அவள் 04
கருப்பு நிற காற்சட்டையுடன் யாரோ நிற்க பாரதி தலையை மெல்ல தூக்கி பார்த்தாள். வேகமாக இறங்கி ஓடி வந்ததில் மூச்சிரைக்க இடுப்பில் கை இரண்டையும் ஊன்றிய படி ஆதி நின்றிருந்தான்.
பாரதி அவனைக் கண்ட மாத்திரத்தில் அவனைக்கட்டி பிடித்து அழுது தீர்த்தாள்.ஆதி அவளைத் தள்ளி விட்டு நீ சின்னப் பிள்ளையா? உன்ன தேடி அலைறது தான் என் வேலையா? என்று கடு கடு வென
பேசினான்.
ரயிலில் உள்ள நண்பர்கள் ரயிலை நிறுத்தி. விட்டு இறங்க கண்ட ஆதி. வா என அவளை அழைத்த படி முன்னால் சென்றான்.
திவ்யா ஓடி வந்து நா இருக்கன் தைரியமா இரு என்று கட்டித் தழுவிக் கொண்டாள்.ரயில் நிக்குது வா போகலாம். என அழைத்து வந்தாள்.
ஆதி மனதில்
(எவ்வளோ தைரியமான பொண்ணு மாதிரி காட்டிகிட்டா. இவ்வளோ பயமா? இல்ல நடிப்பா...என மனதில் நினைத்தான்)
ரயிலிற்கு அருகில் திவியும்,பாரதியும் வரவும் பாரதியின் மற்றைய நண்பிகள் இறங்கி வரவும் சரியாக இருந்தது.
நண்பிகள் அவளை அழைத்துச் சென்று அமரச் செய்து என்ன நடந்தது .என விசாரிக்க தொடங்க முதல்ல. அவளுக்கு கொஞ்சம் தண்ணிய கொடுங்க, ரிலக்ஸ் ஆ விடுங்க என்றாள் திவி.
பாரதி மனதில் நா தனியாகவே நின்னு இருப்பன். இந்த கிருக்கன யாரு வரச் சொன்னது. என மனதால் பொறிந்து தள்ளினாள். இது திவியோட வேலையாக இருக்குமோ. எதுக்கும் கேட்டு பாக்கனும். என்று எண்ணிய படி கண்ணயர்ந்தாள்.
திவி மனதில் இவள் எண்ண யோசிச்சிட்டு தூங்கினா? எதுவானாலும் நமக்கு நல்லது நடந்தா சரி கடவுளே என வேண்டிக் கொண்டாள்.
பாரதியின் மற்றைய தோழிகள் திவியிடம் நாம இவ்வளோ பேர் இருந்தே பாரதி இல்லாதது விளங்கல. ஒனக்கு மட்டும் எப்படி அவள் இல்லாதது. கரக்டா எப்படி விளங்கியது என்று கேட்க. அவள் என்னோட பெஸ்டி ஸோ அவள் இல்லாதது எனக்கு விளக்கிட்டு. ஆனால் அதுக்கு போய் அந்த ஆதி கிட்ட உதவி கேட்கவாகும்னு நினைக்கல்ல. பாரதிக்கு நா தான் அவன்ட உதவி கேட்டேன்னு தெரிஞ்சுது. எனக்கு சங்கு தான்.
அவன் மனிசனா? என திவி புகழ் பாட.
ஆதியிடம் உனக்கு தானே பாரதிய புடிக்காது. திரும்ப ஏன் அவள காணல்ல என்றதும் நீ ரயில்ல இருந்து இறங்கின. நாம இவளோ பேர் இருந்தே எங்களுக்கு அவள் இல்லாதது தெரியல. உனக்கு எப்படி தெரிஞ்சது என கேட்க. (ஆதியின் மனம் சிரித்தது. நீயா பாரதி இல்லனு தேடின. திவி தேடிட்டு கொஞ்சவும் தானே. வேறு வழியில்லாம இறங்கின. அத எப்படி இவங்க கிட்ட சொல்றது. சொன்னா என் இமேஜ் டேமேஜ் ஆகிடுமே. பேசாம சமாளிக்க வேண்டியது தான் என்று எண்ணிய படி)
அது.. அது வந்து எனக்கு போர் அடிச்சது. சண்ட போட ஆள தேடினன் காணல்ல.பூனை எலியை தானே தேடும் என்றான் ஆதி.
சரி உங்க வேளய பாருங்க. நான் போறன். என்ற படி அவனது ஆசனத்திற்குச் சென்றான்.
ஆதியின் அருகில் பாஸ்கர் வந்து ஆதி என்றான்.ஹூம் என்ன என்றான் ஆதி. இது உன்னோட favorite shirt தானே என்றான்.
யா இப்ப என்ன என்றான். இல்ல ஆதி நெஞ்சுப் பக்கமா கருப்பா என்னமோ இருக்கு என்றான். பாஸ்கர் லேசாக வந்த சிரிப்பை அடக்கியபடி.
ஆதி குனிந்து பார்த்து விட்டு ஆமாடா கருப்பா என்னமோ கருக்குடா என்றான். பாஸ்கர் ஆதி அது கண் மை என்றான். அது எப்படிடா என சேர்ட்ல என்ற படி யோசிக்கவும் பாரதியின் செயல் நினைவுக்கு வந்தது. கூடவே அவளைப் பற்றிய தப்பபிப்ராயமும் சேர்ந்து வந்தது.
ஆண்கள் யாரோடயும் பேச மாட்டா ,அப்படியும் பேசுரதா இருந்தா தேவைக்கு மட்டும்.கிட்ட நிக்கவே கூச்ச படுவா. என்று பெயர் எடுத்துட்டு நா தப்பானவன் மாதிரி காட்டுறத்துக்கு. சீன் போடுறாள் என நினைக்கயிலே.
பாஸ்கர் இவ்வளோ யோசிக்கிற என்ன ரகசியம் என்றான்.
சும்மா கான்டாக்காம இறிங்கடா. அவளே தனியா நின்னு அழுதுகிட்டு இருந்தா.அது தான் பாவம்னு போனேன். போனது தப்புத்தான். அவ பயத்துல கட்டிபுடிப்பானு யாருக்கு தெரிஞ்சது என்றான். என் மானத்த வாங்க எங்கிருந்தோ பொறந்த ராட்சசி என்று எண்ணிய படி. நீ போய் இருந்தா கூட இப்படி தான் நடந்து இருப்பா என்றான்.
சரி இப்ப ஒனக்கு என்ன தெரியனும். இரி.நா அவள நல்லா 2 கேட்டுடு வாரன். அப்ப தான் என் மனசு நிம்மதியடையும்.என்ற படி கோபமாக எழுந்து நிற்க.இல்ல இல்ல இரிடா நான் சும்மா சொன்னேன் என்றான்.
சரிடா மச்சி எனக்கு தூக்கம் தூக்கமா வருது. நீயும் தூங்குடா மச்சி என்ற படி ஆதி தூங்கினான்.
பாஸ்கர் மனதால் உன்ன விளங்கிக்கவே முடியலடா... அவள வெறுக்கிறனு சொல்லுற.
அப்ப ராகேஷ் அவள லவ் பண்றான் என்டு சொன்னதும் ஏன் உனக்கு அவ்வளோ கோபம் வந்தது.
என்னமோ நீ உன்ன வருத்திகாம சரியான முடிவ எடுத்தா. சரி என்ற படி உறங்கினான்.
ஊரிற்கு ரயில் வந்ததும் அனைவரும் இறங்கி தத்தமது வீடுகளுக்கு சென்று இரண்டு நாட்கள் கழித்து கல்லூரிக்கு வந்தனர்.
அந்த நேரம் கல்லூரியிற்கு புதிதாக மாணவர்கள் சேர்ந்து இருந்ததால் ரகிங் உம் ஆரம்பமாகி இருந்தது.
ஆதி பெண்களுடன் அதிகம் கதைக்கவோ பழகவோ மாட்டான். இத்தனைக்கும் அவனுக்கும் ஒரு தங்கை உண்டு. வீட்டில் கலகலப்பாக இருப்பவன் கல்லூரியில் படிப்புக்கு முதன்மை வழங்குவான். ஆண்களிளும் நண்பர்களும் அதிகம் இல்லை. அவனது தகுதிக்கு ஏற்ற நண்பர்களுடனே பழகுவான்.
ஆதியினது சிறுபராய நண்பன் என்றால் அது பாஸ்கர் தான். பாஸ்கரிட்கு ஆதி பாரதியை விரும்புகின்றானோ? அவனது பிறவிக்குணமான யாருக்காகவும் தன் நிலையை விட்டு கீழிறங்காத பண்பால் மறைக்கிறானோ என சந்தேகம் எழ டெஸ்ட் செய்ய நினைத்தான்.
பாஸ்கர் நண்பர்களுடன் நின்று கொண்டிருக்க புதிதாக சேர்ந்த இரு மாணவிகள் ஒன்றாக வருவதை கண்டு அழைத்தனான். அவர்களும் சீனியரிற்கு பயந்து வந்தனர். ஆதி தூரத்தில் வருவதனை கண்டே அழைத்தான்.(பாரதியும் அப்பொழுது தான் கல்லூரிக்குள் நுழைந்து. அவ் வழியாக வந்து கொண்டு இருந்தாள்.)
ஜூனியர்களை அழைத்த பாஸ்கர் நண்பர்கள். ஆதி வந்து கொண்டிருந்த திசைக்கு
கை காட்டி அவனை ஹங் செய்து விட்டு செல்லலாம் என்றான். பாஸ்கரின் நண்பர்கள் பதட்ட மடைந்தனர். டேய் பாஸ்கரா உனக்கு அவனப்பத்தி தெரிஞ்சிட்டே என்டா செய்ற. ஏதாவது ஏடா கூடமா நடக்கப் போகுதுடா. பொட்ட புள்ளங்க வேற. அவனுக்கு வார கோபத்துல இதுங்கல அடிச்சிட்டான் டா என்னடா செய்வ என்றனர்.
பாஸ்கரோ சும்மா இரிடா. என்ன ஒரு அடி தானே. அதுவும் ரகின் தான் என்றான். எதுவோ நீயாச்சி ஆதியாச்சி நாங்க இல்லப்பா என்ற படி ஒரு ஓரமாக அமர்ந்தனர். (ஆதி 6 அடிக்கு மேல் உயரம்.அழகான கண், கூர்மையான மூக்கு,லைட்டா தாடி,அடத்தியான புருவம், சிவப்பு நிறமாக முகம், பெண்களை மயக்க கூடிய இளவரசன் போல் இருந்தான். இது நாள் வரையில் பெண்களுடன் அதிகம் பேசியதும் இல்லை.கல்லூரியில்.)
பாஸ்கர் கூறியது தான் தாமதம். இருவரில் ஒருத்தி முதலில் சென்று அவனை கட்டி அணைத்தாள். ஆதி சுதாரிக்க முன் மற்றையவலும் ஹங் செய்தாள்.
ஆதி கோபத்துடன் கை ஓங்கிய நேரம். பாரதி சரியாக விறு விறு என்று வந்து கடைசியாக ஹங் செய்தவளை இழுத்து அறை விட்டாள் .
விட்ட அறையில் அவளுக்கு கிட்ட தட்ட மயக்கமே வந்தது. பாஸ்கரும் அவனது நண்பர்களும் ஆஆ என வாயை பிழந்து இருந்தனர். (பாரதி விட்ட அறை அவ்வளவு மென்மை😂😂😂.) அது மட்டுமன்றி எதிர் பார்த்தது ஆதியின் அறையை அதனால் தான்.
முதலில் ஹங் செய்தவள். அவள் என்ன தவரு செய்தாள்.சீனியர் பேச்சை தானே கேட்டாள். என்றாள். கேள்வி கேட்டவளை இழுத்து ஒரு அறை விட்டவள்.முகத்தில் அவ்வளவு கோபம்.
பாரதி அவர்களை பார்த்து நீங்க எல்லாம் பொண்ணுகளா?. வீட்டுல ஆசையா பொண்ணு படிச்சி நல்ல நிலமகி வரட்டும் டு அனுப்பினா. கட்டி புடிச்சிட்டு நிக்கிறீங்களா?, (ஆ என்ன சொன்ன நீ. என்ற படி அவளை பார்த்து கேள்வி கேட்டவளிடம் வந்தாள் பாரதி.) சீனியர் சொன்னா எது வேணா செய்வீங்களா?, நா கூட சொல்றன். ஒரு நாள் நய்ட் இவன் கூட இறி . என ஆதியை காட்ட . ஆதிக்கு கோபத்தில் முகம் சிவந்தது. அந்த பெண் முகத்தில் ஈயாட வில்லை.
என்ன வெக்கமா? என அந்த பெண் முன் சொடக்கு போட்டாள்.அவள் அழாத குறை மட்டும் தான்.
பின் அவர்களை பார்த்து. நானும் உங்க சீனியர் தான் இது தான் பஸ்ட் என்ட் லாஸ்ட். இதுக்கு பிறகு நீங்க யாரு சரி .எவன் கூட சரி நின்னு பல்ல காட்டிடு இருந்தீங்க. அவ்வளவு தான். அவர்களில் ஒருத்தியை கை காட்டி பாரதி. இங்க பாரு மா.. உன்னோட தங்கச்சிட ட்ரஸ்லாம் போடாம ஒழுக்கமா உடம்பு மறைற மாதிரி உடுத்திட்டு வா..கட்டையா குட்டி குட்டியா ட்ரஸ் போட்டுடு வந்த. நா அதவிட கட்டயாக்கிடுவன்.சரி எல்லாரும் போங்க. என்று கூறிவிட்டு அவள் விறு விறு என சென்றாள்.
அடுத்த நாள்.....
தொடரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro