அவள் 19
மஹிமா ட்ரான்ஸ்வராகி புது ஆபீஸிற்கு சென்றாள்! என்ற விடயமறிந்த பாரதியின் தலையின் கல்லை தூக்கிப் போட்டது போல் இருந்தது. வேலை அதிகமாக இருந்ததால் இரவு வரை வேலை செய்ய வேண்டி இருந்தது.
ஆதி வேலை நிமித்தம் கீழ்த் தளத்திற்கு சென்றான். அங்கே சில வேலை இருந்ததால் இரவுணவையும் அவர்களுடனே எடுத்துக் கொண்டான்.
திடீரென கரண்ட கட் ஆனது. மற்றைய லைனை மாற்றி விட பத்து நிமிடமாகும் என கூற அதற்காக காத்திருக்கும் போது என் லெப்டொப்பை ஓப் செய்தேனா? என யோசித்தவனுக்கு, பாரதி மேலே தனியாக இருக்கின்றாள் என நினைவு வந்தது. சரி இப்போ கரண்ட் வரும் தானே. ரொம்ப தைரியமா பேசுவாள். இப்போ தனியா இருந்தா தான் என்னவாம், என கீழ் தளத்திலேயே இருந்து விட்டான்.
மேலே பாரதிக்கோ பகல் உணவை சரியாக உண்ணாததால் தலை சுற்று ஒரு புறம், கரண் கட், ஆதியை அழைக்கலாம் என பார்த்தால் போனில் சார்ஜ் இல்லை. எனவே தனது மேசையிலேயே தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
கரண்ட் வரவும் ஆதி பாரதிக்கான உணவை எடுத்து வந்து மேசையில் வைக்கவும்.
பாரதி கஷ்டப்பட்டு எழுந்து பாத்ரூம் சென்று முகத்தை கழுவிவிட்டு மெது மெதுவாக வெளியே வரவும் சரியாக இருந்தது.
ஆதி பாரதியை பார்த்து டின்னர் என உணவை வழங்கவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள். மற்றைய நேரமானால் நீயே வச்சிக்கோ உன் சாப்பாட்டை என திரும்ப கொடுத்திருப்பாள்.
ஆனால் அவளது நிலைக்கு தற்போது உணவு மிகவும் அவசியம் என்பதால் பேசாமல் உணவை எடுத்து உண்டு முடித்தாள்.
நேராக ஆதியிடம் சென்றவள். ஸார் என கதைக்க முற்படும் போதே. ஓகே பாரதி நீங்க வீட்டுக்கு போங்க. வேர்க் முடிஞ்சுது என்று ஆதி கூற.
பாரதியோ நான் நாளைக்கு லீவ் என்று கூற.
ஆதியோ கூல் ஆக சரி என தலை அசைத்தான். சரி நேரமாகிட்டு என கிளம்பியவளை பார்த்து. ஆதி மனதால் "நீ லீவ் எடுக்காம போனாலும். நாளைக்கு நீயே லீவ் கேட்டிருப்ப. நீ புத்திசாலி தான்.விஷயம் தெரியும் முன்னே லீவ் எடுத்துகிட்ட"என மர்மமாக சிரித்தான்.
வீட்டுக்கு வந்த பாரதியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டார் மகா.
பாரதி உன் அத்தை லதாவும் உன் மாமாவும் வந்திருந்தாங்கமா....
என்னது லதா அத்தையா?
அம்மா.... அப்போ பிரச்சினை எல்லாம் சரியாகிடிச்சா... அப்பா அவங்க கூட பேசினாங்கலா??
ஆமா பாரதி அப்பா அவங்க கூட பேசினாங்க. அவங்களுக்கு நாங்க எதுவும் பன்னலன்னு தெரிய வந்திருக்கு.
அவது மட்டும் இல்லாம ராமும் அவங்க தம்பியும் சேர்ந்திட்டு தான் உங்க மாமாட சொத்த ஆட்ட போடுறதுக்கு கள்ள தனமா வேலை செஞ்சிருக்காங்க.
அது உங்க மாமா கைல மாட்டி இருக்கு. அது உங்க அப்பா தான் செஞ்சிருக்காருனு ராமும் அவங்க தம்பியும் ப்ளேன் போட்டு மாட்டி விட்டிருக்காங்க.
அதுனால தான் உங்க மாமா பிரச்சினை பண்ண. நாம ஊர விட்டு வந்தது உனக்கு தெரியுமே பாரதி.
பல நாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான் எங்கிறது போல. ராமும் அவன் தம்பியும் உங்க மாமாவோட ஆபீஸ்ல முக்கியமான ஒரு பைல திருடப் போன போது மாட்டிகிட்டாங்கலாம்.
அதுக்கு பிறகு பொலிஸ் அவங்க ஸ்டைல்ல விசாரிச்சு இருக்காங்க.
அதுல தான் சொத்த முழுசயும் மாத்த கள்ளத்தனமா டொகியுமன்ஸ் செய்த விஷயத்தயும் சொல்லி இருக்காங்க.இதுக்கும் உங்கப்பாக்கு சம்பந்தம் இல்லனும் தெரிய வந்திருக்கு.
அது தெரிஞ்ச லதா அத்தை கதி கலங்கி போய்டாங்கலாம்.
உங்க அப்பா பார்த்த மன்னிப்பு கேட்கனும்னு ஊர் ஊரா தேடி இருக்காங்க.
இன்னக்கி தான் நாங்க சென்னைல இருக்குறது தெரிஞ்சி வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டாங்க.
உங்க அத்தையும் இங்க பக்கத்துல தான் இருக்காங்கலாம்.
உன் அத்தான்....
"அத்தானா... "என்று கேட்கும் போதே பாரதியை பரத் அழைத்தார்.
பாரதி இங்க வா மா.... என பரத் அழைக்க.
என்னப்பா?
இங்க உட்காரும்மா?
பாரதி அமர்ந்ததும் சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டு. பேச்சை ஆரம்பித்தார்.
உன் அத்த வீட்டுக்கு வந்தத அம்மா சொல்லி இருப்பாங்களே.
ஆமா பா சொன்னாங்க.
எங்க அக்காட மூத்த பையன் கிருஷ்னா வ ஞாபகமிருக்கா?
ஆமா அப்பா என்று கூறி மென்னகை ஒன்றை உதிர்த்தாள்.
பரத் அதனை அவருக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டார்.
அக்காவும் மச்சானும் உன்ன பெண் கேட்டாங்க.
இவ்வளவு காலமும் செய்யாத தப்பிற்கு தண்டனை தந்ததா மனசில வைச்சிட்டு முடியாதுனு சொல்லிடாதப்பா என்றுட்டாங்க.
உனக்கும் எங்க அக்கா வளர்புல சந்தேகம் இல்லதனால சரி என்றுட்டேன்.
எனக்கு தெரியும் பாரதி நீ யாரையும் விரும்பலன்னு. அதனால தான் ஓகே சொன்னேன் என்று பரத் கூறி விட.
பாரதி அருகே வந்த மகா உனக்கு தெரிஞ்ச , உனக்கு பிடிச்ச கிரிஷ் அ தான் பேசி இருக்கோம். உனக்கு இந்த சம்பந்தத்துல விருப்பம் தானே.
என்ன..... நீ கிரிஷ் அ சின்னதுல கண்டது. இப்ப வளர்ந்து இருப்பான். அவ்வளோ தான்.
நீ உன் அப்பா வ தலை குனிய வெக்க மாட்டனு நினைக்குறேன். காலைல உன் முடிவ சொல்லுமா என்றார் மகா.
ஹூம்.... என்றவள் எழுந்து ரூமிற்கு சென்று தாழ்ப்பான் போட்டுக் கொண்டவள் கையில் இருந்த டவலை தூக்கி வீசினாள்.
சிறிது நேரம் யோசித்தவள். திவியிற்கு அழைக்க மறு முனையில் தொலைபேசியை ஆன்ஸ்வர் செய்தாள்.
திவி என்று பாரதி கூற. ஏன்டி என்ன மறந்துட்டியா? காலேஜ் முடியிற வரையும் நான் தான் உன் ப்ரன்ட்.
ஆன இப்ப மறந்துட்ட நீ என்று குறை கூற. ஸாரி மன்னிச்சிடு டீ.
தொடரும்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro