அவள் 07
பாரதி மனதால் சிரித்தது ஏன் என்றால். முதல் இரண்டு ப்ரஷன்டேஷனும் முதலாம் பாட வேளையிலும் மற்றைய இரண்டும் இடைவேளையை தொடந்தும் என்றிருந்தது.
பாரதியின் ப்ளேன் பழிக்க வேண்டும் என்றால் ஆதி அவனது ப்ரஸன்டேஷனை இடைவேளையை தொடர்ந்து செய்ய வேண்டும்.
பாரதியின் பிரார்தனையை கடவுள் அங்கீகரித்து விட்டார் போலும்.
ஆசிரியர் அனைவரையும் அமருமாறு கூற அனைவரும் அமர்ந்தனர்.
பாரதி ஆதியையே பார்த்த வண்ணம் இருக்க வழமையான அவனது ஆசனத்திலேயே அமர்ந்தான்.
ஹப்பா.....
இருந்துட்டான்யா....
இருந்துட்டான் 😂😂😂
ஆசிரியர் ப்ரஸன்டேஷன் ஐ ஆரம்பிக்குமாறு கூற பாரதி சிரித்த முகத்துடனே ப்ரஸன்டேஷனை ஆரம்பித்து மிக அழகாக, நேர்த்தியாக, உரிய நேரத்தில் அனைவருக்கும் விளங்கும் படி தெளிவாக செய்து முடித்தாள்.
பாரதியை தொடர்ந்து கெளசிக்கும் செய்ய. பாரதியின் அளவு நன்றாக இல்லா விட்டாலும் அவனால் முடிந்தளவு நன்றாக செய்து முடிக்கவும் இடைவேளை மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
அனைவரும் வெளியேற. ஆதி நண்பர்களிடம் முன்னே செல்லுமாறும் சிறிய வேலை ஒன்று உள்ளது நான் முடித்து விட்டு வருகிறேன் என்று வகுப்பறையில் தரித்து நின்றான்.
பாரதி இடைவேளைக்காக வெளியில் செல்லாமல் தனது குழு அங்கத்தவர்களுடன் கதைத்த வண்ணம் இருக்க.
ஆதி தனது வேளையை முடித்த விட்டு
சரி இப்ப ப்ரஸன்டேஷன் செய்றது மட்டும் தான் இருக்கு என்ற படி எழுந்திருக்க முயள அவன் கால் சட்டை பின் புறம் ஏதே இழுபட்டது.
பாரதியின் குழு அங்கத்தவர்கள் ஆதியின் நிலையை பார்த்து சிரித்தனர்.
ஆம் பாரதியின் வேளையே தான்.
ஆதியின் கதிரையில் ஸ்வீங்கத்தை ஒட்டி தூசை தடவி வைத்தாள்.
அதுவே ஆதியின் வெள்ளை நிற காற்சட்டையை பதம் பார்த்தது.
ஆதியின் ஆடையில் ஸ்வீங்கம் ஒட்டியிருப்பதையும் தூசி படிந்திருப்பதையும் பார்த்து விட்டு. சிட் சிட் என காலை உதைத்து நிலத்தில் அடித்தான்.
சீ எவன்டா முன்னாடி மோத தைரியம் இல்லாம பின்னாடி இருந்து கீழ்த்தரமான வேளையை செய்தான்.
நான் இத சும்மா விட மாட்டேன்.
என்ற படி வகுப்பரையை விட்டு வெளியேறினான்.
வகுப்பறையில் இருந்த பாரதிக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
வெளியே வந்த ஆதி இந்த நிலைல காலேஜ்ல இருக்கவும் முடியாது சீரழிவு.
கடைக்கு போகவும் முடியாது, நண்பர்களிடம் கூறினால் வாழ்க்கை பூராக என்னை வைத்து ஓட்டுவார்கள்.
வீட்டுக்குப் போய் வர வேண்டியது தான் என்ற படி காரில் பறந்தான்.
ஆதிக்கு உரிய நேரத்தில் வர முடியுமாகுமா?
சிட்...
சிட்....
ட்ரபிக்ஆ இருக்கே முன்னால ஒரு இன்ச் கூட நகர்த்த முடியல.
ஹலோ அம்மா எங்க இருக்கீங்க.
ஏன்பா... நான் வீட்டுல தான்.
ஆதி நீ காலேஜ் தானே போன
என்னபா நடந்தது. என லதா வினவ.
இல்லம்மா என சிறு பிள்ளை போல அழுதான்.
என்னப்பா நடந்தது.
நீ ப்ரஸன்டேஷன் என்னு தானே கிளம்பின.
அப்பாவுக்கு இன்னக்கி ஈவினிங் ஆபரேஷன் என்று கூட நிக்காம.
உன்ன நம்பி இருக்குற பிள்ளைகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியாதுனு.
இப்ப என்னப்பா நடந்தது.
இல்லம்மா என்று நடந்தது ஒன்று விடாமல் கூற.
நீ எங்க இருக்க என்று லதா கேட்க.
ஆதி இடத்தை கூறினான்.
ஆதி நீ காலேஜ்கு கிளம்பு. காலேஜ் வாயில்ல உனக்கு டிரஸ் தயாராக இருக்கும்.
அம்மா, அப்பாவ விட்டுட்டு நீ எப்படிமா?
அப்பாவுக்கு எதுவும் ஆகாது. கவலப்படாம போ பா. என்று கூற
காரை காலேஜ் ஐ நோக்கி திருப்பிச் சென்றான்.
காலேஜ் இல்
ஆதியின் நண்பர்களுக்கு பாரதி செய்த விடயம் தெரிய பாரதியை வருத்தெடுத்தனர்.
பாரதி உன்ன நல்லவனு நினைச்சோம் டி.
அவன் இன்னக்கி என்ன மன நிலைல காலேஜ் வந்தான். என்று உனக்கு தெரியுமா?? என பேச முடியாமல் விம்மினான் பாஸ்கர்.
எங்களுக்காக... எங்களுக்காக மட்டும் தான் வந்தான்.
அவன் தந்த வாக்கு மாறிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவும் இது நம்ம லாஸ்ட் ப்ரெஜெக் என்றதுனாலயும் தான் வந்தான்.
ஏன்.....
ஏன் உங்களுக்காக ஆதி வந்தாக சொல்றீங்க.
"ஏன் அடுத்த நாள்ல ஆதி காலேஜ் வர மாட்டானா??" என பாரதி கேட்க.
விஷ்னு கோபத்தில் கையையே ஓங்கி விட்டான்.
பொண்ணு என்ற தால அடிக்காம விட்டுட்டன.
ஒருத்தன் சிரிச்சிட்டு இருந்தா அவன் சந்தோஷமாக இருக்கிறதாக அர்த்தம் இல்ல பாரதி.
ஆதி எங்க முன்னாடி சிரிச்சிட்டு இருந்தாலும் அவன் சிரிப்பில உயிரோட்டம் இல்ல. கண்ணுல வலி தெரியுது.
சின்ன வயசுல இருந்து பழகின எங்களுக்கு தெரியாதா?
ஆதியின்ட உண்மையான சிரிப்புக்கும் போலி சிரிப்புக்கும்.
ஆதிக்கு என்ன தான் நடந்துச்சினு இப்பயாவது சொல்லங்க. என்று பாரதி கேட்க.
அவங்க அப்பாக்கு ஹார்ட்ல ப்ரேப்லம். இன்னக்கி ஆபரேஷன்.
அத வச்சி கிட்டு தான். எதையும் காட்டிக்காம ப்ரஸன்டேஷன் செய்ய வந்தான்.
ஆதி உன்ன சீண்டினது உண்ம. அதே அளவுக்கு அதனால உனக்கு எந்த பாதிப்பும் வரல என்றதும் உண்ம.
ஆனா நீ இன்னக்கி அவனுக்கு செய்தது. கொடும பாரதி...
அவன் ஏற்கனவே மனசலவுல உடன்சி போய் இருக்கான்.
அவசரமாக ப்ரஸன்டேஷன அவசரமாக செய்துட்டு போகத்தான் வந்தான். அது தெரியாம நீ வேறு....
தொடரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro