அவள் 17
மஹிமா ஆதியை ஒரு போதும் சந்திக்க விடாது அவளே அந்த வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய பாரதிக்கு ஏக சந்தோஷம்.
மஹிமாவை பாரதி ஒரு பொருட்டாக எடுக்கவே இல்லை.
வெளியே செல்ல முடியா விட்டால் என்ன என்று புத்தகம் வாசிக்கத் தொடங்கினாள். நண்பிகளுடனின் நேரில் கதைக்க முடியா விட்டால் என்ன என்று போனில் தங்களுடைய உறவை பலப்படுத்திக் கொண்டனர்.
நாட்கள் நகர சோதனையும் வந்து சேர்ந்தது.
மஹிமா அன்று காய்ச்சல் என்று திடீர் லீவு. மஹிமாவிற்கு காச்சல் என பாரதி அறிந்திருந்தாள் இவள் போய் ஹோஸ்பிட்டலில் எட்மீட் ஆகியாவது லீவு வாங்கியிருப்பாள். எல்லாம் விதியின் சதி.
ஐயோ... கடவுளே....
இவன் கூட நான் வேல பாக்கனுமே இன்னக்கி என்று டென்ஷனில் இருக்க ஆதியிடமிருந்து அழைப்பும் வந்தது.
பாரதி ஆதியின் முன் நிற்க, ஆதியின் முகம் கடு கடு என இருந்தது. இவளுக்கும் அதற்கு மேல் கோபமிருக்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்து முறைத்துக் கொண்டனர்.
பாரதி பார்வையை வேறு பக்கத்திற்கு அகற்றிய படி.
ஏன் சார் கூப்பிட்டீங்க.
டைம் என்ன தெரியுமா?எனக்கு இன்னும் காபி வரல என்றான்.
ஓ.... ஸாரி சார் எனக்கு உங்க தேவை எதுவும் தெரியாது. மஹிமாவே பார்த்து பார்த்து செய்றதால "(பார்த்து பார்த்து என்பதில் அழுத்தம் கொடுத்து)"எனக்கு தெரியாம போயிடுச்சி.இதோ கொண்டு வரேன் சார் என்றாள்.
அன்று முழுவது ஆதி எதை கேட்டாலும் இதே பதில் வெவ்வேறு முறையில் வர. ஆதி உச்ச கட்ட கோபத்திற்கே சென்றான்.
மிஸ். பாரதி உங்கள என் பீ.ஏ வாக போட்டது எதற்கு என்று தெரியாவிட்டால் மஹிமாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது தானே என்றான் கோபமாக.
நீங்க சொல்லி மஹிமா தார வேலைய தான் நான் சரியாக செய்துட்டு இருக்கேனே சார். திரும்ப என்ன செய்யனும்.
என்ன.... நான் சொல்லி மஹிமா உனக்கு வேலை தாராலா??
ஆமா.....பைல் அடுக்கி வைப்பது.நீங்க வர முன் உங்கட .மஹிமாவோட டேபிளை கிளீன் செய்வது. மஹிமாவோட டிபன் பாக்ஸை கழுவுறது. இந்த ரூமை நீங்க வர முன் வந்து கூட்டி, துடைக்கிறது. என சரியாக தானே செய்றேன்.
வாட்....? அவள் சாப்பிட்ட எச்சி பாக்ஸை நீ கழுவுறியா? லூசாடி நீ.... நான் எப்போதாவது உன் கிட்ட நேரடியாக சொல்லி இருக்கேனா? முட்டாள்.... முட்டாள்.... முட்டாள்..... உனக்கு அறிவு இல்லையாடி. இங்கு பீ.ஏ என்டுறது உனக்கு எடு பிடினு நினைப்பா? என்று ஆதி பேச பேச பாரதிக்கு பிபி ஏறியது.
நீங்க சொல்லித்தானே இதொல்லாம் நடக்குது.உங்கட மற்றைய பீ.ஏ வ வைத்து தானே என்ன பழி வாங்குறீங்க.
அதுககு அப்புறம் ஏன் என்ன திட்டனும் என வெளியேறி அவளது இருக்கைக்கு சென்று விட்டாள்.
ஆதி பாரதியை பழிவாங்க நினைத்தது எவ்வளவு உண்மையோ; பாரதி எடுபிடி வேலை செய்வதும் அவ்வளவு பிடிக்கவில்லை என்பதும் உண்மை.
விடயம் தெரிந்த ஆதியின் மனம் அனலாய் கொதித்தது.அதனால் அவனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் சிறிது நேரம் கண் முடி அவனது மனதை சாந்தப்படுத்தினான்.
பிறகு வேலையில் மூழ்கிப் போனவன். ஒரு கடிதத்தை டைப் செய்ய பாரதியை அழைக்க. பதில் இல்லை. மூன்று முறை அழைத்தும் பாரதி மட்டும் வரவேயில்லை.
இவள் எங்கே சென்றாள். என எண்ணியபடி எழுந்து சென்று பாரதியை பார்க்க சிரிப்பு வந்தது.அதே நேரம் கோபமும் வந்தது.
அவள் மேசையில் தலை வைத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். பாரதி முன் போய் நின்றவன் "ஹலோ" என்றான்.ம்ஹூம் எந்த அசைவும் இல்லை. "பாரதி" என அழுத்தி அழைத்த போதும் அசைவு இல்லை.
கோபத்தில் அருகிலிருந்து பைலை எடுத்து மேசையில் போட அப்போது மெல்ல அசைந்தவள். தலை தூக்காமலேயே இன்னக்கி ரொம்ப திட்டிடீங்க. இன்னும் ஏதாவது ஒரு வார்த்தை சொன்னா கூட எனக்கு ரொம்ப கோபம் வரும். அப்புறம் ஒரு வேலையும் செய்ய முடியாது. நாளைக்கு உங்க ஆசை பீ.ஏ வருவாள். "(ஆசை பீ.ஏ என்பதில் அழுத்தம் கூட்டி.)"அவ கிட்டயே சொல்லுங்க என்றாள்.
ஆதிக்கு அவள் அப்படி சொன்னதும் கோபம் வந்தாலும் எதுவும் பேசாமல் சென்று விட்டான்.
பாரதி ஆபீஸில் இருந்து வெளியே வந்து நிற்கவும் மழை பெய்யவும் சரியாக இருந்தது.
ஐயோ.... நாளை பாத்து ஸ்கூட்டியில வரல. மழை வேற அதிகமாக கொட்டித் தீர்க்குது.என பஸ் ஸ்டான்ட் இல் நின்றபடி தனியாக புலம்பிய படி இருக்க.
ஆதி அவளைத்தாண்டி காரில் வேகமாக பாரதகயை கண்டும் காணாதது போல் சொல்ல.
பாரதி சொன்றவனைப் பார்த்து நிக்கிறானா பாரு.... சிடு மூஞ்சி சிடு மூஞ்சி. என ஒரு மூச்சிக்கு திட்டித் தீர்த்தாள்.
மழை என்பதால் வழமையை விட பஸ் தாமதமாக வர பாரதி பஸ்ஸில் வீட்டுக்கு சென்றாள்.
மறுநாள் மஹிமா வந்துவிட்டாள். ஆனால் பாரதி வரவில்லை.
பாரதியின் விடுமுறை பற்றி அறிந்த மஹிமாவிற்கு எறிச்சலாக இருந்தது.
பாரதியை பற்றி குற்றம் சொல்ல நினைத்த போது,
ஆதியே மஹிமாவை அழைத்தான்.
மிஸ் மஹிமா... பாரதியை பீ.ஏ வாக போட்டதோடு உங்களையும் பீ.ஏ வாக நியமித்தது சில காரணங்களுக்காக. ஆனால் அது என் பர்சனல்.
அவளை எனக்கு சில காரணங்களுக்காக பிடிக்காது. அதனால் அவளுக்கு பிடிக்காததை நான் செய்தேன். பிரச்சினை எனக்கு என் ரதிக்கும் இடையில். நீங்க ஏன் அவளை மிஸ் யூஸ் பன்னுறீங்க.
என்ன.... ரதியா? அது யாரு....
ஆ.... ஆ... அது பாரதிட நேம் திவ்ய பாரதி தானே. எனக்கு ஏதோ ரதினு வந்துட்டு என்று சமாளித்தான்.
சரி நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க என்றான் அழுத்தமாக.
சார் நான் அவளுக்கு எந்த வேலையையும் கொடுத்தது கிடையாது. சின்ன சின்ன வேலையை தான் செய்வாள்.
அடுத்து அவளை நான் ஏன் மிஸ் யூஸ் பண்ணணும். இன்னைக்கு கூட ஒரு வார்த்தை சொல்லாம லீவு எடுத்திருக்கிறாள் என்றால் மஹிமா கோபமாக.
என்ன சொல்றீங்க மஹிமா... சின்ன சின்ன வேலை என்றால் உங்க டேபிளை கிளீன் பண்ணுரதும், நீங்க சாப்பிட்ட எச்சி பாத்திரத்த கழுவுறதுமா மஹிமா என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
மஹிமா அதிர்ந்து நின்றாள்.
என்ன பதிலைக் காணம்.லுக் மிஸ் மஹிமா.... நீங்க கேட்ட ட்ரான்ஸர் கிடைச்சு இருக்கு இன்னும் பத்து நாள்ள நீங்க அங்க ஜாயின்ட் ஆகனும்.
ஸோ நீங்க போனதுக்கு பிறகு பாரதி தான் அத்தனை வேலையையும் செய்யனும். ஸோ அவளுக்கும் வேலைய செய்ய விடுங்க.
என்ட் நேற்று பெய்த மழைல நனைஞ்சதால உடல் நலம் இல்லாமல் இருக்கலாம்.
நான் இந்த கம்பனி எம்.டி என்னிடமே திமிரை காட்டுபவள் உங்களுக்கு அடங்கி விடுவாள் என்று நினைச்சிடாதீங்க. நீங்க போகலாம்.
ஸாரி சார். உங்களுக்காக தான் நான் அப்படி நடந்து கொண்டேன்.இனி அப்படி நடக்காது.
அப்புறம் அவளை எப்படி அடக்கனும்னு எனக்கு தெரியும். நான் போகும் முன் அவள் திமிரை அடக்கும் வழியைப் பாருங்க சார் என்று கூற.
வாட் நீ அவள அடக்க போறியா? நான் அவளை பாத்துக்கிறேன் என்றான் ஆதி வெடுக்கென்று.
அப்படி ஆதி கூறியதும் மஹிமா ஆதியை ஆழமாக பார்க்க. அவனது கண்கள் ஏதோ கூற குழம்புவது மஹிமா முறையானது.
ஓகே சார் என்று வெளியேறியவள். சார் பாரதி மேல கோபப்படுறது போல காட்டிக்கிட்டாலும்.
பாரதினு சொல்லும் போதே ஏதோ சொல்லுதே..ஏதோ தப்பா இருக்கே? இல்ல இருக்காது இருக்காது நான் தான் தப்பா கணக்கு போடுறன்.
மஹிமா அங்கே அப்படி இருக்க.
ஆதியோ அவள் என் ரதிய அடக்குறாளாமா? அப்போ நான் எதுக்கு இருக்கேன் என எண்ணி சீறினான்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் பாரதி ஆபீஸ் வரவில்லை. உடம்பு சரியில்லை என பாரதியின் தம்பி அஜய் தகவல் கொடுத்தான்.
திவ்யாவும் , சுகன்யாவும் பாரதியை வீட்டில் போய் பார்க்க அவள் வீட்டில் தங்கை கவிதாவுடனும் தம்பி அஜயுடனும் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தாள்.
திவ்யா; பாரதியை ஏன்டி. சுகயீன விடுமுறைனு பொய் லீவு போட்டுட்டு கிரிகெட் விளையாடுறியா? என்று சுகனும் திவ்யாவும் முறைக்க.
என்ன முறைப்பு? ஹா . என்ன தனியா அந்த காட்டி மிராண்டிங்க கிட்ட தவிக்க விட்டு ஹாயா இருந்தீங்க. என்னால முடியலடா சாமி ...
ஏய் முதல்ல என்ன நடந்ததுனு சொல்லு. சரி வா... உள்ள போய் சொல்லுறேன்.
சரி இப்ப சொல்லு அங்க என்ன நடந்தது? ஏதும் கலகம் செஞ்சிட்டு தலைமறைவாகி இருக்கிறியா?
ஏன்னா? மஹிமா நீ இல்லாம ரொம்ப கவலையா இருக்கா?
இன்னக்கி கூட இரண்டு முறை ஏன் பாரதி வரல்ல.... ஏன் பாரதி வரல்லனு உயிர எடுத்துட்டா?என்று திவ்யா கூற.
பாரதி மேல அவ்வளோ லவ்வு என்று சுகன்யா சொல்ல. திவ்யாவும் சுகன்யாவும் சேர்ந்து ஹைபை போட்டு சிரித்தனர்.
சும்மா வெறுப்பேத்தாம இருங்கடி. அவளும் அவள் மூஞ்சும். அவள் முசர கூட பரவல்ல. டிரஸ்ஸூ . ச்சி நினைக்கும் போதே கூசுது.
சரி என்ன நடந்ததுனு சொல்லு.
அதுவா அது ஒன்னும் இல்லை உண்மைய சொன்னன்.பட் அவன் திட்டிடான். என சோகமாக கூற
எப்படி திட்டினான் தெரியுமா? முட்டாள்... லூசாடி நீ என்டு எல்லாம் கேட்டான் டி.
சரி நீ என்ன உண்மைய சொன்ன?
அதுவா என நடந்ததை கூற.
சார் திட்டினதுல தப்பே இல்ல. அந்த மஹிமா கழுத பாத்திரம் கழுவ வச்சிருக்காள். நீ பாட்டுக்கு அவள் சொன்னதும் செஞ்சிட்ட. சும்மா சரி எங்க கிட்ட சொல்லனும்னு தோனலயா என்றாள் சுகன்.
ஸ்ஸூ..... அப்பா இருக்கார். கேட்டுட போகுது. அப்புறம் நா வேலைக்கு வர்ரது அவ்வளோ தான்.
சரி எங்க கேள்விக்கு பதில் சொல். நீ ஏன் இத எங்க கிட்ட சொல்லல்ல என்று திவ்யா கேட்க. விடுங்கடி. இனி மஹிமா இப்படி வேலை தர மாட்டாள். எப்படியும் ஆதிட்ட நல்லா திட்டு வாங்கி இருப்பாள்.
என்ன நீ சொன்ன? ஆதிய முன்னமே உனக்கு தெரியுமா?
இல்ல எனக்கு தெரியாது. ஈஈஈஈஈ ஏதோ ஒரு ப்ளோல வந்துட்டு.
சரி நீ என்ன சொல்ல வர. ஸார்க்கு உன்ன பழி வாங்கனும்னா... மஹிமாவே அத செய்தால் ஏன் அவள திட்டப் போறான்.என்றாள் திவ்யா.
இல்லடி நல்லா யோசிச்சி பாரு . அந்த அரக்கன் என்னிடம் மட்டும் தான் சண்டைக்கு வருவான். மத்தப்படி ஆபீஸ்ல எத்தன மாற்றத்த கொண்டு வந்து இருக்கான். அவரவர் திறமையை கண்டு பிடித்து தட்டிக் கொடுத்து. அதற்கு ஏற்றாற் போல உதவியும் செய்கிறார். லேடிஸ் ஸ்டாப்குனு நிறைய சலுகைகள் என எல்லோருக்கும் நல்லது தான் செய்து இருக்கான்.
விட்டா நீ ஸார்க்கு பாராட்டி விழாவே எடுத்துடுவ என்று திவ்யா கூறினாலும் பாரதி பேச்சில் இருந்த உண்மையை மறுக்கவில்லை.
தொடரும்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro