அவள் 13
ஆபிஸை விட்டு வேகமாக வெளியே வந்தவன் காரை எடுத்துக் கொண்டு வேகமாக பறந்தான்.
வேகமாக வந்த கார் பிரமாண்டமான வீட்டின் முன் நின்றது.
காரில் இருந்து இறங்கியவனின் அழுத்தமான காலடி ஓசையிலேயே அவனது கோபம் தெளிவாகத் தெரிந்தது.
வீட்டினுள்ளே நுழைந்த ஆதி
கரண்..... கரண்.... என்று சத்தமிட்டான்.அவனது சத்தம் வீட்டுச் சுவரில் பட்டுத் தெறிப்படைந்தது.
ஆதியின் குரல் கேட்டு கரண் விழுந்தடித்துக் கொண்டு அவன் முன் வந்து நின்றான்.
சொல்லுங்க ஐயா.... என்று ஆதியை பார்த்து கேட்க.
ஆதி கரணை பார்த்து. இன்று காலைல சிக்னல் கிட்ட ஆக்ஸிடன்ட் ஏதாச்சும் நடந்துச்சா....
இல்லய்யா... அப்படி ஒன்னும் நடக்கலயே. என்று திக்கி திணறி கதை சொன்னான் கரண்.
ஓ... அப்படியா..... அப்போ... நீ... காலைல சிக்னல் கிட்ட ஒரு பெரியவர இடிக்கல்ல... இடிச்சது நம்ம காரும் இல்ல. அப்படி தானே.
ஆமா சார். என்று சொல்லி முடிக்கும் மறுகணம் ஆதியின் ஐந்து விரல்களும் கரணின் கன்னத்தில் இருந்தது.
கரண் உனக்கே தெரியும் நான் தப்பு செய்திட்டு உண்மையை சொன்னா கூட மன்னிச்சிடுவன்.ஆனால் பொய் சொல்லி மறைக்க நினைச்சால் மன்னிக்கவே மாட்டான் என்று கத்தினான் ஆதி.
ஐயா தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்கய்யா.. இந்த வேலை போய்டுச்சினா நானும் என் குடும்பமும் இல்லா கதி ஆயிடுவோம் ஐயா... நான் தனி ஆள்டா கூட பறவல்ல. காலேஜ் போகின்ற தங்கையும், படுத்த படுக்கையா அம்மாவும் என்ன நம்பி இருக்காங்க ஐயா.... என ஆதியின் காலின் விழப் போக தடுத்தவன் உண்மையச் சொல்லு என்றான்.
இல்லன்னா உன் டிரஸ் எல்லாம் எடுத்துட்டு ஐந்து நிமிஷத்துல வீட்ட காலி பண்ணு. என்று கூற. இல்லய்யா நா உண்மையை சொல்லிடறன் என்னும் போதே ஆதியின் அம்மா லதாவும் வந்து சேர்ந்தார்.
சரி சொல்லு என்றான் ஆதி. இல்லங்கய்யா.... மெக்கானிக் ஷாப்ல வண்டிய தர லேட் ஆகிட்டுது.
நான் நீங்க மீட்டிங் இரண்டு தடவ கோல் பண்ணவும் அவசரமாக சிக்னல்ல சிக்காம இருக்க வேகமாக வந்தன்.
பெரியவர் வருவாருனு நா எதிர் பார்க்கல்ல. என்ன மன்னிச்சிடுங்கய்யா... என்று கூற .
ஆதியின் தாய் லதா இடையில் புகுந்து இந்த தடவ மன்னிச்சிடுடா... பாவம்... என்று கூறி
லதாவே. சரி கரண் நீ செஞ்சிட்டு இருந்த வேலைய அவசரமாக செய்துடு போ... போ...
ஆதி நீயும் போய் ப்ரஷ் ஆகிட்டு வா... காபி போட்டு தாரேன் என்ற படி சமையலறையில் தஞ்சமடைய. கரண் தப்பித்தால் போது என ஓடியே விட்டான்.
///////////////////////////////
ஹலோ நல்லா விசாரிச்சியா?
ஸூர் ஆ நாம பார்த்த அதே கம்பனி தானே.
ஆமா சார் நாம பார்த்த அதே கம்பனி தான்.சரி இப்ப அது என் கம்பனி. அது ஆதி கிரிஷ்ணாவோட ஓர்ன் கம்பனி. சாவி இப்பவே என் கைக்கு வரனும் எனக் கூறி. இன்னும் ஏதேதோ அவனது பீ.ஏ அர்ஜூனிடம் கூறினான்.
மறுநாள் காலையில் பவி கம்பனிக்கு வர கம்பனி பெயர் மாற்றப்பட்டு இருந்தது.ஏ.கே கண்ஸ்ட்ரக்ஷன் என.
பவி மனதால் இது வேற ப்ரைவேட் கம்பனி அடிக்கடி கை மாறுது. முன்ன இருந்தவங்க ரொம்ப நல்லவங்க.
இப்ப வரப் போற எம்.டி எப்படி இருப்பாரோ.... இந்த பாரதிய கூட இன்னும் காணல.
வழமையா இந்த டைம்கு வந்துடுவாளே. இன்னைக்கு பார்த்து இன்னும் வரல.
வரப் போற எம். டி எப்படி இருப்பாரு. மேடம் சொன்ன மாதரி நல்லவங்கலா இருந்தா சரி.இந்த பாரதிய வேற இன்னும் காணம். நாம பயந்து சாக வேண்டி இருக்கு. என அருகில் இருந்த ரித்விக்கிடம் புலம்ப.
பவி சும்மா புலம்பாதே.நீயும் பயந்து நம்மலயும் பயம் காட்டாதே. பாரதி என்ன சின்னக் குழந்தையா??
அவள் என்ன பண்ணிட்டு இருக்காளோ,
அவள் கிட்ட எவன் மாட்டிடு இருக்கானோ.யாரு கூட வம்பு பன்றாளோ. அவன் நிலம தான் பாவம். பாரதி அதுலாம் நல்லா சமாளித்துக் கொள்ளுவாள்.
வார புது போஸ் இவளப் பார்த்து பயப்பாடாம இருந்தாச்சரி எனக் கூறவும் மூத்த மேனேஜர் போஸ் வந்துட்டாரு வாங்க போகலாம் என அழைக்க அனைவர்ம் அவரைப் பின் தொடர்ந்தனர்.
அறிமுகப் படலம் முடிய மீடிங் ஆரம்பமானது.
புது போஸ் ஆறடிக்கு மேல் உயரமும், ஜிம் செய்து வைத்த கட்டுக் கோப்பான உடல்,சிவப்பு நிறம்,கூறிய மூக்கு,அடர்ந்த புருவம். என முதல் பார்வையிலேயே பெண்களை மயக்கும் விதமாக இருந்தான்.
ஆனால் முகம் இருகிப் போய் இருந்தது. ஏதோ எதிர் பார்த்து ஏமாந்தது போல் இருந்தது அவனது தோற்றம்.
ஆனால் கம்பீரமாக இருந்தான்.சிரித்தால் நிச்சியம அழகாக இருப்பான். ஆனால் அவன் சிரிக்க வாய்ப்பே இல்லை என்றது அவனது முகம்.
ஆதி மெனேஜரை பார்த்து எல்லொரும் வந்துட்டாங்கலா?என்று கேட்க.
எல்லொரும் வந்துட்டாங்க என்றார் கிரிஷ்ன மூர்த்தி.
அப்படினா.... அந்த கதிர யாருக்கு சார். என்றான் ஆதி.
அது வந்து..... சார்... என்ற படி முன்னால் அமர்ந்திருந்த பவியை முறைத்தார் கிரிஷ்ன மூர்த்தி எனப்படும் கிரிஷ்ணன்.
ஏன் அவங்கல முறைக்கிறீங்க. நான் தான் முதல்ல மீடிங் ரூமிற்கு முதல்ல வந்தது. ஸோ அவங்களாள ஷெயார்வ அப்புறப்படுத்த முடியல. அது மட்டும் இல்லாம என் கிட்ட வேலை செய்றவங்க அத்தன பேர்ட நேம் லிஸ்டும் இருக்கு என்று ஆதி கூற கிரிஷ் இற்கு வயிரு கலக்கியது.
சாரி சார். பாரதி மட்டும் இன்னும் வரல என்றவுடன் ஆதி யாதும் அறியாதவனைப் போல்.
பாரதின்னா?ஆணா.... பெண்ணா.... பாரதின்னு சொன்னதும் தெரிஞ்சுக்க அவங்க அவ்வளோ பெரிய ஆளா?
ரித்விக் முந்திக் கொண்டு லிஸ்ட்ல இருக்கு சார் என்றான். ஆதி முறைத்த வண்ணம். ஆணா?பெண்ணான்னு இல்ல என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
பவி ரித்விக் காதில் சும்மா இரேன்டா... என்றாள் பல்லை கடித்துக் கொண்டு.
திவ்ய பாரதி என்றது பொண்ணு சார் உங்க P.A என்றார் கிரிணன்..ஆதி அவரைப் பார்த்து லீவா என்று கேட்க. தெரியல சார்.தினமும் கரெக்ட் டைம் கு வந்துடுவா... இன்னைக்கு என்னன்னு தெரியல போன்னும் ஆன்ஸர் இல்ல. என்றார் கவலையாக.
ஓ அப்படியா....சரி ஒன்னு செய்வோம். இன்று ஆபீஸ் அ லீவு போட்டுட்டு அந்த மகாராணிய தேடுவோம். என்றான் சிரு புன்னகையோடு.. இதைக் கேட்ட மற்றவர்களும் சிரிப்பு வந்தாலும் ஆதியினது கோபப் பார்வையால் வந்த சிரிப்பு இடையிலேயே சென்று விட்டது.
பாரதி ஏன் தாமதம்❓
தொடரும்.....
தொடரும்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro