என் அருகில் நீ இருந்தால்- 12
உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே !
நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடிகொல்வேனே!!
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில்தைப்பேனே!!
என்னோடு நீஇருந்தால்
உயிரோடு நான்இருப்பேன்
நிஷா குமரனை.. மாமா என்று அழைத்ததில்... அதிரிச்சி அடைந்தவன்.. வண்டியே சட்டென் பிரேக் போட்டு நிறுத்தினான் ......
அவன் நிறுத்தியே வேகத்தில்.. நிஷா பேலன்ஸ் பண்ண முடியாமல். டேஷ்போர்டில் போய் மோதினாள் .. கையில் வைத்து இருந்த போனும் கிழே விழுந்து விட...
நிஷா.. " ஐயோ அம்மா . ஏன் இப்பிடி .. .. பார்த்து ஓட்ட கூடாதா கார .. நல்ல வேலை சீட் பெல்ட் போட்டு இருந்தோம் இல்லேன்னா... என்ன ஆகுறது... என தலையே தேய்த்து விட்ட படி..கேட்க..
அவனோ அதை எதையும் கண்டுகொள்ளாமல்..
" என்ன சொன்ன... " என்று சம்பதம்...இல்லாமல் கேட்டான்
" ஹ்ம்ம் என்ன சொன்னேன்... ஏன் இப்பிடி கார நிறுத்துனிங்க கேட்டேன்.. "
" அதுக்கு முன்னாடி... "
" முன்னாடி... .. ஐயோ அம்மான்னு சொன்னேன்.."
" ஹ்ஹ்ம்ச்சு... இல்ல.... கார நிறுத்துறதுக்கு முன்னாடி..என்ன பண்ணுற கேட்டதுக்கு ..என்ன சொன்ன.." என மீண்டும் அவன் அழுத்தி கேட்க...
அவளுக்கு....புரிந்துவிட்டது.. . என்ன சொன்னோம் என்று.. உதட்டை கடித்து. கொண்டு.. அது... . விளையாடிட்டு இருக்கேன்னு சொன்னேன்..'
அவள் பக்கம் நெருங்கி.. அப்பிடியா.. சொன்ன... நல்லா யோசிச்சு.. சொல்லு... விளையாட்டி இருக்கேன் ஓட சேர்த்து வேற என்னமோ சொன்ன மாதிரி.. இருந்ததே..... என பேசி கொண்டே. அவளை இன்னும் நெருங்க .
நிஷா, " என்ன இது இப்பிடியே வம்பு பண்ணுரிங்க ந ... நகருங்க ....யா யாரவுது பார்க்க போறாங்க........என அவளும்.. மேலும் பின்னால் நகர்ந்து கொண்டே சொல்ல...
" ம் அப்போ சொல்லு.. என்ன சொன்னன்னு... அது வரைக்கும்... நான் நகர போறது இல்லை... "
" அவனது பிடிவாதம் நிஷாவுக்கு புதுசா தோன்ற.. [ மனதுக்குள்.. என்ன இது இப்படி எல்லாம் பண்ணுறாங்க நினைத்துகொண்டே. ].. இவள் வேற வழி இல்லாமல்...சொல்ல திணறி கொண்டு இருந்தால்.... " அது.. "
" ஹ்ம்ம் அது..... " என குமரன் அவள் பேச எடுத்து கொடுக்க...
" நீங்க முதல. நகருங்க.. நான் சொல்லுறேன்... "
" அது மட்டும் நடக்காது... நீ சொன்னா மட்டுமே நான் நகருவேன் .. சொல்லு..."
" சரியான.. பிடிவாதக்காரன்.....என மனதுக்குள் அவனை செல்லமாய் திட்டிக்கொண்டே அவன் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்து... குமரனின் சட்டை காலரை பிடித்து.. இழுத்து.. அவன் நெற்றி ஓடு தன் நெற்றியே இடித்து.. கண்ணோடு பார்த்து...[ மக்களே ரொம்ப எதிர் பார்க்காதிங்க ]..
குமரனுக்கு.. அவள் என்ன செய்ய போகிறாள் என்று ஆர்வம் தொற்றி கொண்டது... அவளது செய்கையே ரசித்து படி அவளை...வேடிக்கை பார்க்க...ஆரம்பித்தான்....அவள் அவனை இன்னும் நெருங்கி.. அதாவுது காற்று கூட போகாத அளவிற்கு நெருங்கி..... " அது வந்துங்க மாமா... நான் என்ன சொன்னேனா மாமா.. . நீங்க என்ன பண்ணுறன்னு கேட்டிங்களா மாமா....அதுக்கு... நான் கேம் விளையாடிட்டு... இருக்கேன் மாமான்னு சொன்னேன் மாமா.. என.. அவன் ஒரு மாமா அவள் சொல்லி கேட்க ஆசை பட.. நிஷா.. வார்த்தைக்கு வார்த்தை மாமா என்று... அழைக்க...
குமரனுக்கு.. தான் காண்பது.. கனவு... ஒன்றும் இல்லையே என்று தோன்றியது.. இந்த நிலை இன்னும் நீடிக்காதா.. என அவன் வேண்டியே படி அமர்ந்து இருக்க... அவர்களை கடந்து ஹாரன் அடித்த படி வேகமாய் செல்ல..
இருவரும் திடுக்கிட்டு விளைகினர்.... ..குமரன் அந்த வண்டிக்கு சொந்தக்காரனை திட்ட.
நிஷா... மறுப்பக்கம் திரும்பி.... போதும்.. கார எடுங்க கிளம்புங்க அதான் அப்போவே சொன்னேன்...என தனது முக சிவப்பை... மறைத்து கொண்டு சொல்ல
அதை பார்த்து... குமரன்...." என் பொண்டாட்டி கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்... வேற யார் கூடவும், இல்லையே......"
நிஷா, " நல்ல இடம் பார்த்திங்க நீங்க உங்க பொண்டாட்டி கிட்ட பேசுறதுக்கு வண்டியே எடுங்க ஏ. சி . பி . சார்.... எனக்கு பசிக்குது...இப்போ என சொல்ல .."
" ஹாஹா சரி பொழைச்சுப் போ... கிளம்பலாம் என்று குமரன் தனது காரை கிளப்பினான்..... "
ஒரே நாளில் என் மனம் இவன் வசம் போனதின் மாயம் என்ன... ஒரு வேலை லதா சொன்னது போல் இது தான் காதலோ....அப்பிடி இது காதல் என்றால்...இந்த இன்ப அவஸ்தையும் நன்றாக தானே இருக்கிறது.....என நிஷா ஒரு பக்கம்.... நினைத்து.. கொண்டு வந்தாள் .
குமரன்... " லதா அவனுடையே பாதி பிரச்சனையே தீர்த்து வச்சதுக்கு மனம் நிறைந்து நன்றி சொல்லி கொண்டான் .. ஆனால்.. அவன் மனதில் ஷாலினி பற்றி உறுத்தி கொண்டே இருந்தது...... அதை சரி செய்து நிஷாவிற்கு புரியே வைக்கும் கடமை.. ஒன்று தனக்கு இருப்பது. அவனுக்கு தோன்றியது... என இவன் ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு டிரைவிங்கில் கவனம் செலுத்தினான்..."
இருவரும் பேசி கொண்டு வீட்டுக்குள் நிலையே ... ருக்குமணி.. அதை கவனித்து பூஜை அறையே நோக்கி பெருமாளே .. இதுங்க ரெண்டும் பெரும் எப்போவும் இப்பிடி பிரியாமல் . ஒன்றாக இருக்கணும்... என இறைவன் இடம் வேண்டினார்.... இரவு உணவு முடிந்த்த பிறகு இருவருக்கும்... திருஷ்டி சுத்தி போட்டார் அவர்..."
' அதை பார்த்து குமரன என்ன அம்மா பண்ணுரிங்க.. இப்போ.. "
" சும்மா இருடா நீ எப்போ பாரு ... உனக்கு கேலி கிண்டல் தான் எந்த அடி பட்டாலும் பரவா இல்லை.. கண் அடி பட கூடாதுன்னு சொல்லுவாங்க.... போதுமா விளக்கம் உனக்கு.. இப்போ போய் துங்கு.. நீயும் போமா நிஷா... "
" சரிங்க அத்தை.... என சொல்லிவிட்டு குமரன் உடன்.. அவள் அவர்களுது அறைக்கு சென்றனர்...
ஆனால் பாவம் அவர்களுக்கு தெரியேவில்லை.. வெகு விரைவில்.... அவர்களை... ஒரு பெரியே துன்பம் .. வந்து வதைக்க போவது... . இதை குமரன் எவ்வாறு தாங்கி கொள்ள போகிறான் என்பது அந்த இறைவனுக்கே.. வெளிச்சம்...
தனது அறையிக்கு வந்து... நிஷா.தனது பேக்கை அதன் இடத்தில ஓரமாய் வைத்துவிட்டு....குமரனை பார்த்து மாமா.. உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.. "
என்ன .. ம்மா..." குமரன்.. ஏதோ பைல் பார்த்த படி கேட்க...
" இல்லை.. ராகவி விஷயம் என்ன ஆச்சு.. அவங்கள கண்டு பிடிச்சிடிங்களா யார் இப்பிடி எல்லாம் பண்ணினது.......நான் அதிக பிரசங்கி தனமா கேட்டு இருந்தா சாரிங்க... "
" ஹே லூசு ஏன் இப்பிடி எல்லாம் பேசுற... அதிக பிரசங்கி தனம் எல்லாம் ஒன்னும் இல்லை.. அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்காங்க.. . ஆனா... "
நிஷா பதத்துடன்.. அவன் அருகில்... " ஆனா என்னங்க... , ஏதும் பிரச்சனையா..."
" பொறு நிஷா.. ஏன் இவ்வளோ பதட்டம்... . . சொல்லுறத கொஞ்சம் பொறுமையா கவனமா.. கேளு.... அவள் பிழைக்க வாய்புக்கள் கம்மி தான் ஏன்னா.. அவ சாப்பிட்ட... சாக்லேட் ல ரெண்டு வித போதை பொருள் கலந்து இருக்கு..... அது... அவளோட நரம்புகள் மட்டும் இல்லை.. உடல் உறுப்புகள் பாதியே காலி பண்ணிருச்சு.. .. இப்போதைக்கு அவள் வெறும் ஜடம் தான்.. என சொல்லிக்கொண்டே போக... சற்று நேரத்தில் அழும் சத்தம் கேட்க...
குமரன் பேசுவதை நிறுத்திவிட்டு.. ' ஹே என்னம்மா ஆச்சு.."
" அவ எவ்வளோ நல்ல பொண்ணு தெரியுமாங்க.. ஆனா இப்பிடி ஆகும்ன்னு தெரியாம போச்சே... யாரு அந்த பாவியோ.... ப்ளீஸ் எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அந்த .. கேங்கை கண்டு பிடிங்க.. .. , என அழுத்து கொண்டே சொல்ல.. "
" சச்சு... நிஷா.. .. அழறத நிறுத்து .. அது எல்லாம் கண்டுபிடிச்ருவோம்.. .. நீ முதல போய் தூங்கு... நேரம் ஆச்சு.. நாளைக்கு கிளாஸ் இருக்குல..
' ஆமா ஆமா. , இருக்கு இதோ.. என சொல்லிவிட்டு அவள் படுக்க போக.. சட்டேன... நீங்க தூங்கலையா.. உங்களுக்கும் தானே நாளைக்கு ஆபீஸ் போகணும்...
" ஆமா போகணும் மெயில் பார்த்துட்டு வரேன் நீ படு.. '
" ம் சரிங்க.. என அவள் தலையணையே அணைத்த படி உறங்கி விட.. '
தனது வேலைகளை முடித்து விட்டு.. குமரன்.. நிஷா.. அணைத்து உறங்கியே.. தலையணையே எடுத்து சரி செய்துவிட்டு படுத்துவிட..
கொஞ்சம் நேரத்தில்... தன் மேல் ஏதோ.. தொப் என்று விழுந்தது போல் இருக்க.. குமரன் திடுக்கிட்டு முழித்து என்னவென்று பார்க்க.....
நிஷா.. தான்.. அவன் மேல் தான் காலை போட்டு.. விட்டு தனது கைகளால் குமரனை இறுக்கி அணைத்த படி உறங்கி விட..
குமரனின் நிலை மோசமாய் போய்விட்டது.. " அடிபாவி... இப்பிடி படுத்தா .. நான் எப்பிடி தூங்க.... இனி... சும்மா உன்னை பார்த்தாலே.. எங்க என மீறி... எதையவுது செய்துடுவேனோ பயம் இதுல இப்பிடி நீ படுதா... நான் எப்பிடி நல்லவனா இருக்கிறது.. என மனதுக்குள் புழம்பியே படி.. அவளை மெல்ல அணைத்து .. உறங்க முயல .. ஹ்ம்ம்.. ஒரு துளி கூட துங்க அவனால்.. முடியெவில்லை " இன்னைக்கும் எனக்கு சிவராத்திரி தானா... என தன் மனைவியே.. மனதுக்குள் வறுத்து எடுத்த படி எப்பிடியோ தாமதமாக உறங்கி போனான்...
அட.. இந்த கல்யணம் வேண்டாம் சொல்லிடு போன புள்ளை என்ன ஆனால்... பார்ப்போமா...வாங்க.....
ஷாலினி....தன் கணவன் இடம்... போனில் பேசி கொண்டுஇருந்தால்... என்ன... பாஸ்கர்.. எப்போ வருவிங்க.. வீட்டுக்கு...
" என்ன ஷாலினி சொல்லுற..எரிச்சலுடன்..... நான் இப்போ தானே.. அங்கே வந்தேன் அதுக்குள்ளே எப்பிடி .. "
' நீங்க இல்லாம.. தனியா இருக்க என்னமோ மாதிரி இருக்கே... பாஸ்கர்... நான் என்ன செய்யட்டும்...நீங்க இருந்தா எனக்கு பயம் இருக்க மாட்டேங்குது ஆனா.. ..."
அதுக்கு மேல்...அவள் பேசுவது பிடிக்காமல்.... .கடுப்புடன்... இருக்க பழகிக்கோ... ஷாலு... . நான் ஒன்னும் இங்க சுத்தி பார்க்க வரல... வேலை விஷயமா வந்து இருக்கேன்..... சும்மா வா வான்னா எப்பிடி... .. நீ கேட்டு இருக்க.. எல்லாம் செய்து கொடுத்துட்டு.. வந்து இருக்கேன் ... வேற என்ன வேணும் உனக்கு..சொல்லு அதையும் செய்து கொடுக்கறேன்....
" என்னங்க இப்பிடி சொல்லுரிங்க.. . பணம்.. கார்.. பெரியே வீடு.. இது மட்டும் போதுமா.... எனக்கு... "
' இப்போதைக்கு இது போதும் நம்மக்கு வேற எதுவும் எதிர்பார்க்காத என்கிட்டே ஷாலு.... சரி மீடிங்க இருக்கு.. நான் அப்புறம் பேசுறேன் என்று பாஸ்கர்...அலைபேசியே.. வைத்துவிட்டு.. தனது வேலையே பார்க்க சென்று விட்டான்..
" ஷாலினி... தனது போனை அதிர்ச்சி உடன்..பார்த்த...படி... என்ன இது இப்பிடி பேசிவிட்டு வச்சுட்டாரு.. இப்போ நன் என்ன சொல்லிட்டேன்னு இவ்வளோ கோபம் இருவருக்கு........ .. "
குமரனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு.. தன் காதலன் ஓட மதுரைக்கு அருகில்... ஆள் நட மாட்டம். அதிகமாக இல்லாத இடத்தில பாஸ்கர் ஒரு வீட்டை பார்த்தான்.... வீடு என்று சொல்லுவதை விட.. குட்டி அரண்மனை என்று கூட சொல்லலாம் அமைப்பு அப்பிடி இருந்தது....
முதலில் ஷாலினி அதை பார்த்து.. திகைத்து போய்.. சந்தோஷத்தில் தத்தளிக்க... பாஸ்கர். அவள் இடம் ". பிடிச்சு இருக்கா ... வீடு..ஷாலு.. "
" ரொம்ப ரொம்ப .. பாஸ்கர்.... ஹப்பா எவ்வளோ அழகு... , ஆமா பாஸ்கர். இவ்வளோ பெரியே வீடு வாங்க. பணம் ..?? "
" அது { ஒருநிமிடம் தடுமாறியே பின்.. சுதாரித்து.. இப்போ புதுசா பிசினஸ்.. ஆரம்பிச்சு இருக்கேன். .. ஷாலு.. அதில் வந்த லாபத்துல... வாங்கினது.. சரி சரி ரொம்ப டையர்டா இருக்கு.. சாப்பிட்டு அப்புறம் பேசலாமா.. என பேச்சை அத்தோடு முடித்துவிட்டான்.. அவன்.."
ஷாலினிக்கு அப்போது இருந்த சந்தோஷத்தில் ஏதும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால்.. ஆனால்.. நாள் ஆக ஆக .. பாஸ்கர் வேலை வேலை என்று.. சுத்தி கொன்று இருக்க.. இவளை.. கவனிக்க மறந்துவிட்டான்..
அதை அவள் கேட்டதுக்கு... .. " அவன்.. " இங்கே பாரு ஷாலு இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக்கலாம்.. அப்புறம்.. நீ போ சொன்னாலும் நான் உன்ன விட்ட போக மாட்டேன்.... சரியாய் என்று எதையோ வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தான்...."
அவளுடை நகைகளும்... அவன் .. தொழிலில்.. போட்டுவிட ஷாலு ஏதும் சொல்லாமல் மனதுக்குள் பொருமினாள் ...
இதற்க்கு இடையில்... தான் வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வந்தவனை தன் தங்கை தான்... மணந்து கொண்டது ஷாலினிக்கு தெரியே அதுவே அவளுக்கே பெரியே இடியாய் இருந்தது... ....அதை விட.. அவளை அந்த வீட்டில் எல்லாரும் வைத்து கொண்டாடுவது.. வரை தெரிந்து கொண்டு... மனதுக்குள் நான் மட்டும்... இப்பிடி தனிமையில் கஷ்ட படுறேன். ஆனால் இவள் எப்பிடி இப்பிடி சந்தோசமாக இருக்கலாம்...அதுவும் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தவன் உடன்.. ... இத இப்பிடியே விட கூடா தே....... என மனதுக்குள் வெறுப்பை வளர்த்தாள் ...
எப்பிடியாவுது... நிஷாவை நிம்மாதியா இருக்க விட கூடா தே.. என்று ஒரு திட்டம் தீட்டினால்.....
ஆனால் அவள் இடம் எப்பிடி நெருங்குவது.,,. என்று அவளுக்கு பிடிபடவில்லை... ஏன் என்றால் நிஷாவின் கணவன் போலீஸ் ஆச்சே... எப்பிடி எப்பிடி என அடுத்து அடுத்து.. யோசித்து பார்க்க... ஆனால் எப்பிடி யோசித்தும். அவளுக்கு வழி கிடைக்கவில்லை ...
பிறகு.. சிறிது... நேரம் கழித்து....
இப்பிடியே யோசிச்சு ஒன்னும் அக போறது இல்லை பேசாம நாம ஏன்.. அப்பா அம்மாகிட்ட பேசி பார்க்க கூடாது......
ஒரு தடவை.. நிஷா குமரன்.. உறவு நிலவரம் தெரிஞ்சதுன்ன.. நம்ம வேலை சுலோபம் ஆகிடும்.........
அதுக்கு முதல அப்பா கிட்ட பேசுவோம் ஏன்னா.. அம்மா கிட்ட பேச முடியாது.... நம்மக்கு அப்பா மட்டும் தான் உதவ முடியும் என்று முடிவு எடுத்து...
தந்தைக்கு.. அழைத்தாள் ....
ஆபீசில் எதோ வேளையில் முழ்கி இருந்த .. கிருஷ்ணன்....
தனது போனில் புதியே எண்ணில் இருந்து அழைப்பு வர யாரா இருக்கும் என்று எடுத்து பார்த்தார்..
பின்பு எடுக்கலாமா வேண்டாமா.... என யோசித்து.....
சரி யாருன்னு தான் கேட்க்போம் என எடுத்து " ஹலோ.." என சொல்ல..
" ஹலோ அப்பா நான் தான் பேசுறேன் " ஷாலினி..பேசினாள்
". யாரு நிஷாவா.. " என அவர்... மீண்டும் கேட்க..
" அவரது நிஷாவா என்கிற கேள்வியில் ஷாலினி.. கடுப்பு ஆனாள் ..'
" ஓஹோ.. நான் வந்த உடனே.. எல்லாம் அவ புகழ தான் பாடுறாங்கள... இருக்கட்டும் வச்சுகிறேன் அவள
" ஹலோ ஹலோ.நிஷாம்மா . " என கிருஷ்ணன் கத்த
சுய நினைவு பெற்றவள் போல்.. " நான் தான் அப்பா உங்க பொண்ணு. ஷாலினி.. பேசுறேன்.."
" எனக்கு அப்பிடி ஒரு பொண்ணே இல்லை .. ராங் நம்பர் என சொல்லிவிட்டு போனை வைக்க போக.
" அப்பா ஒரு நிமிஷம்.. நான் சொல்லுறத கேளுங்க.. ஒரே ஒரு நிமிஷம் கேளுங்க அப்பா.. அப்புறம் என்ன வேணும் நாளும் சொல்லுங்க என்று ஷாலினி போனில் கத்த "
" என்னனு சொல்லு இப்போ எதுக்கு எனக்கு போன் பண்ணின. நானும் உன் அம்மாவும் உயிரோடு.. இருக்கோமா இல்லையான்னு பார்க்க போன் பண்ணினியா.. .... "
" அப்பா அப்பிடி எல்லாம் பேசாதிங்க.. ப்பா. . பாஸ்கர் மேல இருந்த அன்புள்ள இப்பிடி பண்ணிட்டேன் என்ன மன்னிச்சுடுங்க..
" ச்சீ பேசாத..உன்னை என் பொண்ணு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு ... எவ்வளோ நம்பிக்கை... வச்சு இருந்தேன் கடைசி நேரத்துல நிறைஞ்ச. சபைல வச்சு என்ன கழுத்து அருத்தியே அப்போ நான் உனக்கு அப்பான்னு யாபகம் வரலையா...
" ப்பா..."
" என்ன அப்பிடி கூப்பிடாதே .. எனக்கு இப்போ ஒரே பொண்ணு தான்... அது நிஷா மட்டும் போதுமா இப்போ போனை வை.. இல்ல என்ன பண்ணுவேன் என எனக்கு தெரியாது.. என கோபத்தில் பதில் சொல்லிவிட்டு.. போனை வைத்துவிட்டார்... கிருஷ்ணன்......"
மனதுக்குள்.. " என்ன தைரியம்.. இந்த பொண்ணுக்கு இப்பிடி பண்ணிட்டு இப்போ எந்த முகத்த வச்சுக்கிட்டு.. என் கிட்ட பேச வந்தா....என திட்டி கொண்டே தனது வேலையே தொடர்ந்து பார்த்தார்.....
இங்கே தனது முதல்.. திட்டம் போயித்து போனதை எண்ணி.. ஷாலினி.. மனதுக்குள்... மேலும்.. வன்மம் வளர்த்து கொண்டு இருந்தால்.... ..
தான்.... இங்கே தனிமை பட்டு கிடக்க. . சின்னவளை தாங்குவது அவளை மேலும்... எரிச்சல் ஆக்கியது..
இனி அம்மாவிடம் கூட பேசுறது சரியாய் வராது நாம நேர நிஷா கிட்ட.. தான் பேசணும்.. ஆனா... எப்பிடி...
அதற்கான சந்தர்ப்பம். கூடியே விரைவில் ஷாலினிக்கு கிடைத்தது..
********************************
hai friends itho next episode potuten.............
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro