அவள் 12
பொலிஸ் ஸ்டேஷன் புறப்பட்டு வந்து பொலிஸிடம் விசாரிக்க.
அம்மா அந்த வயசானவர் உனக்கு வேண்டியவங்ளா? என கேட்க. இல்ல சார் என்றாள் பாரதி.
இங்க பாருமா.... அந்த பெரியவருக்கு பெரிசா எந்த காயமும் இல்ல. அதனால இத விட்டுடுமா....
அவனுங்க பெரிய இடத்து ஆள்மா... பார்க்க என் பெண்ணு மாதிரி இருக்க.அதனால் தான் சொல்றன் என்று கூறவும்.
சரி சார். பிலீஸ் அட்ரஸ் ஆச்சும் தாங்க என்று கெஞ்சி. ஆக்ஸிடன் சென்தவன் கம்பனி அட்ரஸை கேட்டு எடுத்து கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தாள்.
இப்படியே அவன் கம்பனிக்கு போய் அவன்ட மூஞ்சிக்கு இரண்டு கேள்வி கேட்டுட்டே வீட்டுக்கு போய்டுவோம். என தீர்மானித்தவாய் அந்த கம்பனியை நோக்கி விரைந்தாள்.
~~~~~~~~~~~~~~~~~
கம்பனி வானைத் தொடும் அளவிற்கு உயரமாக இருந்தது.
அந்த பாதை வழியாக செல்லும் அனைவரும் பார்த்து வியக்கும்;
வேலை பார்த்தால் இது மாதரி ஒரு இடத்தில் தான் வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படும் அளவிற்கு இருந்தது அந்த கம்பனி.
பெரிய பெயர் பதாகையில் ஏ.கே கண்ட்ரக்ஷன் என மின்னியது.
ஸ்கூட்டியில் இருந்து இறங்கியவள். நேராக உள்ளே சென்று வரவேற்பாளப் பெண்ணிடம் நா இப்பவே உங்க எம். டி ய அவசராமாக பார்க்கனும் என்று கூற.
இப்ப பார்க்க முடியாது மேம். உங்க பெயரை கொடுத்து விட்டு போய் , நாளை வந்து மீட் பண்ணுங்க மேம் என சிரித்த முகமாக கூற.
நோ...நோ....நோ...நான் இப்பவே பார்க்கனும். இல்ல இப்படியே பாதை நடுவில கீழ உட்காந்துடுவன்.
உங்க எம்.டி இந்த வழியாக தானே வெளியில போகனும். அதுவும் என்ன தாண்டி தானே போகனும் என்று மிரட்டவும்.
ப்ளீஸ் மேடம் வைட் என்று கூறி யாருக்கோ தொலைப்பேசி மூலம் அழைத்து சிறிது நேரம் கதைத்த பின்.
பாரதியிடம் வந்து மேடம் உங்கள எம்.டி வர சொன்னாறு என்று கூற.
அந்த பெண்ணிடம் எம்.டி யின் அறைக்குச் செல்லும் வழியினை கேட்டறிந்து விருவிரு என்று எம்.டியின் அறையை நோக்கிச் சென்றாள்.
எம். டி யின் அறை முன் சென்று நாகரீகம் கருதி excuse me என கூற,
யஸ் , கம் என கம்பீரமான ஆண் குரல் வெளி வர.
உள்ளே சென்றாள்.
உள்ளே அமர்ந்துருந்த எம்.டி பின் புறம் திரும்பி மேசை மேல் இருந்த லெப்டொப் இல் கவனமாக இருக்க. பாரதி தொண்டையை சரி செய்தாள். அதுவும் அவன் கொள்ளாமல் போகவே.
பாரதியின் பொறுமை பறந்தது. பாரதி பின்னால் திரும்பி இருந்தவனை இழுத்து அவனது கன்னத்தில் இடி என அடித்தாள்.
அறைந்து விட்டு அவனது முகத்தை கூட பார்க்க விரும்பாதவள். சுவற்றை வெறித்த படி.
சத்தமாக உனக்கு பணக்கார திமிரா டா......
காலைல ஒரு பெரியவர நடு ரோட்ல ஆக்ஸிடன் பண்ணிட்டு பார்க்காம போன.
இப்ப ஒருத்தி உன்ன பார்க்க வந்திருக்கிறது தெரிஞ்சும்.
நீ உன் முகத்த திருப்பிட்டு இருக்க. என்று பேசிக் கொண்டே போக.
ஸ்டோப் இட் என்ற சத்தத்தில் அவனது முகத்தை பார்த்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்து முச்சி விட சிரமப் பட்டு மெதுவாக வாயால் ஆ...தி என முனு முனுத்தாள்.
எனினும் மறு நிமிடம் சுதாகரித்து.
நீ என்ன உன் அப்பன் வீட்டு சொத்துல ஜாலியா இருக்க.
அது தானே அந்த பெரியவர நடு ரோட்டுனு கூட பார்க்காம விட்டுடு வந்த. என்றவளது கண் கலங்கியிருந்தது.
பொலிஸ்க்கு போனா பெரிய இடத்து பையனாம். எளியவங்களுக்கு நீதியே இல்லயா??
கேவலம் எல்லாத்துக்கும் காரணம் அந்த உயிரில்லாத பணம்.
உங்களுக்கு எங்க சார் அடுத்தவங்க கஷ்டம் விளங்க போகுது என்று கூறியவளாய் ஆபீஸில் இருந்து வெளியேறி ஸ்கூட்டியில் வேகமாக சென்று விட்டாள்.
பாரதி அடித்த அடியிலும் பேசி பேச்சிலும் சிலையானான் ஆதி.
தன்னை ஒரு பெண் அதுவும் அவனது இடத்திற்கே தேடி வந்து அடித்ததை ஏற்க முடியாமல் கண்ணில் கோபத்துடன் கன்னித்தில் கை வைத்த படி ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான்.
தொடரும்......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro