Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் அருகில் நீ இருந்தால் - 5


    " சரி தான். இப்போவே சப்போர்ட்டா.. என லதா தன் தலையில் கையே வைத்து கொண்டு அமர்ந்து விட்டாள்.. "

நிஷா , அவளை பார்த்து சிரித்து விட்டு.. தான் எடுத்து வைத்து இருந்த.... வீடியோவை திரும்ப ரிவைண்ட் செய்து பார்த்தாள்... ..

அதை கவனித்த.. லதா.. , என்ன பண்ணுற நிஷா... '

' இல்லடா.. அந்த ஆள் முகம் நல்லா தெரியுதானு பார்க்குறேன்... "

அது... ஒன்னும் பிரச்சனை இல்லை.. எப்பிடியும் ராகவியே வச்சு பிடிச்சுருவாங்க என இருவரும் பேசி கொண்டே ..

குணாகாகக் காத்து இருக்க..

அங்கே அலைபேசியே அனைத்து விட்டு.. குழப்பத்துடன். நின்ற குணாவைப் பார்த்து... ..

அவன் அருகில் வந்த குமரன்.." என்ன ஆச்சு குணா.. ஏதும் பிரச்சனையா? உன் முகமே சரி இல்லையே.. "என கேட்க...

" ஆமா சார்.. லதா தான் போன்ல...எதோ பிரச்சனையாம்.. நேரல பார்த்து தான் சொல்லணும் சொல்லுறா.... இங்கே தான் அவளும் இருக்கா.. நாம வந்த வேலை முடியாம.. எப்படி போய் பார்க்குறது சார் அதான்..."

" ஹ்ம்ம்.. சிறிது..நேரம் குமரன்...யோசித்து விட்டு... ஒன்னும் பிரச்சனை இல்லை..குணா.. நாம போய் பார்க்கலாம்... எந்த பக்கம் இருக்காங்க.. விசாரிச்சியா .. "

" கேட்டேன்.. சார்.. அந்த சீ – சா கிட்ட இருக்கிற ..மரம்.. கிட்ட இருக்கா.. சார்..." குணா சொல்ல...

" சரி வா போகலாம்...என குணாவிடம் குமரன் சொல்ல இருவரும்.. லதா சொல்லியே இடத்தை நோக்கி.. சென்றார்கள்.......

அங்கே.." லதா – நிஷா.. குணாவின் வரவுக்காக காத்து கொண்டு இருந்தார்கள்.... குணாவிடம் எப்படி விஷயத்தை.. சொல்வது... என லதாவிடம் கலந்து ஆலோசித்தாள்.. நிஷா..

எதிர்ல வந்த குணா.. மற்றும் குமரனை முதலில் கவனித்தது.......நிஷா.. தான்... .

லதாவிடம் ஹே யாரோ நம்மள நோக்கி வராங்க டா.. ஒரு வேலை.. அண்ணாவா இருக்குமோ... ஆனா கூட இன்னும் ஒருத்தர்.. வராப்புல..தெரியுதே யாரு அது.. இப்போ எப்படி அண்ணாக்கிட்ட. விஷயத்தை . சொல்லுறது....

. நிஷா சொன்னவுடன் திரும்பி பார்த்த.. லதாவின் முகம் மலர்ந்து விட..
நிஷா.. அவளை குழப்பத்துடன் பார்க்க.. அதற்குள் குணா. மற்றும் குமரன்.. அவர்கள் அருகே வந்துவிட்டார்கள் .

நிஷா ஏதோ சொல்ல வருவதற்குள் குணா. லதாவிடம்.. சொல்லு.... லதா. என்ன பிரச்சனை. எதுக்கு இவ்வளோ அவசரமா வர சொன்ன.. என குணா....கேட்க..

நிஷா.. இது தான் அண்ணாவா..அப்போ இது யாரு? என்று அருகில் நின்றுகொண்டு இருந்த குமரனை..பார்க்க.. .. .. இவனை எந்த அளவுக்கு நம்புறது என ஒரு சந்தேக பார்வையே குமரன் பக்கம் .. பார்த்து வைத்தாள்.."

அவளின் பார்வை உணர்ந்து திரும்பி பார்த்த குமரன் .. என்ன என்று கேட்க.....

அவன் சட்டேனே திரும்புவான் என எதிர்பார்க்காத நிஷா...பதட்டதுடன்

அவனை பார்த்து.. ஒன்றும் இல்லை என தலையே மெல்ல அசைத்துவிட்டு.. குனிந்து கொண்டாள்...[ மனதுக்குள் முருகா இப்படியா பார்த்து வைப்பேன்.. என்ன நினைதுற்பாங்க என்ன பத்தி.. ]

அவளை பார்த்து குமரன் தனக்குள் சிரித்து விட்டு.." ம்.. சந்தேகம் படுறா...மனதுக்குள் நினைத்துவிட்டு.. ...லதாவிடம் திரும்பி.. சொல்லுமா என்ன பிரச்சனை.. அப்படி என்ன நேருல தான் சொல்லுற அளவுக்கு....

லதா, " அண்ணா.. அது..வந்து... என .. சிறிது நேரம் யோசித்துவிட்டு... .ராகவியோட செயலையும் .. பிறகு.. அவள் இங்கே வந்து சாக்லேட் வாங்கின அனைத்தையும் ஒன்று விடாமல்... அவனிடம் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் .. "

குமரனும்.. குணாவும்.. ...அதை கேட்டு...ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு... சரி.. அந்த ஆள் யாரும் தெரியுமா... .?

" அண்ணா தெரியலை அண்ணா எங்களுக்கு......ஆனா நிஷா.. ராகவி அந்த ஆள் கிட்ட. சாக்லேட் வாங்குறத.. வீடியோ எடுத்து இருக்கா. .... , "

என்னது வீடியோ..வா.. இப்போ கேட்பது . குணாவின் முறை ஆனது..

ஆமா.. வீடியோ மட்டும் இல்லை.. நிஷா. அந்த சாக்லேட்.. எடுத்து குடு ...என லதா கேட்க..

நிஷா. வேகமாய்.. தனது பேக்கில் இருந்து அந்த சாக்லேட் பார் எடுத்து கொடுத்தாள் ....

அதை வாங்கி குணாவிடம் தந்தவள்..... " இது தான் இதுக்கு தான் இப்போ அவள் இங்க வந்ததே.. இதை சாப்பிடலன்னா அவள் கை எல்லாம் நடுங்குதாம்.....என சொல்ல. இதை எல்லாம் கண்டுபிடிச்சது நிஷா.. தான் அண்ணா.என கூடுதல் தகவலையும் சேர்த்து சொன்னாள் ...

குமாரனால். நிஷாவின் செயலை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.. இந்த வயசுல. இப்படி ..நிதானமா செயல் பட.. முடியுமா.. என்ன அவளை கவனித்த படி... தன் கையில் இருக்கும் ஆதாரங்களை பார்த்தான்... ...

நிஷா.. அய்யோ... அது எல்லாம் இல்லை சார்.. . லதா தான்

முதல அவளோட நடவடிக்கை எல்லாம் சொன்னது.. அதுக்கு அப்புறம் தான். நாங்க சேர்ந்தே இவள தொடர்ந்து வந்தோம்............ எனச் .. சொன்னாள்

குமரன், மனதுக்குள்...' ஹ்ம்ம் தன்னடக்கம்...."

அந்த வீடியோ..இப்போ உங்க கிட்ட இருக்கா .?? குமரன் கேட்க

ஆமா அண்ணா... , என லதா நிஷாவுக்கும் சேர்த்து பதில் சொன்னாள்

நான் அதை பார்க்கலாமா....என நிஷாவை பார்த்து கேட்க..

" இதோ சார்.. என தனது போனை எடுத்து அவன் இடம் தந்தாள்...

" அதை பார்த்துவிட்டு....குணாவிடம்... குணா நாம சந்தேக பட்ட மாதிரி தான் இருக்கு...."

இதை கேட்ட இரு பெண்களும்.. அதிர்ந்தனர்

" என்ன சார்...சொல்லுரிங்க..."

குமரன் , இவர்கள் முன்னே உளறி விட்டது புரிய... அது ஒன்னும் இல்லைமா.. நாங்க ஒரு கேஸ் பத்தி. பேசினோம்.... அதுக்கும் இதுக்கும்

ஏதோ தொடர்பு.. இருக்கிற மாதிரி இருந்தது அதான்... சொன்னேன்..." பிறகு

சரி.. நீங்க கிளம்புங்க.. நாங்க பார்த்துக்கிறோம்....". என குமரன் தனது.. போனில் ப்ளுடூத் வழியே அந்த வீடியோ... தனது போனில் ஏற்றி விட்டு நிஷாவின் போனை.. அவளிடம் திருப்பி தந்தான்..... பிறகு யோசனை தோன்ற.. நிஷாவை. கேட்போமா வேணாமா என்று யோசித்து வேண்டாம் என முடிவு செய்துவிட்டான்...

லதா.. மற்றும் நிஷா.. ஏதோ. சாதித்துவிட்ட திருப்தி. உடன் கிளம்பினார்கள் ..

அப்போது.. கொஞ்சம் தூரம் சென்ற நிஷா திரும்பி வேகமாய் குமரன் - குணா அருகே வந்து நிற்க

குணா.. , என்னமா ஆச்சு...என நிஷாவை பார்த்து கேட்க..

லதாவும் அதற்குள் அவள் பின்ன மீண்டும் ஓடி வந்துவிட்டாள் .

'நிஷா., இருவரையும் பார்த்து... , " அண்ணா.., சார்.. தயவ செய்து.. விசாரணை.. அது இது-னு.. வீட்டுக்கு எல்லாம் வந்துராதிங்க.. சார்.. . எங்க அப்பாக்கு.. தெரிஞ்சது.. நான் தொலைஞ்சேன்...அப்புறம்.. ராகவி... பெயர் வெளியே வராம

பார்த்துக்கோங்க .... ப்ளீஸ் சார் அவ வாழ்க்கை பிரச்சனை சார், பார்த்துக்கோங்க.... ஓகே சார் ஓகே அண்ணா.. பாய்.. என சொல்லிவிட்டு.. மீண்டும் லதாவை இழுத்து கொண்டு ஓடி விட்டாள் ..]

அவ்வளோ நேரம் நிஷா செல்வதை பார்த்துக்கொண்டு இருந்த குமரன்..

" சார்..." என குணா அழைக்க

" குணா.. நாம இத பத்தி இங்க பேச வேண்டாம் வாங்க போகலாம்.. ".

இல்லை சார்.. அது . மேலும் குணா தயங்க..

என்ன குணா.., என குமரன் கேட்டான்..

இன்னைக்கு நீங்க பொண்ணு பார்க்க போகணும் சார். கொஞ்சம்

சீக்கிரம் வீட்டுக்கு போகணும்...... அம்மா .. உங்களுக்கு ஞாபகம் படுத்த சொன்னாங்க சார்.. என ஒரு வழியா குணா சொல்ல வந்ததை சொல்லிவிட...

அவனை பார்த்து..

குமரன். ஒரு பெருமூச்சை.. விட்டான்...... .

" சார்..."

" சரி கிளம்பலாம் குணா.." என சொல்லிவிட்டு.. குமரன் தனது காரை பார்க் செய்த இடத்திற்கு சென்றான் குணாவுடன்...

**************************************

இங்கே வீட்டில்.....

தனது செல்ல பெண்ணை பார்க்க போன...கிருஷ்ணன்..

" அம்மாடி..ஷாலினி.."

ஏதோ வேலையாய் இருந்த ஷாலினி .. அதை விட்டுட்டு. தந்தையே பார்த்து.....சொல்லுங்க அப்பா..

அப்பா உனக்கு எது செய்தாலும்.... உன் நலன் காக தான் இருக்கும் நம்புறியா ம்மா..."

" என்ன அப்பா இப்பிடி கேட்டிங்க... நீங்க எது செய்தாலும். என் நம்மை காக தான் அப்பா..." [ மனதுக்குள்.....இந்த அப்பா இப்போ எதுக்கு நம்ம கிட்ட பேச வந்து இருக்காரு.. ஒரு வேலை அம்மா சொன்ன விஷயமா இருக்குமோ. என்கிற யோசனை ஒரு பக்கம் ஓடியது.....]

" அவள் கையே எடுத்து.. தன் கைக்குள் வைத்து.... ரொம்ப சந்தோசம்....ம்மா.. , இன்னைக்கு... உன்னை பெண் பார்க்க வராங்க..ம்மா...... பையன்.. போலீஸ் ஆபீசர்... ரெடியா இரும்மா.. என சொல்லி விட்டு மாலை..வர இருக்கும் குமரன் குடும்பத்துக்காக வாங்க வேண்டியே..பொருட்களை.. வாங்க சென்று விட்டார் ..

ஷாலினி.. , வரவன் போலீஸா ...என யோசனையில் ஆழ்ந்துவிட்டாள் .[ ஏன் போலீஸ் ஆ இருந்தா கட்டிக்க மாட்டியா..ரொம்ப தான் டி]

பிறகு.........ஷாலினி.. தனது போனை.. எடுத்து.. அந்த புதியவனுக்கு அழைத்து பேசினாள் ....

" ஹலோ "


———————–..

' இன்னைக்கு என்ன பொண்ணு பார்க்க... வராங்க.. "

—————————

ஆனா...

————————-

"சரி நீங்க சொல்லுற மாதிரியே....செய்யுறேன்.. ஆனா எனக்கு பயமா இருக்கே .. "

———————

நீங்க இருக்கிற. தைரியத்துல.. நான் இதுக்கு சம்மதிக்கிறேன்.."

————————-

" சரி நான் வச்சுடுவா..."

—————————

மாலை நேரம்....

" குமரன் சீக்கிரம்,,,,,..... வீடு வந்துவிட.. ருக்மணி அம்மாவுக்கு அவ்வளோ சந்தோசம்.. அவரும் சிவநேசனும்.. ஷாலினியே பெண் பார்க்க கிளம்பி விட்டார்கள்.. குமரனை அழைத்து கொண்டு... "

சாந்தி இல்லம்....

எல்லாம் ரெடியா ..சுமி... என வேகமாக வந்த கேட்க வந்த கிருஷ்ணனை.. பார்த்து..

" ஆச்சுங்க...நான் போயிட்டு.. ஷாலினி என்ன பண்ணுறனு பார்த்துட்டு வரேன்..."

' சரி.. ஆமா எங்கே உன் . அருமை. பொண்ணு. இன்னும் ஸ்கூல் முடிஞ்சுச்சு.. வரலையா..."

அப்போது......தான் லதாவுடன்.. வீட்டுக்குள் வந்த.... நிஷா.. அவரின் பேச்சை.. கேட்டு அரை வாசலில் நின்று விட்டாள் ....

" இல்லைங்க... இன்னும் வரல இப்போ வந்துவிடுவா..நினைக்கிறன்.."

" அப்பிடி அவ.. வந்த.. திருப்பி.. கொஞ்சம் நேரம் மாமி வீட்டுக்கு அனுப்பிவச்சுறு.. என் பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கும் போது.....உன் பொண்ணு அதான்.. அவ இங்க இருக்கனும் ஒன்னும் அவசியம் இல்லை.. இவ வாய் அடிக்கிறத... பார்த்து.. என் பொண்ண வேண்டாம் சொல்லிட்டா... எனக்கு தான் அவமானம்..."

அவரின் இந்த பேச்சை கேட்டு...... நிஷா.. உடைந்து போய் விட்டாள் .....ச்சே இப்படியா பேசுவாரு... ஏன் மேல அப்படி என்ன வெறுப்பு...

என்ன மனுஷன் இவரு..... என இறுகி போய் நின்று இருந்தாள் ...

லதா அவள் கை பிடித்து.... மச்சி... வருத்த படாத வா டா. போகலாம் நம்ம வீட்டுக்கு.. அங்கே இருந்து போன்ல சொல்லிக்கலாம் என வந்த சுவடு தெரியாமல்.. நிஷாவை அழைத்து கொண்டு போய்விட்டாள் ....

எப்போவும் இது நடப்பது தான்....

" ஏங்க அவ சின்ன பொண்ணு.. அவள போய் இப்பிடி பேசுறிங்க...".என சுமதி. கேட்க..

கிருஷ்ணன் , " அது எல்லாம் எனக்கு தெரியாது.. உன் பொண்ணு வர கூடாது அவ்வளோதான்..... என்று சொல்லிவிட்டு சென்று விட..

சுமதி.. தான் சின்னவளை நினைத்து.. கண்ணீர் மட்டும் தான் விட முடிந்தது...[ மனதுக்குள்...கடவுளே எப்போ தான்... இந்த பொண்ணுக்கு விடியே போகுதோ... என நினைத்த படி தன் வேலையே பார்த்து கொண்டு இருந்தார்..]

மாலை 6.30 ..

. குமரன் மற்றும்.. சிவநேசன் – ருக்மணி.. தம்பதி. ..ஷாலினி வீட்டுக்கு வந்து விட்டனர்.... கூடவே .. குணாவும்.....

அனைவரையும் வர வேற்று ....அமர செய்தார்.. கிருஷ்ணன்...

சுமதி.. தனது. பெண்ணை.. அழைத்து..வந்து. வந்தவற்கு நமஸ்காரம் செய்ய சொல்ல.

ஷாலினி... எல்லாம் ஒரு எந்திரமாய் செய்துவிட்டு. உள்ளே சென்று விட்டால்...

ருக்மணி..... எங்களுக்கு பொண்ண ரொம்ப படிச்சு இருக்கு.. ...டேய்.. குமரா.. பெண்ணை நல்லா பார்த்துக்கோ... என சொல்ல..

அவனும் பார்த்தான்.. வீட்டை நல்ல சுற்றி பார்த்தான்.. ஹாலில் இருந்த ஷோகேசில் அடிக்கி.வைத்து.. இருந்த மெடல் கப்ஸ்....இவை அனைத்தும்.. தான்... [ நேரம் . டா.... இதுக்கு நீ வராமலே இருந்துர்கலாம்...]

அப்போது தான் குமரன் கண்ணில் அந்த போட்டோ தென் பட்டது... இது.. '

எங்க பொண்ணு தான் தம்பி....

அப்போது தான் சத்தமாகவே பேசிவிட்டது தோன்றியது.....

" ஒ"

" அவங்க இங்க இல்லையே....வெளியே போயிர்காங்கள "

" இல்லை தம்பி.. கிளாஸ் க்கு போயிர்க்கா.. இப்போ வர நேரம் தான் என சுமதி சொல்லி கொண்டு போக.."

" கிருஷ்ணன் முகம் கருத்து விட்டது.., என்ன இது... இவ வீட்டுல இருந்தாலும் குற்றம்... வெளியே போனாலும் குற்றம்.. என மனதுக்குள் சபித்து... கொண்டு இருந்தார்.."

சிவா நேசன்.. ருக்மணி... காதில்.....என்னடி இவன் இங்க வந்து விசாரணையே நடத்துறான்... ."

" எனக்கு என்ன தெரியும்... நீங்க தான்..என்னனு கேளுங்க.."

" அப்போது தான் குணாவும் அந்த போட்டோவை பார்த்தான்.."

இது லதா ஓட.. தோழி ஆச்சே.... என மனதுக்குள் நினைக்க...."

நேசன், " என்னப்பா குமார ஏதும் பிரச்சனையா.."

" அதற்குள் சுதாரித்து..., " இல்லை பா ஏதும் பிரச்சனை இல்லை...என அமைதி ஆனான் ஆனால்.. அவனது மன நிம்மதி.. தொலைந்து போனது..."

அப்போ தட்ட.. மாத்திக்கலாம... என நேசன்.. கிருஷ்ணன் இருவரும் நிட்சையே தம்பூலம் .. மாற்றி கொள்ள... திருமண தேதி... நாளை ஐய்யர்.. இடம் கேட்டு... சொல்லுவதாக.. சொல்லிவிட்டார்... ருக்மணி அம்மையார்...."

தன் அனுமதி இல்லாமல் நடக்கும்.. அனைத்தையும்..குமாரனால்... வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது... எல்லாம்... விதி போல் நடக்கட்டும் என அதன் போக்கில் விட்டுவிட்டான்......"

மகன் ஏதும் பிரச்சனை செய்யவில்லை.. என்கிற நிம்மதி... பெற்றோர். முகத்தில்.. இருந்தது......

ஆனால்.. குணாவிற்கு... குமரனின் குணம் தெரிந்ததால்... அவனுக்கு வேண்டி.. இவன் கவலை கொண்டான்...

அவள் தொழில் தட்டி..." எல்லாம் சரியா போகும் மச்சி... வொர்ரி பண்ணிக்காத......."என சமாதனம் செய்தான்....

நிஷாவிடம் இருக்கும் எதோ ஒன்ன்று.. ஷாலினி இடம் இல்லை.. அது என்ன என்பது.. தான் குமாரனால். சரியாக . சொல்ல முடியவில்லை..... இது சரியா.. அக்காவை..பார்க்க போய்.. தங்கை இடம் மனதை... பறி கொடுத்து விட்டு.. வந்து இருக்கிறேன்... என ... இவனது எண்ணம் போன போக்கில் சற்று .. அதிர்ந்தான் போய்விட்டான்... யாருகாவுது தெரிந்தால் காரி துப்பி விடமாட்டாங்க என்று தோன்றியது..

என்னது நான் காதல்.. ஐயோ.. இது தான் காதலா...... ஒரு பெண்ணிற்கு செய்யும் துரோகம் ஆச்சே இது.. காலைலே பார்த்தது குள்ள... எப்பிடி காதல் வரும்... நான் ஏன் இப்படி நிஷா.. ஷாலினியே ஒப்பிட்டு.. பார்க்குறேன்.... அவன் மனம்.. டேய் .. குமார.. இது.. சரி இல்ல.. உன் போக்கும் சரி இல்லை.....ஒழுங்கா.. உன் வேலையே மட்டும் பாருடா .. டேய்.. .நிஷா. சின்ன குழந்தை...அவள்..மேல் காதலா.. போடா டேய்.. என அவன் மனம் அவனுக்கு எதிராக செய்யல பட்டது... இனி......


****************************

hai friends itho aduththa epi pottachu.. padichutu unga comts sollunga.....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro