என் அருகில் நீ இருந்தால் -16
" என்ன குணா.."
" குமரா.. நாம பாதுகாப்புல வச்சு இருந்த ராகவியே காணோம் டா ." என பதட்டமாக குணா சொன்னான்
" என்ன காணோமா என்னடா சொல்லுற எப்போ.. " என குமரன் பரப்பு ஆனான்
" தெரியல டா இப்போ தான் ஹோச்பிடல இருந்து போன் வந்தது.. நான் இப்போ அங்கே தான் இருக்கேன் நீ கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வா.... நானே பார்த்துக்கலாம் இருந்தேன் ஆனா விஷயம் கொஞ்சம் சீரியஸ் டா "
" சரி குணா நீ அங்கயே இரு இதோ வந்துறேன் என குமரன் கிளம்ப."
" அவன் பேசுவது புரியா விட்டாலும்... ஏதோ பிரச்சனையை என்று தோன்ற... நிஷா...... பதட்டத்துடன்.. குமரன் அருகில் நின்று கொண்டு இருந்தாள் அவன் ஏதும் சொல்லுவான் என்று அவன் முகத்தை பார்க்க '
' போனை.. வைத்தவன் , நிஷா நான் கிளபும்றேன் என வேகமாக.. கிளம்பினான் "
" நிஷா அவனை பார்த்து ' என்னங்க ஆச்சு.... "
" ஒன்னும் இல்லை.... நிஷா.. நான் இப்போ உடனே.. ஸ்டேஷன் போகணும்.. போயிட்டு வந்து சொல்லுறேன்.. அம்மா – அப்பா கேட்டா சொல்லிடு, இவள் கிட்ட ராகவி காணோம் என்று சொன்னாள் தாங்க மாட்டாள் வந்து சொல்லிக்கலாம் என நினைத்து கொண்டு அவன் கிளம்ப "
" தலைவலின்னு சொன்னிங்களே.. , அதோட கிளம்பினா எப்பிடி..."
" போலீஸ்காரன் .. வேலை பத்தி தெரியாத நிஷா உனக்கு.. சரிமா பார்த்துக்.. என்று.. குமரன் கிளம்பி சென்று விட...'
அவன் போன பாதையே பார்த்த படி... நிஷா.. ஹாலில்.. அமர்ந்துவிட்டாள் அவள் மனதுக்குள் ஒரே ஒரு விஷயம் தான் ஓடியது........ஷாலினி.. ஏதோ.. கிறுக்குத்தனம் செய்து இருப்பாளோ , எதுக்கு அவ போன் பண்ணினா ஏன் இவரு இப்போ இவ்வளோ பதட்டம போறாரு தான்..... "
எவ்வளோ நேரம் அப்பிடியே இருந்தாளோ ருக்மணி.. சிவநேசன் எழுந்து வந்தது கூட கவனிக்காமல் குமரனை பற்றியே யோசித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்
இதை பார்த்த ருக்குமணி.. நேசன் இடம்.. என்னங்க எதுக்கு இந்த பொண்ணு.. இப்பிடி உட்காந்து இருக்கு முகம் வேற பயந்த மாதிரியே வேர்த்து கிடக்கு
' யாருக்கு தெரியும்.. உன் புள்ள.. ஏதும் திட்டி இருப்பானோ என்னவோ.. அவனுக்கு தான் பொருமைனா என்னனே தெரியாதே.. " சிவநேசன் சொல்ல
ருக்குமணி.. ," அவரை முறைத்து... அவன குறை சொல்லலைனா.. உங்களுக்கு தூக்கம்.. வராதே.......
"அதுக்கு இல்லைடி. ..."
" சும்மா .வாங்க...என சொல்லிவிட்டு . ருக்மணி. .சென்று.. நிஷா அருகில் சென்று அவள் தோல் தொட..'
" யாரோ... எவரோ.. என்று.. நிஷா... திடுக்கிட்டு திரும்பினாள் ."
"அவளின் பதட்டம் கண்டு.. ருக்மணி.. " நான் தான் மா.. . .எதுக்கு இவ்வளோ பதட்டம்..".
" ... ஒன்னும்... இல்லை.. அத்தை நீங்க மாமா எப்போ வந்திங்க "
" இல்லையே உன் முகமே சரி இல்லையே நிஷா..." என அவரும் கவலையாக கேட்க.
" இல்லை அத்தை .. .. அது.. .. என்ன சொல்லுவது நிஷா யோசிக்க. "
" குமரன் ஏதும் சொன்னன என்ன..."
" ஐயோ அவர் ஏதும் சொல்லல.... " இவளுக்கு எப்பிடி என்ன சொல்லுவதுஎன்று புரிஎவில்லை
" கனவு ஏதும் கண்டியா என்ன..." ருக்மணி மேலும் கேட்க
" ஆ..ஆமா... அத்தை.. " என்று வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தாள்
" நல்ல பொண்ணும்மா நீ ... எதையும் நினைக்காத.. நிஷா... சரியா... இந்தா இதுல கோவில் பிரசாதம் . இருக்கு.. பூஜை...ரூம்ல வச்சுடுமா...
" சரிங்க... அத்தை.. ...என .. நிஷா சென்று விட.."
நேசன்... " அவள் போவதை யோசனை உடன் பார்த்து கொண்டு நின்று கொண்டு இருந்தார் அவர் '
" ருக்மணி.."
" என்னங்க என்ன ஆச்சு "
" ஹ்ம்ம் ஒன்னும் இல்லை... குமரன் வரட்டும் அவன் கிட்ட பேசணும்.... " யோசனை உடன்
" எங்க ஏதும்... .?
" ஏதும் இருக்காது நம்புவோம் ருக்குமணி... என்ன இந்த புள்ளை முகமே சரி இல்லை...
" ..என்னங்க இப்பிடி சொல்லுரிங்க... , "
" கொஞ்சம் று விட்டு பிடிப்போம்... , "
ருக்குமணி அவரை கலக்கத்துடன் . பார்க்க."
" என்ன ம்மா..."
" இதுக்கு அன்னைக்கே படிச்சு படிச்சு சொன்னேன்.... . அவனுக்கு இந்த வேலை எல்லாம் வேண்டாம்ன்னு.. கேட்டிங்களா நீங்க.. இப்போ பாருங்க.... என்ன எதுன்னு தெரியலை நீங்க இந்த வேலைல இருக்கும் பொது தான் என் உசுர கைல படிச்சுகிட்டு இருந்தேன் இப்போ இவன நினைச்சு என் நிம்மதி போச்சு "
" ஹே , அதுக்கு ஏண்டி என்ன சொல்லுற..."
" பின்ன அவன் போலீஸ் வேலைக்கு...போகாம.... தடுத்து நிறுத்தி இருக்கலாம்ல "
கொஞ்சம் பொறு மா.. குமரன் கிட்ட பேசிட்டு சொல்லுறேன் ருக்கு. நாமளா ஏதும், பேசி குழப்பிக்க வேண்டாம்....இப்போ போ எனக்கு காப்பி எடுத்துட்டு வா... .. என .சொல்ல."
" வேற வழி.. இன்றி. ருக்குமணி.. சிவநேசனுக்கு காப்பி எடுத்து வர .. சென்று விட்டார் அவருக்கு குமரன் மற்றும் நிஷா சந்தோசமாக வழ வேண்டும் அதற்க்கு தான் இப்பிடி தவிக்கிறார்
" இங்கே நேசன் குணாவுக்கு அழைக்க...
' இங்கே விசாரித்து கொண்டு இருந்த குணா நேசன்.. அழைப்பை.. பார்த்து...
" சொல்லுங்க அப்பா... என்ன விஷயம்..."
" அதை நான் தான் கேட்கணும் குணா..... என்ன பரச்சனை... "
' என்னங்க அப்பா.. என்ன ஆச்சு.... "
" குமரன் எங்கே குணா..."
" இங்க ஒரு கேஸ் விஷயமா விசாரிச்சுட்டு இருக்கான் பா.. "
" அவ்வளோ தானே வேற ஏதும் உன் கிட்ட சொன்னானா அவன்...."
" வேற . எதை பத்தி அப்பா... " என புரியாமல்.. குணா கேட்க..."
நேசன் ," இவனுக்கு ஏதும் தெரியாது போல.. , ஒன்னும் இல்லைப்பா.. நான் அப்புறம் பேசுறேன்... என வைத்துவிட..."
" இப்போது.. குணா.. ," அப்பா எதுக்கு போன் பண்ணினார்... . என்னவோ கேட்டாரு .. அப்புறம் ஒன்னும் இல்லைன்னு சொல்லிடாரு... என குணா யோசிக்க.....
இங்கே குமரன்... டாக்டர்... இடம் கத்தி கொண்டு இருந்தான்....
என்ன டாக்டர் இப்பிடி பொறுப்பு இல்லாம பேசுறிங்க.. அந்த பொண்ண யார கேட்டு.. அனுப்பிவச்சிங்க அதுவும் எனக்கு தகவல் சொல்லாமல் உங்களோட கவன குறைவால் அந்த பொண்ணுக்கு ஏதும் ஆச்சுன்னா யார் பொறுப்பு
அவனின் கோபத்தை கண்டு பயந்து
" இல்லை.. சார்.. அந்த பொண்ணு ஓட . சொந்தகாரங்க. சொல்லி... " என அந்த ஹோச்பிடல் நிர்வாகி.. சொல்ல.
" யார இருந்தாலும் நீங்க என்ன பண்ணி இருக்கணும் எனக்கு நீங்க சொல்லிர்கனும்.... "
" சார் " மேலும் டாக்டரால் பதில் பேச முடியவில்லை.
" இப்போ அந்த பொண்ணுக்கு எதாச்சும் ஆச்சினா.. அதுக்கு நீங்க தன காரணமா இருப்பிங்க. ....."
"என்ன சார் இப்பிடி எல்லாம் சொல்லுரிங்க.." என டாக்டர் பயந்தே விட்டார் பின்ன இவ்வளோ செலவு செய்து கட்டியே மருத்துவமனை பெயர் அல்லவா போய் விடும்
"சீ ட் என கோபமாய் வெளியே குமரன் வந்து விட.."
" என்ன குமாரா , என்ன சொன்னாங்க
யாருனே தெரியலையாம் டா... இப்போ என்ன பண்ணுறது.. ராகவி ஓட அப்பா-அம்மாக்கு என்ன பதில் சொல்லுறது...
என பேசியே படி.. தனது போனை எடுக்க.. . அப்போது தான் ஞாபகம் வந்தது.. கிளம்பும் அவசரத்தில்.. குமரன் வீட்டுலயே போன மறந்து வைத்துவிட்டு வந்தது.... " அச்சோ ..."
" இப்போ என்ன ஆச்சு குமார...'
" போன மறந்து வீட்டுலயே வச்சுட்டு வந்துட்டேன் டா..."
" சரி அதுக்கு என்ன இப்போ.. விடு.. "
" ஹ்ம்ம்... "
.....................
தன் அறைக்கு வந்த நிஷா.. இன்று கலையில் இருந்து நடந்ததை... நினைத்து பார்த்து கொண்டு இருந்தால்.....
அப்போது தான்.. குமரன் போன அலறியது
நிஷா.. இது அவர் போன் ஆச்சே.. ஐயோ எடுத்துட்டு போகலையா... "
என வேகமாய் சென்று போனை எடுக்க...
அவள் ஹலோ சொல்லும் முன்.....
" அந்த குரல்....... ' பேசி முடிக்க....நிஷா... " அய்யோ மாமா என மயங்கி சரியே சரியாக இருந்தது...
கிழே இருந்த.. ருக்மணி தன் கணவரிடம் " ஏங்க நிஷா கத்தின.. மாதிரி இல்ல..."
" ஆமா ருக்மணி என்னாச்சு வா மேல போய் பார்க்கலாம்.. என இருவரும் நிஷாவை தேடி போக அங்கே நிஷா.. பேச்சு.. மூச்சி இன்றி.. மயங்கி கிடந்தால்
" ஐயோ நிஷா.. என ருக்குமணி.. அவளை தன மடியில் ஏந்தி.. கண்ணா திறம்மா.. என்ன ஆச்சு.., ஏங்க சீக்கிரம் டாக்டர கூப்பிடுங்க......'
" இதோ.. என நேசன் வேகமாய் டாக்டரை வர வைக்க... , மேலும் குமரனுக்கு அழைத்தார்
அவன் போன் நிஷாவின் கையில் அலறியது..
போன விட்டு போயிட்டானா இவன திருத்தவே முடியாது..என மீண்டும் குணாவுக்கே... போனை போட....
" சொல்லுங்க அப்பா..."
" குணா.. சீக்கிரம் குமரன வீட்டுக்கு வர சொல்லுப்பா.."
சிவநேசன் பதட்டமாக பேசுவதை கேட்டு குணா , ஏன் அப்பா என்ன ஆச்சு. ஏன் ஒருமாதிரி இருக்கு உங்க குரல் "
" அதுவா... நிஷாக்கு.. உடம்பு சரி.. இல்லை... கொஞ்சம் சீக்கிரம் .."
" என்ன ஆச்சு.. அப்பா... திடிருன்னு "
" எனன்னு தெரியல திடிருன்னு மயங்கி விழுந்துடுச்சு.. . மத்தது எல்லாம் டாக்டர் பார்த்துட்டு தான் சொல்லணும்..."
" சரிங்க பா... இதோ கிளம்பி வரோம் ப்பா "
" ஹ்ம்ம் சரி.. குணா அப்போ நான் போன வச்சுடுறேன்... கொஞ்சம் சீக்கிரம்.."
" சரிங்க ப்பா "
என போனை வைத்த குணா குமரன் அருகில் சென்று... .. ' டேய் குமரன்.. சிக்கிரம் வீட்டுக்கு நீ கிளம்பு டா...
" ஏன் குணா.. இன்னும் நம்ம விசாரணை முடியலை நீ என்ன கிளம்ப சொல்லுற '
" இத நான் கூட பார்த்துகிறேன்.. அங்கே நிஷா.. மயக்கம் போட்டு.. விழுந்துடுச்சாம்.."
" என்ன.... என்று குமரன் அதிர்ந்து நின்று விட..."
" டேய் போதும் டா ஷாக்கானது இப்போ கிளம்பு..."
" இல்லடா... நான் கிளம்பி வரும் பொது நல்ல தான் டா இருந்தா. இப்போ எப்பிடி.. அதுவும்.. "
" இங்க பொலம்புறது விட.. நீ நேருல போய். தெரிஞ்சுக்கோ கிளம்பு நீ "
" சரி வா போகலாம் என குணாவையும் தன்னுடன் சேர்த்து.....அழைத்து சென்றான்..'
......................
டாக்டர் , நிஷா செக் செய்து பார்த்துவிட்டு..., ருக்குமணி இடம்..." பயப்படுற அளவுக்கு.. ஒன்னும் இல்லை ருக்மணி மேடம். அதிரிச்சி .. தான்...கொஞ்சம் நேரம் தூங்கினா சரியா போயிடும்... ...'
" சரிங்க.. டாக்டர்..." என ருக்குமணி நேசன்.. இருவரும் அவரை வழி அனுப்பி வைக்க..
" குமரன் உள்ள.. வர சரியாய் இருந்தது.."
அவசரமாய் காரை விட்டு இறங்கியவன்..." என்ன அப்பா என்ன ஆச்சு நிஷாவுக்கு.."
நேசன், " டேய் இது தான் நீ வர வேகமா..."
" இல்லபா. .. '
" போதுங்க விசாரிச்சது.. நீ உன் ரூம்க்கு போ குமரா... நிஷாக்கு ஒன்னும் இல்லையாம் சின்ன அதிர்ச்சி தான்......"
" அதிர்ச்சியா.....??? "
" என்னன்னு தெரியல.. குமார.. நாங்க வீட்டுக்கு வரும் போதே நிஷா முகம் சரி இல்லை.. அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு... ஐயோ சத்தம் கேட்டு மேல போனா கிழ விழுந்து கிடந்தா.. நீ அவ கண் விழிச்சதும் என்ன எதுன்னு மெதுவா கேளு.. சரியா என ருக்குமணி.. விவரம் சொல்லி.. அவனை நிஷா பார்க்க அனுப்பி வைத்தார்..."
படிக்கல் ஏறும் போதே.. குமரன்.. " அப்பிடி என்ன நடந்துர்க்கும்... ஷாலினி ஏதும் போன திரும்ப பண்ணி இருப்பாளோ அப்படியே அவ பேசினா இவ எதுக்கு மயக்கம் போட்டு விழனும் என யோசித்த படி.... அறையே நோக்கி செல்ல.. அங்கே.. நிஷா.. இன்னும் கண் விழிக்காமல் .. மயக்கத்தில் கிடந்தாள் ..........
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro