Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவள் 10

வெளிநாட்டில்  இருந்து  வந்த ஆதி தந்தையின் வேண்டுகோளிற்கு இணங்கி தந்தையின் கம்பனியை பொறுப்பு ஏற்றான்.

தந்தையினது கம்பனியினுடன் முடங்கிவிடாது  அவனது திறமையை பயன்படுத்தி பல துறைகளில் தடம் பதித்து வெற்றியும் கண்டான்.

பாரதி படிப்பை முடித்து விட்டு கண்ஸ்ட்ரக்ஷன்  கம்பனியில்  சேர்ந்தாள்.அவளின்  அயராத முயற்சியால் பல வெற்றிகளை கம்பனி வசப்படுத்தினாள். இதனால்  எம். டி இன் PA வின் உதவியாளராக நியமனமும் பெற்றாள்.

/////////////////////////////////////////////////////////////////

பாரதி... பாரதி அவசரமாக வா... என்று கூவிய படி பவி எனும் பவித்திரா நுழைந்தாள்.

ஏன் பவி

வா... வா... அவசரமாக வா... ஸ்பெஷல் மீடிங் இருக்கு. என்ற படி இழுத்துச் சென்றாள்.

பாரதியும் பவியும் மீடிங் ரூமை அடைய அதன் பின் கம்பனியின் எம். டி உம் வந்து சேர்ந்து மீடிங் ஆரம்பமானது.

ஹலோ டியர்ஸ். உங்க எல்லோருக்கும் தெரியும் நான் என் குடும்பத்தோட லண்டன் ல செடில் ஆக போறேன் என்று.

அது மட்டும் இல்ல கம்பனி வேற லோஸ்ட்ல ஓடிட்டு இருக்கு.

இன்று ஒருத்தர் வந்து கம்பனிய பார்த்துட்டு போனாறு. அவர் இந்த துறைக்கு புதிசா நுழைஞ்சாலும்  அவர்ட கடும் முயற்சியால நம்பர் வன் ஆ  வந்துட்டாரு.

அவர் ரொம்ப நல்லவர்.பட் வேலைனு வந்துட்டா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். நீங்க நல்லவங்கலா இருந்தீங்கன்டா அவரு பொஸ் ஆக மட்டும் இல்லாம நல்ல பிரண்ட் ஆகவும் இருப்பாறு.

அவரு நம்ம கம்பனிய பார்த்ததோடு விட்டு விடாம வாங்க ப்ரே பண்ணிக்கோங்க.அப்போ எனக்கும் லண்டன் போக ஈஸி ஆக இருக்கும்.

தட்ஸ் ஆல் என மீடிங்கை முடித்தாள்.

பவி: ஆமா ஆமா அவர்க்கு வெளிநாட்டுக்கு அவசரமாக பறக்க நாங்க ப்ரே பண்ணணுமா? வரப்போறவன் யாரோ

பாரதி: சும்மா இருடி. காதுல விழுந்துட போகுது.

மறுநாள்  பாரதி ஆபீஸ் வரும் வழியில் ட்ரபிக் இல் மாட்ட .பொறுமையின்றி கைக் கடிகாரத்தை பார்த்த படி நின்றிருந்தாள்.


தொடரும்.....

Konjam kuttya ud pottu irukken. Next time long aa poda try panren friends

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #lovestory