என் அருகில் நீ இருந்தால் - 20
மாலை ஆகி விட நிஷா வீடு திரும்பாததால் , சுமதி வீட்டு வாசலில் அமர்ந்து படி அவளுக்காக காத்து இருந்தார் ,வெகு நேரம் ஆகியும் அவள் வாராததால் அவருக்கு மனத்துக்குள் பயம் கிளம்ப , அதற்குள் கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து விட்டார் , வெளியே பதட்டமாக அமர்ந்து இருந்த மனைவியே பார்த்து என்ன ஆச்சு சுமதி ,ஏன் இங்க உட்காந்து இருக்க "
" இல்லைங்க அது என அவர் கையே பிசைந்த படி,நிற்க "
" என்ன சுமதி, ஏதும் பிரச்சனையா " என சுமதி அருகில் அவர் சென்று கேட்க
அது வந்துங்க பாப்பா இன்னைக்கு வந்து இருந்தாங்க "
" யாரு நிஷாவா " கிருஷ்ணன் கேட்க
" ஆமா ஆனா " என சுமதி இழுக்க
" ஏய் என்ன விஷயம் சொன்னாதானே தெரியும் ஆனா ஆவானா சொல்லிக்கிட்டு நின்னா எனக்கு எப்பிடி புரியும் , நிஷா எங்க " என்று கிருஷ்ணன் அவரோட குரல் உயர்ந்த உடன்
அதில் பயந்து போய் சுமதி, அழுதபடி, வந்துங்க பாப்பா லதா வீட்டுக்கு போயிட்டு வரேன் சொல்லிடு போனாங்க ஆனா இன்னும் வரல திரும்ப போய் ரொம்ப நேரம் ஆச்சுங்க என அவர் சொல்லி முடிக்க
லதா அங்கே வர சரியாக இருந்தது ,அம்மா நிஷா இங்கே வந்து இருக்காளா வர சொல்லுங்க ம்மா கொஞ்சம் நேரம் பேசிட்டு போறேன் எனக்கு கொஞ்சம் இந்த பாடாத்துல சந்தேகமா இருக்கு என அவள் சொல்ல சொல்ல
இங்க சுமதி ரொம்ப பயந்து போய்விட்டார் , அவர் பதட்டதுடன் , என்ன லதா சொல்ல அவ உன் வீட்டுக்கு தானே வந்தா
இப்போது குழம்பி போவது லதாவின் முறை ஆனது, என்ன அம்மா சொல்லுரிங்க நிஷா என் வீட்டுக்கு வரதா சொன்னாளா ஆனா அவ அங்க வரவே இல்லையே
சுமதி மற்றும் கிருஷ்ணன் இப்போது மேலும் பயம் கூடியாது,கிருஷ்ணன் அவசரமாக தன் போனை எடுத்து குமரனுக்கு அழைக்க
அவனோ பாஸ்கரை இன்று எப்பிடியாவுது பிடித்து ஆகா வேண்டும் என்று அதில் கவனம் செலுத்தி இருந்தான் போனை சைலென்ட் மோடில் போட்டுவிட்டு பாஸ்கரின் ஆட்களை பின் தொடர நிஷா கடத்த பட்ட செய்தி அவனுக்கு தெரியாமலையே போய் விட்டது
குமரன் அழைப்பை எடுக்க வில்லை என்றதும் கிருஷ்ணன் சிவநேசனுக்கு அழைக்க ,அவர் முதல் ரிங்க்லையே போன் எடுத்து,சொல்லுங்க சம்பந்தி எப்பிடி இருக்கீங்க என நலம் விசாரிக்க
அவரது கேள்விக்கு கிருஷ்ணனால் பதில் சொல்ல முடியவில்லை இருந்தும் தன்னை சமாளித்து படி, நா .. நான் நல்லா இருக்கேன் சம்பந்தி , அங்க நீங்க எப்பிடி இருக்கீங்க நிஷா பொண்ணு என்ன பண்ணுறா , என அவர் கேட்ட உடன் தான் கிருஷ்ணனுக்கு உரைத்தது தன் மகள் அங்கே செல்லவில்லை என்று அவருக்கு மேலும் பயம் கூடி கொண்டே போனது , அதே பயந்துடன் சிவநேசனிடம் , நிஷாவை காணவில்லை என்று சொல்லி விட்டார்
" என்னது நிஷாவை காணோமா என்ன சொல்லுரிங்க நீங்க அங்கே தானே குமரன் அழைச்சுட்டு வந்தான் இப்போ காணோம் சொல்லுரிங்க என அவரும் பதற
அவரது சத்தம் கேட்டு ருக்மணியும் அவர் அருகில் வந்து என்னங்க ஆச்சு நிஷாக்கு என்ன யாரு போன்ல
மனைவியின் கேள்வியில் சிவநேசன் , நிஷாவ காணோமா என்னங்க சொல்லுரிங்க ,என சொன்ன அவருக்கோ கண்ணை கட்டி கொண்டு வர அதை கவனித்த , சிவநேசன் ருக்மணியே தாங்கி பிடித்து அருகில் கிடந்த சோபாவில் உட்கார வைத்துவிட்டு என்ன நடந்தது என்று விசாரிக்க கிருஷ்ணன் தனக்கு சுமதி சொன்ன விவரத்தை சொன்னார்
அதை கேட்டு குமரன் கிட்ட சொல்லிடிங்களா என சிவநேசன் கேட்க
" அவரு போன் எடுக்கல சம்பந்தி .. என கிருஷ்ணன் சொல்ல "
சிறிது நேரம் சிவநேசன் யோசித்துவிட்டு , சரிங்க சம்பந்தி நீங்க கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்து இருங்க நான் குமரன் கிட்ட பேசுறேன் .
" சரிங்க அப்போ நானும் சுமதியும் அங்கே வந்துறோம் " பேசிவிட்டு கிருஷ்ணன் போனை கட் செய்து சுமதி இடம் சுமதி கிளம்பு நம்மள சம்பந்தி அங்கே வர சொல்லுறாரு அருகில் நின்று இருந்த லதாவை பார்த்த கிருஷ்ணன் சரி ம்மா நீயும் எங்களோட வா டா உன்னை நாங்க உன் வீட்டுல விட்டுட்டு கிளம்புறோம் .
அவர் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த லதா ஒரு நிமிடம் நாம நிஷா வீட்டுல தான் இருக்குமா என யோசித்தாள் இவ்வளோ நாட்களில் கிருஷ்ணன் இவ்வளோ அக்கரையா பேசுவது இன்று தான் என அவள் அதிர்ச்சி உடன் அவரை பார்த்த படி சரிங்க ப்பா என சொல்ல
இன்னும் நேரம் கடத்துவது சரி இல்லை என்று கிருஷ்ணன் சுமதி இருவரும் லதாவை அவள் வீட்டில் விட்டு நேராக குமரன் வீட்டிற்க்கு சென்றார்கள் அங்கே ருக்மணி சுமதி அழும் முகம் பார்த்து , என்ன அண்ணி எப்படி நடந்தது எங்கே தான் போனா இந்த நிஷா பொண்ணு "
" நான் என்னனு சொல்லுவேன் அண்ணி லதா வீட்டுக்கு போறேன் தான் சொல்லிவிட்டு போனா ஆனா நேரம் ஆகியும் அவளை காணோம்ன்னு போன் பண்ணினா அதுவும் ஸ்விட்ச் ஆப் வருது எனக்கு அப்போ தான் பயம் ஆச்சு கொஞ்சம் நேரம் சென்று பார்த்தா லதாவே இவள தேடி வீட்டுக்கு வந்துட்டா எனக்கு என் உசுரே என் கிட்ட இல்லை அண்ணி என்ன பண்ணுறது ஒன்னும்புரியல என அவர் போக்கிலஎதோ புலம்ப அப்போது தான் ஏங்க என சுமதி அலறினர்
அவர் குரல் கேட்ட கிருஷ்ணன்
என்ன ஆச்சு சுமதி ஏன் இப்படி கத்துற "
" எங்க நிஷாவ ஷாலினி ஏதும் பண்ணிர்பாளாங்க என கேட்க
மனைவி சொல்லுவைதை கேட்ட கிருஷ்ணன் போதும் சுமதி , சும்மா அவளையே சொல்லாதே , எனக்கு என்னமோ நிஷா பக்கத்துல எங்கையோ தான் போய் இருப்பான்னு தோணுது , நீ சும்மா ஷாலினியே பேசாதே , "
கிருஷ்ணன் பேசுவதை கேட்ட சுமதி மட்டும் இல்லை ருக்மணி மற்றும் சிவநேசனும் தான் , சிவநேசன் பேசுவதற்கும் முன் சுமதியே கணவனை பார்த்து, இல்லை முறைத்து, என்னங்க அவ பண்ணினது எல்லாம் உங்களுக்கு மறந்து போச்சா என்ன வேதாளம் மறுபடியும் முருக மரம் ஏறுது போல "
" இங்க பாரு சுமதி அன்னைக்கு அவ இருந்த நிலைமைல ஏதோ பண்ணிட்டா நான் அவ கிட்ட பேசி இருக்கணும் இல்லேன்னா என் பொண்ணு இப்படி தனியா கஷ்ட பட மாட்டா , என அவர் சொல்லி கொண்டே போக அவர் பேசுவதை தடுத்து நிறுத்தி சுமதி ,
" என்ன தனியா கஷ்ட படுராளா உங்களுக்கு எப்படி தெரியும்,"
" அது, அன்னைக்கு அவ போன் பண்ணி இருந்தா, அவ்வளோ அழுகை ,என் பொண்ணு தனியா இருக்கேன்னு சொல்லி அவ்வளோ புழம்பினா ,முதல கொஞ்சம் கோபம் வந்தது எனக்கும் ஆனா மனசு திருந்தி அவ மன்னிப்பு கேட்ட பிறகு என் மனசு கேட்கல இப்போ என்ன உன் பொண்ணு இங்க மாமியார் மாமானார் , நல்ல புருஷன்னு நல்லா தானே வாழ்ந்துட்டு இருக்கா ஆனா அங்கே என் பொண்ணு யாரும் துணைக்கு இல்லாம தனியா தானே கஷ்ட படுறா .." என அவர் பாட்டுக்கு பொழம்பி தள்ள
இதை அனைத்தும் கேட்டு கொண்டு இருந்த சுமதி மனசு அளவில் முழுவதும் உடைஞ்சு போய் விட்டார் , ஓஹோ என் பொண்ணா , அப்போ நிஷா உங்களுக்கு பொண்ணு இல்லை அப்பிடி தானே , இப்போ தாங்க எனக்கு ஒரு விஷயம் புரியுது , நான் காலைல நிஷா வீட்டுக்கு வந்து இருக்கா சொன்ன அப்போ கூட நீங்க பேசுற கண்டுக்கல நானும் நீங்க ஏதோ வேலையா இருக்கீங்க நினச்சுட்டேன் ஆனா இப்போ தானே தெரியுது உங்க பொண்ணு இல்லாத உங்க வீட்டுக்கு என் பொண்ணு முதல வரது பிடிக்கலைன்னு , அப்புறம் ஹ்ம்ம் ஞாபகம் வந்துருச்சு , அன்னைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு அவங்க குடுத்த பணமா திருப்பி கொடுத்தாச்சா நான் கேட்டதுக்கு , நீங்க என்ன சொன்னிங்க , இப்போ என்ன அவசரம் , அவங்க கேட்கும் போது கொடுத்துக்கலாம் சொல்லிடிங்க அப்போ புரியல ஆனா இப்போ எனக்கு நல்லாவே புரிஞ்சுருச்சு , இங்க நான் பேசினது என் புருஷன் இல்லை ஷாலினி ஓட அப்பான்னு , என்ன சொன்னிங்க என் பொண்ணு நல்லா இருக்கான்னா அவ நல்ல மனசுக்கு அவ நல்லா தாங்க இருப்பா உங்க அருமை பொண்ணு பண்ணிட்டு போன வேலைக்கு மாப்பிள்ளை வீட்டு உள்ளவங்க இல்லாம வேற ஆளுங்க இருந்து இருந்தா உங்க நிலைமை என்ன ஆகிருக்கும் அன்னைக்கு யோசிங்க , உங்க பொண்ணு செஞ்சே வேலைக்கு என் மாப்பிள்ளை மட்டும் நல்லவரா இல்லாம போய் இருந்தா என் பொண்ணு வாழ்க்கை என்ன ஆகி இருக்கும் அப்போ நீங்க என் பொண்ணுக்கு என்ன பதில் சொல்லி இருப்பிங்க... பொறந்ததுல இருந்து உங்க நால என் பொண்ணு கஷ்ட பட்டா இப்போ உங்க பொண்ணுக்கு தங்கச்சியா பொறந்த தோசத்துக்கு அவளோட பாவத்த என் பொண்ணு சுமக்கனுமா நல்ல இருக்கேங்க உங்க நியாயம் இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுகோங்க என் பொண்ணு அதான் என் நிஷாக்கு மட்டும் ஏதும் ஆச்சு.. அப்பனும் பொன்னையும் நான் சும்மா விட மாட்டேன் என என கோபமாய் நேசம் பக்கம் திரும்பி அண்ணே என்ன மன்னிச்சிருங்க நான் கம்ப்ளைன்ட் குடுக்கிறேன் எனக்கு இவர் பொண்ணு மேல சந்தேகம் இருக்கு எப்பிடி சொல்லுறேன்னா இன்னைக்கு மதியம் போல நிஷா இவர் வீட்டுக்கு கிட்ட இவர் பொண்ண பார்த்த சொன்னா நான் தான் அவளை அரட்டி பேசாம இருக்க சொன்னேன் அப்புறம் லதா வீட்டுக்கு போறேன் சொல்லயு போனவள தான் காணோம்.... நடக்கிறது எல்லாம் பார்த்தா இருவரும் அவர் பொண்ணுக்கு துணை இருந்துர்பாறு போல என கணவரை முறைத்து படி சொல்ல..
வார்த்தைக்கு வார்த்தை உன் பொண்ணு உன் வீடு சுமதி சொல்லும் போதே இனி மணைவி தன் இடம் பேச மாட்டாள் என புரிந்து கொண்டார் கிருஷ்ணன் , மனைவின் இந்த புதியே முகம் ஏனோ அவருக்கு மனதில் பயத்தை கிளப்பியது, அவள் சொன்னது ஷாலினி இவ்வாறு செய்து இருந்தால் தன் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பார் இவர் , அது மட்டும் தான் மனதில் நினைத்த எல்லாம் சுமதி புட்டு புட்டு வைத்துவிட்டாலே என்கிற கோபம் இப்போது அவர் கண்ணை மறைத்தது மனதுக்குள் என் பொண்ணு அப்பிடி செய்யே மாட்டா அப்பிடி செஞ்சு இருந்தாலும் நான் அவளுக்கு தான் உதவி என தனக்கு தானே சமாதனம் சொல்லி கொண்டார் [ பாவம் அவருக்கு தெரியவில்லை தன் மகளால் மீண்டும் ஒரு முறை அவமானத்தை சந்திக்க போகிறோம் என்று தெரிந்தால் . ? ]
hai friends itho next episode potuten ... thanks for your support and patience enakga porumaiya iruntharkku , amazon kindle la e_book remove pannitaanga . happy news unga kita share pannikren i am very happy
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro