Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் அருகில் நீ இருந்தால் - 6


ரொம்ப நேரம்... ஆகியும் நிஷா... வீட்டுக்கு வரவில்லை.. என்று.. சுமதி.. பதறிக் கொண்டு இருந்தார்.... " எங்க...போனா இந்த பொண்ணு.. ஒரு போன் கூட இல்லையே...என வீடு வாசலில் அமர்ந்து விட..

கிருஷ்ணன்.. தன் பெண்ணிற்கு.. நல்ல இடம் அமைந்துவிட்டது.. என்கிற சந்தோஷத்தில்.. அடுத்து என்ன செய்ய - வாங்க வேண்டும் பணம்.. பற்றி சிந்தனையில் அமர்ந்து விட... சின்னவள் என்ன ஆனால் என்று கூட தோன்றவில்லை......

இதைக் கவனித்த சுமதி மனம் வேதனை.... அடைந்தது.... என்ன மனுஷன் இவரு.... என நிஷாவின் வருகைக்காக காத்து இருக்க...

இன்னும் காக்க..வைக்க மனம் இல்லாமல்... நிஷா.. லதாவின் தந்தை உடன் வீடு வந்து சேர்ந்தாள் ....

சரிங்க... அப்பா நீங்க கிளம்புங்க... என அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு... திரும்ப.. அங்க நிஷாவை பார்த்து..

சுமதி..ஏண்டி.. என்ன இவ்வளோ நேரம் ஆகிடுச்சு...... எங்க தான் டி போன.... போனா போன இடம் தானா உனக்கு...என கோபமாய் கேட்க...

' கிளாஸ் முடிஞ்சு அப்பிடியே லதா வீட்டுக்கு போய்டேன்.. ம்மா.... " என தலை நிமிராமல்.. பதில் சொல்லிவிட்டு உள்ளே வேகமாய்.. போய்விட்டாள் ... நிஷா........[ இன்னும் கொஞ்சம் நேரம் நின்று இருந்தால் எங்கே அழுதுவிடுவோம் என்கிற பயம் தான் அவளுக்கு...]

சுமதி. என்ன ஆச்சு இவளுக்கு.. என வீட்டு கதவை அடைத்து.. விட்டு..... நிஷாவிடம் வந்து..." வா நிஷா.. சாப்பிட... நேரம் ஆச்சு பாரு..."

இல்லமா.. நான் சாப்பிட்டுட்டேன்... லதா வீட்டுலயே.. துங்க போறேன் ம்மா.. .. என ஜீவன் இல்லாத குரலில்.. சொல்லிவிட்டு.. தன் அறைக்குள்.. சென்றுவிட்டாள் .....

மனதுக்குள்.. " அம்மாவுக்கு கூட.. ஷாலு நிச்சயம் பற்றி நம்ம கிட்ட பேச பிடிக்கல போல... என குமுறி கொண்டு வந்த அழுகையே.. அடைக்கியே படி... படுத்து கிடந்தாள் பிறகு ஏது ஏதோ.. யோசித்த படி...... அப்பிடியே உறங்கி போய் விட ....

சுமதிக்கு தான் அவள் நடவடிக்கை.. கொஞ்சம் பயத்தை கிளப்பியது.. என்ன இவ.. எவ்வளோ நேரம் ஆச்சு நாளும் வீட்டுக்கு வந்து தான் சாப்பிடவா.. இன்னைக்கு என்னடானா.. வெளியே சாப்பிட்டேன் சொல்லுறா ஒரு வேலை... தன் கணவன் பேசியதை.. கேட்டு இருப்பாளோ... ஐயோ...என்று இருந்தது.. சுமதிக்கு.... என்ன செய்வேன் நான்.. இப்போ.. அவர் பேச்சை கேட்டு புள்ள எப்பிடி எல்லாம் துடிச்சாளோ .. கடவுளே. என .ஓடி சென்று... ..நிஷா.. அறை கதவை .அவர்... தட்ட.... " நிஷா ஏய் நிஷா கதவை திற "

ஏதோ சத்தம் கேட்குதே என நிஷா.. மெல்ல..கண்களை.திறந்து.. தூக்க..கலக்கத்தில்..... என்னம்மா....

டி.. கதவ திற..." வெளியே நின்று கொண்டு... சுமதி பதறினார்...

தூங்க விடும்மா... தூக்கமா வருது.. என மீண்டும்.. துங்க ஆரம்பிக்க...

அவளின் பதில் கேட்டு.. .. துங்க தான் செய்யராள... ஹப்பா.... என நிம்மதி உடன்..அவரும் உறங்க சென்றார்...

இங்கே...

வீட்டுக்கு வந்த.. குமரன்...மற்றும் அவனின் குடுப்பம்.... " உணவை முடித்து.. விட்டு... சந்தோசமாக பேச ஆரம்பித்தார்கள்....

பொண்ணு நல்ல லட்சணமா இருக்க இல்லையாடா. குமரா... என ருக்மணி.. கேட்க...

.. குமரன்... " எந்த பொண்ணு மா..." என்று கேட்க..

ருக்மணி... " அதான் டா.. நம்ம ஷாலினி....'

" யாருமா.. ஷாலினி......"அவனது அடுத்த கேள்வியில்.

இப்போது ருக்மணி.. சிவநேசன் தம்பதிக்கு.. திக்கு.. என்று ஆகிவிட்டது.. என்ன ஆச்சு இவனுக்கு ....... டேய்.. குமரா...என சிவா நேசன்.. அதட்ட..."

" என்ன பா...ஷாலினி.. யாருன்னு தானே.. கேட்டேன்.. அதுல என்ன பா தப்பு..."

சிவா நேசன்... .. இவன் தெரிஞ்சு தான் பேசுறானா..." என்கிற குழப்பத்துடன்.. .. அது நீ கட்டிக்கிற.. போற புள்ளையோட பேரு டா...

" ஒ , சரி அம்மா அப்பா., எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது . நான் துங்க.. போறேன்... என போய்விட்டான்...."

அவன் செல்வதை பார்த்த ருக்மணி...

" என்னங்க... இவன் இப்பிடி பேசிட்டு போறான்....எனக்கு என்னமோ இது சரியா படல... என அவர் ..சொல்ல...

இருடி... நாம நெருக்கடி.. குடுத்து நால தான் சம்மதிசான்.. எல்லாம் சரியாய் போகும்.... போ போய் .. தூங்கு....என தன் ,, மனைவிக்கு சமாதனம் சொல்லி அனுப்பி வைத்தார்..சிவநேசன்.... அவர் மனதிலும் அதே குழப்பம்... என்னவானது இவனுக்கு ...." என அவர்..

குணாவை.. பார்க்க... அவன்.. எனக்கும் ஏதும் தெரியல அப்பா... என கையே விரித்தான்..."

சரி ப்பா . நீயும் கிளம்பு.. இல்லை.. குமரன் கூடவே தங்கிக்கோ....

" இல்ல அப்பா.. நான் கிளம்புறேன்.. அப்பா.. " அம்மா வீட்டுல தனியா இருப்பாங்க...

" ஹ்ம்ம் '

குணாவும்...கிளம்பி சென்று.. விட... சிவநேசன்.... குமரன் என்ன செய்கிறான் என்று பார்க்க.. போனார்...

அங்கே.... அவன்.. தனது.... அறையில் இருந்த.... மேக் புக்கில் எதோ வேலை செய்து கொண்டு இருந்தான்....."

அத பார்த்து விட்டு.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் இதற்க்கு...என்று.. அவரும் சென்று விட்டார்....

...

நிஷா.. அவளிடத்தில்... உறங்கிவிட..... இங்க. குமரனை...தான். எதோ ஒன்று.. படுத்தி எடுத்தது..... அவன் தூக்கம் இன்றி தவித்து கொண்டு இருந்தான்.. இன்று கலையில் நடந்த.. அனைத்தையும் நினைத்து பார்த்து கொண்டு இருந்தான்.... .. நிஷாவிடம் இருந்து.. வாங்கியே விடியோவை... திரும்ப திரும்ப ஓட்டி பார்க்க...... எப்பிடி தனது விசாரணையே தொடங்கலாம் என்று... கொஞ்சம் தனது கவனத்தை... வேலைப் பக்கம் மாற்றினான்......[ நல்லாவே சமாளிக்கிறாய்..... ராசா....]

இப்பிடியே ஒரு வாரம் சென்று விட....

அன்று நிதானமாய் .. தனது வேலைகளை... செய்து கொண்டு இருந்தான்...... ருக்மணி.. குமரன் அருகே வந்து... பிரசாதம் எடுத்துக்கோ.. குமரா....

நீங்களே வச்சு விடுங்க.. அம்மா....என சிஸ்டத்தில் இருந்தது.பார்வை திருப்பாமல் அவன் சொல்ல...

அவர் சிரித்து விட்டு இன்னும் எத்தன காலத்துக்கு நான் வச்சு விடுவேன்... இனி ஷாலினி தான் எல்லாம்... என சொல்ல...அம்மாவின் பேச்சை கேட்டு குமரன்.. இறுகி போய் விட்டான்.... புதிதாய் முளைத்த காதல்.. அது காதல் தானா என்கிற குழப்பம் ... .. ஷாலினியே நினைக்க முடியாமல்...நிஷாவை மறக்கவும் முடியாமல் .... .. இந்த ஒருவார காலம்மாய் .. அவன் தன் வேலை சுமையே மேலும்.. அதிக படுத்தி. கொண்டான்........என்பது.. தனி கதை...

அப்புறம்.. குமரா ...... இன்னும் ரெண்டு மாசத்துல.. கல்யாணம் .. எல்லாம் ஏற்பாடு.. அப்பா பார்த்துகிறேன் சொல்லிடாரு... உனக்கு சரி தானே. ப்பா .... என்னமோ எல்லாம் இவனை கேட்டு செய்வது போல் ருக்மணி அவனிடம் கேட்க...

அவனோ.. " உங்க இஷ்டம் அம்மா... நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்.. ம்மா... என்று அவர் பதில் எதிர் பார்க்காமல்... சென்று விட்டான் "

முன்பு போல் குமரன் வீட்டில் அதிகம் பேசுவதை குறைத்து விட்டான் மகனின் இந்த மாற்றம்... எங்கே நாம தப்பு செய்கிறோமோ.. என்று.. அவரை நெருட... ருக்மணி.. ஒரு நிமிடம் யோசித்தார்... மறுநிமிடம்.. கல்யாணம் ஆகினா சரி ஆகிடும்... என அடுத்த வெளியே பார்க்க சென்று விட்டார்...[ யாருக்கு சரி ஆகிடும்... உங்க பையனுக்கா ... ]

.

குணாவை பார்த்து விட்டு வரலாம் என்று... செல்ல.. வழியில்...

ஒரு ஆபீசில் இருந்து.. நிஷா.. வெளியே.. வந்தாள் அவளை கண்டதும்..... தனது...காரின் வேகத்தை.. குறைத்து.. நிறுத்தினான்....வண்டியே நிருத்ததடா... என்று அவன் மனம். சொல்ல.... அவனோ.. நான் என்ன காதலா சொல்ல போறேன்.. சும்மா பிரெண்டா தானே பேச போறேன்..... என்று தனது மனசாட்சியே அடக்கியே படி.. காரை நிறுத்தி.. விட்டு இறங்கி.. நிஷாவை நோக்கி.... நடந்தான்.....

சுற்றிலும் யாரு வருகிறாகள். போகிறார்கள் என பார்க்க கூட தோன்றாமல்..

பெஞ்சில்....எதோ யோசனையில் நிஷா.. அமர்ந்து இருக்க.. அவன் வந்தது கூட.. கவனிக்காமல்..........அவள் யோசனையில் முழ்கி இருந்தாள் ...

குமரன்... தான்...." ஹலோ ..." என அழைக்க.

நிஷா, திடுக்கிட்டு .., ஹலோ சார்.. என வேகமாக எழுந்து நின்றால்... ..."

அவளின் பதட்டம் பார்த்த.. குமரன்.. " ஹே ஈசி .. எதுக்கு இவ்வளோ பதட்டம்...

" ப்ளீஸ்.. உட்காருங்க... " என அவள் பதட்டத்தை.. பார்த்து சொல்லிவிட்டு கொஞ்சம் இடைவெளி விட்டு அவனும் அதே பெஞ்சில் அமர்ந்தான்...

[ இவர் எப்பிடி இங்க..யோசித்து கொண்டே.. நிஷா.. அவனிடம். ] மெதுவாக..

' என்ன ஆச்சு சார்.. ஏதும் விசாரணையா..."

".. போலீசா இருந்தா ....விசாரணைக்காக மட்டும் தான் வரனும்மா .. சும்மா இந்த பக்கம் வந்தேன்.. .. அப்பிடியே.. உங்கள பார்த்த உடனே.... பேசிட்டு போகலாம்னும்...."

" ஐயோ.. சார்.. நான் உங்கள விட சின்ன பொண்ணு... தான்... என்ன நீங்க.. நீங்க வாங்க எல்லாம் கூப்பிட... வேண்டாம்... நீனே.. சொல்லுங்க... அப்புறம் சொல்லுங்க.. "

" ஹ்ம்ம் சரி.... ஆமா என்ன இந்த பக்கம்.. ..என குமரன் கேட்க.. "

குமரனை... பார்த்து.. நிஷா...சோகமாய்.. புன்னைகைதாள் ....

அவளின் இந்த புன்னகையில் வேதனை நிறைந்து இருந்ததை... குமாரனால் சகித்து கொள்ள முடியவில்லை... ஏன் இவ்வளோ வேதனை... தான் பார்த்த வரைக்கும்... துரு துருவேன தெரிபவள்....... என்று நினைத்துவிட்டு... ..அவளை பார்த்து.. மெல்ல.." என்னம்மா... ஏதும் பிரச்சனையா... ஏன் முகம் இப்பிடி வாடி கிடக்கு... என்னையும், உன் பிரண்டா நினைச்சு சொல்லும்மா.. என் நால முடிஞ்சத உனக்கு செய்யுறேன்...[ பிரண்டு.. அதுவும் நீ.... அம்புட்டு....நல்லவனா.. ராசா நீ....]

நிஷா.... தன்னை சமாளித்து.... ஹ்ம்ம்.... இங்க நான் பார்ட் டைம் வேலை பார்க்குறேன்... சார்...."

குமரன், " என்ன பார்ட் டைம் ஜோபா ... அதுக்கு என்ன அவசியம்... இப்போ உனக்கு,.....அதான் அப்பா பார்துக்கிரரே... அதுவும்.. இல்லாம.. இப்போ நீ பிளஸ் டூ வேலைல.. கவன செளுத்துவியா... இல்லை படிப்புல கவனம் செளுத்துவியா...அது மட்டும் இல்லை... அது நால தான் நீ ஸ்கூல போன் யூஸ் பண்ணுறியா... .."

அவனது கேள்வி சரி தானே.. ஆனால்... தன் தந்தை இடம் இருந்து எந்த ஒரு .. உதவி தனக்கு வேண்டாம் என்கிற வைராகியம்...அவளை வேலைக்கு போக வைத்தது. தந்தை மற்றும் அம்மாவிடம் கூட சொல்லாமல் முன்று வருடங்களாகவே இங்க தான் வேலை பார்த்து கொண்டு இருக்கிறாள் ..இதை இவன் இடம் எப்பிடி சொல்லுவது என அவள் மீண்டும் யோசனையில். முழ்கி போய்விட...

அவள் இடம் இருந்து எந்த ஒரு பதில் வராமல் போக ...மீண்டும்.. அவளை பார்த்து....

நிஷா.. நிஷா... ஆர் யு ஆல்ரைட்..என அவள் கண் முன் சொடுக்கிடான் குமரன்...

" ஹான்... ந.... நான் நல்ல தான் இருக்கேன் சார்... எனக்கு ஒன்னும் இல்லை... எனக்கு எங்க அப்பாவோட.. காச.. எடுத்துக்க இஷ்டம் இல்லை.. சார்... ஆகாத புள்ளைக்கு.. அவரும் செலவு செய்யனும் அவசியம் இல்லை.. அவன் இடம் திரும்பி.. நான் கிளம்புறேன் சார்... நேரம் ஆச்சு.. என திரும்பி பாராமல்... சென்றுவிட்டாள்.....

குமரன்.. அசையாமல்.. அப்பிடியே அமர்ந்து விட்டான்...." ஆகாத புள்ளையா .. என்ன சொல்லுறா... அன்னைக்கி வீட்டுல இவள பத்தி கேட்கும் பொது கூட. அவ அம்மா தானே பதில் சொன்னங்க.. இவ அப்பாவுக்கு இவள பிடிக்காதா..... அதுனால வேலைக்கு போறாளா ..அப்படி என்ன இவளுக்கும் இவ அப்பாக்கும் பிரச்சனை இருக்கும்... இவ்வளோ சின்ன வயசுல எப்பிடி சமாளிக்க முடியும் தனியா..... இது எப்படி சாத்தியம்...ஒவ்வொரு நாளும்.. இவள் எனக்கு...புதியவளாய்... தோன்றுகிறாள்.... ... என தனக்குள்... சொல்லியே படியே.. குணாவை.. பார்க்க.. சென்றான்........

........

மறுநாள்.... காலை... யாருக்கும் காத்து இருக்காமல்... அழகாய்.. விடிந்தது.......

தன் வீடு தோட்டத்தில் . இருக்கும் அனைத்து ரோஜா.. செடிகளுக்கும்.. .தண்ணி....விட்டு கொண்டு இருந்தாள் .....நிஷா....

சுமதி...மகள்.. பார்த்துவிட்டு.. உள்ளே சென்று.....தன்.. கணவர்.. இடம் " ஏங்க நிஷாக்கு... ஸ்கூல் பீஸ் கட்டனும்ங்க . அப்பிடியே... நேத்து ஏதோ....நோட் .. வாங்கணும் சொல்லிக்கிட்டு இருந்தா ..... என சொல்ல.....

கிருஷ்ணன்...... ஷாலினி.. கல்யாண...செலவு. எவ்வளோ இருக்கு தெரியுமா...."

" அதுக்கு என்னங்க பண்ணுறது.. சின்னவளுக்கு... பீஸ் கட்டமா இருக்க,... முடியுமா.... செலவு ஓட செலவா.. இதையும் தாங்க பார்க்கணும்.... " சுமதி கேட்டுவிட...

மனைவியின் பேச்சு....அவருக்கு.. பிடிக்கவில்லை.... ..ச்சே. இவ பொறந்ததே ஒரு தண்ட செலவு.. இதுல இது வேற... என முனு முணுத படி... சில ருபாய்.. அடங்கியே.. ஒரு கட்டை எடுத்து.. டேபிள் மீது .. வீசினார்...இந்தா எடுத்துக்கோ . உன் பொண்ணு செலவுக்கு.. காசு.... என உள்ளே சென்று.. விட.....

அங்கே அமர்ந்து.. ஷாலினி.. வேடிக்கை.. பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்டாள் ......

சுமதி... இவரின் செயலில்... அதிர்ந்து போய்.. விட்டார்.... .. அப்பிடி என்ன பாவம் சின்னவள் செய்து விட்டால்... ஆன் பிள்ளையாய்.. பிறக்காதது... இவள் குற்றமா.... .. அது காக... இவளை இப்பிடி... வதைப்தா...இவர் தலைல தூக்கி வச்சு கொண்டடுறாரே அவர் பொண்ணு. அவ மட்டும் என்ன ஆண் பிள்ளையா..... என ஆற்றாமை... உடன்.. கிட்சென்குல்.. சென்று விட்டார்...."

இதை எதையும் கவனித்தாக காட்டி. கொள்ளமால்.... நிஷாவும்.. பள்ளிக்கு.. கிளம்பி.. தாய் இடம் வந்து " அம்மா... நான் கிளம்புறேன் அம்மா டைம் ஆச்சு...அப்பிடியே சாயந்தரம் லேட்டா தான் வருவேன்.. . என சொல்ல...

சுமதி.. தன் கண்ணை துடைத்து கொண்டு.... . இரு நிஷா.. இந்த டிபன்.... . அப்புறம்.. நேத்து பீஸ் கட்டனும் சொன்னியே.. இந்த அதுக்கு... பணம்.... . என கிருஷ்ணன்.. கொடுத்த.. பணத்தை நீட்டினாள்.. சுமதி...

அதை பார்த்த நிஷாவின் உள்ளம் ஊமையாய்.. அழுதது... . " தாயின் கைகளை பிடித்து... " அம்மா எனக்கு இந்த பணம் வேண்டாம்... ம்மா.. நான் ஸ்கூல் பீஸ்.. என் செலவு.. பார்த்துப்பேன்.. மேலும் தன் பையில் இருந்து சில நோட்டுகளை எடுத்து தாய் இடம் கொடுத்து என் சாப்பாடு செலவுக்கான பணம் ம்மா இது.. அவர்கிட்ட கொடுத்துருங்க அப்பிடியே அம்மா.. இத நீங்க வச்சுகொங்க.. கல்யாணம் செலவுக்கு.. உதவும்... என சொல்லிவிட்டு நிஷா சென்று விட்டாள் .."

சுமி ..மகள் செல்வதை...பார்த்துக்கொண்டே..., என்ன சொல்லிடு.. போற.. இந்த புள்ள.. பணத்துக்கு என்ன பண்ணுவா. ஆமா . இந்த பணம் ஏது இவளுக்கு... , என்று யோசித்த படி... மகள் சென்ற திசையில் பார்த்த படி நின்று இருந்தார்.. அந்த அன்பு தாய்..."

********************

குமரன் வீட்டில்.....

வழக்கம் போல்... அதே பரபரப்பு.... .. .. வீட்டுக்கு வர போகும் மருமகளுக்கு.. ருக்மணி.. புடவை. நகைன்னு தேர்வு.. செய்ய.. நல்ல.. நேரம் பார்த்து கொண்டு இருந்தார்....

குமரன்.. ..எதிலும்.. கலந்து கொள்ளாமல்... தாமரை இலையில் இருக்கும்... நீர் போல் இருந்தான்...இப்போது எல்லாம் இந்த கல்யாணம்.. சரியா.. ஷாலினி தனக்கு சரியான துனைவியா என்கிற குழப்பம்.. அவன் மனதுக்குல் அடிகடி.. எழுவதை அவனால்.. தடுக்க முடியவில்லை.... [ என்ன கொடுமை இது.... குமார உன் போக்கே சரி இல்லையே....இந்த விஷயம்....அந்த புள்ளைக்கு தெரியுமா..]

பெற்றோர் இடமும் பேச முடியாமல்.... குணா இடமும் சொல்ல முடியாமல்... அவன் தவித்து கொண்டு இருக்க....

இது தெரியாமல்... மீண்டும்... குமரனை... அழைத்து. கொண்டு.... புடவை.. எடுக்க... கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார்.....

இவ்வ முறையும்....நிஷாவிற்கு....குமரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை....

இவன்.. தான் இப்பிடி என்றால்.. ஷாலினி... எல்லாம் அமைதியாக இருந்து கவனித்து கொண்டு இருந்தால்...இல்லை.. .. தனக்கு தேவையானதை சேர்த்து சேகரித்து கொண்டு இருந்தாள் ..... இதை யார் அறிவார்...அல்லது அவள் செய்ய போகும்.. செயல் பற்றி.... தெரியே வரும் பொது... மற்றவர்களின். நிலை என்ன ஆகும் ....

இதற்க்கு இடையில் போதை பொருள்... கடத்தல் விசயமாக விசாரணை தொடர்ந்து நடந்து படி இருக்க.... குமரன்.. ராகவியே.. கண்காணிக்க .. குணாவை இடம் சொல்லி வைத்தான் ......

குமரனுக்கு ஏதும் தகவல் தேவை என்றால்.. லதாவிடம் சொல்லி.... நிஷாவிடம் கேட்டு தெரிந்து கொண்டான்..

ராகவி... தொடர்ந்து...... போதை பலகத்துக்கு அடிமை ... ... வேற யாரும் இதற்க்கு.. அடிமை ஆகிவிட்டார்களா .. என்று.. குணா... விசாரிக்க.... ..

அவளுடன். சென்று.. இன்னும்.. இரண்டு.. பெண்கள்... ஆறாம் வகுப்பு.. படிபர்வர்கள்... அடிமை ஆகிற்பத்து.. தெரியே வந்தது....

குமரனின்... கவலையுடன்...குணாவிடம்... என்ன குணா.. சின்ன பசங்க டா ..எப்பிடி இது நடந்தது...இதை பற்றி நாம ஸ்கூல்ல பேசியே ஆகணும்... இப்பிடியே.. போச்சின்ன... இது சரியாய் படல எனக்கு...எப்பிடி நடந்தது... ..."

குணா., " ராகவி.. உபயம்... தான் சார்... இது எல்லாம் .. சாக்லேட்.. குடுத்து பழக்கி விட்டுர்க்கா........"

குமரன்,, சரி....குணா...நாம நாளைக்கு... ஸ்கூல்.ல.. பேசிவிடலாம்... ."

குணா, " சரிங்க சார்....." என தனது காபின் குள் போய் விட்டான்....

XXXXXXX மேட் ஹர்.செக் ஸ்கூல்....

தலைமை ஆசிரியர் அறையில் குமரன்.. மற்றும் குணா. நடந்து கொண்டு இருக்கும் பிரச்சனையே சொல்ல...அதைக் கேட்டு அவர்...

வாட்... என்ன சொல்லுரிங்க.. ஏசிபி.சார்... நடக்க வாய்ப்பே.. இல்லை.. எங்க ஸ்கூல் ல போதை பொருளா...அவர் பதறி தான் போனார்.. ஏன் என்றால்.. அங்க படித்து கொண்டு இருக்கும் அனைவரும் பெண் பிள்ளைகள்...

" டென்ஷன் ஆகாதிங்க மேடம்..........இதோ இதற்கான ஆதாரம்... என ஒரு பைல்... குமரன் கொடுக்க..."

" அதை வாங்கி பார்த்த... ப்ரின்சிபளின் .. முகம் பயத்தில் வெளுத்துபோனது...அவர் குரல் நடுங்க..... சார்.. . வெளியே இந்த விஷயம் தெரியாமல்.. விசாரணை பண்ணுங்க சார்.. ஸ்கூல் பேரு போச்சின்னா .. ரொம்ப கஷ்டம்... என சொல்ல.."

' ஓகே மேடம்... அத நாங்க பார்த்துக்கிறோம்... நீங்க எங்களுக்கு கோ ஒப்ரட் பண்ணினா மட்டும் போதும்... அப்போ நாங்க கிளம்புறோம்.... என அவர் இடம் விட பெற்று .. கிளம்பினார்கள்.. " போகிற வழியில் நிஷா எங்கும் கண்ணனுக்கு தெரிகிறாளா என குமரனின் விழிகள் தேடியது தனி கதை....

இரவு குமரனுக்கு வீட்டுக்கு வர தாமதம் ஆகிவிட.. சோர்வுடன்.. தனது காரை பார்க் செய்து விட்டு.. மெல்ல வீட்டுக்குள் நடந்து வந்தான்... அவன் வருவதை பார்த்து..

சிவநேசன்,, மகனிடம்... " என்ன ப்பா இன்னைக்கு இவ்வளோ நேரம்...

குமரன், ' என்ன பா... நான் என்னமோ இன்னைக்கு தான்...புதுசா லேட்டா .. வர மாதிரி கேட்குறிங்க... "

அவன் தன்னை கேலி செய்கிறான் தெரிந்தும். கண்டுகொள்ளாமல்...

அதுக்கு இல்லைப்பா..., கல்யாணம் நாள் வேற நெருங்கி... வருது நீ இப்பிடி..நேரம் கழிச்சு வரியே..அதான் கேட்டேன்.."

அப்பா... நான் போலீஸ் வேலைல.. இருக்கேன்....தெரிஞ்சும் இப்பிடி பேசினா .. எப்பிடி அப்பா... அதுவும் இல்லாம... இப்போ ஒரு முக்கியமான.. கேஸ் விசாரணை... பண்ண வேண்டி இருக்கு...உங்களுக்கே தெரியும்.... அதான் லேட்டா வரேன் இது தெரிஞ்சும்..நீங்க இப்படி பேசினா எப்பிடி ப்பா.... "

" சரி பா.. கல்யாணம். இருக்கு.. லீவ் எப்போ கேட்க போற... "

" ..லீவா .... இல்ல அப்பா.... லீவ் இப்போ சொல்ல முடியாது இந்த கேஸ் ரொம்ப முக்கியம் அப்பா..."

நேசன் அதிர்ந்து..., " என்ன லீவ் எடுக்க முடியாதா...அப்போ கல்யாணம்..'

அவரது எந்த கேள்விக்கும் அசராமல்.. குமரன்.. "

அப்பா... ஏன் அப்பா.. ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கிறேன் அது போதும்..'

அதை கேட்ட நேசன் "

அடேய்... நல்லா இருக்குடா. நீ பண்ணுறது . ரெண்டு நாள் லீவ் போதுமா."

அப்பா.. ப்ளீஸ் .. அப்பா.. ரெண்டு நாள் லீவ் போதும்.. என்ன , என கண்டிப்புடன் சொல்லி விட்டான்...."

"என்ன இவன் இப்பிடி சொல்லிடு.. போறான்.. அவன் அவன் கல்யாணம் சொன்ன ரெண்டு....மாசம் லீவ் சொல்லாமலே போட்டுராணுக.. இவன் என்னனா. ரெண்டு நாள் லீவ் போதும் சொல்லிடு போறான்..அதுவரைக்கும் சரி தான்... என... நேசன்.. தன் அறைக்கு சென்று விட்டார்...

இங்கே குமரன்.. வழக்கம் போல் தன் மனதோடு போராடி கொண்டு இருந்தான்... இது சரியா.. ... என்று யோசித்து.. .. யோசித்து... விடியும் பொது.. எழுந்தான்.... " என்ன தான் ஆச்சு எனக்கு யோசிக்காத குமரா யோசிக்காத.....என தன்னை சமாதானம் செய்து

உறங்க சென்றான்.....

___________________________________________________

இங்க லதா...தோழில் இடம் , " நிஷா... . எங்க மாமா.. ராகவி.. விஷயமா.. விசாரணை பண்ணும் பொது... ஒரு விஷயம் கண்டு பிடிச்சாரு..."

" என்ன விஷயம் டா...."

" இன்னும் ரெண்டு புள்ளைங்க.. ராகவி ஓட.. சேர்ந்து இருக்கிறது... " என லதா

என்ன லட்டு சொல்லுற... இன்னும் ரெண்டு புள்ளைங்கள... ஐயோ.." நிஷா மேலும் பதறி தான் போனாள்...

" ஹ்ம்ம் ஆமா டா .. ஒன்னும் பிரச்சனை.. இல்லை.. அவங்க பார்த்துகிறேன் சொல்லிடாங்க... நீ கவலை படாத... ஆமா ஏன் உன் முகமே சரி இல்லை.. அப்பா ஏதும் சொன்னாரா..."

" அவர் ஏதும் சொல்லல நா தான் நான் ஆச்சரிய படனும்... இன்னைக்கு நேத்தா... பேசுறாரு.. மனுஷன்... .. சரி அத விடு... கெமிஸ்ட்ரி நோட்ஸ் குடு... படிக்க..

" நீ இந்த கெமிஸ்ட்ரி விட மாட்டியா இந்தா தாயே படி நல்லா படி.."

நோட்சை கையில் வாங்கி கொண்டே... நிஷா...

" ஹாஹா... லட்டு உனக்கு ஏன்.. இப்பிடி இந்த சுப்ஜெக்ட் மேல வெறுப்பு...'

" அட போம்மா... நீ .. அசிட் . உப்பு சக்கரைன்னு இது எல்லாம் ஒரு சுப்ஜெக்ட்..."

" ஆமா ஆமா.. உனக்கு பிடிச்ச... சுப்ஜெக்ட்...போலீஸ் டிபர்ட்மெண்ட்ல இருக்கும் பொது பாடம் எல்லாம் படிக்க தோன்றுமா... செல்லம்.. என நிஷா.. சொல்ல. '

லதா அவள் முதுகில் ஒன்றை போட்டு.." ரொம்ப பேசாத டி... உனக்கு ஒரு நாள் காதல் வரும்ல அப்போ பேசிக்கிறேன்...."

" ஹாஹா... காதல் எனக்கு.... ஹாஹா.. நல்ல ஜோக்.. படிக்கிற வேலையே பாரு....."

" நடக்கும் ராசாத்தி.... எனக்கு கரு நாக்கு... நான் சொல்லுறது பலிக்குதா... இல்லையான்னு மட்டும் பாரு....."

" ம் .. சரிங்க மேடம்.. அப்பிடி நடக்கும் போது... உன் நாக்க இழுத்து வச்சு சூடு வச்சுடறேன் இப்போ படிப்போமா..."

" இன்னும் ஒரே ஒரு.. கேள்வி டி.. அதுக்கு அப்புறம் படிப்போம்.. என்ன.." லதா கெஞ்ச...

" என்ன கேள்வி..........?? "என நிஷா கேட்க

" நீ உன் அக்காவ.. கட்டிக்க போரவர பார்த்தியா..... டா.. உங்க அக்காக்கு.. ஓகே தானே....."

' நான் இன்னும் பார்கள.. அவ யார கல்யாணம் பண்ணிகிட்டா. எனக்கு . என்ன டா.. நம்ம படிப்பை பார்ப்போம்..வா. என படிக்க சென்று விட்டாள் ....நிஷா.. லைப்ரரி க்கு...."

லதா.. ஆனாலும் யாரு அந்த அப்பாவி... தெரியாமலே.. போச்சே....ச்சே. என நிஷா பின்னாள் .. சென்றால்...".

இப்பிடி இரண்டு வாரம் சென்று இருக்க...

.. குமரன் வரவே வேண்டாம்.. என்று காத்து இருந்த... அந்த.. நாளும் .. வந்துவிட்டது.. இன்னும் இரண்டு நாளில் திருமணம்.... எல்லோர்க்கும்.. அழைப்பிதழ்.. கொடுத்து முடித்து விட்டார்.. நேசன்...

எப்போதும்.. துரு துருவென.. திரியும் நண்பன் இன்று.. தலையில் கையே வைத்து.. உட்காந்து..இருப்பதை பார்த்து. குணா. பதறி. அவன் அருகில் வந்து.... " என்ன இவன் இன்னும் ரெண்டு நாள்ல. கல்யாணம் வச்சுக்கிட்டு.. இப்பிடி குடி..முழிகி. போன மாதிரி உட்காந்து கிடக்கான் ... என அவன் அருகில் சென்று....

குமார.. டேய் குமரா..., என அவனை அழைக்க..

மெல்ல நிமிர்ந்து.. சொல்லு குணா.. என்ன ஆச்சு.. ஏதும் தகவல் அந்த .. போதை.. பொருள் சம்பந்தமா...."

" எப்போ பாரு...வேலை தானா உனக்கு... .. ஆமா ஏன் இப்பிடி உட்காந்து இருக்க நீ . என்ன ஆச்சு.. இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்த வச்சுக்கிட்டு இப்பிடி இருந்தா எப்பிடி டா. "

குமரன்..." ஹ்ம்ம் ச்சு.. ஒன்னும்.. இல்லை டா... மனசு சரி இல்லை.... டா.. எதோ.. தப்பு நடக்க போற மாதிரி.. மனசு கிடந்தது பட படன்னு. அடிச்சுக்குது.. டா.. ஏன் தெரியல... இந்த கல்யாணம் .. சரியா வருமா எனக்கு தோன்றவே மாட்டேங்குது.. ..." நண்பனிடம் புலம்பி. தள்ளிவிட்டான். குமரன்...

" டேய்.. என்ன டா பேசுற.. இன்னும் ரெண்டு நாள்ல...உனக்கு கல்யாணம்.. தெரிஞ்சு தான் பேசுறியா.. இல்லை..." குணா குமரனின் பேச்சில் அதிர்ந்து போய் கேட்க...

" எல்லாம் தெரிஞ்சு தான் டா பேசுறேன்.. குணா..."

" டேய்... மொதல எனக்கு ஒரு விஷயம் சொல்லு.. நீ... யாரையாவுது. காதலிக்கிறியா.. என்ன..."

" கண்டு விட்டான் தன் தோழன்..... என்கிற ஒரு பக்கம்..... பயம்.. ..இனி சொல்லி என்ன ஆக போகுது.. என கவலை ஒரு பக்கம்... இது நால .. அவளுக்கு ஏதும் அவமானம்.. வந்து விடுமோ.. என்கிற.. பதட்டம்...... வேகமாய்.. குணாவை.. பார்த்து.. ச்சீ.. ச்சீ... அப்பிடி ஏதும் இல்லை.. டா... எதோ ஒன்னும் சரி இல்லாத மாதிரி தோணிச்சு..... தானே சொன்னேன்.. .. என குமரன் சமாளித்துவிட... '

குணா.. அவன் முதுகில் தட்டி. கொடுத்து.. அப்பிடி ஏதும் நடக்காது.. டா. உன் நல்ல மனசுக்கு.. எல்லாம் நல்லதாவே.. நடுக்கும் புரியுதா.. ரொம்ப யோசிக்காத...... வா இப்போ வீட்டுக்கு கிளம்பலாம்.. இன்னைல இருந்து இன்னும் நால் நாளைக்கி.. நீ ஆபீஸ் லீவ்... கிளம்பு.. இப்போ வீட்டுக்கு போயிட்டு.. குளிச்சுட்டு.. அப்பிடியே.. மண்டபம் கிளம்பலாம்.. என சொல்ல...

' எதுக்கு இன்னைக்கே மண்டபம்... அதுவும் நாலு நாள் லீவ் வேற சொல்லி இருக்க...."

" டேய்.. இப்பிடி அப்பா முன்னாடி உளறத... அவர் மனசு சங்கட பட போகுது.. இன்னைக்கே போனா தான் நலங்கு அது இது எல்லாம் செய்ய முடியும்.... சரியாய்.. ரொம்ப யோசிக்காத... இப்போ கிளம்பு.. என்று.. அவனை அழைத்து கொண்டு... குணா கிளம்பினான்...."

குமரன் மனதுக்குள்.. அவ்வளோ தானா . தன் காதல் ஆரம்பித்த உடன்.. தோல்வியே.. அடைந்து விட்டதா... வாழ்வில்.. முதல் முதலாய் மலர்ந்த நேசம்.. இவ்வளோ சீ க்கிரம் கருகி.. போகும் என்று அவன் நினைத்து கூட.. பார்க்க வில்லை.... இன்னும் இரண்டு நாளில்... தனக்கும் தான்.. நேசம் கொண்ட பெண்ணின்.. சகோதிரியே.. திருமணம் . செய்ய.. போகும் கொடுமை... என் எதிரிக்கும் வர கூடாது...என மனம் நோக.. வீட்டுக்கு.. கிளம்பினான்.....'

***********************


ஹாய்  பிரெண்ட்ஸ் இதோ அடுத்த எபி...... 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro