அவள் 08
ஆதி ட்ரபிக்கில் மாட்டியதால் உரிய நேரத்திற்கு வர முடியாமல் போகவே.
ஆதியின் உயிர்த் தோழர்கள் கல்லூரியின் ஆபீஸிற்கு படையெடுத்தனர்.
பிரின்ஸிபல்லிடம் நடந்தவற்றை கூற
பாரதி ஆபிஸிற்கு வரவழைக்கப்பட்டாள். என்னமா இவனுங்க சொல்றது உண்மையா? நீ ஆதி ப்ரஸன்டேஷன் செய்யாம இருக்க இத செஞ்சியா?
ஸார் ஆதியும் என்ன ஹர்ட் பண்ணி இருக்கான் ஸார்.
நான் அத கேட்கல. நீ இத செஞ்சியா? இல்லையா?
பாரதி மெளனமாக இருக்க.
அப்போ நீ தான் இத செஞ்சிருக்க. உனக்கு தண்டனையா ஒரு வார காலம் சஸ்பன்ட்.😢😢😢
ஸார் ஆதி கூட கலைவிழா நேரம் நான் பேச்சிக்கு தான் இருந்தன். ஆனால் அவன் எனக்கு தெரியாம பாட்டுக்கு மாத்தினான் ஸார்.
இங்க பாரு பாரதி. நீ இத பற்றி அப்பவே கம்ப்லைன்ட் பண்ணி இருந்தினா நாங்க எக்ஸன் எடுத்திருப்போம். அத நீ செய்யல.
அடுத்து ஆதி செஞ்சதால உன் படிப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படல்ல.உண்மை தானே
ஹூம்....
ஆனால் நீ செய்த வேலையால பாரு. ஆதிக்கு மட்டுமா நஷ்டம். அவன்ட குருப் புல்லா நஷ்டம். லாஸ்ட் இயர் லாஸ்ட் எசைமன்ட்.
ஸோ எப்படி பார்த்தாலும் உன் மேல தப்பு இருக்கு. அதனால ஒரு வாரம் சஸ்பன்ஸ்.
ஸார் அப்போ எக்ஸாம். பெயார்வெல்.ஸாரி டு ஸோ திஸ். உன்னால பெயார்வெல்ல கலந்துக்க முடியாது.
எக்ஸாம். நீ உன் சஸ்பன்ஸ் காலம் முடிந்து பிறகு எழுதலாம். இப்போ வீட்டுக்கு போகலாம் என்று கூறவும் கல்லூரியில் இருந்து வெளியேறினாள்.
சொட்ட... சொட்ட... உடம்பு முழுக்க கொழுப்பா இருக்கு. என்ன சஸ்பன்ட் பண்னான். ஏன் அவனும் தான் தப்பு பண்ணினான் தானே. அது என்ன நியாயம் அவனுக்கு மட்டும். என தனியே புலம்பிய படி வீட்டிற்குச் சென்றாள்.
ஏய் எழுந்துரிடி. அக்காவும் தங்கயும் சேர்ந்துட்டு. சூரிய வெளிச்சம் வராம கர்டின இழுத்துட்டு தூங்க வேண்டியது.
அப்புறம் ஏம்மா எழுப்பல்ல என்டு டாம் டூம் என்டு குதிக்க வேண்டியது.என்று சத்தமிட்ட படி வந்து கவியினது போர்வையை விளக்கினார்.
ஏய் நீயும் எழுந்துரிடீ என்று பாரதியின் போர்வையை விளக்க தலையணை மாத்திரமே இருந்தது.
ஏய் கவி அக்கா எங்கடி.
ஐயோ அவ்வளவு சொல்லியும் என்ன மாட்டி விட்டு போய்ட்டாலே!!
படிச்சி படிச்சி எத்தன தடவ சொன்னேன். நேரத்துக்கு வர முடியாம போனால் என்னால சமாளிக்க முடியாதுன்னு.
எரும,எரும சொல் பேச்சி கேக்குறவளா இவ என்று எண்ணும் போதே கவியினது தலையை மகாவின் கை பதம் பார்த்தது.
அம்மா...... வலிக்குதே.....
ஏய் வாய மூடுடி... நான் இங்க எவ்வளவு நேரமா கத்திட்டு இருக்கேன்.
நீ என்ன என்டா எழுந்துட்டே கனவு காணுர.
அம்மா நீ பாத்ரூம்ல பாத்தியா...
நான் எல்லா இடத்துலயும் பார்த்துட்டேன்.
####################################
நான் போகும் போது இந்த கயிறு குள்ளமா தானே இருந்துச்சி...
இப்ப மட்டும் இவ்வளவு நீளமா இருக்கு.
எப்படியோ இப்பயாச்சும் நீளமா இருக்கே ஏற வேண்டியது தான்.
என மெது மெதுவாக கயிற்றில் தாவி தாவி ஏறினாள்.அந்த கருப்பு உடை அணிந்தவள்.
பெல்கனியினூடாக மெதுவாக ரூமிற்கு உள்ளே நுழைய‼️
அதிர்ச்சியாகி நின்று விட்டாள். நின்றவளின் உடலுறுப்பு சகலதும் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றது.
ஏன்டீ நின்றுட்ட கிட்டவா.... ஆரத்தி எடுக்க.
உங்களுக்கு தான் முதல்ல அடிக்கனும்.
பெண் பிள்ளய ஒழுங்கா எங்க வளர்க்க விட்டீங்க. என்று மொத்த கோபத்தையும் பரத்தின் மீது காட்டினாள் மகா.
அவ்வளவு சொல்லியும் ராத்திரி நேரத்துல ப்ரண்ட் ட பேர்த் டே பார்டி கொண்டாட போய்டு வந்து இருக்கா...
ஏன்டி அந்த கேக் அ மிட் நைட்ல தான் வெட்டனுமா?? காலைல இல்லாட்டி மாலைல வெட்ட கூடாதா? அது சரி அவளுங்க படிக்கிற பிள்ளைங்க. நீ வெட்டியா வீட்டுல தானே இருக்க. நீ எப்படி ஹாஸ்டல்குல்ல போன?சுவர் ஏறி குதிச்சியா?
என்று பேசி பேசியே பாரதியின் அருகில் வந்த மகா. பாரதியின் கதை பிடித்தார்.
ஆ...... ஐயோ அம்மா.....
வலிக்குது....
ஏய் கத்தாத...
வாய மூடு...
தொடரும்......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro