என் அருகில் நீ இருந்தால் -9
பட பட படபடப்பில் பார்த்தாலே பயம் ஏற
தட தட தடதடப்பில் உள் நெஞ்சில் ரயில் ஓட
வாயாடி பெண்ணாக வந்தாளே
என் நெஞ்சை பந்தாடி சென்றாளே
சின்ன சின்ன கண்ணாலே சிக்க வைச்சு போனாளே
சக்கரத்த போல தான் சுத்த வைச்சு போனாளே
முதல் அவளா முதல் முதல் அவளா
முதல் முறை தொலைத்தேனே
ஒரு நாள் இரவில் நின்றேனே
மற மற என்றாலும் மனதோடு வந்தாலே
சர சர சர வெடியை திரி ஏற்றி சென்றாளே
அய்யயோ அய்யய்யோ யாரோ நீ
எந்நாளும் எனை ஆளும் மகாராணி
நல்ல படியாக திருமணம் முடியே.. பெரியவர்களுக்கு நிம்மதி.. ஆனது..
ஆனால்.. நிஷா... ஏக பட்ட கேள்விகள் உடன்.. நின்று இருந்தாள்
அவள் மனம் புரிந்தது.. போல் குமரனும் ஏதும் பேசாமல் பெரியவர்கள் இடம் அசிர்வதாம் வாங்கினான்.. நிஷா உடன்...
இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த குணா... மெல்ல நண்பன் அருகில் வந்து " என்னடா நடக்குது இங்கே. "
" என்ன நடக்குது... பார்த்தா உனக்கு எப்பிடி தெரியுது.. " என அவனும் குணா போலவே பதில் சொல்ல..
டேய்.. இந்த கல்யாணம் முதல செல்லுமா. நிஷாவுக்கு.௧௮ வயசு. ஆகிடுச்சா உனக்கு தெரியுமா...எப்பிடி நீ அவள கல்யாணம் பண்ணலாம் எனக்கு என்னமோ நீ அவசர பட்டுடியோ தோன்றது..என குண கவலையுடன் சொன்னான்
அதை கேட்டு..குமரன் உறுதியாக .அது எல்லாம் சரியா வரும் குணா.என் முடிவு சரிதான்....என சொல்ல..
எப்பிடி சொல்லுற ... .குணா தன்னுடையே சந்தேகம் தெளிவு படுத்து எண்ணி கேட்டான்..
நண்பன் தெரிந்துகொள்ளாமல் விடமாட்டான் என... புரிந்து.. அவன் சொல்ல ஆரம்பித்தான்... " அன்னைக்கு நாம ஸ்கூல் போயி இருந்தோம்ல அப்போ.. அவளை பற்றி விசாரிச்சேன்.. birth certificate எல்லாம் பார்க்கும் பொது தான் தெரிஞ்சது.. அவ லேட் அட்மிஷனா சேர்த்து இருக்கான்னு.. இப்போ சொல்லு அவளை நான் கல்யாணம் சரியான வயசுல தானே பண்ணிற்க்கேன்..
குணா அவனை வாய் பிளந்து.. பார்த்தான்.. " அடேய் .. இது எப்போ டா நடந்தது.... இந்த சீன்ல நான் எங்கே டா போனேன்...இப்போஹான் குணாவிற்கு குமரன் மேல் வலுவாக சந்தேகம் தோன்றியது...அவன் குமரனை. பார்த்து.. மச்சி.. நீ ஏதும் என் கிட்ட மறைக்களையே.. கேட்டுவிட்டான்...
நண்பன் கண்டுகொண்டான். என குமரனும்.. ச்சீ ச்சீ .. நான் உன் கிட்ட ஏதும் மறைப்பேனா ....கேஸ் விஷயமா கேட்க போய் தான் தெரியே வந்தது...எங்கே தான் மேலும் ஏதும் உளறி விடுவோம் என்று குமரன்.. அத்தோடு.. பேச்சை..நிறுத்திவிட்டு..வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்...
ஆனால் குணா மனதில்.. " என்னமோ இருக்கு... இவன் சரி இல்லை.. கண்டுபிடிக்கிறேன்... இருடி.. மாப்பிள்ளை... என அமைதி ஆகிவிட்டான்..
.
எல்லாம் எந்திரமாய்.. நடந்து கொண்டு இருந்தது.. லதா சந்தோசத்துடன்.. நிஷாந்தினியே அணைத்து கொண்டாள்
" ஹே.. ஓவர் நைட்ல இல்ல... காலைல ... மிசஸ் குமரன் ஆகிட்ட நம்பவே முடியலே என் நால.. என சொல்லியே படி நிஷாவை அனைத்து கொண்டாள் அவளுக்கும் ஷாலினி இப்பிடி செய்ததில். வருத்தம் இருந்தாலும் தோழிக்கு நல்ல வாழ்கை அமைந்துவிட்டதில் அவள் சந்தோசமாக இருந்தாள்
லதாவின் கொண்டாட்டத்தில்.. நிஷா கலந்து கொள்ளாமல்..அவளிடம்....
ச்சு..சும்மா இரு டி.. நீ வேற.. . அப்போது ல இருந்து பார்க்குறேன். இந்த மனுஷன் முறைக்கிற முறைப்புல.. எனக்கு குளிர் காய்ச்சலே வந்துரும் போல.. இருக்கு..அக்காவே கட்டிக்க முடியாத கோபத்துல இருக்காரோ என்னவோ... அம்மா சொன்னது நால தானே இந்த கல்யாணம். சம்மதிச்சேன்... இதுல .. . நீ வேற .. நேரம் காலம் தெரியாமல் . " என நடந்தது.. ஏதும் தெரியாமல்.. அவள் பேச..
லதா.. , ஆமால . , இது எனக்கும் தெரியாமல் போச்சே. இப்போ என்ன டா பண்ணுறது .. சும்மாவே .. கடு கடுன்னு இருப்பாருன்னு என் மாமா சொல்லுவாரு டா.. என லதாவும் தன் பங்கிற்கு சொல்ல..
இப்போது.. நிஷாவிற்கு..உள்ளுக்குள் பயம் பிடித்து கொண்டது.. இவன் இடம் இப்போ எப்பிடி பேசுவது.. . ஐயோ பேசியே ஆக வேண்டுமே.. . நாம சொல்லுறத புரிந்து கொள்ளுவானா . புரியாமல் கொல்ல போகிறானா ஒன்னும் புரியல.. என்ன பண்ணுறது..இப்போ... என அவள் தன் கையே பிசைந்த படி. யோசனையில் . நின்று கொண்டு இருந்தாள்...
அவளை கவனித்து கொண்டு இருந்த குமரன்.. அவள் அருகில் வந்து அப்போ ..கிளம்பலாமா.
அவன் குரல் மிக அருகில் கேட்டதும்.. நிஷா பதறி..." ஹ்ம்ம் எங்க.." அவள் கேட்க..
" என்ன "..
" இல்ல எங்க கிளம்பனும்.."
" வீட்டுக்கு தான் வேறே எங்கே.. அவனும் சொல்ல...'
" என்ன வீட்டுக்கா ...." அவள் அதிர்ந்தாள்...
" பின்ன மண்டபத்துல எப்பிடி இருக்க.. முடியும்.."
" ஆமால....." மேலும்.... என்ன பேசுவது நிஷா விரல் எண்ணுவதில் இறங்கிவிட.
அத எல்லாம் கவனித்து... கவனிக்காமல்... குமரன்... " போலாமா..." என மீண்டும் கேட்க...
" ஹ்ம்ம்.. என சொன்னவள் தன் அம்மாவை. தேடினாள் ..."
அதை பார்த்த .. குமரன் .. " ஹ்ம்ம் யார தேடுற..
நிஷா, " அது.. அம்மா.."
" அவங்க உள்ளே.. மண்டபம் காலி பண்ணுற வேலைல இருக்காங்க நீ இப்பிடி உட்காரு... . என அவன் சொல்ல...
" இல்ல ப்ப .. பரவாயில்லை..."
" உட்காரு.. அவன் .. மீண்டும் சொல்ல..."
" நிஷா... எங்கே கோப பட்டு திட்டி விடுவானோ என்கிற பயத்தில் அங்கே போட்டு இருந்த சேரில் அவசரமாக அமர்ந்தாள்.. "
." அப்போது தான் சுமதி .. என்னங்க.. என்னங்க இங்க வாங்க.. என அலறி அடித்துபிடித்து. வெளியே வந்தார்...
கிருஷ்ணன்.. மனைவியின் பதட்டம் பார்த்து.. " எ.. என்ன சுமதி என்ன ஆச்சு.. ஏன் இப்படி.. வர.. "
" என்னங்க அவ.. ஷா ... ஷாலினி கலட்டி வச்சுட்டு போன நகை எல்லாம் போலிங்க... . பணம் எல்லாம் வேற எடுத்துட்டு போயிட்டா போல இப்போ என்ன பண்ணுறது..என கிருஷ்ணன் இடம் கேட்க,,."
" கிருஷ்ணன்..என்னது எல்லாம் எடுத்துகிட்டு போயிட்டாளா .. என மேலும் உடைந்து போனார் தான் வளர்த்த பெண்ணா இப்பிடி செய்துவிட்டாள் இதுக்கு அவ என்னக்கு கொன்று போட்டு இருக்கலாம் என அவருக்கு தோன்றியது... . அவரால் இன்னும் பேச முடியவில்லை.. சுமதியின் அலறல் கேட்டு.. குமரன் நிஷா. குணா... லதா மற்றும் சிவநேசன் ருக்மணியும் வந்து.. என்னவென்று வந்து கேட்க..
சுமதி அவர்களிடமும்
ஷாலினி நகை பணம் எல்லாம் தன்னோடு எடுத்து சென்றுவிட்டாள் என சொல்ல.. நிஷா தன்... அக்காவின் செய்யலை.. நினைத்து.. . மனம் வெறுத்தால்...
சுமதி சொன்னதை கேட்டு.. மற்றவர்களும் அதிர்ந்து போய்விட்டர்கள்.. . முன்பே எல்லாம் பிளான் செய்து வைத்து இருக்கிறாள் போல.. நல்ல வேலை இரு வீட்டார் சொந்தகள் எல்லாம் களைந்து சென்று விட்டார்கள் இல்லை என்றால்... இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருக்கும் மானம் போய் இருக்கும் .....
நிஷா.. தலை நிமிரவே இல்லை... அவமானத்தில் மனதுக்குள் இப்பிடி பண்ணிட்டியே ஷாலினி. எப்பிடி உனக்கு மனசு வந்தது இப்படி. செய்ய....பிறகு... அம்மாவோட இந்த கல்யாணம் முடிவு சரி தான்.. . நாம தான் எதையாவுது செய்து.. ஷாலினி செய்த. தவற சரி செய்யனும் அதுக்கு முதல் பரிகாரம் இந்த கல்யணம் மேலும் என்ன செய்யலாம்... என மனதுக்குள் யோசித்து.. கொண்டு இருந்தாள் .. நிஷாந்தினி."
அவளின் முக மாற்றத்தை கவனித்த குமரன்.. . " தன் தந்தையே பார்த்து... அப்பா ஒன்னும் பிரச்சனை இல்லை.. எல்லாத்துக்கும் நீங்க செட்டில் பண்ணிடுங்க நாம சீக்கிரம் கிளம்பலாம். என சொல்ல..
கிருஷ்ணன்.. இல்லை மாப்பிளை.. நானே எப்பிடியவுது....??
" என்ன மாமா சொல்லுரிங்க இப்போ எப்பிடி நீங்க தனியா சமாளிப்பிங்க..அதுவும்.. ரொம்ப லேட் ஆகிருச்சு.. அதுக்கு தான் நான் சொல்லுறேன்..."
" இல்ல அது வந்து...தம்பி.. " என மேலும் அவர் தயங்க..
" மாமா..என்ன உங்க பையனா நினச்சுகோங்க நினைக்கிறது..என்ன .பையன் தான்.. நடந்தது எல்லாருக்கும் இழப்பு.. தான் நான் இல்லைன்னு சொல்லல.. அதுக்கு . ஒருதர்க்கு ஒருதர் உதைவியா இல்லேன்னா அப்புறம் என்ன உறவு... நாம எல்லாம் நீங்க.... சங்கட படாதிங்க வேணும்னா கடனா கொடுக்குறேன் எப்போ முடியுமோ அப்போ தாங்க உங்க பங்க சரியா. .. .. என அவன் சொல்லிவிட்டு .. திரும்ப .. சிவநேசன்.. எல்லாம் கொடுத்தாச்சு.. குமரா . கிளம்ப வேண்டியது தான் வீட்டுக்கு.. "
சுமதி.. ரொம்ப நன்றி .அண்ணே.. .. என சொல்லிவிட்டு அழுதே விட்டார் ..
அவர் அழுவதை பார்த்து நிஷாவும் கண் கலங்க...
குமரன்.. மனதுக்குள்.. டிரக் கேஸ்க்கு..தைரியமா செய்யல் பட்ட பெண்ணா இவள்... இப்போ இப்பிடி கண் கலங்கி நிக்கிறா.. . ஹ்ம்ம் மென்மையானவள் கூட.. தான்.. போல.. "
" என்னமா நீ பெரியே வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு சரி இப்போ பொண்ணு மாப்பிள்ளையே.. வீட்டுக்கு அழைச்சுட்டு போகணும்..
இப்போது மீண்டும் குமரன்..' அப்பா.. நம்ம வீட்டுக்கே.. போயிடலாம்...' முடிவ சொல்லிவிட...
" என்னடா சொல்லுற.. " சிவநேசன் கேட்க...
" ஆமா அப்பா.. இப்போ நாம நிஷா வீட்டுக்கு போனோம்னா.. நிறையே பேரு பார்வைக்கு ஆள் ஆக வேண்டி இருக்கும். தேவை இல்லாமல் நெறைய பேர் கேள்விக்கு பதில் சொல்லணும்... அதுக்கு தான்.. இப்பிடியே கிளம்பிடலாம்.."
" அவன் சொல்லுவது சரி என்று அனைவருக்கும். தோன்ற. சரி குமார... கிளம்பலாம்.. நீங்க என்ன சொல்லுரிங்க. சம்பந்தி... ..என நேசன் கிருஷ்ணன் இடம் கேட்க..."
" நான் சொல்ல என்ன இருக்கு சம்பந்தி.. தம்பி சொல்லுறது சரி தான்.. எதுக்கு வீண் பேச்சு நாம இடம் கொடுக்க.. . உங்க வீட்டுக்கே போயிடலாம்.. .. என அவரும் சொல்லிவிட.... "
நம்ம இப்பிடி பேசிகிட்டே இருந்தா எப்பிடி... சீக்கிரம் கிளம்பலாம்
. . என சொன்னவரை நிமிர்ந்து பார்த்தாள் . சின்னவள்.. மேலும் ஏதும் பேசாமல் .. மேலும் அமைதியே நாடினாள் ..
எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வந்த பின்.. குமரன் வீட்டுக்கே.. கிளம்பினார்கள்.........
****************
குமரன் வீடு.....
மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார்.. . ..
நிஷா.. குமரன் உடன் உள்ளே வர.. . ருக்மணி.. வாம்மா.. என அவளை பூஜை அறைக்கு அழைத்து சென்று... விளக்கு எற்ற சொன்னார் ..
சரி என்று குமரன் உடன்.. சென்று.. பூஜை அறையில் இருந்த குத்துவிளைக்கை ஏற்றினாள் .....
குமரன்.. மனம்.." என்னவள்.. இவள்...
ருக்மணி.. " சாமி நல்லா கும்பிட்டுகொங்க ரெண்டு பெரும் என சொல்ல..'
குமரன்.. " கடவுளே இவள என்கிட்டே சேர்த்துட்ட.. அதை மாதிரி இவளுக்கு என் மனதையும் புரியே வைக்க உதவி செய் என கடுவுளை.. துணைக்கு அழைக்க.."
நிஷா.." சாமி.. எதோ அக்கா செய்த.. தப்பு நால இந்த கல்யாணம் நடந்துருச்சு.. . இவரு வேற கோபமா இருக்கிற மாதிரி இருக்கு.. ப்ளீஸ் சாமி.. எனக்கு கொஞ்சம் உதவி.. பண்ணேன்.. என இவள்.. வேறு மாதிரி வேண்ட.. [ கடவுள் குழம்பம இருந்தா சரி.. ]
ரெண்டும் பெரும் வாங்க என ருக்மணி இருவரையும் அழைத்து கொண்டு.. ஹால் க்கு வர..
சுமதி.. இருவருக்கும் பாலும் பழமும் ஊட்டிவிட..
நிஷா..மெல்ல அவனை திரும்பி பார்க்க.. ஹ்ம்ம்.. ஒரு மாற்றம்..தெரியவில்லை.. அவன் முகமோ இறுகி போய் இருக்க... அவன் என்ன மனநிலமையில் இருக்கிறான் என்று.. நிஷந்தினியால் கண்டு கொள்ளவே முடியவில்லை.. [ எங்களுக்கே புரியலை உனக்கு.. மட்டும் எப்பிடி மா புரியும்..]
மீண்டும் மனதுக்குள் " என்ன பேச வேண்டும் என்று ஒரு முறை.. ஒத்திகை பார்த்து கொண்டாள் .. "
அனைவரும் அடுத்து கட்டம் என்ன என்று.. அமர்ந்து யோசிக்க.. .
அப்போது தான் குமரனுக்கு..போன் வந்தது. அவன் குணாவை தன்னுடன் அழைத்து கொண்டு.. போன் பேச சென்று விட்டன..
ருக்மணி.. சுமதி.. இரவு.. உணவு செய்ய.. கிட்சென் சென்று.. விட....
கிருஷ்ணன்.. சிவநேசன்.. கல்யாண வரு செலவை பார்க்க.. அமர்ந்து விட்டார்கள்.. இப்போது நிஷாவும்.. லதாவும் மட்டும் அமர்ந்து இருக்க.
நிஷா.. லதாவிடம்...." லட்டு.. "
லதா.. அவள் குரலில் இருந்த.வெறுமை.. கண்டு கொள்ள.. இப்போ ஏதும் நெகடிவா.. இவ கிட்ட பேசினோம்னா. இன்னும் கஷ்ட படுவா என நினைத்து கொண்டு.. " நிஷா.ம்மா.. என்ன டா.."
" நான் உன் மடில தலை வச்சு படுத்துகவா டா. லட்டு...எனக்கு என்னமோ ஒரு மாதிரி பயமா இருக்கு டா.. "
இது வழக்கம் போல் நடப்பது தான்.... கிருஷ்ணன்.. நிஷாவை வார்த்தையால் காயம்.. செய்யும் பொது எல்லாம். சுமதியால்.. மகளை தாங்க முடியாது தருணத்தில்.. லதா தான் அவளை தாயாய்.. மடி.. தாங்கினால்........ அவளை தேற்றி அவளை வேதனை படாமல் பார்த்து கொள்ளுவாள்... நிஷாவை தனிமை நெருங்க விட... மாட்டாள்.. இதோ இன்றும் ... அவளை மடி தாங்கி.. அவளுக்கு ஆறுதல் சொல்ல.. வந்துவிட்டால்...
இந்த நடப்பு தான் எவ்வளோ அதிசயம்.... அனைத்து உறவின் மொத்த உருவமாய் .. !!!
லதா அவளை தன் மடியில் .. சாய்த்து கொண்டு.. நிஷாவின் தலையே கோதி விட்ட படியே.. ' ஏன் டா மா இவ்வளோ வேதனை படுற.. என்ன குழப்பம் இப்போ உனக்கு.."
நிஷா, " அக்கா ஏன் டா இப்பிடி செய்தா அம்மா அப்பாவ பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையே டா ..அம்மாவை விட.. அப்பா அவர பத்தி. நினைச்சு பார்த்தாளா எப்பிடி எல்லாம் அவள பார்த்துகிட்டாறு தெரியுமா. அவளுக்குன்னு வாங்கின ஒவ்வரு பொருட்களையும் அவ்வளோ அன்பு...இருந்தது.. இந்த கல்யாண வேலைல அப்பாவை பார்க்க பார்க்க எனக்கு ஷாலினிமேல அவ்வளோ பொறமை வந்தது தெரியுமா. கொடுத்து வைத்தவள் எவ்வளோ நாள் சொல்லி இருக்கேன் உன்கிட்ட.. அப்பிடி பட்டவ ஏன்டா இப்பிடி பண்ணினா..ஒரு நிமிஷம் யோசிக்கவே இல்லையே டா...
அவள் கேட்காமலையே எல்லாம் செய்வாரு டா.. அவர எமாற்ற எப்பிடி மனசு வந்து இவளுக்கு.. . சரி அத கூட.. விடு.. . யாரோ.. முன் பின் தெரியாத ஒருவர்.. தனக்கு வாழ்கை துணையாய்.. வர போறாரு.. அந்த மனுசன அவரோட குடும்பம் பற்றி கூட நினைக்க முடியல.. எவ்வளோ பெரியே துரோகம் டா இது.. அவ்வளோ பேரு முன்னாடியும் எப்பிடி அவமானம் படுத்திட்டு போயிருக்கா எப்பிடி டா எப்பிடி அவளால முடிஞ்சது .."
நிஷாவின் வார்த்தையில் இருந்த உண்மை லதாவுக்கு புரியாமல்... அதை கேட்டு... " அவளுக்கு அவள் காதல் முக்கியம் டா. விடு.."
" காதல்.. அப்பிடி வெங்காய காதல் அது.. தான் முக்கியம்னா அப்பா ஓட பணம் எதுக்கு.. அப்போ மட்டும் காதல் தெரியலையா.. ' என மீண்டும் நிஷா.. கோபமாய்..கேட்க..
" பணம் டா அது.. அத கண்டா பிணம் கூட.. உயிர் பிழைக்கும்.. பழமொழி கேட்டது இல்லையா நீ அது மாதிரி தான் இதுவும்.. ... உன் அக்கா மட்டும் என்ன விதி விளக்கா அவ சொல்லணும் நினச்சு இருந்தா இவ்வளோ நாள் பொறுத்து இருந்து இருக்க மாட்டா எவ்வளோ தைரியம்...பாரு அவளுக்கு அவனை மண்டபம் வரைக்கும் வர வச்சு அடையாளம்..காட்டி.. கையேடு எல்லாம் எடுத்துகிட்டு. போறான்னா எவ்வளோ நெஞ்சு அழுத்தம் இருக்கணும்...அப்பிடி பட்டவ கிட்ட நாம நல்ல மாதிரி எதிர் பார்க்க முடியுமா சொல்லு... லதா ஷாலினியே பற்றி அப்படியே சொல்ல...
" நிஷா.. அதுக்காக இப்பிடி பண்ணனும் ஒன்னும் அவசியம் இல்லையே.. இவ்வளோ செய்தவள்.... முன்னாடியே எல்லார் கிட்டையும் பேசி.. சொல்லிட்டு.. கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம்.. அட்லீஸ்ட் சம்பந்த பட்ட.. இவரு கிட்டையவுது சொல்லி எதையவுது செய்து.. இருக்கலாமே டா இப்பிடி பண்ணிடாலே.. "நிஷாவிற்கு..நெஞ்சம் பதறிக்கொண்டு இருந்தது...
லதா. " விடு அவளுக்கு கொடுத்து வைக்கல.. அதை ஒருநாள் அவ உணர்வா டா நீ வருத்த படாத.. இப்போ நீ கஷ்டபட்டா . அது எல்லாரையும் பாதிக்கும்... முக்கியமா.. குமரன் சார .. நான் உனக்கு சொல்லி புரியே வைக்கணும் அவசியம் இல்லடா... இருந்தாலும் சொல்லுறேன் கேட்டுக்கோ.. . இனி உன் செயல் உன் அம்மா ஓட பெயரை காப்பாத்துற மாதிரி தான்... இருக்கனும் , எந்த காரணம் கொண்டு.. நீ உன் வீட்டுக்காரர் .. கிட்ட உன் அக்காவ பத்தி மட்டும் பேசி விடாத.. பெரியவங்க மனச கஷ்ட படுற மாதிரி நடந்துக்காத , அப்புறம் எப்பிடியும் நீ தான் இவர கல்யாணம் பண்ணிருப்ப. உன் அக்காக்கு கண்டிப்பா தெரிஞ்சு இருக்கும்..இல்லை எப்பிடியாவுது தெரிஞ்சுப்பா... இன் நேரம். அப்பிடி தெரிஞ்சு உன்கிட்ட.. போன் பண்ணினா என்ன ஆனாலும் சரி அவ கிட்ட பேசாத எது கேட்டாலும் முக்கியமா உங்க பர்சனல். பத்தி கேட்டாலும் அவகிட்ட சொல்லிடாதே... இது உன் லைப் இதுல உன் அக்கா மாதிரி ஆளுங்கள நுழையே விட்டுறாதே...... அப்புறம் ஆமை .புகுந்த வீடு மாதிரி ஆகிடும்.. சொல்லிட்டேன்..அவ கிட்ட கொஞ்சம் பார்த்து இருந்துக்கோ.. அப்புறம்.. உங்க ரெண்டு லைப் பற்றி நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க சரியா " . இன்னும் ஒரு விஷயம் நீ பார்ட் டைம் ஜோப் போறது பற்றி. மேல படிக்கிற விஷயம் எல்லாம் சார் கிட்ட பேசிவிடு டா.. சரியா. என சுமதி சொலல் வேண்டிய எல்லாவற்றையும்.. லதா சொல்லி முடித்து இருந்தாள் ... " .
நிஷா. ' சரி லட்டு.. நான் பார்த்து நடந்துக்கிறேன்.. இன்னும் ஒரு டவுட் டா.."
" இன்னும் என்ன ம்மா.. "லதா மென்மையாக கேட்க...
" நாளைக்கு பிசிக்ஸ் எக்ஸாம் இருக்கே டா இன்னும் கொஞ்சம் தான் படிக்கனுமே.. அப்புறம் நான் வேலைக்கு வேற போகிறேனே.. "
' அது நீ சார் கிட்ட கேட்டுக்கோ.. என் தங்கமே நான் இந்த ஆட்டைக்கு வரல.. "
" ஏன் டா .." நிஷா புரியாமல் லதாவை பார்க்க...
" நிஷா.. வேண்டாம் என் வாயே புடுங்காத.. அப்புறம் எதையாவுது சொல்லிடுவேன்.. " லதா நிஷாவை கேலி செய்யே.
அவள் எதை சொல்ல வருகிறாள் என்று நிஷாவுக்கு புரிந்து விட..
நிமிர்ந்து லதாவை முறைத்து விட்டு. " நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் " நானே பார்த்துகிறேன்
லதா.. " ஹாஹா என் செல்லத்துக்கு புருஞ்சு போச்சா.. என் சொல்லிவிட்டு மேலும் சிரிக்க.."
நிஷா.. அவள் மடியில் மேலும் முகத்தை புதைத்து.... ஷ்ஷு சும்மா இரு லட்டு.. அடி வாங்க போற. நீ... இப்போ... என முகம் சிவப்பை மறைத்து கொண்டு அவளை செல்லமாய்.. மிரட்ட...
இவர்கள் பேசுவதை.. குமரன் மட்டும் இன்றி.. பெரியவர்கள் நால்வரும் கேட்டு கொண்டு இருந்தார்கள்.... .
அனைவர்க்கும் ஆச்சரியம் .. என்ன மாதிரி பெண்கள் இருவரும் .. ருக்குமணி க்கு தன் மகனுக்கு இவள் தான் சரியான துணையோ.. என்று தோன்ற.. ..சிவநேசனும் அதை நினைக்க..
சுமதி.. மற்றும் கிருஷ்ணன்.. . தான் கொடுக்கும் பணத்தில் எதையும் செய்யாமல் உழைத்து படிக்கிறாள் தன் மகள் என்று பெருமை ஒரு பக்கம் வேதனை ஒரு பக்கம் என்கிற மனநிலைமை இவர்கள் இருக்க..
குணா.. என் லதாவா இவள்...லதாவுக்கு இவ்வளோ பேச தெரியுமா என்கிற.. பெருமை..
குமரன் நிலையோ.. சொல்லவேண்டியது இல்லை... லதா மேல் மரியாதையை கூட.. நிஷாவின் மேல் மேலும் காதல் பொங்கியது.. .. ஆனால்.. சொல்லும் தருணம் இது இல்லை என்று தன்னை சமாதனம் செய்தான்...பொறு மனமே என்று தனக்கு தானே சொல்லிகொண்டான்......
சிறிது நேரம் .. இருவரும் நாளையே எக்ஸாம் பற்றி பேச.. ஆரம்பிக்க..
அப்போது தான் வருது போல்.. ..
நிஷா.. என்று அழைத்து கொண்டு.. சுமதி அங்கே வந்தார்....
" என்ன அம்மா.. " என்று லதா மடியில் இருந்து எழுந்து..அரம்ந்தாள் "
நேரம் ஆச்சு ரெண்டு பெரும் வாங்க.. சாப்பிட.. .. ம் நிஷா. நீ போய். மாப்பிள்ளையே அவர் கூட இருக்கிற தம்பியே. கையோட அழைச்சுட்டு வா . என்று சொல்ல..
நாங்களே வந்துட்டோம் அத்தை.. . வா டா குணா.. . என்று.. குமரன் வந்துவிட.. .
நிஷா.. பதத்துடன் லதா கையே பிடித்து கொண்டாள் .. '
அதை கண்டும் காணதது போல்... அவன் சுமதி..இடம்....... சாப்பிட போலாம் . அத்தை எனக்கு செம்ம பசி.. என்று .
வாங்க எல்லாம் ரெடியா இருக்கு , நிஷா லதா நீங்களும் வாங்க . என சொல்லிவிட்டு. . சுமதி.. கிருஷ்ணனை தேடி சென்று விட..
லதா.. குணா பக்கம் போய் நின்று கொண்டாள் .இப்போது.. நிஷாவுக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.... .
குமரன் . ஒரே நாளில் மாற்றம் வர போறது இல்லை.. என்று நினைத்து விட்டு.. நிஷா போலாமா சாப்பிட என கேட்க..
நிஷா., " ம் போகலாம் ." என பேச்சை நிறுத்தி கொண்டாள்.. "
எல்லாரும் டைன்னிங் ஹாலில் இருக்க.
அனைவரும் அமர்ந்து விட.. . நிஷாவை குமரன் அருகில் அமர வைத்து.. ருக்குமணி சாப்பாட்டை பார்த்து பார்த்து பரிமாறினார்.... ..
சுமதி.. " அம்மு .. இன்னைக்கு அண்ணி பரிமாறிட்டாங்க நாளைல இருந்து நீ தான் எல்லாம் செய்யனும் சரியா.. என சொல்ல.. "
நிஷா.. ' வேகமாய் சரி என்று தலை அசைத்தாள் .. "
ருக்மணி.. " விடு சுமதி.. சின்ன புள்ளை தானே போக போக மெல்ல தெரிஞ்சுக்கட்டும்... இப்போ என்ன அவசரம்.. இதோ இவரு.. பிசினஸ்..காக வெளில் ஊருக்கு போய்டுவாரு.. இவன்.. பெரியே எ சி.. ன்னு.. போலீஸ் ஸ்டேஷன் கட்டி அழுவான்.. வீட்டுக்கு தோன்றும் பொது தான் அப்பாவும் பையனும் வருவாங்க..அப்புறம் நாங்க ரெண்டு பேரு தானே.. என சொல்ல..
சிவநேசன்... " போதும் ருக்கு.. எங்க பெருமையே பேசாத.. .. உனக்கு துணைக்கு.. தான் ஆள் வந்தாச்சே அப்புறம் என்ன .
என்ன சொன்னிங்க எனக்கு துணைக்கா.. நல்லா சொன்னிங்க . இந்த கல்யாணம் எனக்கு துணை கொண்டு வர தான் நடந்ததா.. . .. என அவர் கோபமாய் பேச போக..
குணா. சிவநேசனை பார்த்து.. " ஏன் அப்பா.. இப்பிடி வாயே கொடுத்து மாட்டிகிரிங்க.. தேவையா உங்களுக்கு இது.....என நக்கல் செய்ய.."
சிவநேசன் . டேய் குணா பேசாமல் சாப்பிட்டு..."
குணா, " உங்க கோபம் எல்லாம் எங்க கிட்ட தான் அம்மா கிட்ட பேச முடியுமா.."
நேசன்.. " டேய்.. குணா.. ' அவர் அதட்ட...
என்ன அங்கே பேச்சு.. ருக்மணி கேட்க...
இதோ.. சாப்பிட்டு இருக்கேன் ருக்கு.. நீ அந்த ரசம் இங்க கொடு....என எல்லாரும் சிரித்து பேசியே படி... சாப்பிட்டு முடித்தார்கள்....
கிருஷ்ணன் சிவநேசன்.. கையே பிடித்து.. அப்புறம் நாங்க கிளம்புறோம்.. சம்பந்தி..எங்கள மன்னிச்சுடுங்க..
சிவநேசன்.. " எங்களுக்கு எந்த வருத்தம் இல்லை சம்பந்தி.. மனச போட்டு குழபிக்க வேண்டாம்.. என சமாதனம் சொல்ல..
கிருஷ்ணன்.. " ரொம்ப நன்றி சம்பந்தி..
சுமதி.. நிஷாவிடம் ஒரு பையே கொடுத்து... இதுல உன் டிரஸ் யூனிபோர்ம் எல்லாம்.. இருக்கு அம்மு.. .. சரியா , அப்போ அம்மா கிளம்பட்டும்மா..
நிஷா, ' ஹ்ம்ம்.. " என பேக்கை.. வாங்கி கொண்டாள் .அவளுக்கோ அழுகை வரும் போல் இருக்க..தன் கையில் இருக்கும் பேக்கை இறுக்கமாக பற்றி கொண்டாள் .[ மனதுக்குள்....ஒரே நாளில் தன் வாழ்கை இப்பிடி மாறி விட்டதே...
சுமதி.. லதா வாம்மா உன்ன உங்க வீட்டுல விட்டுறோம்..
லதா, " இதோ ஆன்டி.. வாங்க கிளம்பலாம்..என்று நிஷாவிடம் வந்து இது உன்னோட புக்ஸ் பெக்.. ஓகே.. பாய் டா..
நிஷா அதையும் வாங்கி.. கையில் வைத்து கொண்டு.. நிற்க..
சுமதி. கிருஷ்ணன்..நேசன் ருக்மணி.. குமரன் இடம் விடை பெற்று லதாவை.. தன்னுடன் அழைத்து கொண்டு கிளம்பி விட..
கொஞ்சம் நேரம் குமரன் இடம் பேசிவிட்டு.. குணாவும் கிளம்பினான்.. " பார்த்துகோடா.. நான் வரேன் "
" சரி டா " அவனும் நண்பனை வழி அனுப்பிவைத்துவிட்டு...வந்தான்...
*********************************************
ஹாய் friends..... itho adutha epi pottachu..............!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro