என் அருகில் நீ இருந்தால்-18
நிஷா தன்னை எங்கு அழைத்து செல்கிறான் என வேடிக்கை பார்த்து கொண்டே வரும் பொது தான் தெரிந்தது அது தன் அம்மாவின் வீட்டுக்கு போகிற வழி என்று சந்தோஷத்தில் எங்க அம்மா வீட்டுக்கா போறோம் சொல்லவே இல்ல என்ன சொல்லாம இப்படி அவள் பேசுவதை கேட்டு கொண்டே கார் ஓட்டிக்கொண்டே சாலையில் கவனம் செலுத்தினான்
நிஷா நான் சொல்ல வரத கொஞ்சம் நல்ல கவனி , நானா வந்து உன்ன அழைச்சுட்டு போற வரைக்கும் நீயா எங்கயும் வெளியே போக வேண்டாம் , அப்புறம் யார் கால் பண்ணினாலும் நீ அதுக்கு ரேச்போன்ஸ் பண்ண கூடாது எது நாளும் எனக்கு தகவல் சொல்லிட்டே இருக்கணும் போன் பண்ணனும் அவசியம் இல்லை மெச்செஜ் மட்டும் பண்ணினா போதும் என அவன் பேசி கொண்டே வர
நிஷா சரிங்க நீங்க சொல்லுற மாதிரியே பண்ணிடுறேன் அவள் சொல்லி முடிக்க
அவளது அம்மா வீடு வரவும் சரியாக இருந்தது ரொம்ப நாள் கழித்து மகளை பார்த்த சந்தோஷத்தில் மகளை அணைத்து கொண்டார் , வாடா கண்ணமா எப்படி இருக்க நீ , என கேட்க
நல்லா இருக்கேன் ம்மா ,நீங்க எப்பிடி இருக்கீங்க அப்பா எங்கே ம்மா
வேலையா போய் இருக்காரு ம்மா நீ வா உள்ளர.. வாங்க தம்பி என குமாரனையும் அவர் நலம் விசாரிக்க.
கொஞ்சம் அங்கே இருந்தவன் . நிஷாவை அழைத்து , நிஷா நான் கிளம்புறேன் நீ கொஞ்சம் நாள் இங்கே இரு சரியா இந்த வேலை முடிஞ்ச உடனே உன்ன வந்து கூட்டிட்டு போறேன்
ஹ்ம்ம் சரிங்க பார்த்து போயிட்டு வாங்க , என அவனை வழி அனுப்பி வைத்தாள்
அங்கே அவளை விட்டுவிட்டு.. அவன் விசாரணை தொடர...வெளியே வந்தவன் அங்கே ஷாலினியே கவனித்து விட அவனுக்கு கிடைத்த தகவல் சரி என்று தான் தோன்றியது
வீட்டில் நிஷா.. வழக்கம் போல்... கிட்சென்.. ஸ்லாப் மேல ஏறி அமர்ந்து கொண்டு தாய் சமைக்கும் அழகை பார்த்து கொண்டு இருக்க..
சுமதி.. என்னடி.. வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க.. அதுவும் இங்க உட்காந்து "
" அம்மா.. நீங்க என்ன எப்பிடி சமைக்கிரிங்கனு பார்த்துகிட்டு இருக்கேன்....என சொல்லிக்கொண்டே இறங்கி.. சுமதியே அணைத்து கொண்டாள்
சுமதி.. என்ன டி இது விடு.. எப்போ தான் வளர போறியோ....."
" ஹ்ம்ம் மாட்டேன்....என மேலும் அணைத்து படி இருக்க..":
சுமதி....' வாலு ... என செல்லமாய் அவளை திட்டி கொண்டே சமையலில் கவனம் செலுத்த...
சிறுது நேரம்., கழித்து.....நிஷா.. அந்த மிளகு டப்பாவ எடு......
" இதோ ம்மா.என அவள் மிளகு டப்பாவ எடுத்துகொடுக்க..."
அதை வாங்கியே.. படி...ஏன் நிஷா.. நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே..."
" என்ன ம்மா.. இப்பிடி எல்லாம் கேட்டுகிட்டு. என்னன்னு சொல்லுங்க... "
" சரி டா நீ சந்தோசமா தானே இருக்க... மாப்பிள்ளை உன்னை நல்ல பார்துக்கிறாரா "
" சுமதி அவ்வாறு கேட்ட உடன்.. நிஷா.. ஒரு நிமிடம் திகைத்து.. பின் மெதுவாக ., ஹ்ம்ம் நல்ல பார்த்துகிராறு ம்மா.."
" அதை கேட்ட உடன் சுமதி நிஷாவின் கைகளை பிடித்து கொண்டு . அழுதே விட்டார்.... "
" அவர் அழுவதை பார்த்து.. நிஷா பதறி.. ஐயோ அம்மா இப்போ எதுக்கு இவ்வளோ அழுகை.. என்ன ஆச்சும்மா.. அம்மா அழாதிங்க... எனக்கு பயமா இருக்கே என நிஷாவும் கண் கலங்க..."
" சுமதி .. , ச்சு ஒன்னும் இல்லடா உன் அக்கா பண்ணினதுக்கு.. எங்கே உன்ன கஷ்ட படுத்திட்டேனோ ஒரு பயம் டா......அதான்.. நீ சந்தோசமா இருக்கேன்னு தெரிஞ்ச பின்ன.. கொஞ்சம்.. உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.... வேற ஒன்னும்.. இல்லை.. என அவர் கண்ணை துடைத்து கொண்டே சொல்ல...."
" ம் இவ்வளோ தானா நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் ம்மா. இனி இப்பிடி எல்லாம் அழ கூடாது சரியா என அவளும் தாயின் கண்களை இன்னும் நல்ல துடைத்து விட்டாள் ...."
" அது எல்லாம் இருக்கட்டும்.. தம்பி இப்போ சாப்பிட வருவாப்லையா இல்லையா.."
அவர் பேசுவதை கேட்டு நிஷா
" தம்பியா ? உங்களுக்கு தம்பி வேற இருக்காரா சொல்லவே இல்லையே ம்மா நீங்க... என அவள் கிண்டல் செய்யே.."
" சுமதி நிஷா தலையில ஒரு குட்டு வைத்துவிட்டு வாண்டு.. நான் தம்பின்னு சொன்னது.. மாப்பிள்ளையே தான்..."
" ஒ ஓஹோ....அவர தான் சொன்னிங்களா தெரியலை ம்மா...இருங்க நான் போன் பண்ணி கேட்குறேன்..என நிஷா.. குமரனுக்கு அழைத்தால்.."
சரி நீ பேசிட்டு சொல்லு நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. என சுமதி சொல்லிவிட்டு உள்ளே சென்று.. விட..
அவர் போய் விட்டாரா என பார்த்துவிட்டு குமரனுக்கு அவள் போன் பண்ண
சிறிது நேரம்.. ரிங் போக விட்டு.. குமரன்.. போன் எடுத்து " சொல்லு நிஷா, ஏதும் ப்ரோப்லேம் இல்லையே அங்க "
இல்லைங்க அப்படி ஏதும் இல்ல நான் போன் பண்ணினது வீட்டுக்கு எப்போ சாப்பிட வரிங்க கேட்க தான்"
இல்லைம்மா இன்னும் வேலை முடியல.. நான் வர நைட் ஆகிரும்.. நீங்க சாப்டுங்க சரி ம்மா அப்புறம் பேசுறேன் என குமரன் போனை வைத்துவிட்டு.. தனது வேலையே கவனிக்க சென்றான்
அதான் அந்த ஹோட்டலுக்கு... சென்று குணாவுடன்.. விசாரிக்க
அவன் யூகித்து போல்.. அங்கே .. பாஸ்கர்... இன்னும் சில பேரு உடன் அமர்ந்து...பேசியே படி.. சில பெட்டிகளை.. கொடுத்துவிட்டு.. அதற்கு பதில் பாஸ்கரும்... அதை போல் பெட்டிககளை.. வாங்கி கொண்டான்....
குணா என்ன டா நடுக்குது இங்கே.. இவன்..
ஆமா இவன் தான் ஷாலினி ஓட.. ஹஸ்பன்ட்
குணா குமரனை அதிர்ச்சி உடன் பார்த்து என்ன டா சொல்லுற
" ஹ்ம்ம் ஆமா "
அப்போ இன்னும் ஏன் நாம வெயிட் பண்ணனும்.. அவன அங்கே இருக்குறவங்கள இப்போவே அர்ரெஸ்ட் பண்ணலாமே "
" பொறு டா எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் நிஷா வீட்டுல இருந்து கிளம்பும் பொது நான் ஷாலினியே அங்கே பார்த்தேன் என்ன பார்த்த உடனே அந்த இடத்தை விட்டு ஓடிட்டா
இவ்வளோ தகவல் குணாவுக்கு அதிர்ச்சியே தந்தது , " என்ன டா சொல்லுற ஷாலினி அங்கையா அவ அங்க என்ன பண்ணுறா "
எனக்கும் அது தெரியலை என்னோட கெஸ் சரியா இருந்ததுன்னா , அவ எங்கள நம்ம வீட்டுல இருந்தே தொடரா நினைக்கிறேன் , அது மட்டும் இல்ல இப்போ அவங்க டார்கெட் அடுத்து நிஷா தான் இது மட்டும் இல்லை எனக்கு வேற ஒரு சந்தேகம் இருக்கு இவன் ரஞ்சனியே ஓட சேர்த்து மற்ற குழைந்தைகள எங்கே கடத்தி வச்சு இருக்கனுன்னு "
" அதுக்கு தான் அவன இன்னும் நல்ல கண்காணிக்கணும் சொன்னேன்.. அப்புறம்.. எல்லாம் சேர்த்து ஆதாரம் கைல வச்சுக்கிட்டு
இவனுக்கு அப்புறம் இவன் கேங்க்கு.. இருக்கு .. என குமரன் கோபமாக சொல்ல.."
" குணா அவன் சொன்னதுக்கு அமோதித்தான்...."
***********
" குமரன் தன்னை கவனித்துவிட்டான் என ஷாலினி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள் சற்று தூரம் போனவள் பாஸ்கருக்கு அழைத்து , பாஸ்கர் எனக்கு பயமா இருக்கு அவன் நிஷாவ இங்கே அம்மா வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து இருக்கான் இங்கே இருந்து எப்படி என அவள் கேட்க .
அதுக்கும் பாஸ்கர் அசராமல் , " ரொம்ப நல்லது ஷாலினி , நல்ல வாட்ச் பண்ணு நிஷா வெளியே வந்த உடனே நான் குடுத்த நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் மட்டும் குடு மத்தது எல்லாம் தான நடக்கும் அந்த ஏ சி பி என் வழில ரொம்ப வரான் அவனுக்கு ஒரு பாடம் கற்று கொடுக்க வேண்டாமா அதுக்கு அது மட்டும் இல்ல இந்த வேலையே நீ சரியாய் செஞ்சு முடிச்சா , உன் அம்மா வீட்டுக்கும் நீ மட்டும் தான் வாரிசு உன் தங்கச்சி இருக்க மாட்டா என்ன சொல்லுற என அவன் கேட்க
அவன் பேச்சில் மதி மயங்கி ஷாலினி , நீ சொல்லுறதும் சரி தான் பாஸ்கர் நான் வேலையே முடிச்சுட்டு உனக்கு சொல்லுறேன் என போனை வைத்தவள் மீண்டும் அவள் அம்மா வீட்டை கவனிக்க ஆரம்பித்தாள் நிஷா வெளியே வருவதுர்க்காக ..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro