசி என்ன டென்ஷன் பன்னாத.

பாரதி ஆபீஸ்ல இருக்குற உன் ப்ரன்ஸ்கு உனக்கு ஆதிய முன்னமே தெரியும்னு தெரியுமா?

இல்ல திவி. ஆதி அவனுக்கு என்ன தெரியாத மாதரி தான் நடந்துகிட்டான். நானும் தெரியாத மாதரியே இருந்துட்டேன்.ஸோ சொல்லனும்னு தோனல.

சரி பாரதி இந்த மிட் நைட்ல  எதுக்கு கோல் பன்னின.


அது...  அது... அது வந்து திவி.

என்ன வந்து போயி.... சும்மா சொல்லுடி.

எனக்கு  எங்க அத்த பையன் கிரிஷ் கூட கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?னு கேட்குறாங்க.

சரி உன் முடிவு என்ன?

திவி அப்பாட முகத்துல என்றும் இல்லாத மாதிரி ஒரு சந்தோஷத்த கண்டன்.

அவ்வளவு சந்தோஷமா அப்பாவ நான் கண்டதே இல்ல.

திவி அப்பா சொன்னாறு  நீ  யாரையும் விரும்பலனு எங்களுக்கு தெரியும் மா?

அதனால தான் அக்கா கேட்டதும் சரி என்றுட்டேன். என்டு சொல்லிட்டாறு. டீ.

என் மேல எவ்வளவு நம்பிக்க வச்சிருக்காங்க 😥😥

நல்ல வேல நான் யாரையும் லவ் பன்னல.

அம்மா  அதுக்கும் மேல போயி

பாரதி உன் மேல நம்பிக்க வச்சி அப்பா  உங்க அத்தக்கி சரினு சொல்லிட்டார்.
ஆனாலும் உன் முடிவுக்காக காத்துட்டு இருப்பாறு.

அப்பாட மரியாத இல்லாம போற மாதரி நடந்துக்க மாட்டனு நம்புறன்.
என்று சொல்லிட்டாங்கடி.


சரி பாரதி உன் முடிவு என்ன?

நான் ஓகே என்று சொல்லப்போறேன்.திவி

பாரதி நீ நல்லா யோசிச்சா இந்த முடிவ எடுத்த?

ஆமா திவி.

அப்போ ஓகே. நீ உன் அப்பாக்கு ஓகே சொல்லிடு.

இப்போவே சொல்லிட்டு நிம்மதியா தூங்கு.

ஆமா நானும் இப்போவே சொல்லத்தான் போறன்.

எல்லாம் நல்லாத நடக்கும். மனச குழப்பிக்காம  இரு. எந்த  நேரமும் நான் உனக்கு துனையா இருப்பன்.

அது எனக்கு தெரியும் திவி.

சரி நா அப்பறம் போன் பன்றன்.

ஓகே.

பாரதி முடிவுடன் கீழே இறங்க. அஜயும் , கவியும் ஹைபை போட்டுக் கொண்டனர்.

பாரதி பரத்தை பார்ப்பதும். கீழே பார்ப்பதும், மகாவை பார்ப்பதுமாக இருக்க.

பரத் பாரதியை பார்த்து இங்க வாம்மா  பாரதி. என அழைக்க.

அவர் அருகில் சென்று அமர்ந்தாள்.


இங்க பாருமா. உனக்கு இந்த விஷயத்துல விருப்பம் இருந்தா மட்டும் நீ விருப்பம்னு சொல்லு.

அம்மா சொன்னத கேட்டு  உன் மனச  போட்டு குழப்பிக்காத.

வாழப்போறது நீ. அதுல உன் முடிவு மட்டும் தான் முக்கியம். எனக்காகவோ, அம்மாக்காகவோ நீ முடிவு எடுக்காத. உன் அத்த.என் அக்கா தானே.  அதனால நான் என்ன சொன்னாலும் கேட்டுப்பா. என்றவர் குரல் உடைந்திருந்தது.

பாரதி அவசரமாக இல்லப்பா... உங்க முடிவு தான் என் முடிவும். நான் சின்னதுல இருந்து   எது கேட்டாலும் எடுத்து கொடுத்தது. நீங்க தான்பா. அது பேஸ்ட் ஆ தான் பா இருந்திருக்கு. நான் எத சொலக்ட்  பண்ணாலும் அதுல எனக்கே இன்ரஸ்ட் இல்ல. வாங்கிட்டேனே என்றதுக்காக யூஸ் பண்ணுவேன்.

பட் அப்பா நீங்க வாங்கித்தந்த எதுலயும் நான் அப்படி உணரல்லப்பா. மனசார விரும்பி தான் யூஸ் பண்ணுவேன்.

எனக்கு என் செலக்ஷன் அ விட உங்க செலக்ஷன் மேல தான் நம்பிக்க இருக்கு.

எனக்கு நீங்க பாத்திருக்கிறது. நம்ம க்ரிஷ் தானே.எனக் கூறும் போதே பாரதியின் கன்னம் இரண்டும் சிவந்தது. அதுவே பரத்தின் இதயத்திற்கு இதமாக இருக்க.

சரி நா இப்பவே ராஜ் மச்சான்கு போன் பன்னுறேன். என்று போன் பன்ன.

விடயமறிந்த ராஜ் வீட்டினர் பத்து நிமிடம் கழியும் முன் மறு கோலை எடுத்தனர்.

இங்க பாரு பரத் எங்களுக்கு பாரதிய ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கும் என் பையன பிடிச்சிருந்தா ஒரேயடியாக  நாளைக்கே நிச்சயத்த வச்சிக்கலாம். ஜோசியர்ட பேசவும்  நாளைய நாள் நல்ல நாள்னு  சொன்னாறு. உனக்கு நாளைக்கே  நிச்சயத்த வச்சிக்கிறதுல விருப்பம் இல்லனா சொல்லுப்பா.. என பாரதியின் அத்தை லதா கூற.

இல்லக்கா எங்க வீட்டுலயும் இந்த விஷயத்துக்கு பூரண சம்மதம்கா.. நாளைக்கே வச்சிக்கலாம்.

பரத் இன்னொரு விஷயம்...

என்னக்கா சொல்லு. அது வந்து

சும்மா சொல்லுக்கா.

என் பையன்கு உன் பொண்ண  கட்டிக்க போறதுனு தெரிஞ்சதும் பைத்தியம் முத்திடுச்சி.

என்னக்கா விளையாடுரிய்யா... சொல்ல வந்தத சொல்லு.

பாரதிய அவன்  மணமேடைல தான் முதல் முதலா பார்ப்பானாம். (ஓஹோ...)

எவன் சரி இப்படி சொல்லுவான்கலா? பொண்ணு பார்க்க போனதுமே போன் நம்பர வாங்கி பேசுறதும், கள்ளத்தனமா மீட் பனுனுறதும் தான் நடக்கும். இவனுக்கு பைத்தியம் முத்திட்டு என குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் போதே.

அக்கா.... அக்கா... நிருத்துக்கா... அது மாப்பிள்ளயோட ஆசை அதுல என்ன தப்பிருக்கு.  மாப்பிள்ள பாரதிய மணமேடையிலே பார்க்கட்டும். என கூற

லதாவோ சரிங்க சம்பந்தி போனை வைக்கட்டா?

எனக்கேட்கவும் ஹா சரிங்க சம்பந்தி என சிரித்தவாரே பரத்தும் போனை வைத்தார்.

நாளை நிச்சயம் என பரத் மகாவிடம் கூறவும் எவ்வளோ பேர் இருக்காங்க. நிச்சயத்துக்கு சொல்ல.  இப்படி நிச்சயம் நாளைக்கே வைக்கிறேன் என  வார்த்தைய டக்கு பக்குன்னு முடிச்சிட்டீங்களே என காலில் சக்கரம் வைக்காத குறையாக  பறந்தார் மகா.

பரத் பாரதியை அழைத்து.

பாரதி நீ மாப்பிள்ளையோட  போட்டோவ பாக்குறிய்யா?

மாப்பிள்ளை தான் மணமேடைல பார்க்கிறதா சொல்லிட்டாறு. நீ  பார்க்கிறாயா...

இல்லப்பா நானும் மணமேடைலயே பாத்துக்கிறேன் பா என கூறும் போதே முகம் ரோஜாவாய் சிவந்தது.

(அடிப்பாவி கிடைச்ச சான்ஸ் அ மிஸ் பண்ணிட்ட. பாரு பிறகு கவல படப்போறாய் பாரதி)


தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #lovestory