அவள் 18
ஏன் என்றால் ஆதி அப்படித்தான் இருந்தான். வீழ்ந்திருந்த கம்பனியை பிரபல கம்பனியாக மாற்றியது மட்டுமல்லாமல். அங்கே வேலை செய்யும் ஒவ்வொருவரதும் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டான்.
அன்றிரவு பாரதியை தவிர வேறு யாராவது மழையில் தனியே நின்றிருந்தால் நிச்சியமாக அப்படி வேகமாக போய் இருக்க மாட்டான். பாரதி என்பதாலே பார்த்தும் பார்க்காதது போல் சென்றான்.
ஆனால் பாரதியை கவனிக்க இரண்டு காவலர்களை வைத்திருந்தது யாரும் அறியாத விடயமே.
மறுநாள் ஆபீஸ் போகவும் மஹிமா பாரதியை பார்த்த வாங்க மா ரதி என்றாள். பாரதிக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு கோபம் வந்ததோ தெரியவில்லை.
(ரதி பழைய ஞாபகங்களில் ஒன்று)
எனக்கு பெயர் இல்லயா? சொல்லுடீ. அது என்ன ரதி? நீ வேலை சம்பந்தபட்ட விஷயம் ஏதாவது இருந்தா மட்டும் பேசு. தேவை இல்லாம பேசினா வாய கிழிச்சிடுவேன். நீ திரும்ப பேசின நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று கத்தினாள்.
நான் அப்படித்தான் ரதினு சொல்லுவன் என்ன செய்வ நீ என்று மஹிமா செல்லி முடியவில்லை பாரதியின் கரம் இடி என முழங்கியது.
மஹிமா பேச வாய் எடுக்க. ஆதியை கண்டு அமைதியானாள். ஏனென்றால் ஆதி உள்ளே வந்து கொண்டிருந்தான்.
பாரதியின் அதிரடியான பேச்சு வார்த்தை, சிவந்த முகத்தை பார்த்தவன் இதற்கு மேல் முடியாது என உள்ளே வந்தான்.
இது ஆபீஸ். சந்தை இல்ல. ஏன் இவ்வளோ சத்தம் என்று கேட்க.
பாரதி; மஹிமாவை காட்டி இவள்..... இவள் என என கோபத்தில் மூச்சி வாங்க. ஆதிக்கு புரிந்தது. தவறு மஹிமாவின் பக்கமே என்று. ஏன் எனில் பாரதி சாதரணமாக கோபப்படுபவள் அல்ல. பாரதியை முற்றிலும் அறிந்தவன் அல்லவா ஆதி. எனினும் மரியாதையா பேசினா நல்லா இருக்கும் என்றான் ஆதி.
கண் கலங்க ஆதியை முறைத்தவள். மஹிமா என்ன பார்த்து கிண்டலா ரதினு சொன்னா?
ஆதியின் முகம் கோபத்தில் சுருங்கியது. பாரதி ஆதியின் முகத்தை பார்த்திருந்தாள் பின்னால் ஏற்படும் குழப்பம் தீர்ந்திருக்கும்.(ஆதியின் முகம் பிரகாசமானது. என்ன என் ரதி மறக்கல என முனு முனுத்தான்)
பின் ஆதி மறு நொடியே அப்படியா? என்பது போல மஹிமாவை பார்க்க. இதுல என்ன சார் இருக்குது. சொல்லாம கொள்ளாம லீவு எடுத்துட்டதால வந்துட்டியா ரதி என்று கேட்டேன் என்றாள். அவள் பெயர் பாரதி தானே சும்மா எதற்கு வம்பு பண்ணிகிட்டு.
ஏய்.... என மறு முறை பாரதி அவளது கழுத்தையே பிடிக்க. ஆதி மஹிமா முறைத்து விட்டு. பாரதியின் கையை அவளது கழுத்தில் இருந்து அகற்றினான்.
அவளுக்குத் தான் அப்படி சொன்னா கோபம் வருதுல்ல. விட வேண்டியது தானே. நீ என்ன சின்ன குழந்தையா? என்றான் மஹிமாவை பார்த்த படி.
போங்க. போய் வேலைய பாருங்க.என்று மஹிமாவை பார்த்த படி சொல்லி விட்டு. மிஸ் பாரதி நீங்க போய் காடன்ல இருந்துட்டு ஒரு பத்து நிமிஷம் பிரேக் எடுத்துட்டு வாங்க என அனுப்பி வைத்தான்.
பாரதி வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியேற.
மஹிமாவோ; என்ன ஸார் அவள் இப்படி மிஸ் பிஹேவ் பண்ணிட்டு போறா. நீங்களும் அவளுக்கு பனிஷ்மன்ட் கொடுக்காம. பிரேக் கொடுக்குறீங்க.
பனிஷ்மன்ட் கொடுக்கனும்னா தேவை இல்லாம பேசிய உங்களுக்குத் தான் கொடுக்கனும். என்ற படி அவனது இடத்துக்கு நகர்ந்தவனிற்கு ரதியை நினைத்து இனம் புரியாத சந்தோஷம். அவ என்ன மறக்கல என்ற படி இருக்கையில் அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டான்.
மஹிமாவோ இவளை அடக்கி ஒடுக்கி வைக்க நினைத்தா என்னையவே அடிச்சிட்டா? என அடுத்து வந்த நாட்களில் அமைதியாகவே இருந்தாள்.
இப்படியே சில நாட்கள் கடக்க
புதிய ஓடர் ஒன்றின் வேலையில் முழு கம்பனியும் மூழ்கி இருந்தது. மஹிமா ஆதிக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
ஆதி தலையை இருக பிடித்துக் கொண்டு மஹிமாவிடம் காபி ப்ளீஸ் என்றான்.
காபி எடுக்க செல்பவளிடம் ஒரு பைலை கூறி அதனையும் எடுத்து வருமாறு கூற.
காபியுடன் பைலும் வர முழுதாக பத்து நிமிடத்திற்கு மேல் சென்றது.
பாரதி கைல பைல அனுப்ப வேண்டியது தானே. நீயே எடுத்து வரனுமா என்றான் பல்லை கடித்துக் கொண்டு.
இன்மொரு பைலை கூறி பாரதி கையில் உடனடியாக அனுப்புமாறு கூற. அதனையும் மஹிமாவே எடுத்து வர ஆதியின் கோபம் உச்சத்தை தொட்டது.
நீ ஏன் எடுத்து வந்த நீயா பாரதி. அவளுக்கு படம் புகுத்தத் தான் இங்கே மாற்றியதே இடைல நீ ஏன் வர.
நீ இன்னும் இரண்டு ,மூனு நாள்ள போயிடுவ. அவ இதல்லம் பழகனும் தானே என்று கூற.
மஹிமாவோ அதனை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. அவள் காதில்" பாடம் புகுத்த என்ற விடயம் மட்டுமே ஒழித்தது."
ஸாரி சேர் என்றவள். பாரதியையே அனைத்து வேலைக்கும் அனுப்ப அவள் எதிர் பார்த்த எதுவுமே நடக்கவில்லை.
பாரதிக்கோ இதே கடுவன் மூஞ்சி .இவன்ட வேலை செய்ய என்ன அனுப்புறாளே படுபாவி. என புலம்பியவாறு செய்றாள்.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro