Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் அருகில் நீ இருந்தால்-3


நிஷாவை பற்றி ஒரு சிறு அறிமுகம்..

நிஷா என்கிற நிஷாந்தினி.. சுமதி - கண்ணன் ஓட இரண்டாவுது மகள்.. செல்ல குட்டி.. துருதுருவென்று தெரிபவள்.. தனக்கு எது சரி என்று தோன்றதை அதே மட்டும் செய்பவள்... அவளது அம்மா மற்றும் லதா மட்டுமே அவளது உலகம்... அன்பானவள்.....

இவள் ஆண் பிள்ளையாக பிறக்கவில்லை.என்கிற ஒரே காரணத்தினால்.. தந்தை கண்ணனுக்கு பெரிய மகள் தான் செல்ல பிள்ளை ஆகி போனாள் .. அது நாள் தான் அவருக்கு எப்போ எல்லாம் வைப்பு கிடைக்குமோ அப்போ எல்லாம் நிஷாவை வார்த்தைகளால்.. ஒரு வழி பண்ணிவிடுவார் அவளது துணிச்சல்.. அவளது பலமே எப்போது அவளை பற்றி. குறை மற்றும் முதலில் சொல்லி இவளை அடக்கி வைக்க பார்பார்.. அதுலயும் தோற்று போவது எனவோ இவர் தான்...அதில் வருகிற கோபம் தான் இவளை முற்றிலும் அவர் ஒதிக்கி வைத்துவிட்டார் '

சுமதிக்கு . தன் இரு பெண்கள் என்றாலே உயிர்... இவளின் அக்கா தான் ஷாலினி...அமைதிக்கு மறு பேர்... .. என்று கூட சொல்லலாம்.. இவ்வளால் தான் ... பின்னாள். இளையவள் தன் தந்தையின் மானத்தை காப்பற்ற போவது தெரியாமல்.. இவளை தூக்கி வைத்து கொண்டகிறார்.. அந்த கண்ணன்.... ஹ்ம்ம் பார்ப்போம் போக போக என்ன நடக்க போகிறது என்று....

ஷக்தி பவன்... குமரன் வீடு.. இரவு குணா உடன்..வந்த குமரன் நேராக தந்தை இடம் வந்தான்..

அப்பா இந்த அம்மா மனசுல என்ன நினசுகிட்டு இருக்காங்க என்று பொரிந்து தள்ள..

' சிவநேசன், ' பொறுப்பா.. இப்போ என்ன ஆச்சு.. ஏன் இவாளோ கோபம்.. நீ உட்காரு குணா.. ஏன் நிக்கிற...என சொல்ல. '

குணா ஏதும் சொல்லாமல்..அவர் அருகில் அமர்ந்தான்...

" பின்ன என்ன அப்பா.. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் சொல்லுறேன் அதை ஏன் இவங்க புருஞ்சுக்காம இருக்காங்க.. எனக்கு பிடிக்கல அப்பா.. இந்த கல்யாணம் கருவேப்பில்லை கொத்தமல்லி ஏதும் '

சிவநேசன், " நிதானமாக...அது தான் ஏன்.. குமரா உனக்கு பிடிக்கல.. உன் வையசு பசங்க எல்லாம் செட்டில் ஆகிடாங்கலேன்னு உன் அம்மாவுக்கு கவலை... அதை ஏன் நீ கண்டுக்க மாட்டேங்குற..."

" அப்பா நீங்களுமா.., என தலை பிடிதித்து கொண்டு அமர்ந்துவிட்டான்... குமரன்..."

நீ என்ன பிரச்சனைன்னு. சொல்லாத வரைக்கும் இப்பிடி தான் ப்பா , அவ எதிர்பாற்குரதுல... ஒன்னும் தப்பு இல்லையே இல்ல அதுக்கு நாங்க தகுதி ஆனவங்க இல்லைன்னு எங்களை நீ நினைக்கிறியா குமரா.. " எப்பிடி பேசினால். அவன் வழிக்கு வருவான் என்று தெரிந்த நேசம் சரியான இடத்தில அடித்து...விட...

" நேசனின், பேச்சால்.. குமரன் சற்று ஆடி தான் போய் விட்டான்.." என்ன இது இப்பிடி பேசுறிங்க அப்பா.. நான் என்னைக்கும் அப்பிடி நினைச்சது இல்லை அப்பா. நீங்களும் என்ன புரிஞ்சிக்கலைன்னா எப்பிடி ப்பா . எனக்கு கல்யாணம் மேல நம்பிக்கை இல்லை அப்பா...அவ்வளோ தான்.. அதுவும் இல்லம்மா.. நான் பாதி நாள் வெளியே மீதி நாள்.. மட்டும் வீட்டுல இருக்கேன் வரவ.. எதிர் பார்க்கிற மாதிரி.. நான் இல்லைனா.. வாழ்கையே நரகம் ஆகிடும் ப்பா என சொன்னவனை.. பார்த்த சிவநேசன்..."

இது தான் நீ கல்யாணம் வேணாம் சொல்லுறதுக்கு கரணம் என்றால் இப்போ உங்க அம்மா என்ன குறைச்சல போயிட்டா .. குமரா.. நானும் போலீஸ் ல இருந்து ரிடைர் ஆகினவன் தான் , நீ எப்பிடி இப்பிடி யோசிக்கிற.. எனக்கு புரியல குமரா. இது மட்டும் தான் காரணமா.. இல்லை.. வேற ஏதும்.. ??? "

அப்பா...!!! என அவன் திணற... ( அவனுக்கே சொல்ல போனாள் ஒன்றும் புரியவில்லை.. ஏதோவோ அவனை தடுத்து. எது என்று கேட்டால் அவனிடம் பதில் தான் இல்லை...ஆனால் திருமணம் மட்டும் வேண்டாம் )

சொல்லு குமார எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சு ஆகணும் ' என சிவநேசன்.... ஒரு பிடியாய் நிற்க....

குமரன், தவித்து போனான், " . அப்பா " மேலும் பேச அவன் வார்த்தைகளை தேடினான்...

" இதோ பாருப்பா .. நாளைக்கு உங்க அம்மா நீ நான் உனக்கு பொண்ணு பார்க்க போறோம் நீயும் வர... இதுல எந்த மாற்றம் இல்லை நீ வர அவ்வளோ தான் " என போதும் டா சாமி என்று வேகமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போய் விட....

குணா.. " டேய்.. ஏன் டா இப்பிடி இருக்க என்ன பிரச்சனை அத சொல்லு முதல நொண்டி சாக்கு சொன்னேன் வை மவனே மனுசனா இருக்க மாட்டேன் நான்....என குணாவும் குமரனிடம் அவன் ஏன் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறான் என கேட்க..

வேறு வழி இல்லாமல் குமரன்..... " சொல்ல ஆரம்பித்தான்.. குணா உனக்கு யாபகம் இருக்கா.. நம்ம கேடர்ல சஞ்சீவ் இருந்தான்ல. அவன் லைப் எப்பிடி வீணா போச்சு உனக்கு தெரியும் தானே.. "

அவ்வளோ தான் நண்பனின் பதிலை கேட்டு குணா அவனை திட்டி தீர்த்து விட்டான்... " நினச்சேன் டா நீ அவன தான் சொல்லுவேன்னு... ஏண்டா உனக்கு அறிவு எங்க போச்சு கேட்குறேன்... .அவன் எல்லாம் ஆளு அவன் சொல்லுற கதையே கேட்டு நீ இப்பிடி இருப்பியா லூசா நீ.. என்ன சொன்னான் உன் கிட்ட இந்த பொண்ணுகளே வேஸ்ட் நம்மள நம்ப வச்சு விட்டுட்டு போயிர்வாளுங்க சொன்னனாகும் ..அதை கேட்டு நீயும் இப்பிடி சாமியார சுத்த முடிவு பண்ணிட அப்பிடி தாணே "

நண்பன் ஒரு வரி விடாமல்.. சொல்லி காட்டியதில் ..குமரன்.. அமைதியாக ஆமாம் என்று. தலை ஆட்டி வைக்க..

அப்பிடியே ரெண்டு போட்டேன் வை சரியாய் வருவ நீ... உன்கிட்ட மட்டும் இல்ல எல்லார் கிட்டயும் அந்த லூசு அப்பிடி சொல்லுது. சொல்லுறது மட்டும் இல்லாம... நாளை ஒருத்தி ஜொள்ளு விட்டு தெரிறான்.. அவன நம்புவ... மரியாதையா சொல்லுறேன் அப்பா சொல்லுற மாதிரி நாளை போய் பொண்ண பார்த்துட்டு வா... சரி நேரம் ஆச்சு.. குமரா நானும் கிளம்புறேன்..நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா... அம்மா பாவம் டா.. அவங்கள மனசுல வச்சுக்கிட்டு எந்த ஒரு முடிவையும் எடு..... "

" என்னடா குணா..நீயும் இப்பிடி பேசுற இப்போ எவ்வளோ பெரியே கேஸ் விஷயமா இப்போ நாம அலைஞ்சுகிட்டு இருக்கோம்.. இப்போ போய் கல்யாணம்... அது இதுன்னு... என மீண்டும் அவன் ஆரம்பிக்க...."

நம்பனை ஒரு முறை முறைத்துவிட்டு... அது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் ... நீ போயிட்டு நாளைக்கு பொண்ண பார்த்துட்டு வா நான் கிளம்புறேன் என்ன வரேன் டா.. சொல்லிவிட்டு .. குணா சென்று விட்டான்..

குமரன் .. நொந்து...போய் அமர்ந்து விட்டான்...., " என்னடா இது புது சோதனை... இவ்வளோ நாள் அமைதியா இருந்த தந்தை.. தாய் இப்போது இவ்வாறு வேடிபத்தின் காரணம் என்னவோ....சரி.. போய்.. பாப்போம்.. எல்லாம் விதி. விட்ட வழி... " என்று பெண் பார்க்க போகும் சடங்கிற்கு தயார் ஆகினான்..."

விடியல்...யாருக்கும் காத்து இருக்காமல்.. ..அழகாக விடிந்தது....

வழக்கம்.. குமரன் பரபரக கிளம்ப.... ருக்மணி..அவன் முன்னாள் வந்து.. இன்னைக்கு.. உனக்கு பொண்ணு பார்க்க போறோம் குமரா சிக்கிரம் வந்துரு சாய்ந்திரம்,......

" அம்மா.." அவன் ஏதோ சொல்ல போக..

" அப்புறம் உன் இஷ்டம் " என மகன்.. முகத்தை கூட பார்க்காமல்... ருக்மணி செல்ல போக....."

குமரன்...சரி ம்மா வந்துடுறேன்... என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டான் "

நேசன், மனைவி இடம்.. " ஏண்டி அவன இப்பிடி படுத்துற.. நேத்து அவன் முகத்தை பார்க்க முடியல.. எப்பிடி தவிச்சு போயிட்டான் தெரியுமா.. இன்னும் கொஞ்சம் காலம் போகட்டுமே.. "

ருக்மணி.., " இல்லைங்க.. இன்னும் அவன இப்பிடி விடுறது எனக்கு எண்ணம் இல்லை.. "

நேசன், " சரி என்னமோ பண்ணு.. நான் மீட்டிங் இருக்கு கிளம்புறேன்.. சாப்பாடு எடுத்து வை..இதோ வரேன் என்று சொல்லிவிட்டு.. அறையே நோக்கி சென்றுவிட்டார் ....

ருக்மணி.. தன் கணவருக்கு உணவு... தட்டில் பரிமாறி... வைத்துவிட்டு... அவர்காக காத்து கொண்டு இருந்தார்....

சாந்தி.. இல்லம்.....

என்னங்க.... சொன்னது எல்லாம் வாங்கி . வந்துடிங்களா .. இன்னைக்கு.. ருக்மணி அண்ணி சிவா அண்ணன்...அவங்க பையன் நம்ம வீட்டுக்கு வரதா சொல்லி இருக்காங்க. .. நம்ம.. ஷாலினியே பார்க்க.."

எல்லாம் வாங்கியச்சும்மா.. நீ வேற என்ன வேனும்னு சொல்லு..இப்போவே போய் கையோட வாங்கிட்டு வந்துறேன்.. அவங்க வர அப்போ எந்த குறையும் இருக்க கூடாது... என என்றைக்கும் இல்லாம கிருஷ்ணன் மிகவும்.. சந்தோசமாக மற்றும்.. தன்மையாக மனைவிடம் பேசினார்...

இது போதும்ங்க நீங்க உங்க பொண்ணுகிட்ட பேசிடுங்க.. அவ... அப்போ தான் சிக்கிரம் காலேஜ் ல இருந்து வருவா..."

" ஏண்டி... இன்னும் அவ கிட்ட பேசவே இல்லையா.. " என கிருஷ்ணன் கோபமாக பேச போக..

" சொன்னேங்க... இருந்தாலும் நீங்க ஒரு தரம் பேசிடுங்க.. " அவ உங்க பேச்சை தான் கேட்பா

' சரி " என்று மகளை இடம் பேச சென்றார். '

இவர்களின் பேச்சை கேட்டு.. கொண்டு இருந்தா. நிஷாந்தினி அப்போது தான் பள்ளிக்கு கிளம்பி கொண்டு இருந்தாள் ....ஓஹோ ..இந்த...

சிடு முஞ்சி..சிகாமணியே.. பொண்ணு பார்க்க வரங்களா .. பாவம் டா.. மாமு நீ.. உனக்கு வேற... பொன்னே. கிடைக்கலையா... இந்த ஊருக்குள்ள என மனதுக்குள்.. குமாரன்க்கு வேண்டி பரிதாப பட்டு... பள்ளிக்கு கிளம்பி சென்று விட்டாள்

******************

ஹாய் பிரெண்ட்ஸ் இதோ அடுத்த எபி போட்டுட்டேன் . படிச்சுட்டு சொல்லுங்க....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro