Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவள் 09

கல்லூரிப் படிப்பை பூர்த்தி செய்த ஆதி மேல் கல்வி பயில  வெளிநாடு நோக்கி பயணமானான்.

பாரதி உள்ளூரிலேயே  மேல் கல்வியை தொடர்ந்தாள்.
                                                              *ஐந்து வருடங்களுக்குப் பிறகு*....

வம்சி அவசரமா போயேன்டா...

அம்மா இதவிட  பாஸ்டா போகனும்டா ஜெட்ல தான் போகனும்.

நீ ரொம்ப ஓவரா பண்றமா....
என அன்னையை வம்பிலுத்தான் வம்சி.

உங்களுக்கு  எங்கடா பெத்தவங்க மனசு புரிய போகுது.

ஒருத்தன் மேல் படிப்ப படிக்கனும் என்டு வெளி நாட்டுக்கு ஓடிட்டான்.

இந்த ஐந்து வருஷத்துல ஒரு தடவ அம்மாவ பாக்கனும்னு நாட்டுக்கு வந்தானா??

வரட்டும் அவனக்கு என்ன செய்றன் என்டு பாரு என்றார். வீம்பாக.

விமானநிலையம் வந்தடைய

சிறிது நேரத்தில் வம்சியும், லதாவும் இருக்கும் இடத்தை நோக்கி வந்தான் நம் கதாநாயகன்


ஆறடிக்கு மேல் உயரம், ஜிம் செய்த கட்டுக் கோப்பான உடல், சிவப்பு நிறம், கூறிய மூக்கு, அடர்த்தியான  புருவம், அளவான தாடி மீசை , அதற்கு நடுவில் அழகான உதடு

அவன் சிரித்தால் மொத்த பெண்களும் அவன் காலடியில்.

லதா ஆதியை கண்டதும் திருஷ்டி கழித்து விட்ட படி ரொம்ப வளர்ந்துட்டடா;

இந்த ஐந்து வருஷத்துல. என்று மனம் மகிழ்ந்து கூற.

ஐந்து வருடமாக நாட்டுக்கு வராத விடயமும் நினைவில் வர. முகத்தை திருப்பிக் கொண்டார்.

வம்சி உன் அண்ணா வந்துட்டான் தானே.

வா.... நாம போகலாம் என்ற படி முன்னால் நடந்தார்.

உங்க அண்ணானா??

டேய் வம்சி... அம்மா என்னடா சொல்லிட்டு போறாங்க?

நீ என் அண்ணான்டு சொல்லிட்டு போறாங்கடா

அதில் காண்டாகிய ஆதி.

அத நீ எனக்கு சொல்லி தரனுமா?

நீ என் தம்பினு எனக்கு தெரியும். பட் அம்மா ஏன் அப்படி பேசுறாங்க.

ஆ... அதுவா... உன் மேல செம்ம கோபத்துல இருக்காங்கடா....

அது தான் ஏன்?

டேய் இது உனக்கே கொஞ்சம் ஓவர் ஆ தெரியல.

ஐந்து வருஷமா அம்மாவ பாக்கனும்னு நினைவு வரல.

இப்ப மட்டும் பாசமழை பெழியுற. அது தான் கோபம்.

அப்ப அதுவா விஷயம் சரி வா போகலாம்.என்ற படி  வந்து காரில் லதாவின் பக்கத்தில் அமர்ந்தான்.

டேய் வம்சி உன் அண்ணாவ முன்னாடி உக்காற சொல்லு.

சும்மா என்ன டிஸ்டப் செஞ்சி கிட்டு.

ஆதி: அம்மா.... கோபமா இருக்குறீங்கலா?

லதா:😏😏😏😏

ஆதி:  சாரிம்மா....
நான் ஏன் ஒரு தடவ  கூட உன்ன பார்க்க வரலனா, நான்  வெளி நாட்டுக்கு போன போது பட்ட கஷ்டம் தான் மா..

லதா: டேய் என்னடா சொல்ற, கஷ்டப்பட்டியா??

ஆதி: ஆமா மா... பணத்தாலயோ சாப்பாட்டாலயோ இல்லமா மனசால.

உடம்பு முடியாம தூங்கினா கூட பார்க்க யாரும் இல்ல. நாநா தனியா போய் மருந்து எடுத்தா தான்.

நீ இருந்தா அப்படி நடக்குமா?

எனக்கே தெரியாது எனக்கு என்ன வேண்டும் என்டு.

ஆனா நீ பார்த்து பார்த்து செய்வ.

இதுல நா திரும்ப நாட்டுக்கு வந்துட்டு போனா அது மாதிரியே திரும்ப பழகிடுவன்.

அது மட்டும் இல்லாம நீங்க எல்லாரும் இல்லாம இருக்கிறது ரொம்ப கஷ்டம்.

நான் நாட்டுக்கு வந்துட்டு போனால் உங்க நினைவு அதிகம் வரும் அதனால தான் மா வரல என்று கூற

லதா ஆதரவாக ஆதியின் தலையை வருடினார்.

ஆமா அப்பா வந்தாரே என்ன பார்க்க.

நீயும் அப்பா கூட வந்து இருக்க வேண்டியது தானேமா இவ்வளே பீல் பண்ற...

அத பத்தி போசாதடா....

அவரு ஆபீஸ் விஷயமா வெளிநாடு போறேன் என்டு போய் வரும் வழில உன்னயும் பார்த்துட்டு வந்துடுவாறு.

வந்து  நான் ஆதிய பார்த்துட்டு வந்தன் என்டு சொல்வாறு.

நான் என்ன கூட்டிட்டு போங்கனு சொன்னா;

திரும்ப போகும் போது கூட்டிட்டு போறன், திரும்ப போகும் போது கூட்டிட்டு போறன் என்டு  ஏமாத்திட்டாறுடா?

தொடரும்.....

அடுத்த அத்தியாயம் முதல்  😎😎😎😎

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #lovestory